குரூப் 2/2A Mains M05-த அத்.21: இந்திய அரசியலில் நேர்மை (25 வினா)

← திரும்பச் செல்ல

குரூப் 2/2A Mains M05-த அத்.21: இந்திய அரசியலில் நேர்மை (25 வினா) – 24 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கிய சட்டம்:

Correct Answer: A [CVC சட்டம் 2003]

விளக்கம்:

சந்தானம் குழுப் பரிந்துரைப்படி 1964-இல் அரசுத் தீர்மானத்தால் அமைந்த மத்திய கண்காணிப்பு ஆணையம், CVC சட்டம் 2003 மூலம் சட்டப்பூர்வ அமைப்பானது. வினீத் நாராயண் (1998) தீர்ப்பு அதற்குச் சட்ட அந்தஸ்து வழங்க வழிகாட்டியது.

2.  

மத்திய கண்காணிப்பு ஆணையரை நியமிக்கப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெறாதவர்:

Correct Answer: C [இந்தியத் தலைமை நீதிபதி]

விளக்கம்:

CVC சட்டம் 2003-இன்படி மத்திய கண்காணிப்பு ஆணையர் நியமனக் குழுவில் பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுவர். இந்தியத் தலைமை நீதிபதி இக்குழுவில் இல்லை; அவர் CBI இயக்குநர் தேர்வுக் குழுவில் இடம்பெறுகிறார்.

3.  

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது.
2. ஓய்வுக்குப் பின் ஒன்றிய, மாநில அரசுப் பதவி வகிக்க இயலாது.
3. ஒன்றியக் கணக்கு அறிக்கையை நேரடியாக மக்களவைத் தலைவரிடம் அளிப்பார்.
சரியானவை:

Correct Answer: D [1, 2 மட்டும்]

விளக்கம்:

பிரிவு 148-இன்படி CAG பதவிக்காலம் 6 ஆண்டு அல்லது 65 வயது; ஓய்வுக்குப் பின் ஒன்றிய, மாநில அரசுப் பதவி வகிக்க இயலாது. பிரிவு 151-இன்படி ஒன்றியக் கணக்கு அறிக்கை குடியரசுத் தலைவருக்கே அளிக்கப்படுவதால் கூற்று 3 தவறு.

4.  

சிக்கனம், திறன், பயன்விளைவு (3E) அடிப்படையில் ஒரு திட்டம் தன் நோக்கத்தை அடைந்ததா என்று மதிப்பிடும் CAG தணிக்கை வகை:

Correct Answer: C [செயல்திறன் தணிக்கை]

விளக்கம்:

சிக்கனம் (Economy), திறன் (Efficiency), பயன்விளைவு (Effectiveness) ஆகிய 3E அடிப்படையில் ஒரு திட்டம் நோக்கத்தை அடைந்ததா என மதிப்பிடுவது CAG-இன் செயல்திறன் தணிக்கை (Performance Audit). நிதித் தணிக்கை கணக்குகளின் சரித்தன்மையையும், இணக்கத் தணிக்கை விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதையும் ஆராயும்.

5.  

CBI அமைக்கப்பட்ட நாள்:

Correct Answer: C [01.04.1963]

விளக்கம்:

தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946-இன் அடிப்படையில், 01.04.1963 உள்துறை அமைச்சகத் தீர்மானத்தால் CBI அமைக்கப்பட்டது. அது சட்டப்பூர்வ அமைப்பு அல்ல; இப்போது பணியாளர், பொதுக் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

6.  

மாநிலத்தில் CBI புலனாய்வுக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று கூறும் விதி:

Correct Answer: A [DSPE சட்டப் பிரிவு 6]

விளக்கம்:

தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6-இன்படி ஒரு மாநிலத்தில் CBI புலனாய்வு செய்ய அந்த மாநில அரசின் ஒப்புதல் தேவை. சில மாநிலங்கள் வழங்கிய பொது ஒப்புதலைத் (general consent) திரும்பப் பெற்றதால் இவ்விதி அடிக்கடி விவாதத்துக்கு உள்ளாகிறது.

7.  

CBI இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் குழு:

Correct Answer: D [பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி]

விளக்கம்:

தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டப் பிரிவு 4A-இன்படி CBI இயக்குநரைப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது பெரிய எதிர்க்கட்சித் தலைவர்), இந்தியத் தலைமை நீதிபதி (அல்லது அவர் நியமிக்கும் நீதிபதி) அடங்கிய குழு தேர்ந்தெடுக்கிறது. இம்முறை லோக்பால் சட்டம் 2013 மூலம் வந்தது.

