இந்திய ஆட்சியியல் PYQ – அடிப்படைக் கடமைகள்
இந்திய ஆட்சியியல் PYQ – அடிப்படைக் கடமைகள் – 28 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [அரசியலமைப்பில் 10 அடிப்படைக் கடமைகளைச் சேர்க்க ஸ்வரண் சிங் குழு பரிந்துரைத்தது]
விளக்கம்:
ஸ்வரண் சிங் குழு பரிந்துரைத்தது 8 கடமைகள்; அரசு 10 கடமைகளைச் சேர்த்தது. எனவே (A) உறுதியாகத் தவறு. (B), (C) சரி. (D): கடமைகளை நீதிமன்றத்தில் நேரடியாகச் செயல்படுத்த முடியாது; ஆனால் நாடாளுமன்றம் சட்டங்கள் மூலம் செயல்படுத்தலாம் (வர்மா குழு கண்டறிந்த சட்டங்கள்).
Correct Answer: A [அடிப்படைக் கடமைகள்]
விளக்கம்:
இது பிரிவு 51A(h) – அடிப்படைக் கடமை . "ஒவ்வொரு குடிமகனின் கடமை" என்ற சொற்றொடரே பிரிவு 51A-இன் தொடக்கம். நெறிமுறைகள் அரசின் கடமைகள்; உரிமைகள் தனிநபருக்கானவை.
Correct Answer: C [2, 3 சரி]
விளக்கம்:
அடிப்படைக் கடமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும், அவை அறநெறி அல்லது குடிமைக் கடமைகள் என்பதால் கூற்றுகள் 2, 3 சரி. நாடாளுமன்றம் சட்டம் மூலம் அவற்றைச் செயல்படுத்த முடியும், ஸ்வரண் சிங் குழு பரிந்துரைத்த வரி செலுத்தும் கடமை சேர்க்கப்படவில்லை என்பதால் 1, 4 தவறு.
Correct Answer: D [6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குதல்]
விளக்கம்:
51A(k) – 86-வது திருத்தம் (2002). பிற மூன்றும் 1976-இல் சேர்க்கப்பட்ட முதல் பத்தில் உள்ளவை.
Correct Answer: C [ஸ்வரண் சிங் குழு]
விளக்கம்:
1976-இல் அமைக்கப்பட்ட சர்தார் ஸ்வரண் சிங் குழு அடிப்படைக் கடமைகளை அரசியலமைப்பில் சேர்க்கப் பரிந்துரைத்தது; அதன்படி 42-வது திருத்தம் பகுதி IVA-ஐச் சேர்த்தது. குழு எட்டுக் கடமைகளைப் பரிந்துரைத்தது; ஆனால் பத்துக் கடமைகள் சேர்க்கப்பட்டன, வரி செலுத்தும் கடமை ஏற்கப்படவில்லை.
Correct Answer: D [ஸ்வரண் சிங் குழு]
விளக்கம்:
ஸ்வரண் சிங் குழு (1976) . ஷா ஆணையம் (1977) – நெருக்கடிநிலைக் கால அத்துமீறல்களை விசாரித்தது; சந்தானம் குழு – ஊழல் தடுப்பு. குழுக்களின் அட்டவணைக்கு வினா 5 விளக்கத்தைப் பார்க்கவும்.
Correct Answer: D [1, 2, 3 சரி]
விளக்கம்:
மூன்று கூற்றுகளும் சரி → D . கூற்று நிலை காரணம் 1 சரி கடமைகளை நீதிமன்றத்தில் நேரடியாக (நீதிப்பேராணை மனு மூலம்) செயல்படுத்த முடியாது; ஆனால் நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றி அவற்றைச் செயல்படுத்தலாம்; மீறலுக்குத் தண்டனையும் விதிக்கலாம் (எ.கா.
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – பிரிவு 51A. (ii) சரி – 51A(k). (iii) தவறு – அறிவியல் மனப்பான்மை 51A(h) – அடிப்படைக் கடமையே.
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
மூன்றும் பிரிவு 51A-இல் உள்ள கடமைகளைக் குறிக்கின்றன: (i) → 51A(k) , (ii) → 51A(i) , (iii) → 51A(h) . கவனிக்க: 51A(k)-இன் சரியான சொற்கள் "6 – 14 வயதுக் குழந்தைக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குதல் – பெற்றோர் / பாதுகாவலரின் கடமை".
