UPSC Mains Answer Practice

15 November 2026UPSC MainsGS-IV20 marks · 250 words

Case study. 15 November 2026 is the World Day of Remembrance for Road Traffic Victims. Meena, a Block Development Officer in a Tamil Nadu district, is driving to the district headquarters, where at 11 a.m. she must present her block's flood-preparedness plan to the Collector and a visiting Central team before the north-east monsoon peaks. At 10:15 a.m., on a highway stretch, she sees a motorcycle rider and his pillion lying injured after a hit-and-run. A small crowd is filming on mobile phones, but no one helps – "why get into a police case?" someone says. The ambulance control room says the nearest ambulance will take about 25 minutes. Her driver warns that she may be held up for hours as a witness, and her superior has told her that the presentation "cannot be missed". (a) Identify the ethical issues involved in the case. (b) Evaluate the options available to Meena. (c) What course of action should she adopt, and why? (20 marks, 250 words)

நிகழ்வு ஆய்வு (Case study). 2026 நவம்பர் 15 – சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு உலக நாள். தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (BDO) பணியாற்றும் மீனா, வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் முன், தமது வட்டாரத்தின் வெள்ள முன்னெச்சரிக்கைத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், வருகை தரும் ஒன்றியக் குழு முன் காலை 11 மணிக்கு விளக்க வேண்டும். காலை 10:15 மணிக்கு நெடுஞ்சாலையில், மோதிவிட்டுத் தப்பிய (hit-and-run) வாகனத்தால் அடிபட்ட இருசக்கர வாகன ஓட்டியும் பின்னால் அமர்ந்தவரும் காயமுற்றுக் கிடப்பதைப் பார்க்கிறார். சிலர் கைபேசியில் படம் பிடிக்கின்றனர்; யாரும் உதவவில்லை – "காவல் வழக்கில் ஏன் சிக்க வேண்டும்?" என்கிறார் ஒருவர். அருகிலுள்ள அவசர ஊர்தி வர சுமார் 25 நிமிடம் ஆகும் என்கிறது கட்டுப்பாட்டு அறை. சாட்சியாகப் பல மணி நேரம் தடுத்து வைக்கப்படலாம் என ஓட்டுநர் எச்சரிக்கிறார்; விளக்கக் கூட்டத்தைத் "தவறவிடக் கூடாது" என மேலதிகாரி ஏற்கெனவே கூறியுள்ளார். (அ) இந்நிகழ்வில் உள்ள அறச் சிக்கல்களைக் கண்டறிக. (ஆ) மீனாவின் முன் உள்ள வழிகளை மதிப்பிடுக. (இ) அவர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எது? ஏன்? (20 மதிப்பெண், 250 சொற்கள்)

GS Paper IV – Ethics, Integrity and Aptitude

Write against the clock:12:00

➤ Read first – reference note

Facts only – the model answer comes tomorrow.

1. The news (as of 15 November 2026)

  • The World Day of Remembrance for Road Traffic Victims is observed on the third Sunday of November every year – 15 November in 2026 – to remember those killed and injured on roads and to thank emergency responders.
  • MoRTH's report Road Accidents in India 2023 (released in August 2025): 4,80,583 accidents (up 4.2%) and 1,72,890 deaths (up 2.6%). Tamil Nadu recorded the most accidents – 67,213 (14.0% of the national total) – and ranked second in deaths (10.6%) after Uttar Pradesh (23,652). Two-wheelers accounted for 44.8% of deaths.

2. The legal framework

Provision / caseWhat it saysSource
Motor Vehicles Act, Section 2(12A)"Golden hour" – the one hour after a traumatic injury when prompt medical care is most likely to prevent deathMV (Amendment) Act, 2019
Motor Vehicles Act, Section 134AA Good Samaritan is not liable for any civil or criminal action for injury or death of the victim arising from negligence while giving emergency careMV (Amendment) Act, 2019
SaveLIFE Foundation v. Union of India (2016)Supreme Court gave MoRTH's Good Samaritan guidelines and SOP the force of law – no compulsion to disclose identity, no detention, no payment demand at hospitalsSupreme Court of India
Parmanand Katara v. Union of India (1989)Every doctor, government or private, must give immediate medical aid to preserve life; legal formalities come laterSupreme Court of India
Cashless Treatment of Road Accident Victims Scheme, 2025Cashless treatment up to ₹1.5 lakh per victim for up to 7 days from the accident, on any road; in force from 5 May 2025; National Health Authority implementsMoRTH notification (May 2025)
Rah-Veer scheme₹25,000 reward for a person who rushes a seriously injured road accident victim to hospitalMoRTH

