இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 1 (வினா 1–27)
இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 1 (வினா 1–27) – 27 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [பகுதி IV]
விளக்கம்:
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் அரசியலமைப்பின் பகுதி IV-இல் பிரிவுகள் 36 – 51-இல் இடம்பெற்றுள்ளன. பகுதி V ஒன்றிய அரசு, பகுதி VI மாநில அரசுகள், பகுதி VII (முந்தைய பகுதி B மாநிலங்கள்) 7-வது திருத்தத்தால் (1956) நீக்கப்பட்டது.
Correct Answer: D [பிரிவு 45]
விளக்கம்:
மூல அரசியலமைப்பில் பிரிவு 45 : அரசியலமைப்பு தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்க அரசு முயல வேண்டும். தரப்பட்ட விருப்பங்களில் இதுவே பொருந்தும்.
Correct Answer: B [6 முதல் 14 வயது வரை]
விளக்கம்:
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அருகமைப் பள்ளியில் இலவச, கட்டாயத் தொடக்கக் கல்வியை உறுதி செய்கிறது. இது 86-வது திருத்தம் சேர்த்த பிரிவு 21A-ஐச் செயல்படுத்தும் சட்டம்; 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
Correct Answer: C [(a) தவறு, ஆனால் (b) சரி]
விளக்கம்:
(a) தவறு : நெறிமுறைகளுக்கு நேரடி மூலம் அயர்லாந்து அரசியலமைப்பு (1937) . 1935 சட்டத்தின் அறிவுறுத்தல் ஆவணங்களை அவை ஒத்திருக்கின்றன – ஆனால் அவை நேரடி மூலம் அல்ல.
Correct Answer: B [மக்கள் நல அரசு]
விளக்கம்:
நெறிமுறைகளின் முக்கிய நோக்கம் நலன்புரி அரசு (மக்கள் நல அரசு) (Welfare State) அமைத்தல் – சமூக, பொருளாதார மக்களாட்சி. (C) நலிந்த பிரிவினர் நலன் (பிரிவு 46) ஒரு பகுதி நோக்கம் மட்டுமே. (D) தவறு – பிரிவு 37-இன்படி அவை நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாதவை .
Correct Answer: D [பிரிவு 51]
விளக்கம்:
பிரிவு 51 பன்னாட்டு அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகளிடையே நேர்மையான உறவைப் பேணுதல், பன்னாட்டுச் சட்டத்தை மதித்தல், பிணக்குகளை நடுவர் மூலம் தீர்த்தல் ஆகியவற்றுக்கு அரசு முயல வேண்டும் என்கிறது. பிரிவு 48 வேளாண், கால்நடை, 49 நினைவுச் சின்னங்கள், 50 நீதித்துறை – நிர்வாகப் பிரிப்பு பற்றியவை.
Correct Answer: A [எல்.எம். சிங்வி]
விளக்கம்:
" உயிர் தரும் விதிகள் " (Life-giving provisions) – எல்.எம். சிங்வி . அம்பேத்கர் " புதுமையான அம்சம் " என்றார். கூறியவர் கருத்து எல்.எம். சிங்வி உயிர் தரும் விதிகள் பி.ஆர்.
Correct Answer: B [4 1 2 3]
விளக்கம்:
48A → 1 (சுற்றுச்சூழல்); 39(d) → 2 (சம ஊதியம்); 39A → 3 (இலவசச் சட்ட உதவி); மீதமுள்ள 39(b) → 4. குறியீடு 4 1 2 3 .
Correct Answer: C [பிரிவு 41 : வேளாண்மை, கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைத்தல்]
விளக்கம்:
வேளாண்மை, கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைத்தல் பிரிவு 48 . பிரிவு 41 – வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, வேலையின்மை / முதுமை / நோய் / ஊனம் ஆகியவற்றில் பொது உதவி.
Correct Answer: A [பிரிவு 46]
விளக்கம்:
பிரிவு 46, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதார நலன்களைச் சிறப்புக் கவனத்துடன் மேம்படுத்தி, சமூக அநீதி, சுரண்டலிலிருந்து பாதுகாக்க அரசைப் பணிக்கிறது. பிரிவு 15 பாகுபாடு தடை, 334 இட ஒதுக்கீட்டுக் கால வரம்பு, 342 பழங்குடியினர் பட்டியல் பற்றியவை.
