Inter-State river water disputes in India have dragged on for decades despite Article 262 and a dedicated law. Examine the reasons for this, with reference to the Cauvery dispute, and suggest institutional reforms. (15 marks, 250 words)
அரசியலமைப்புப் பிரிவு 262-உம் தனிச் சட்டமும் இருந்தும், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிணக்குகள் பல பத்தாண்டுகளாக நீடிக்கின்றன. காவிரிப் பிணக்கை முன்வைத்து இதற்கான காரணங்களை ஆராய்ந்து, நிறுவனச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க. (15 மதிப்பெண், 250 சொற்கள்)
GS Paper II – Governance, Constitution, Polity, Social Justice and International Relations
➤ Read first – reference note
Facts only – the model answer comes tomorrow.
1. Key facts to quote
| Fact | Detail |
|---|---|
| Article 262 | Parliament may by law provide for adjudication of inter-State river water disputes and bar the Supreme Court and other courts from them |
| Inter-State River Water Disputes Act, 1956 | Tribunals on a State's request; 2002 amendment – tribunal within one year, award within three years (extendable by two), award has the force of a Supreme Court decree |
| River Boards Act, 1956 | Allows advisory river boards for inter-State basins – little used |
| Tribunals | Cauvery (1990, award 2007); Krishna-II (2004); Mahadayi (2010, award 2018); Ravi–Beas (1986) |
| 2019 amendment Bill | Single permanent tribunal with benches, Dispute Resolution Committee, data bank; passed by the Lok Sabha in July 2019, not enacted |
| Mihir Shah Committee (2016) | Proposed a National Water Commission by restructuring the Central Water Commission and the Central Ground Water Board |
2. Tamil Nadu angle
| Tamil Nadu fact | Detail |
|---|---|
| Cauvery delta | The delta districts depend on Mettur releases for kuruvai and samba paddy; the share at Biligundlu is 177.25 tmcft a year (Supreme Court, 2018) |
| Mullaperiyar | Tamil Nadu–Keralam dispute over the dam's safety and level; on 7 May 2014 the Supreme Court allowed storage up to 142 feet |
| Mekedatu | Karnataka's proposed reservoir on the Cauvery; Tamil Nadu opposes it as affecting its share |
3. Static links
- GS-II: federal structure, inter-State relations (Articles 262, 263), dispute-redressal mechanisms and institutions.
- GS-I: distribution of water resources; GS-III: irrigation, water-use efficiency.
- Prelims: Article 262 is in Part XI; the Seventh Schedule – water is Entry 17 of the State List, subject to Entry 56 of the Union List.
4. Common mistakes
- Writing that Article 262 created the tribunals – the tribunals come from the 1956 Act made under it.
- Mixing up the Cauvery figures: 192 tmcft (tribunal, 2007) and 177.25 tmcft (Supreme Court, 2018).
- Calling the 2019 Bill a law – it was not enacted.