3. Key terms

  • Good Samaritan – a person who, in good faith and without expecting reward, gives emergency help to an accident victim (Section 2(18A) of the MV Act).
  • Bystander effect – the more people present, the less likely any one of them is to help, because responsibility feels shared.
  • Compassion vs empathy – empathy is feeling with the sufferer; compassion adds the will to act to relieve the suffering.
  • Crisis of conscience – the inner conflict when two duties pull in opposite directions; resolved by the priority of life and by finding a way to honour both duties.

4. Tamil Nadu angle

  • Innuyir Kappom – Nammai Kaakkum 48 (launched in December 2021): free emergency treatment in the first 48 hours for road accident victims at empanelled government and private hospitals; the cover was raised from ₹1 lakh to ₹2 lakh, and more than 3.2 lakh victims had benefited through 721 hospitals (Health Department data, January 2025).
  • 108 emergency ambulance service and the State's trauma care network; Tamil Nadu tops the country in the number of accidents, so its response capacity decides how many survive.

5. Value-adding words

  • sanctity of life, golden hour, bystander apathy, Good Samaritan, compassion, courage of conviction, crisis of conscience, delegation, accountability, Gandhiji's talisman, Article 21, role model.
பாடக் குறிப்பு – தமிழில்

1. செய்தி (15 நவம்பர் 2026 நிலவரப்படி)

  • சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது – 2026-இல் நவம்பர் 15. சாலையில் உயிரிழந்தோர், காயமுற்றோரை நினைவுகூர்வதும் அவசர உதவிப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நோக்கம்.
  • ஒன்றியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) இந்தியச் சாலை விபத்துகள் 2023 அறிக்கை (2025 ஆகஸ்டில் வெளியானது): 4,80,583 விபத்துகள் (4.2% உயர்வு), 1,72,890 உயிரிழப்புகள் (2.6% உயர்வு). விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் – 67,213 (நாட்டின் மொத்தத்தில் 14.0%); உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேசத்துக்கு (23,652) அடுத்து இரண்டாமிடம் (10.6%). உயிரிழப்புகளில் 44.8% இருசக்கர வாகனங்கள் தொடர்புடையவை.

2. சட்டக் கட்டமைப்பு

பிரிவு / வழக்குகூறுவதுஆதாரம்
மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 2(12A)"பொன்னான நேரம்" – காயமடைந்த பின் உடனடி மருத்துவம் உயிரிழப்பைத் தடுக்க அதிக வாய்ப்புள்ள ஒரு மணி நேரம்மோ.வா. (திருத்தச்) சட்டம், 2019
மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 134Aஅவசர உதவி அளிக்கும்போது ஏற்படும் கவனக்குறைவால் பாதிக்கப்பட்டவருக்குக் காயம் அல்லது உயிரிழப்பு நேர்ந்தாலும், நல்ல சமாரியர் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கை இல்லைமோ.வா. (திருத்தச்) சட்டம், 2019
SaveLIFE Foundation v. Union of India (2016)MoRTH-இன் நல்ல சமாரியர் வழிகாட்டுதல்களுக்கும் நடைமுறைக்கும் (SOP) உச்ச நீதிமன்றம் சட்ட வலிமை அளித்தது – அடையாளத்தை வெளிப்படுத்தக் கட்டாயம் இல்லை, தடுத்து வைத்தல் இல்லை, மருத்துவமனையில் பணம் கேட்கக் கூடாதுஇந்திய உச்ச நீதிமன்றம்
பரமானந்த் கட்டாரா v. Union of India (1989)அரசு, தனியார் என எந்த மருத்துவரும் உயிர் காக்க உடனடி மருத்துவ உதவி அளிக்க வேண்டும்; சட்ட நடைமுறைகள் பின்னரேஇந்திய உச்ச நீதிமன்றம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான கட்டணமில்லாச் சிகிச்சைத் திட்டம், 2025எந்தச் சாலையிலும் நேரும் விபத்துக்கு, விபத்து நாளிலிருந்து 7 நாள்கள் வரை ஒருவருக்கு ₹1.5 லட்சம் வரை கட்டணமில்லாச் சிகிச்சை; 2025 மே 5 முதல் நடைமுறை; தேசிய சுகாதார ஆணையம் (NHA) செயல்படுத்துகிறதுMoRTH அறிவிக்கை (மே 2025)
ராஹ்-வீர் (Rah-Veer) திட்டம்கடுமையாகக் காயமுற்ற சாலை விபத்துப் பாதிப்பாளரை விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பவருக்கு ₹25,000 பரிசுMoRTH