Correct Answer: A [கிரான்வில் ஆஸ்டின்]
விளக்கம்:
கிரான்வில் ஆஸ்டின் (The Indian Constitution: Cornerstone of a Nation, 1966) – பகுதி III, IV இரண்டையும் சேர்த்து " அரசியலமைப்பின் மனசாட்சி " என்றார். பிறர் கூறியவற்றுக்கு வினா 7 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
Correct Answer: D [ஸ்பெயின்]
விளக்கம்:
சமூக, பொருளாதாரக் கொள்கை நெறிகளை அரசியலமைப்பில் முதன்முதலில் சேர்த்த நாடு ஸ்பெயின்; அதைப் பின்பற்றி அயர்லாந்து 1937 அரசியலமைப்பில் சேர்த்தது. இந்தியா தனது நெறிமுறைக் கோட்பாடுகளை அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெற்றது.
Correct Answer: C [பிரிவு 44]
விளக்கம்:
பிரிவு 44, இந்திய நாடு முழுவதும் குடிமக்களுக்குப் பொதுச் சிவில் சட்டத்தை உறுதி செய்ய அரசு முயல வேண்டும் என்கிறது; இது தாராளவாத அறிவுசார் நெறிமுறையாகக் கருதப்படுகிறது. கோவா மாநிலத்தில் போர்த்துகீசியர் காலச் சிவில் சட்டம் நீண்டகாலமாக அனைவருக்கும் பொதுவாக நடைமுறையில் உள்ளது.
Correct Answer: D [97-வது திருத்தச் சட்டம், 2011]
விளக்கம்:
97-வது திருத்தம் (2011) – பிரிவு 43B (கூட்டுறவுச் சங்கங்களின் தன்னார்வ உருவாக்கம், தன்னாட்சி, மக்களாட்சிக் கட்டுப்பாடு, தொழில்முறை மேலாண்மை). (அதே திருத்தம் பிரிவு 19(1)(c)-இல் "கூட்டுறவுச் சங்கங்கள்" சொல்லையும் பகுதி IXB-ஐயும் சேர்த்தது.
Correct Answer: A [பிரிவு 38]
விளக்கம்:
பிரிவு 38, சமுதாய, பொருளியல், அரசியல் நீதி நிறைந்த சமூக ஒழுங்கை ஏற்படுத்தி மக்கள் நலனை மேம்படுத்த அரசு முயல வேண்டும் என்கிறது. பிரிவு 36 'அரசு' என்பதை வரையறுக்கிறது, பிரிவு 37 நெறிமுறைகள் நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாதவை ஆனால் ஆட்சிக்கு அடிப்படையானவை என்கிறது.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
நெறிமுறைக் கோட்பாடுகளை அம்பேத்கர் அரசியலமைப்பின் 'புதுமையான அம்சம்' (novel feature) என்று குறிப்பிட்டார், எனவே [A] சரி. அவை சட்டமன்றத்துக்கும் நிர்வாகத்துக்கும் வழிகாட்டும் அறிவுறுத்தல்களாகச் செயல்படுவதே அந்தப் புதுமைக்குக் காரணம் என்பதால் [R] சரியான விளக்கம்.
Correct Answer: A [42-வது திருத்தம்]
விளக்கம்:
பிரிவு 39A (சம நீதி, இலவசச் சட்ட உதவி) – 42-வது திருத்தம் (1976) . இதைச் செயல்படுத்த சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம், 1987 (NALSA, மாநில / மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையங்கள், லோக் அதாலத்). திருத்தங்களின் அட்டவணைக்கு வினா 14 விளக்கத்தைப் பார்க்கவும்.
Correct Answer: C [அறிவுறுத்தல் ஆவணங்கள், 1935]
விளக்கம்:
நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசுச் சட்டம், 1935-இன் கீழ் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட 'அறிவுறுத்தல் ஆவணங்களை' (Instrument of Instructions) ஒத்தவை என அம்பேத்கர் குறிப்பிட்டார். வேறுபாடு என்னவென்றால் இவை சட்டமன்றத்துக்கும் நிர்வாகத்துக்கும் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள்.