பாடக் குறிப்பு – தமிழில்
1. குறிப்பிட வேண்டிய முக்கியத் தகவல்கள்
| தகவல் | விவரம் |
|---|---|
| பிரிவு 262 | மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிணக்குகளைத் தீர்க்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்; உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களின் அதிகாரத்தை விலக்கலாம் |
| நதிநீர்ப் பிணக்குச் சட்டம், 1956 | மாநிலக் கோரிக்கையின் பேரில் தீர்ப்பாயம்; 2002 திருத்தம் – ஓராண்டுக்குள் தீர்ப்பாயம், மூன்று ஆண்டுகளில் தீர்ப்பு (இரண்டு ஆண்டு நீட்டிப்பு), உச்ச நீதிமன்ற ஆணைக்குச் சமமான வலிமை |
| நதி வாரியச் சட்டம், 1956 | மாநிலங்களுக்கு இடையிலான படுகைகளுக்கு ஆலோசனை வாரியங்கள் – மிகக் குறைவாகவே பயன்பாடு |
| தீர்ப்பாயங்கள் | காவிரி (1990, தீர்ப்பு 2007); கிருஷ்ணா-II (2004); மகதாயி (2010, தீர்ப்பு 2018); ரவி–பியாஸ் (1986) |
| 2019 திருத்த மசோதா | அமர்வுகளுடன் ஒரே நிரந்தரத் தீர்ப்பாயம், பிணக்குத் தீர்வுக் குழு, தரவு வங்கி; 2019 ஜூலையில் மக்களவையில் நிறைவேறியது, சட்டமாகவில்லை |
| மிஹிர் ஷா குழு (2016) | மத்திய நீர் ஆணையம், மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகியவற்றை மறுசீரமைத்துத் தேசிய நீர் ஆணையம் அமைக்கப் பரிந்துரை |
2. தமிழ்நாட்டுப் பார்வை
| தமிழ்நாட்டுத் தகவல் | விவரம் |
|---|---|
| காவிரி டெல்டா | குறுவை, சம்பா நெல்லுக்கு மேட்டூர் நீர் திறப்பையே டெல்டா மாவட்டங்கள் சார்ந்துள்ளன; பிலிகுண்டுலுவில் ஆண்டுப் பங்கு 177.25 டி.எம்.சி. (உச்ச நீதிமன்றம், 2018) |
| முல்லைப் பெரியாறு | அணையின் பாதுகாப்பு, நீர்மட்டம் குறித்துத் தமிழ்நாடு–கேரளம் பிணக்கு; 2014 மே 7 அன்று 142 அடி வரை தேக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது |
| மேகதாது | காவிரியில் கர்நாடகம் முன்மொழியும் நீர்த்தேக்கம்; தனது பங்கைப் பாதிக்கும் என்று தமிழ்நாடு எதிர்க்கிறது |
3. பாடத்திட்டத் தொடர்பு
- GS-II: கூட்டாட்சி அமைப்பு, மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் (பிரிவுகள் 262, 263), பிணக்குத் தீர்வு அமைப்புகள்.
- GS-I: நீர்வளப் பரவல்; GS-III: பாசனம், நீர்ப் பயன்பாட்டுத் திறன்.
- Prelims: பிரிவு 262 பகுதி XI-இல் உள்ளது; ஏழாம் அட்டவணை – நீர் மாநிலப் பட்டியலின் 17-ஆம் பதிவு, ஒன்றியப் பட்டியலின் 56-ஆம் பதிவுக்கு உட்பட்டு.
4. தவிர்க்க வேண்டிய பிழைகள்
- பிரிவு 262 தீர்ப்பாயங்களை உருவாக்கியது என்று எழுதுவது – அதன்கீழ் இயற்றிய 1956 சட்டமே தீர்ப்பாயங்களுக்கு அடிப்படை.
- காவிரி எண்களைக் குழப்புவது: 192 டி.எம்.சி. (தீர்ப்பாயம், 2007), 177.25 டி.எம்.சி. (உச்ச நீதிமன்றம், 2018).
- 2019 மசோதாவைச் சட்டம் என்று குறிப்பிடுவது – அது சட்டமாகவில்லை.