3. முக்கியச் சொற்கள்

  • நல்ல சமாரியர் (Good Samaritan) – நல்லெண்ணத்துடன், பரிசு எதிர்பாராமல் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அவசர உதவி செய்பவர் (மோ.வா. சட்டம், பிரிவு 2(18A)).
  • வேடிக்கை பார்ப்போர் விளைவு (Bystander effect) – அதிகம் பேர் இருக்கும்போது, பொறுப்பு பகிரப்பட்டதாகத் தோன்றுவதால் ஒவ்வொருவரும் உதவும் வாய்ப்பு குறைகிறது.
  • பரிவு – இரக்கம் (Empathy vs compassion) – பரிவு என்பது துன்பப்படுபவரின் உணர்வை உணர்தல்; இரக்கம் என்பது அத்துன்பத்தைப் போக்கச் செயல்படும் மனஉறுதியையும் சேர்க்கிறது.
  • மனசாட்சி நெருக்கடி (Crisis of conscience) – இரு கடமைகள் எதிர்த் திசையில் இழுக்கும்போது ஏற்படும் உள் மோதல்; உயிருக்கு முன்னுரிமை கொடுத்து, இரண்டையும் நிறைவேற்றும் வழியைக் கண்டறிவதன் மூலம் தீர்க்கப்படுகிறது.

4. தமிழ்நாட்டுக் கோணம்

  • இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 (2021 டிசம்பரில் தொடக்கம்): சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குப் பட்டியலிடப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரக் கட்டணமில்லா அவசர சிகிச்சை; வரம்பு ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டது; 721 மருத்துவமனைகள் வழியாக 3.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர் (சுகாதாரத் துறைத் தரவு, 2025 ஜனவரி).
  • 108 அவசர ஊர்திச் சேவை, மாநிலத்தின் விபத்துக் காய சிகிச்சை (trauma care) வலைப்பின்னல்; விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதால், அதன் மீட்புத் திறனே எத்தனை பேர் உயிர் பிழைக்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கிறது.

5. மதிப்பு கூட்டும் சொற்கள்

  • உயிரின் புனிதம், பொன்னான நேரம், வேடிக்கை பார்க்கும் அலட்சியம், நல்ல சமாரியர், இரக்கம், மனஉறுதி, மனசாட்சி நெருக்கடி, பணிப் பகிர்வு, பொறுப்புக்கூறல், காந்தியடிகளின் தாயத்து, உறுப்பு 21, முன்மாதிரி.
Reference note PDF (free)

Official sources:

How to approach it

  • Three sub-parts – (a) ethical issues, (b) options, (c) course of action; one heading for each, plus a short introduction and conclusion
  • open with the hook (World Day of Remembrance for Road Traffic Victims, 15 November 2026) and one hard number: 1,72,890 road deaths in India in 2023; Tamil Nadu first in accidents (67,213) and second in deaths (MoRTH, Road Accidents in India 2023)
  • issues as a table (sanctity of life vs official duty, bystander apathy and fear of the law, compassion and empathy, accountability, leadership by example); options as a table with merits and demerits
  • action as a step-wise flowchart that saves the victims AND the meeting; cite the 'golden hour' (Section 2(12A)) and Good Samaritan protection (Section 134A) of the Motor Vehicles Act, SaveLIFE Foundation (2016), Parmanand Katara (1989); Tamil Nadu's Innuyir Kappom – Nammai Kaakkum 48; name the values