Correct Answer: D [அனைத்தும் சரி]
விளக்கம்:
அடிப்படைக் கடமைகள் உரிமைகளுடன் கடமைகளையும் நினைவூட்டுகின்றன, தேச விரோதச் செயல்களுக்கு எதிரான எச்சரிக்கையாகவும், ஒழுக்க உணர்வை வளர்க்கும் ஊக்கமாகவும் அமைகின்றன. இவை நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கிடத்தக்கவை அல்ல என்றாலும், நாடாளுமன்றம் சட்டம் இயற்றி அவற்றைச் செயல்படுத்த முடியும் என்பதால் நான்கும் சரி.
Correct Answer: A [14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வாய்ப்புகளை வழங்குதல்]
விளக்கம்:
51A(k) – கல்வி வாய்ப்பு (6 – 14 வயது; பெற்றோர் / பாதுகாவலர் கடமை). (B) 51A(f); (C) 51A(d); (D) 51A(g). சரியான சொற்களும் 21A-உடனான வேறுபாடும் வினா 9 விளக்கத்திலுள்ள அட்டவணையில் உள்ளன.
Correct Answer: D [அரசியலமைப்பின் பகுதி IVA]
விளக்கம்:
பகுதி IVA (பிரிவு 51A). பகுதி IIIA என்று ஒன்று இல்லை. பகுதி பொருள் I ஒன்றியமும் அதன் ஆட்சிப்பகுதியும் (பிரிவுகள் 1 – 4) II குடியுரிமை (5 – 11) III அடிப்படை உரிமைகள் (12 – 35) IV நெறிமுறைக் கோட்பாடுகள் (36 – 51) IVA அடிப்படைக் கடமைகள் (51A)
Correct Answer: B [அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்]
விளக்கம்:
51A(h) – அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆராய்ந்தறியும் உணர்வு, சீர்திருத்த உணர்வு. (A) 51A(f); (C) 51A(d); (D) 51A(c). 11 கடமைகளின் முழு அட்டவணைக்கு வினா 2 விளக்கத்தைப் பார்க்கவும்.
Correct Answer: C [பிரிவு 51A(h)]
விளக்கம்:
பிரிவு 51A(h) . பிரிவு 51 – பன்னாட்டு அமைதி (நெறிமுறைக் கோட்பாடு). பிரிவு 60 – குடியரசுத் தலைவரின் பதவியேற்பு உறுதிமொழி; பிரிவு 61 – குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மான நடைமுறை. "60A", "61A" என்ற பிரிவுகள் இல்லை .
Correct Answer: C [(i), (ii)]
விளக்கம்:
(i) → 51A(e) ; (ii) → 51A(h) . (iii) நாடுகளுக்கிடையே நியாயமான, மதிப்புமிக்க உறவுகள் → பிரிவு 51(b) – அரசின் நெறிமுறைக் கோட்பாடு; அடிப்படைக் கடமை அல்ல.
Correct Answer: D [பகுதி IVA]
விளக்கம்:
பகுதி IVA . பகுதிகளின் அட்டவணைக்கு வினா 12 விளக்கத்தைப் பார்க்கவும்.
Correct Answer: D [(i), (iv)]
விளக்கம்:
42-வது திருத்தம் (1976) முதல் பத்து அடிப்படைக் கடமைகளைப் பிரிவு 51A-இல் சேர்த்தது; 86-வது திருத்தம் (2002) 6 – 14 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு வழங்குவதைப் பெற்றோரின் 11-வது கடமையாகச் சேர்த்தது. 44-வது திருத்தம் சொத்துரிமையை நீக்கியது; 46, 76 திருத்தங்களுக்கும் கடமைகளுக்கும் தொடர்பில்லை.
Correct Answer: B [பிரிவு 51A]
விளக்கம்:
பிரிவு 51A (உட்பிரிவு (h)). பிரிவு 32 – அரசியலமைப்புத் தீர்வுரிமை. பிரிவு 35A – முன்னாள் ஜம்மு–காஷ்மீர் நிரந்தரக் குடியிருப்போர் பற்றிய விதி (2019 ஆகஸ்ட் முதல் செயலிழந்தது). "14A" என்ற பிரிவு இல்லை .