Official sources:
How to approach it
- "Examine … suggest" – first the legal framework, then reasons for delay with examples, then reforms; keep cooperative federalism at the centre
- framework: Article 262; Inter-State River Water Disputes Act 1956 (amended 2002 – tribunal within one year, award in three years plus two, award with the force of a Supreme Court decree); River Boards Act 1956
- Cauvery timeline: tribunal 1990 → final award 2007 → notified 2013 → Supreme Court 16 February 2018 (Tamil Nadu 177.25 tmcft at Biligundlu, from 192) → Cauvery Water Management Authority, June 2018
- reforms: a permanent tribunal and dispute-resolution committee (2019 Bill passed by the Lok Sabha, not enacted), basin-level bodies, distress-sharing formula, real-time data, the Mihir Shah Committee (2016) idea of a National Water Commission
தமிழில்: "ஆராய்ந்து … பரிந்துரைக்க" – முதலில் சட்டக் கட்டமைப்பு, பிறகு எடுத்துக்காட்டுகளுடன் தாமதத்துக்கான காரணங்கள், பிறகு சீர்திருத்தங்கள்; கூட்டுறவுக் கூட்டாட்சி மையமாக இருக்கட்டும். · கட்டமைப்பு: பிரிவு 262; மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிணக்குச் சட்டம் 1956 (2002 திருத்தம் – ஓராண்டுக்குள் தீர்ப்பாயம், மூன்று + இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற ஆணைக்குச் சமமான வலிமை); நதி வாரியச் சட்டம் 1956. · காவிரிக் காலவரிசை: தீர்ப்பாயம் 1990 → இறுதித் தீர்ப்பு 2007 → அரசிதழ் வெளியீடு 2013 → உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 (பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு 192-இலிருந்து 177.25 டி.எம்.சி.) → காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 2018 ஜூன். · சீர்திருத்தங்கள்: நிரந்தரத் தீர்ப்பாயமும் பிணக்குத் தீர்வுக் குழுவும் (2019 மசோதா – மக்களவையில் நிறைவேறியது, சட்டமாகவில்லை), நதிப்படுகை அமைப்புகள், பற்றாக்குறைக் காலப் பங்கீட்டு முறை, நேரடித் தரவு, மிஹிர் ஷா குழு (2016) பரிந்துரைத்த தேசிய நீர் ஆணையம்.
Send your answer for feedback
Write on paper, take a clear photo and send it on WhatsApp with your name and town. உங்கள் விடையை WhatsApp-இல் அனுப்புங்கள்.
WhatsApp (99941 46662)Model answer – Shanmugam IAS Academy
Introduction
Article 262 lets Parliament provide by law for the adjudication of inter-State river water disputes and even exclude the jurisdiction of courts. Under it came the Inter-State River Water Disputes Act, 1956, amended in 2002 to require a tribunal within one year of a request and an award within three years (extendable by two), with the force of a Supreme Court decree. Yet disputes such as the Cauvery took nearly three decades to settle.
Reasons for the long delays
| Reason for delay | Example |
|---|---|
| Slow tribunals; no binding timelines in practice | Cauvery tribunal 1990 → award 2007 (17 years); Ravi–Beas tribunal set up 1986, still without a final decision |
| Gap between award and enforcement | Cauvery award notified only in 2013; an implementing authority came only in 2018 after the Supreme Court |
| Appeals and re-litigation | Awards challenged through special leave petitions; Article 262 bars only some suits |
| Disputed data and no distress formula | Rival figures on rainfall, inflows and crop area; quarrels in deficit years |
| Politics of water | Emotional, electoral issue; States reluctant to compromise |
The Cauvery case in brief
- Tribunal set up in 1990 on the Supreme Court's direction; interim order 1991; final award 5 February 2007; notified in 2013.
- Supreme Court, 16 February 2018: Tamil Nadu's share at Biligundlu reduced from 192 to 177.25 tmcft; Karnataka got 14.75 tmcft more; the Court called the river a national asset and ordered a scheme to implement the award.
- The Cauvery Water Management Authority and the Cauvery Water Regulation Committee were set up in June 2018 – disputes now shifted to monthly releases in deficit years.
Institutional reforms
- Permanent tribunal with benches and a time-bound Dispute Resolution Committee first – the idea of the 2019 amendment Bill, passed by the Lok Sabha but not enacted.
- Basin-level authorities with all riparian States, using the River Boards Act 1956, which has remained largely unused.
- Agreed distress-sharing formula and real-time telemetry of inflows and releases in a national water data bank.
- Cooperative federalism: the Inter-State Council and zonal councils for political settlement; a National Water Commission as proposed by the Mihir Shah Committee (2016).
- Demand management: crop diversification and micro-irrigation, so that States fight less over a shrinking resource.
Conclusion
Water disputes are not only legal; they are about trust and shared data. A permanent, time-bound forum plus basin-level cooperation can turn rivers from a source of conflict into a shared resource.
- Quote Article 262 and the 2002 amendment in the introduction – it shows the law exists but does not work on time.
- One crisp Cauvery timeline (1990, 2007, 2013, 2018) is better than vague lines on many disputes.
- Keep the tone neutral between States; reforms should be institutional, not partisan.