தமிழில்: மூன்று உட்பகுதிகள் – (அ) அறச் சிக்கல்கள், (ஆ) வழிகள், (இ) நடவடிக்கை; ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பு, சுருக்கமான முன்னுரை, முடிவுரை. · செய்திப் பின்னணியுடன் தொடங்குங்கள் (சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு உலக நாள், 2026 நவம்பர் 15); ஒரு வலுவான எண்: 2023-இல் இந்தியாவில் 1,72,890 சாலை விபத்து உயிரிழப்புகள்; விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் (67,213), உயிரிழப்புகளில் இரண்டாமிடம் (MoRTH, இந்தியச் சாலை விபத்துகள் 2023). · அறச் சிக்கல்களை அட்டவணையாக (உயிரின் புனிதம் – அலுவல் கடமை, வேடிக்கை பார்க்கும் அலட்சியம், சட்டம் குறித்த அச்சம், இரக்கம், பரிவு, பொறுப்புக்கூறல், முன்மாதிரித் தலைமை); வழிகளை நிறை – குறைகளுடன் அட்டவணையாக. · நடவடிக்கையை, உயிர்களையும் கூட்டத்தையும் ஒருசேரக் காக்கும் படிநிலை flowchart ஆகக் காட்டுங்கள்; மோட்டார் வாகனச் சட்டத்தின் 'பொன்னான நேரம்' (பிரிவு 2(12A)), நல்ல சமாரியர் பாதுகாப்பு (பிரிவு 134A), SaveLIFE Foundation (2016), பரமானந்த் கட்டாரா (1989) தீர்ப்புகள், தமிழ்நாட்டின் 'இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48' திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, விழுமியங்களைப் பெயரிடுங்கள்.

Asked before in UPSC Mains

GS-IV 201720 marks
You are aspiring to become an IAS officer and you have cleared various stages and now you have been selected for the personal interview. On the day of the interview, on the way to the venue you saw an accident where a mother and child who happen to be your relatives were badly injured. They needed immediate help. What would you have done in such a situation? Justify your action.
GS-IV 202210 marks
Apart from intellectual competency and moral qualities, empathy and compassion are some of the other vital attributes that facilitate the civil servants to be more competent in tackling the crucial issues or taking critical decisions. Explain with suitable illustrations.

Send your answer for feedback

Write on paper, take a clear photo and send it on WhatsApp with your name and town. உங்கள் விடையை WhatsApp-இல் அனுப்புங்கள்.

Model answer – Shanmugam IAS Academy

Introduction

On the World Day of Remembrance for Road Traffic Victims (15 November 2026), the numbers speak: India recorded 4,80,583 road accidents and 1,72,890 deaths in 2023, and Tamil Nadu had the most accidents (67,213) and the second-highest deaths (MoRTH, Road Accidents in India 2023). Many die not on impact but in the "golden hour" that follows – while bystanders film and wait. Meena's ten minutes on the highway test whether compassion can coexist with official duty.

(a) Ethical issues involved

IssueHow it appears in the case
Sanctity of life vs official dutyTwo lives in the golden hour against a scheduled presentation – a conflict between a moral duty and a professional one.
Bystander apathy and fear of the lawThe crowd films but does not help – fear of police harassment and court visits, though the law now protects Good Samaritans.
Compassion and empathyWill an officer whose job is public welfare treat strangers' suffering as "not my business"?
Accountability and rule of lawA hit-and-run is a crime; the scene, the vehicle details and witnesses matter for justice to the victims.
Leadership by exampleA public servant's conduct in public shapes what citizens think is the "normal" response.

