இந்திய ஆட்சியியல் PYQ – ஒன்றிய நாடாளுமன்றம் – பகுதி 2 (வினா 33–64)
இந்திய ஆட்சியியல் PYQ – ஒன்றிய நாடாளுமன்றம் – பகுதி 2 (வினா 33–64) – 27 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [பொதுக் கணக்குக் குழு]
விளக்கம்:
பொதுக் கணக்குக் குழுவின் (PAC) முக்கியப் பணி – நாடாளுமன்றம் ஒதுக்கிய தொகைகள் அதன் நோக்கப்படியே செலவிடப்பட்டனவா என்பதைக் காட்டும் ஒதுக்கீட்டுக் கணக்குகளையும் (Appropriation Accounts) CAG தணிக்கை அறிக்கைகளையும் ஆய்வு செய்தல். இது செலவுக்குப் பின் நடக்கும் ஆய்வு.
Correct Answer: D [2021]
விளக்கம்:
அணைப் பாதுகாப்பு மசோதா, 2019 – மக்களவையில் 2019 ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது; மாநிலங்களவையில் 2021 டிசம்பர் 2 அன்று நிறைவேறியது. அதன்பின் அணைப் பாதுகாப்புச் சட்டம், 2021 ஆனது. 2019 என்பது மக்களவை நிறைவேற்றிய ஆண்டு மட்டுமே.
Correct Answer: B [துணைக் குடியரசுத் தலைவர்]
விளக்கம்:
துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் அலுவல்வழித் தலைவர் (பிரிவு 64, 89). அட்டவணைக்கு இதே அலகின் வினா 14 (VAGS – 2022) விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும் . மாநிலங்களவைத் தலைவர் / துணைக் குடியரசுத் தலைவர் – சி.பி.
Correct Answer: D [பிரிவு 110]
விளக்கம்:
பிரிவு 110 'பண மசோதா'வை வரையறுக்கிறது: வரி விதித்தல் / நீக்குதல் / மாற்றுதல், அரசுக் கடன், இந்தியத் திரள் நிதியத்திலிருந்து பணம் ஒதுக்குதல் போன்றவற்றை மட்டுமே கொண்ட மசோதா. பிரிவு 112 ஆண்டு நிதிநிலை அறிக்கை, 266 திரள் நிதியம், 256 மாநிலங்களின் கடமை தொடர்பானவை.
Correct Answer: C [நாடாளுமன்றம்]
விளக்கம்:
பிரிவு 19(2) – (6) : அடிப்படை உரிமைகள் மீது சட்டம் இயற்றுவதன் மூலம் "நியாயமான கட்டுப்பாடுகளை" விதிக்கலாம். ஒன்றிய நிலையில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது.
Correct Answer: A [இங்கிலாந்து]
விளக்கம்:
இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ், லேபர் என்ற இரு பெரும் கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைக்கும் இரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது; அமெரிக்காவும் இம்முறைக்கு எடுத்துக்காட்டு. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் ஒரு கட்சி முறை; பிரான்ஸ், இந்தியா பல கட்சி முறை கொண்டவை.
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
கட்சித்தாவல் தடை பத்தாவது அட்டவணையில் உள்ளது – ஒன்பதாவது அட்டவணையில் அல்ல. எனவே (ii) தவறு.
Correct Answer: A [பிரெஞ்சு மொழி]
விளக்கம்:
"Parliament" என்ற சொல் "பேசுதல்" எனப் பொருள்படும் பிரெஞ்சுச் சொல் "parler" -இலிருந்து வந்தது. நாடாளுமன்றம் என்பது விவாதித்து முடிவெடுக்கும் அவை என்பதை இச்சொல் உணர்த்துகிறது.
Correct Answer: D [[A] தவறு, ஆனால் [R] சரி]
விளக்கம்:
பிரிவு 109(1) : பண மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது – மக்களவையில் மட்டுமே. எனவே [A] தவறு. மக்களவை உறுப்பினர்கள் வயதுவந்தோர் வாக்குரிமை மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே [R] சரி.
Correct Answer: A [பிரிவு 120]
விளக்கம்:
பிரிவு 120(1)-இன்படி நாடாளுமன்ற அலுவல் இந்தி அல்லது ஆங்கிலத்தில் நடக்கும்; ஆனால் இரண்டிலும் போதிய திறமையற்ற உறுப்பினர் தாய்மொழியில் உரையாற்ற அவைத் தலைவர் அனுமதிக்கலாம். மாநிலச் சட்டமன்றங்களுக்கு இதற்கு இணையான பிரிவு 210; பிரிவு 121 நீதிபதிகள் நடத்தை விவாதத் தடை தொடர்பானது.
Correct Answer: C [4, 1, 3, 2]
விளக்கம்:
வரவு–செலவுத் திட்டத் தாக்கல், பொது விவாதத்துக்குப் பின் துறைசார் நிலைக் குழுக்களின் ஆய்வு (4), மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பு (1), ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம் (3), நிதி மசோதா நிறைவேற்றம் (2) என்ற வரிசையில் நடைபெறுகின்றன – எனவே 4, 1, 3, 2. ஒதுக்கீட்டு மசோதா இன்றித் திரள் நிதியத்திலிருந்து பணம் எடுக்க முடியாது (பிரிவு 114).