About 409 words (including the table and flowchart, excluding the tip box) – a full study version; in the exam keep the same structure and compress to 250 words · 1 table + 1 flowchart · time: about 11 minutes.
மாதிரி விடை – தமிழில்
முன்னுரை
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிணக்குகளைத் தீர்க்கச் சட்டம் இயற்றவும், நீதிமன்ற அதிகார வரம்பை விலக்கவும் பிரிவு 262 நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் தருகிறது. அதன்கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிணக்குச் சட்டம், 1956 இயற்றப்பட்டது; 2002 திருத்தம் கோரிக்கை வந்த ஓராண்டுக்குள் தீர்ப்பாயம் அமைக்கவும், மூன்று ஆண்டுகளில் (இரண்டு ஆண்டு நீட்டிப்புடன்) தீர்ப்பு வழங்கவும், அதற்கு உச்ச நீதிமன்ற ஆணைக்குச் சமமான வலிமை தரவும் வகை செய்தது. ஆயினும் காவிரி போன்ற பிணக்குகள் தீர ஏறத்தாழ மூன்று பத்தாண்டுகள் ஆயின.
நீண்ட தாமதத்துக்கான காரணங்கள்
| தாமதத்துக்கான காரணம் | எடுத்துக்காட்டு |
|---|---|
| தீர்ப்பாயங்களின் மெதுவான செயல்; நடைமுறையில் கால வரம்பு இல்லை | காவிரித் தீர்ப்பாயம் 1990 → தீர்ப்பு 2007 (17 ஆண்டு); ரவி–பியாஸ் தீர்ப்பாயம் 1986-இல் அமைந்தும் இன்னும் இறுதி முடிவு இல்லை |
| தீர்ப்புக்கும் செயலாக்கத்துக்கும் இடைவெளி | காவிரித் தீர்ப்பு 2013-இல்தான் அரசிதழில்; செயலாக்க ஆணையம் உச்ச நீதிமன்றத்துக்குப் பின் 2018-இல்தான் |
| மேல்முறையீடும் மறுவழக்கும் | சிறப்பு அனுமதி மனுக்கள் மூலம் தீர்ப்புகள் எதிர்க்கப்படுகின்றன |
| முரண்படும் தரவு; பற்றாக்குறைக் காலப் பங்கீட்டு முறை இல்லை | மழை, நீர்வரத்து, பயிர்ப் பரப்பு குறித்துப் போட்டித் தரவுகள்; பற்றாக்குறை ஆண்டுகளில் மோதல் |
| நீர் அரசியல் | உணர்வுபூர்வமான தேர்தல் பிரச்சினை; விட்டுக்கொடுக்க மாநிலங்களுக்குத் தயக்கம் |
காவிரி வழக்கு – சுருக்கம்
- உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 1990-இல் தீர்ப்பாயம்; 1991 இடைக்கால உத்தரவு; 2007 பிப்ரவரி 5 இறுதித் தீர்ப்பு; 2013-இல் அரசிதழ் வெளியீடு.
- உச்ச நீதிமன்றம், 2018 பிப்ரவரி 16: பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டின் பங்கு 192-இலிருந்து 177.25 டி.எம்.சி.யாகக் குறைப்பு; கர்நாடகத்துக்கு 14.75 டி.எம்.சி. கூடுதல்; நதி தேசியச் சொத்து என்றும், தீர்ப்பைச் செயல்படுத்தத் திட்டம் வேண்டும் என்றும் கூறியது.
- 2018 ஜூனில் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைந்தன – இப்போது பிணக்கு பற்றாக்குறை ஆண்டுகளில் மாதாந்திர நீர் திறப்பு பற்றியதாக மாறியுள்ளது.
நிறுவனச் சீர்திருத்தங்கள்
- அமர்வுகளுடன் கூடிய நிரந்தரத் தீர்ப்பாயம், அதற்கு முன் கால வரம்புள்ள பிணக்குத் தீர்வுக் குழு – 2019 திருத்த மசோதாவின் கருத்து; மக்களவையில் நிறைவேறியது, சட்டமாகவில்லை.