Correct Answer: D [(i), (iv) தவறு]
விளக்கம்:
கூறு அடிப்படைக் கடமையா? வரி செலுத்துதல் இல்லை பொதுச் சொத்தைப் பாதுகாத்தல் உண்டு – 51A(i) கூட்டுப் பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தைப் பேணுதல் உண்டு – 51A(f) வாக்களித்தல் இல்லை
Correct Answer: B [4 3 1 2]
விளக்கம்:
பிப்ரவரி 28 → 4 (தேசிய அறிவியல் நாள்); ஆகஸ்ட் 20 → 3 (தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்); ஏப்ரல் 21 → 1 (குடிமைப் பணிகள் நாள்); அக்டோபர் 24 → 2 (ஐ.நா. நாள்). குறியீடு 4 3 1 2 . நாள் தினம் குறிப்பு பிப்ரவரி 28 தேசிய அறிவியல் நாள் சி.வி.
Correct Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
விளக்கம்:
சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கடமையை (51A(g), நெறிமுறை 48A) செயல்படுத்த உச்ச நீதிமன்றம் வேலூர் குடிமக்கள் நல மன்ற வழக்கில் (1996) நீடித்த வளர்ச்சி, முன்னெச்சரிக்கைக் கொள்கை, மாசுபடுத்துபவரே செலவை ஏற்றல் ஆகியவற்றை நாட்டுச் சட்டத்தின் பகுதியாக ஏற்றது. எனவே மூன்றும் பொருந்தும்.
Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-க்குச் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
இரண்டு கூற்றுகளும் AIIMS மாணவர் சங்கம் எதிர் AIIMS (2001) தீர்ப்பின் ஒரே வாக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: "பிரிவு 51A அரசின் மீது வெளிப்படையாக எந்தக் கடமையையும் விதிக்கவில்லை என்றாலும் , ஒவ்வொரு குடிமகனின் கடமையும் அரசின் கூட்டுக் கடமையே." [A] சரி: பிரிவு…
Correct Answer: C [(1), (2), (3) மட்டும்]
விளக்கம்:
(1) → 51A(c); (2) → 51A(g); (3) → 51A(f). (4) தவறு – கடமைப் பட்டியலில் இருப்பது பொதுச் சொத்தைப் பாதுகாத்தல் (51A(i)); தனியார் சொத்து அல்ல.
Correct Answer: C [42-வது அரசியலமைப்புத் திருத்தம், 1976]
விளக்கம்:
42-வது திருத்தம் (1976) . (விருப்பங்களில் தரப்பட்ட பிற திருத்தங்களின் ஆண்டுகளும் தவறானவை: 37-வது – 1975, அருணாசலப் பிரதேசச் சட்டமன்றம்; 49-வது – 1984, திரிபுரா – ஆறாம் அட்டவணை; 52-வது – 1985, கட்சித் தாவல் தடை – பத்தாம் அட்டவணை.)
Correct Answer: C [(c) மட்டும்]
விளக்கம்:
(a) 51A(g); (b) 51A(i) – கடமைகளே. (c) பிரிவு 51 – அரசின் நெறிமுறைக் கோட்பாடு; அடிப்படைக் கடமை அல்ல.
Correct Answer: D [(1), (3), (4)]
விளக்கம்:
(1) 51A(d); (3) 51A(f); (4) 51A(i). (2) வருமான வரி செலுத்துதல் கடமைப் பட்டியலில் இல்லை (வினா 19 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்).
Correct Answer: B [1999]
விளக்கம்:
நீதிபதி ஜே.எஸ். வர்மா குழு (1999) – அடிப்படைக் கடமைகளைக் குடிமக்களுக்குக் கற்பிக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைத்ததுடன், சில கடமைகளைச் செயல்படுத்த ஏற்கெனவே உள்ள சட்டங்களையும் கண்டறிந்தது.
Correct Answer: A [இந்தியக் குடிமக்களுக்கு மட்டும்]
விளக்கம்:
பிரிவு 51A: "இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமை" – குடிமக்களுக்கு மட்டும் ; வயது வரம்பு இல்லை. அம்சம் யாருக்கு?
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