Correct Answer: A [பிரிவு 47]
விளக்கம்:
பிரிவு 47, மக்களின் ஊட்டச்சத்து நிலையையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமை என்கிறது. இதே பிரிவு மருத்துவத் தேவை தவிர உடல்நலத்துக்குத் தீங்கான போதைப் பானங்கள், மருந்துகளைத் தடை செய்யவும் அரசைப் பணிக்கிறது.
Correct Answer: B [(ii)]
விளக்கம்:
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் சட்டமியற்றும்போது அரசு பின்பற்ற வேண்டிய கடமைகள் என்பதால் இணை (ii) சரி. முகவுரை அரசியலமைப்பின் பகுதியே (கேசவானந்த பாரதி, 1973); அடிப்படைக் கடமைகள் குடிமக்களின் கடமைகள்; அடிப்படை உரிமைகள் அரசின் மீதான கட்டுப்பாடுகள் என்பதால் மற்ற இணைகள் தவறு.
Correct Answer: C [போதுமான வாழ்வாதாரம் வழங்குதல்]
விளக்கம்:
"சமூக / சமதர்மச் சிந்தனை" (Socialistic principles) – சமூக, பொருளாதார நீதி. போதுமான வாழ்வாதாரம் – பிரிவு 39(a) இவ்வகையைச் சேர்ந்தது.
Correct Answer: A [டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்]
விளக்கம்:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நெறிமுறைகளை அரசியலமைப்பின் " புதுமையான அம்சம் " என்றார். (எம்.வி. பைலி – இந்திய அரசியலமைப்பு பற்றிய நூலாசிரியர்.) பிற அறிஞர்களின் கருத்துகளுக்கு வினா 7 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
Correct Answer: A [4 3 1 2]
விளக்கம்:
சமதர்மக் கோட்பாடுகளில் சம வேலைக்குச் சம ஊதியம் (39(d)), காந்தியக் கோட்பாடுகளில் கிராம, சமுதாய மேம்பாடு, தாராளவாதக் கோட்பாடுகளில் பொதுச் சிவில் சட்டம் (பிரிவு 44), 42-வது திருத்தம் சேர்த்த புதிய கோட்பாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (48A) அடங்கும். எனவே பொருத்தம் 4, 3, 1, 2 ஆகும்.
Correct Answer: C [I, II இரண்டும்]
விளக்கம்:
இரண்டும் சரி. நெறிமுறைகள் அரசுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள் ; ஒன்றிய, மாநில அரசுகள் கொள்கை வகுக்கும்போதும் சட்டமியற்றும்போதும் மனத்தில் கொள்ள வேண்டிய இலட்சியங்கள் (பிரிவு 37: "சட்டமியற்றுவதில் இவற்றைப் பின்பற்றுவது அரசின் கடமை").
Correct Answer: A [அயர்லாந்து]
விளக்கம்:
நெறிமுறைக் கோட்பாடுகள் அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து (1937) பெறப்பட்டவை. அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெற்ற பிற கூறுகள்: மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமனம் செய்தல் , குடியரசுத் தலைவர் தேர்தல் முறை .
Correct Answer: C [4 3 2 1]
விளக்கம்:
போதுமான வாழ்வாதாரம் பிரிவு 39(a) (4), வாழ்க்கை ஊதியத்துடன் கண்ணியமான வாழ்க்கைத் தரம் பிரிவு 43 (3), வேலை செய்யும் உரிமை பிரிவு 41 (2), மக்கள் நலனுக்கான சமூக ஒழுங்கு பிரிவு 38 (1). எனவே பொருத்தம் 4, 3, 2, 1 ஆகும்.
Correct Answer: D [தீண்டாமை ஒழிப்பு]
விளக்கம்:
தீண்டாமை ஒழிப்பு – பிரிவு 17 – இது அடிப்படை உரிமை (சமத்துவ உரிமை); நெறிமுறை அல்ல.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