(b) Options available

OptionMeritsDemerits
1. Call the ambulance and drive onPresentation on time; follows the superior's orderGolden hour lost; moral failure; reinforces apathy
2. Wait with the victims for the ambulanceGives comfort; scene protected25 minutes lost for the victims; meeting missed anyway
3. Ask the crowd to take themMeena can leaveNo one is willing; responsibility merely passed on
4. Take the victims to the nearest hospital in her vehicle, inform her office and arrange for the plan to be presentedSaves lives within the golden hour; the meeting goes on through a colleague or a short delaySome delay; needs quick co-ordination

(c) Course of action – option 4

Call 108 / 112; secure the scene
➜
First aid; shift victims in her car with a bystander
➜
Nearest hospital – Innuyir Kappom / cashless care
➜
Inform Collector's office; email plan; deputy presents
➜
Note vehicle details for police; join meeting late
  • Act within the golden hour: the Motor Vehicles Act defines the "golden hour" (Section 2(12A)) – the hour after a traumatic injury when prompt care is most likely to prevent death.
  • Know the law that protects her: Section 134A (inserted in 2019) says a Good Samaritan is not liable for civil or criminal action; under the guidelines given the force of law by the Supreme Court in SaveLIFE Foundation v. Union of India (2016), the helper cannot be forced to disclose identity or be detained. Hospitals must treat first – Parmanand Katara v. Union of India (1989).
  • Save the meeting too: phone the Collector's office, send the plan by e-mail, ask the block deputy to present, and join as soon as the victims are admitted.
  • Use the system: Tamil Nadu's Innuyir Kappom – Nammai Kaakkum 48 gives free treatment in the first 48 hours at empanelled hospitals (cover raised from ₹1 lakh to ₹2 lakh); the Centre's 2025 scheme gives cashless care up to ₹1.5 lakh for seven days, and the Rah-Veer scheme rewards a Good Samaritan with ₹25,000.

Values at work: compassion, empathy, courage of conviction, respect for life (Article 21) and responsible leadership – with accountability preserved by informing the superior at once.

Conclusion

A presentation can be rescheduled; a life cannot. Gandhiji's talisman – recall the face of the poorest and weakest person and ask whether your step will help them – settles Meena's dilemma. By stopping, she saves two lives and shows the crowd that helping is both right and safe.

Scoring tips (faculty note):
  • Answer the three sub-parts under three headings – (a) issues, (b) options, (c) action; examiners mark sub-part by sub-part.
  • Do not set up a false choice between "duty" and "humanity" – the best answer saves the victims and still protects the official work (delegate, inform, reschedule).
  • One precise legal citation lifts the answer: Section 134A of the Motor Vehicles Act (Good Samaritan) and the "golden hour" in Section 2(12A).
  • Add the Tamil Nadu angle (Innuyir Kappom – Nammai Kaakkum 48) and end with the values – compassion, courage, accountability.

About 601 words (including the tables and flowchart, excluding the tip box) – a full study version; in the exam keep the same structure and compress to 250 words · 2 tables + 1 flowchart · time: about 14 minutes.

மாதிரி விடை – தமிழில்

முன்னுரை

சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு உலக நாளில் (2026 நவம்பர் 15) எண்களே பேசுகின்றன: 2023-இல் இந்தியாவில் 4,80,583 சாலை விபத்துகள், 1,72,890 உயிரிழப்புகள்; விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் (67,213), உயிரிழப்புகளில் இரண்டாமிடம் (MoRTH, இந்தியச் சாலை விபத்துகள் 2023). பலர் மோதலின்போது அல்ல; அதைத் தொடரும் "பொன்னான நேரத்தில்" (golden hour), வேடிக்கை பார்ப்போர் படம் பிடித்துக் காத்திருக்கும்போது உயிரிழக்கின்றனர். இரக்கமும் அலுவல் கடமையும் இணைந்து செல்ல முடியுமா என்பதை நெடுஞ்சாலையில் மீனாவின் பத்து நிமிடங்கள் சோதிக்கின்றன.

