Daily Mains Question · தினம் ஒரு வினா

20 நவம்பர் 2026குரூப் 2 Mainsஅலகு III – சமூகப் பிரச்சினைகள் (தமிழ்நாடு)பகுதி C15 மதிப்பெண் · 250 சொற்கள்

தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை, பாலினத் தேர்வுக் கருக்கலைப்பு ஆகியவற்றின் சமூக – பொருளாதாரக் காரணங்களை ஆராய்ந்து, குழந்தைப் பாலின விகிதத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பிடுக.

Examine the socio-economic causes of female infanticide and sex-selective abortion in Tamil Nadu, and evaluate the measures taken to improve the child sex ratio.

Timed Test:12:00

➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு

முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.

1. தரவு

அளவீடுதமிழ்நாடுஇந்தியா
குழந்தைப் பாலின விகிதம் (0–6), 2011 கணக்கெடுப்பு943 (2001: 942; 1991: 948)918
மொத்தப் பாலின விகிதம், 2011 கணக்கெடுப்பு996943
பிறப்புப் பாலின விகிதம், NFHS-5 (2019–21)878 (NFHS-4: 954)929
பிறப்புப் பாலின விகிதம், CRS (அரசுப் பதிவு)939 (2020)–
18 வயதுக்கு முன் திருமணமான 20–24 வயதுப் பெண்கள், NFHS-512.8% (NFHS-4: 16.3%)23.3%

2. சட்டங்களும் திட்டங்களும்

  • கருத்தரிப்புக்கு முன், பிரசவத்துக்கு முன் நோயறியும் நுட்பங்கள் (பாலினத் தேர்வுத் தடை) சட்டம் 1994 – PCPNDT; 2003 திருத்தம் கருத்தரிப்புக்கு முந்தைய பாலினத் தேர்வையும் சேர்த்தது.
  • வரதட்சணைத் தடுப்புச் சட்டம் 1961; இந்தியத் தண்டனைச் சட்டத்தின் இடத்தில் பாரதிய நியாய சன்ஹிதா 2023 (1 ஜூலை 2024 முதல்).
  • தொட்டில் குழந்தைத் திட்டம் – 1992, சேலம்; 2001-இல் பிற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம். பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் – 1992.
  • பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ – 22 ஜனவரி 2015, பானிபட் (ஹரியானா).

3. பாடத்திட்டத் தொடர்பு

  • அலகு III – குழந்தைத் திருமணம் (15.11 வினா), இரத்தசோகை – ஊட்டச்சத்து (13.11), ஆணவக் கொலை (07.11) ஆகியவற்றுடன் இணைத்து எழுதலாம்.

4. விடையை உயர்த்தும் சொற்கள்

  • ஆண் குழந்தை விருப்பம் (son preference), காணாமல் போன பெண்கள் (missing women), பாலினத் தேர்வு, போலி வாடிக்கையாளர் சோதனை (decoy operation), பாலினச் சமத்துவம்.
Reference note in English

Key facts

  • Child sex ratio (0–6), Census 2011: TN 943 (2001: 942; 1991: 948); India 918. Overall sex ratio 2011: TN 996; India 943.
  • Sex ratio at birth, NFHS-5 (2019–21): TN 878 (NFHS-4: 954); India 929. State CRS figure: 939 (2020).
  • Women aged 20–24 married before 18, NFHS-5: TN 12.8% (NFHS-4: 16.3%); India 23.3%.
  • PCPNDT Act 1994 (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act) – the 2003 amendment added pre-conception sex selection. Dowry Prohibition Act 1961.
  • Cradle Baby Scheme – 1992, Salem; extended to other districts in 2001. Girl Child Protection Scheme – 1992. Beti Bachao Beti Padhao – 22 January 2015, Panipat.
  • Answer-boosting terms: son preference, missing women, sex selection, decoy operation, gender equality.
Download Notes PDF

Official Sources:

இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:

எப்படி அணுகுவது? (குறிப்புகள்)

  • செயல்வினை "ஆராய்ந்து, மதிப்பிடுக" – பிரச்சினையின் அளவு (தரவு), காரணங்கள், நடவடிக்கைகள் – மதிப்பீடு (அட்டவணை), முன்னோக்கிய வழி என நான்கு தலைப்புகள்.
  • "ஆண் குழந்தை விருப்பம் + வரதட்சணை → பாலினத் தேர்வு → பாலின விகிதச் சரிவு → திருமணச் சந்தைச் சமநிலைக் குலைவு" flowchart வரையுங்கள்.
  • தரவு: குழந்தைப் பாலின விகிதம் (0–6) – 2011 கணக்கெடுப்பு தமிழ்நாடு 943 (இந்தியா 918); NFHS-5 பிறப்புப் பாலின விகிதம் 878 (NFHS-4: 954); CRS 2020: 939.
  • தொட்டில் குழந்தைத் திட்டம் (1992, சேலம்) – தமிழ்நாட்டின் முன்னோடி மாதிரி; தரவு வேறுபாட்டை (மாதிரி ஆய்வு – பதிவு) ஒரு வரியில் விளக்குங்கள்.