8.  

அமலாக்க இயக்குநரகம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

Correct Answer: B [நிதி அமைச்சகம் – வருவாய்த் துறை]

விளக்கம்:

அமலாக்க இயக்குநரகம் (ED) ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு FEMA, PMLA, தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துகிறது. CBI பணியாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால் அதனுடன் குழப்பக் கூடாது.

9.  

பொருத்துக:
A. FEMA – 1. 2002
B. PMLA – 2. 2018
C. தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் – 3. 1999
D. ஊழலை வெளிப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் – 4. 2014

Correct Answer: A [A-3, B-1, C-2, D-4]

விளக்கம்:

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) – 1999, பணமோசடித் தடுப்புச் சட்டம் (PMLA) – 2002, தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் – 2018, ஊழலை வெளிப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் – 2014; எனவே A-3, B-1, C-2, D-4. FEMA, அதற்கு முந்தைய FERA 1973-க்குப் பதிலாக வந்தது.

10.  

PMLA-வின் கைது, சொத்து முடக்க அதிகாரங்களை உறுதிசெய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:

Correct Answer: C [விஜய் மதன்லால் சவுத்ரி (2022)]

விளக்கம்:

விஜய் மதன்லால் சவுத்ரி – இந்திய ஒன்றியம் (2022) தீர்ப்பு PMLA-வின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் கைது, சோதனை, சொத்து முடக்க அதிகாரங்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளையும் (பிரிவு 45) உறுதிசெய்தது. அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கை (ECIR) FIR-க்குச் சமமல்ல என்றும் கூறியது.

11.  

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம் 2018 பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. கையூட்டு கொடுப்பதையும் நேரடிக் குற்றமாக்கியது.
2. பொது ஊழியர் மீது புலனாய்வுக்கு முன் ஒப்புதல் (பிரிவு 17A) சேர்த்தது.
3. லோக்பால் அமைப்பை உருவாக்கியது.
சரியானவை:

Correct Answer: B [1, 2 மட்டும்]

விளக்கம்:

ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டம் 2018 கையூட்டு கொடுப்பதையும் நேரடிக் குற்றமாக்கியது; பொது ஊழியர் மீது புலனாய்வு தொடங்க முன் ஒப்புதல் பெறும் பிரிவு 17A-ஐச் சேர்த்தது. லோக்பால் அமைப்பு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் 2013-ஆல் உருவானதால் கூற்று 3 தவறு.

12.  

“லோக்பால்” என்ற சொல்லை 1963-இல் முதலில் பயன்படுத்தியவர்:

Correct Answer: D [எல்.எம். சிங்வி]

விளக்கம்:

ஸ்வீடனின் “ஆம்பட்ஸ்மேன்” போன்ற அமைப்புக்கு “லோக்பால்” என்ற சொல்லை 1963-இல் எல்.எம். சிங்வி முதலில் பயன்படுத்தினார்.

13.  

லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க முதலில் பரிந்துரைத்த அமைப்பு:

Correct Answer: B [முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966)]

விளக்கம்:

மொரார்ஜி தேசாய் தலைமையில் தொடங்கிய முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966) ஒன்றியத்தில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நீண்ட காலத்துக்குப் பின் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் 2013 இயற்றப்பட்டது; சந்தானம் குழு (1964) CVC அமைக்கப் பரிந்துரைத்தது.

14.  

லோக்பால் அமைப்பு பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. தலைவர் + அதிகபட்சம் 8 உறுப்பினர்கள்.
2. உறுப்பினர்களில் 50% நீதித்துறை உறுப்பினர்கள்.
3. பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது.
சரியானவை:

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

லோக்பாலில் தலைவருடன் அதிகபட்சம் 8 உறுப்பினர்கள் இருக்கலாம்; அவர்களில் 50% நீதித்துறை உறுப்பினர்கள். பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 70 வயது என்பதால் கூற்று 3 தவறு; எனவே 1, 2 மட்டும் சரி.

15.  

லோக்பால் தேர்வுக் குழுவில் இடம்பெறாதவர்:

Correct Answer: D [குடியரசுத் துணைத் தலைவர்]

விளக்கம்:

லோக்பால் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி (அல்லது அவர் நியமிக்கும் நீதிபதி), சிறந்த சட்ட அறிஞர் இடம்பெறுவர். குடியரசுத் துணைத் தலைவர் இக்குழுவில் இல்லை; தேர்வுக் குழு பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

16.  