(அ) அறச் சிக்கல்கள்

சிக்கல்நிகழ்வில் எவ்வாறு வெளிப்படுகிறது
உயிரின் புனிதம் – அலுவல் கடமைபொன்னான நேரத்தில் உள்ள இரு உயிர்கள் ஒருபுறம், திட்டமிட்ட விளக்கக் கூட்டம் மறுபுறம் – அறக் கடமைக்கும் தொழில்முறைக் கடமைக்கும் இடையிலான மோதல்.
வேடிக்கை பார்க்கும் அலட்சியம், சட்டம் குறித்த அச்சம்கூட்டம் படம் பிடிக்கிறது, உதவவில்லை – நல்ல சமாரியர்களைச் சட்டம் இப்போது பாதுகாத்தாலும் காவல் தொல்லை, நீதிமன்ற அலைச்சல் குறித்த அச்சம்.
இரக்கம், பரிவுமக்கள் நலனே பணியாகக் கொண்ட அலுவலர், அந்நியரின் துன்பத்தை "என் வேலை அல்ல" என்று கடந்து செல்லலாமா?
பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சிமோதிவிட்டுத் தப்புவது குற்றம்; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க இடம், வாகன விவரம், சாட்சிகள் முக்கியம்.
முன்மாதிரித் தலைமைபொதுவெளியில் அரசு அலுவலரின் நடத்தையே "இயல்பான" எதிர்வினை எது என்பதைக் குடிமக்களுக்குக் கற்பிக்கிறது.

(ஆ) மீனாவின் முன் உள்ள வழிகள்

வழிநிறைகள்குறைகள்
1. அவசர ஊர்தியை அழைத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்தல்கூட்டத்துக்கு நேரத்தில் செல்லலாம்; மேலதிகாரியின் ஆணைப்படிபொன்னான நேரம் வீணாகும்; அறத் தோல்வி; அலட்சியத்தை வலுப்படுத்தும்
2. அவசர ஊர்தி வரும்வரை காயமுற்றோருடன் காத்திருத்தல்ஆறுதல் கிடைக்கும்; இடம் பாதுகாக்கப்படும்காயமுற்றோருக்கு 25 நிமிடம் இழப்பு; கூட்டமும் தவறும்
3. கூட்டத்தினரிடம் ஒப்படைத்தல்மீனா புறப்படலாம்யாரும் முன்வரவில்லை; பொறுப்பு வெறுமனே கைமாறுகிறது
4. தமது வாகனத்திலேயே அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல்; அலுவலகத்துக்குத் தெரிவித்து, திட்டத்தை விளக்க ஏற்பாடு செய்தல்பொன்னான நேரத்துக்குள் உயிர்கள் காக்கப்படும்; சக அலுவலர் வழியாகவோ சிறு தாமதத்துடனோ கூட்டம் நடைபெறும்சிறிது தாமதம்; விரைவான ஒருங்கிணைப்பு தேவை

(இ) மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை – வழி 4

108 / 112 அழைப்பு; இடத்தைப் பாதுகாத்தல்
➜
முதலுதவி; ஒருவர் உதவியுடன் காரில் ஏற்றுதல்
➜
அருகிலுள்ள மருத்துவமனை – இன்னுயிர் காப்போம் / கட்டணமில்லாச் சிகிச்சை
➜
ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல்; திட்டம் மின்னஞ்சல்; துணை அலுவலர் விளக்கம்
➜
வாகன விவரம் காவல்துறைக்கு; தாமதமாகக் கூட்டத்தில் இணைதல்
  • பொன்னான நேரத்துக்குள் செயல்படுதல்: மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 2(12A) "பொன்னான நேரம்" என்பதை வரையறுக்கிறது – காயமடைந்த பின் உடனடி மருத்துவம் உயிரிழப்பைத் தடுக்க அதிக வாய்ப்புள்ள ஒரு மணி நேரம்.
  • தம்மைக் காக்கும் சட்டத்தை அறிதல்: பிரிவு 134A (2019-இல் சேர்க்கப்பட்டது) – நல்ல சமாரியர் (Good Samaritan) மீது உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கை இல்லை; SaveLIFE Foundation v. Union of India (2016) வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்ட வலிமை அளித்த வழிகாட்டுதல்களின்படி, உதவியவர் தம் அடையாளத்தை வெளிப்படுத்தவோ தடுத்து வைக்கப்படவோ கட்டாயப்படுத்தப்படக் கூடாது. மருத்துவமனை முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும் – பரமானந்த் கட்டாரா v. Union of India (1989).
  • கூட்டத்தையும் காத்தல்: ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் தெரிவித்து, திட்டத்தை மின்னஞ்சலில் அனுப்பி, வட்டாரத் துணை அலுவலரை விளக்கச் சொல்லி, காயமுற்றோர் அனுமதிக்கப்பட்டதும் கூட்டத்தில் இணைதல்.
  • அமைப்பைப் பயன்படுத்துதல்: தமிழ்நாட்டின் "இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48" திட்டம் முதல் 48 மணி நேரம் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாச் சிகிச்சை தருகிறது (வரம்பு ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டது); ஒன்றிய அரசின் 2025 திட்டம் ஏழு நாள்களுக்கு ₹1.5 லட்சம் வரை கட்டணமில்லாச் சிகிச்சை தருகிறது; ராஹ்-வீர் (Rah-Veer) திட்டம் நல்ல சமாரியருக்கு ₹25,000 பரிசு வழங்குகிறது.