- நதிநீர் பகிரும் அனைத்து மாநிலங்களும் இடம்பெறும் நதிப்படுகை அமைப்புகள் – பெரிதும் பயன்படுத்தப்படாத நதி வாரியச் சட்டம் 1956 மூலம்.
- ஒப்புக்கொண்ட பற்றாக்குறைக் காலப் பங்கீட்டு முறை; நீர்வரத்து, நீர் திறப்பு குறித்த நேரடித் தொலைஅளவீட்டுத் தரவு – தேசிய நீர்த் தரவு வங்கி.
- கூட்டுறவுக் கூட்டாட்சி: அரசியல் தீர்வுக்கு மாநிலங்களுக்கு இடையிலான மன்றம், மண்டலக் குழுக்கள்; மிஹிர் ஷா குழு (2016) பரிந்துரைத்த தேசிய நீர் ஆணையம்.
- தேவை மேலாண்மை: பயிர்ப் பன்முகமாக்கல், நுண்ணீர்ப் பாசனம் – குறையும் வளத்துக்காக மாநிலங்கள் மோதுவது குறையும்.
முடிவுரை
நதிநீர்ப் பிணக்குகள் சட்டச் சிக்கல் மட்டுமல்ல; நம்பிக்கையும் பொதுத் தரவும் சார்ந்தவை. கால வரம்புள்ள நிரந்தர மன்றமும் நதிப்படுகை ஒத்துழைப்பும் சேர்ந்தால், நதிகள் மோதலின் மூலமாக அல்லாமல் பகிர்ந்த வளமாக மாறும்.
- முன்னுரையிலேயே பிரிவு 262, 2002 திருத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள் – சட்டம் இருந்தும் காலத்தில் செயல்படவில்லை என்பதைக் காட்டும்.
- பல பிணக்குகளைப் பற்றிய பொதுவான வரிகளைவிட, தெளிவான ஒரு காவிரிக் காலவரிசை (1990, 2007, 2013, 2018) சிறந்தது.
- மாநிலங்களுக்கு இடையே நடுநிலை காக்கவும்; சீர்திருத்தங்கள் நிறுவன ரீதியானவையாக இருக்கட்டும், கட்சி சார்ந்தவையாக அல்ல.
சுமார் 312 சொற்கள் (அட்டவணை, flowchart உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) – முழுமையான படிப்புப் பதிப்பு; தேர்வில் இதே அமைப்பைச் சுருக்கி 250 சொற்களில் எழுதுங்கள் · 1 அட்டவணை + 1 flowchart · நேரம்: சுமார் 11 நிமிடம்.
Frequently asked questions
What is the UPSC Mains answer-writing practice?
Every day one UPSC Mains question from GS Paper I, II, III or IV is posted with hints and a reference note. You write the answer on paper in the time limit (7 minutes for 10 marks, 12 minutes for 15 marks) and compare it with our model answer the next day.
Is it free? Can I get my answer evaluated?
Yes, the questions, model answers and PDFs are free. Send a clear photo of your answer on WhatsApp 99941 46662 with your name and town; our faculty reply with feedback.
Is it available in Tamil?
Yes. Each question and model answer is given in English and in Tamil, so you can practise in the medium you will write the exam in.
Link to this page from your website / blog (HTML code)
Free daily practice
- UPSC Mains answer practice
- Weekly Top 20 current affairs
- Daily subject quiz
- Knowledge nugget
- TNPSC Mains Practice
- All free PDFs
Classroom & online coaching – TNPSC, UPSC – Coimbatore, Madurai.
Courses & fees 99941 46662நடப்பு நிகழ்வுகள் 24 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
📚 UPSC Civil Services Books (Prelims & Mains)
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
U27 · CSAT Mock Tests with Analysis – UPSC Civil Services (Prelims Paper II – CSAT)
₹249
U11 · Indian Polity & Constitution – UPSC Civil Services (Prelims & Mains)
₹249
U03 · Modern Indian History – UPSC Civil Services (Prelims & Mains)
₹249
U15 · Indian Economy – UPSC Civil Services (Prelims & Mains)
₹249UPSC / IAS – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