In English: Directive verbs "examine" and "evaluate" – four headings: scale (data), causes, measures–evaluation (table), way forward · draw the flowchart son preference + dowry → sex selection → falling sex ratio → imbalance in the marriage market · data: child sex ratio (0–6) – Census 2011 TN 943 (India 918); NFHS-5 sex ratio at birth 878 (NFHS-4: 954); CRS 2020: 939 · the Cradle Baby Scheme (1992, Salem) is TN's pioneering model; explain the data gap (sample survey vs registration) in one line

Send Your Answer

காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.

Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்

மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy

முன்னுரை

1980-களில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் பெண் சிசுக்கொலை பற்றிய செய்திகள் நாட்டை உலுக்கின. 2011 கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் குழந்தைப் பாலின விகிதம் (0–6 வயது) 943 – தேசிய அளவு 918-ஐ விட மேல்; ஆனால் 1991-இன் 948-ஐ விடக் குறைவு. NFHS-5 (2019–21) பிறப்புப் பாலின விகிதம் 878 (NFHS-4: 954) எனக் காட்ட, அரசின் பிறப்புப் பதிவு (CRS) 2020-இல் 939 என்கிறது – மாதிரி ஆய்வுக்கும் முழுப் பதிவுக்கும் இடையிலான வேறுபாடு; எப்படியாயினும் 950-க்குக் கீழ் என்பது கவலைக்குரியது.

ஆண் குழந்தை விருப்பம் + வரதட்சணை
➜
சிசுக்கொலை → பாலினத் தேர்வுக் கருக்கலைப்பு
➜
பாலின விகிதச் சரிவு
➜
பெண்கள் மீது வன்முறை, திருமணச் சமநிலைக் குலைவு

அ) காரணங்கள்

வகைகாரணம்
பொருளாதாரம்வரதட்சணை, திருமணச் செலவு; பெண் "செலவு", ஆண் "முதுமைக் காப்பு" என்ற எண்ணம்.
சமூகம்ஆண் வாரிசு – இறுதிச் சடங்கு, சொத்து மரபு; சிறு குடும்ப விருப்பம் ஆண் விருப்பத்துடன் இணையும்போது தேர்வு கூர்மையாகிறது.
தொழில்நுட்பம்மலிவான ஸ்கேன் வசதி – சிசுக்கொலை குறைந்து, "கருவிலேயே தேர்வு" என வடிவம் மாறியது.

ஆ) நடவடிக்கைகள் – மதிப்பீடு

நடவடிக்கைவிவரம்மதிப்பீடு
தொட்டில் குழந்தைத் திட்டம் (1992, சேலம்; 2001 விரிவாக்கம்)வேண்டாத குழந்தையை அரசிடம் ஒப்படைக்கலாம்; தத்தெடுப்புஉயிர் காப்பு; ஆனால் காரணத்தைத் தீர்க்காது
பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் (1992)பெண் குழந்தைப் பெயரில் வைப்புத் தொகைபெண்ணைச் "சொத்தாக" மாற்றும் முயற்சி
PCPNDT சட்டம் 1994 (2003 திருத்தம்)கருவின் பாலினத்தைத் தெரிவிப்பது குற்றம்; ஸ்கேன் மையப் பதிவுதண்டனை விகிதம் குறைவு
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (2015)விகிதம் குறைந்த மாவட்டங்களில் விழிப்புணர்வுமனப்பான்மை மாற்றம் மெதுவானது
பெண் கல்வி, உயர்கல்வி உதவித் தொகைபெண்களின் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணிநீண்டகாலத் தீர்வு

இ) முன்னோக்கிய வழி

  • ஸ்கேன் மையங்களின் இணையக் கண்காணிப்பு, போலி வாடிக்கையாளர் (decoy) சோதனை, விரைவு நீதிமன்ற வழக்குகள்.
  • மாவட்ட, வட்டார அளவில் மாதந்தோறும் பிறப்புப் பாலின விகிதம் வெளியீடு; குறைந்த பகுதிகளில் சிறப்புக் கவனம்.
  • வரதட்சணைத் தடுப்புச் சட்டம் 1961 கடுமையான அமலாக்கம்; பெண்களுக்குச் சொத்துரிமை நடைமுறை.
  • சுய உதவிக் குழு, பள்ளிகள் வழி "மகள் – பெருமை" பரப்புரை.