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர்:

Correct Answer: C [நீதிபதி பினாகி சந்திர கோஷ்]

விளக்கம்:

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் 2019 மார்ச்சில் பதவியேற்றார். இவருக்குப் பின் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவரானார்.

17.  

இந்தியாவில் முதன்முதலில் லோக் ஆயுக்தா அமைத்த மாநிலம்:

Correct Answer: D [மகாராஷ்டிரம்]

விளக்கம்:

மகாராஷ்டிர லோக் ஆயுக்தா மற்றும் உப லோக் ஆயுக்தா சட்டம் 1971 மூலம் இந்தியாவில் முதன்முதலில் லோக் ஆயுக்தாவை அமைத்த மாநிலம் மகாராஷ்டிரம். ஒடிசா 1970-இல் சட்டம் இயற்றினாலும் லோக் ஆயுக்தா 1983-இல்தான் செயல்படத் தொடங்கியது.

18.  

ஐ.நா. ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கையை (UNCAC) இந்தியா ஏற்புறுதி செய்த ஆண்டு:

Correct Answer: C [2011]

விளக்கம்:

2003-இல் ஐ.நா. ஏற்ற ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கையை (UNCAC) இந்தியா 2011-இல் ஏற்புறுதி செய்தது.

19.  

பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. மத்திய கண்காணிப்பு ஆணையம்
2. அமலாக்கப் பிரிவு
3. CBI
4. லோக்பால் சட்டம் நடைமுறை

Correct Answer: D [2, 3, 1, 4]

விளக்கம்:

அமலாக்கப் பிரிவு 1956, CBI 1963, மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964, லோக்பால் சட்டம் நடைமுறை 2014 என்பதே வரிசை. மத்திய கண்காணிப்பு ஆணையம் சந்தானம் குழுப் பரிந்துரைப்படி அமைந்தது; லோக்பால் சட்டம் 2013 16.01.2014 முதல் நடைமுறைக்கு வந்தது.

20.  

மத்திய கண்காணிப்பு ஆணையம் பற்றிய சரியான கூற்று:

Correct Answer: D [இது CBI-இன் ஊழல் வழக்குப் புலனாய்வை மேற்பார்வையிடும் ஆலோசனை அமைப்பு]

விளக்கம்:

மத்திய கண்காணிப்பு ஆணையம் CVC சட்டம் 2003-இன் கீழ் அமைந்த சட்டப்பூர்வ ஆலோசனை அமைப்பு; ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளில் CBI-இன் புலனாய்வை மேற்பார்வையிடுகிறது. அது அரசியலமைப்பு அமைப்பு அல்ல, தானே வழக்குத் தொடுப்பதும் இல்லை.

21.  

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு:

Correct Answer: C [2018]

விளக்கம்:

லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் 2013-ஐத் தொடர்ந்து தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018-இல் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அமைப்பு 2019-இல் செயல்படத் தொடங்கியது.

22.  

தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்களைப் புலனாய்வு செய்யும் அமைப்பு:

Correct Answer: B [கண்காணிப்பு, ஊழல் தடுப்பு இயக்ககம்]

விளக்கம்:

தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்கள் மீதான ஊழல் தடுப்புச் சட்டக் குற்றங்களைக் கண்காணிப்பு, ஊழல் தடுப்பு இயக்ககம் (DVAC) புலனாய்வு செய்கிறது. மத்திய கண்காணிப்பு ஆணையம் ஒன்றிய அரசு ஊழியர்களைக் கண்காணிக்கும் அமைப்பு; அமலாக்க இயக்குநரகம் பணமோசடி வழக்குகளைக் கையாளுகிறது.

23.  

CBI-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்ற ஆண்டு:

Correct Answer: C [2023]

விளக்கம்:

CBI-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலைத் (general consent) தமிழ்நாடு அரசு ஜூன் 2023-இல் திரும்பப் பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் புதிய வழக்கை விசாரிக்க, தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6-இன்படி CBI ஒவ்வொரு முறையும் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

24.  

2013-இல் CBI-யை “கூண்டுக் கிளி” என்று விமர்சித்தது:

Correct Answer: D [உச்ச நீதிமன்றம்]

விளக்கம்:

2013 நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் CBI-யை “கூண்டுக் கிளி” என்று விமர்சித்தது.

➤ முழு நூல் – விரிவான பாடம், மாதிரி விடைகள், எல்லா வினாக்களும்: M05-த அரசியலமைப்பு (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-mains-constitution-governance-tamil

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0