செயல்படும் விழுமியங்கள்: இரக்கம், பரிவு, மனஉறுதி, உயிருக்கான மதிப்பு (உறுப்பு 21), பொறுப்பான தலைமை – மேலதிகாரிக்கு உடனே தெரிவிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலும் காக்கப்படுகிறது.

முடிவுரை

விளக்கக் கூட்டத்தை மாற்றி அமைக்கலாம்; உயிரை மீட்க முடியாது. "நீ கண்ட மிக ஏழையான, மிக எளிய மனிதரின் முகத்தை நினைவுகூர்ந்து, உன் செயல் அவருக்குப் பயன்படுமா என்று கேட்டுக்கொள்" என்ற காந்தியடிகளின் தாயத்து (talisman) மீனாவின் தடுமாற்றத்தைத் தீர்க்கிறது. நின்று உதவுவதன் மூலம் அவர் இரு உயிர்களைக் காப்பதோடு, உதவுவது சரியானதும் பாதுகாப்பானதும் என்பதைக் கூட்டத்துக்கும் உணர்த்துகிறார்.

மதிப்பெண் பெறும் நுட்பம் (ஆசிரியர் குறிப்பு):
  • மூன்று உட்பகுதிகளுக்கு மூன்று தலைப்புகள் – (அ) சிக்கல்கள், (ஆ) வழிகள், (இ) நடவடிக்கை; தேர்வாளர் ஒவ்வொரு உட்பகுதிக்கும் தனியே மதிப்பெண் இடுவார்.
  • "கடமையா, மனிதநேயமா" என்று பொய்யான இருமைத் தேர்வை முன்வைக்க வேண்டாம் – சிறந்த விடை உயிர்களையும் காக்கிறது, அலுவல் பணியையும் காக்கிறது (பணிப் பகிர்வு, தகவல், மறுநேரம்).
  • ஒரு துல்லியமான சட்ட மேற்கோள் விடையை உயர்த்தும்: மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 134A (நல்ல சமாரியர்), பிரிவு 2(12A) "பொன்னான நேரம்".
  • தமிழ்நாட்டுக் கோணத்தை (இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48) சேர்த்து, விழுமியங்களுடன் (இரக்கம், மனஉறுதி, பொறுப்புக்கூறல்) முடியுங்கள்.

சுமார் 460 சொற்கள் (அட்டவணைகள், flowchart உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) – முழுமையான படிப்புப் பதிப்பு; தேர்வில் இதே அமைப்பைச் சுருக்கி 250 சொற்களில் எழுதுங்கள் · 2 அட்டவணைகள் + 1 flowchart · நேரம்: சுமார் 14 நிமிடம்.

⬇ Free PDF – download
UPSC Mains practice – reference note: The Good Samaritan and the golden hour · PDF · 0.1 MB ⬇ Download

Frequently asked questions

What is the UPSC Mains answer-writing practice?

Every day one UPSC Mains question from GS Paper I, II, III or IV is posted with hints and a reference note. You write the answer on paper in the time limit (7 minutes for 10 marks, 12 minutes for 15 marks) and compare it with our model answer the next day.

Is it free? Can I get my answer evaluated?

Yes, the questions, model answers and PDFs are free. Send a clear photo of your answer on WhatsApp 99941 46662 with your name and town; our faculty reply with feedback.

Is it available in Tamil?

Yes. Each question and model answer is given in English and in Tamil, so you can practise in the medium you will write the exam in.

Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
Link to this page from your website / blog (HTML code)

Free daily practice

Classroom & online coaching – TNPSC, UPSC – Coimbatore, Madurai.

Courses & fees 99941 46662