முடிவுரை

சிசுக்கொலையை "தொட்டில்" தடுத்தது; ஆனால் கருவில் நடக்கும் பாகுபாட்டைச் சட்டமும் மனப்பான்மை மாற்றமும் இணைந்தே தடுக்க முடியும். பெண் குழந்தை சுமை அல்ல, உரிமையுள்ள குடிமகள் என்ற சமூக உணர்வே நிலையான தீர்வு.

மதிப்பெண் பெறும் நுட்பம் (ஆசிரியர் குறிப்பு):
  • "ஆராய்ந்து, மதிப்பிடுக" – காரணங்கள் (பொருளாதாரம், சமூகம், தொழில்நுட்பம்) + நடவடிக்கை – மதிப்பீட்டு அட்டவணை; மதிப்பீட்டு நெடுவரிசை இல்லாவிட்டால் பாதி மதிப்பெண்.
  • தரவு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவது (NFHS-5 878 – CRS 939) ஆழமான புரிதலைக் காட்டும்.
  • "குழந்தைப் பாலின விகிதம் (0–6)" வேறு, "பிறப்புப் பாலின விகிதம்" வேறு – கலக்காமல் எழுதுங்கள்.

சுமார் 270 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 2 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.

இன்றைய 3 வினாக்களின் மாதிரி விடைகள் – PDF பதிவிறக்கம்

Model answer framework in English

Introduction

Reports of female infanticide from the Usilampatti area of Madurai district shocked the country in the 1980s. In the 2011 Census Tamil Nadu's child sex ratio (0–6 years) was 943 – above the national 918, but below its own 948 of 1991. NFHS-5 (2019–21) shows a sex ratio at birth of 878 (NFHS-4: 954), while the State's Civil Registration System gives 939 for 2020 – the gap between a sample survey and full registration; either way, a ratio below 950 is a concern.

Son preference + dowry
➜
Infanticide → sex-selective abortion
➜
Falling sex ratio
➜
Violence against women, marriage-market imbalance

A) Causes

TypeCause
EconomicDowry and wedding costs; the daughter seen as a "cost", the son as "old-age security".
SocialMale heir for funeral rites and inheritance; small-family preference combined with son preference sharpens selection.
TechnologyCheap ultrasound – infanticide declined but shifted to "selection in the womb".

B) Measures – evaluation

MeasureDetailsEvaluation
Cradle Baby Scheme (1992, Salem; extended 2001)Unwanted babies can be handed to the State; adoptionSaves lives; does not remove the cause
Girl Child Protection Scheme (1992)Deposit in the girl child's nameTries to make the girl an "asset"
PCPNDT Act 1994 (amended 2003)Revealing foetal sex is a crime; registration of scan centresLow conviction rate
Beti Bachao Beti Padhao (2015)Awareness in low-ratio districtsAttitude change is slow
Girls' education, higher-education supportTN leads in women's higher-education enrolmentLong-term solution

C) Way forward

  • Online monitoring of scan centres, decoy operations, fast-track trials.
  • Monthly publication of sex ratio at birth by district and block; focus on low-ratio pockets.
  • Strict enforcement of the Dowry Prohibition Act 1961; real property rights for women.
  • "Daughter – pride" campaigns through self-help groups and schools.

Conclusion

The cradle stopped infanticide; discrimination in the womb can be stopped only by law combined with change in attitude. The lasting answer is a society that sees the girl child not as a burden but as a citizen with rights.

Scoring tips (faculty note): "Examine and evaluate" – causes (economic, social, technological) plus a measures–evaluation table; without the evaluation column you lose half the marks. Pointing out the data gap (NFHS-5 878 vs CRS 939) shows depth. "Child sex ratio (0–6)" and "sex ratio at birth" are different – do not mix them.

About 330 words (including tables, excluding the tip box) · 2 tables + 1 flowchart · time: 12 minutes.

Model answers for all 3 questions of the day – download PDF

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)

குரூப் 2 Mains பயிற்சி

புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.

Details 99941 46662