Correct Answer: A [[A] சரி, ஆனால் [R] தவறு]
விளக்கம்:
[A] சரி: பிரிவு 248 – எஞ்சிய அதிகாரம் (Residuary Power) நாடாளுமன்றத்துக்கு; ஒன்றியப் பட்டியலின் பதிவு 97 இதை உறுதி செய்கிறது. [R] தவறு: மூன்று பட்டியல்களும் ஏழாவது அட்டவணையில் உள்ளன. எட்டாவது அட்டவணை 22 மொழிகள் .
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – இந்திய மக்களவைத் தலைவர் பதவி பிரிட்டனின் பொதுமக்கள் அவைத் தலைவர் பதவியை முன்மாதிரியாகக் கொண்டது. (ii) சரி – பிரிவு 118(4) . (iii) தவறு – முதல் பெண் மக்களவைத் தலைவர் மீரா குமார் (2009).
Correct Answer: C [நாடாளுமன்ற மைய மண்டபம்]
விளக்கம்:
இதுவரை நடந்த மூன்று கூட்டுக் கூட்டங்களும் (1961, 1978, 2002) பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தில் (Central Hall) நடந்தன. குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் (பிரிவு 87) அங்கேயே நடந்து வந்தது. எனவே விடை C .
Correct Answer: B [(i), (iv) மட்டும்]
விளக்கம்:
நாரி சக்தி வந்தன் அதினியம் (106-வது திருத்தம், 2023) மக்களவை, சட்டப்பேரவைகளில் SC/ST இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மூன்றில் ஒரு பங்கைப் பெண்களுக்கு ஒதுக்குகிறது; இது தொகுதி மறுவரையறைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் – எனவே (i), (iv) சரி. ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே (25 அல்ல); SC/ST ஒதுக்கீட்டு இடங்களிலும் அது பொருந்தும்.
Correct Answer: C [6 மாதங்கள்]
விளக்கம்:
பிரிவு 85(1) : ஒரு கூட்டத்தொடரின் கடைசி அமர்வுக்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. எனவே ஆண்டுக்குக் குறைந்தது இரண்டு கூட்டத்தொடர்கள் கட்டாயம். மாநிலச் சட்டமன்றங்களுக்கும் இதே விதி ( பிரிவு 174 ).
Correct Answer: D [பிரிவு 312]
விளக்கம்:
பிரிவு 312-இன்படி தேசிய நலனுக்கு அவசியம் என்று மாநிலங்களவை வந்திருந்து வாக்களித்தோரில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால், நாடாளுமன்றம் புதிய அகில இந்தியப் பணிகளை உருவாக்கலாம். பிரிவு 310 விருப்பக் கோட்பாடு, 315 பணியாளர் தேர்வாணையங்கள், 322 தேர்வாணையச் செலவுகள் தொடர்பானவை.
Correct Answer: D [1 3 4 2]
விளக்கம்:
91-வது திருத்தம் (2003) அமைச்சரவை அளவை மக்களவையின் 15% எனக் கட்டுப்படுத்தியது (1). 102-வது (2018) தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்புத் தகுநிலை (3); 105-வது (2021) பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறியும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்கியது (4); 106-வது (2023) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (2) – எனவே 1 3 4 2.
Correct Answer: A [ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து 20 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்]
விளக்கம்:
பிரிவு 81(1)(b)-இன்படி மக்களவையில் ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து 20 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இருக்கலாம். மாநிலங்களிலிருந்து 530-க்கு மிகாமல் (552 அல்ல); ஆங்கிலோ-இந்திய நியமனம் குடியரசுத் தலைவரால் செய்யப்பட்டு 104-வது திருத்தத்தால் நிறுத்தப்பட்டது; 12 பேர் நியமனம் மாநிலங்களவைக்கே உரியது.
Correct Answer: A [எப்பொழுதும் இல்லை]
விளக்கம்:
மாநிலங்களவை சட்டமியற்றும் அவை – சட்டங்களை விவாதித்து நிறைவேற்றுவது, மாநிலங்களின் நலனைப் பாதுகாப்பது அதன் பணி. சட்டங்களைச் செயல்படுத்துவது நிர்வாகத்தின் (குடியரசுத் தலைவர், அமைச்சரவை, அலுவலர்கள்) பணி.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
பிரிவு 83(1) ஒரே வாக்கியத்தில் இரண்டையும் கூறுகிறது: மாநிலங்களவை கலைக்கப்படாது ; ஆனால் அதன் உறுப்பினர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாம் ஆண்டும் ஓய்வு பெறுவர். எல்லா உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் விலகுவதில்லை.
Correct Answer: A [(1), (2) தவறு]
விளக்கம்:
மாநிலம் தரப்பட்டது சரியானது நிலை ?️ தமிழ்நாடு 40 39 தவறு தெலங்கானா 19 17 தவறு திரிபுரா 2 2 சரி உத்தராகண்ட் 5 5 சரி (1), (2) தவறான இணைகள் → விடை A . (பிகாருக்குத்தான் 40 இடங்கள்.)
Correct Answer: B [வங்கிப் பணி ஆணைய (நீக்க) மசோதா]
விளக்கம்:
பிரிவு 108-இன்கீழ் இதுவரை மூன்று கூட்டுக் கூட்டங்கள் நடந்துள்ளன: வரதட்சணைத் தடுப்பு மசோதா (1961), வங்கிப் பணி ஆணைய (நீக்க) மசோதா (1978), பயங்கரவாதத் தடுப்பு மசோதா (2002). எனவே இரண்டாவது கூட்டுக் கூட்டம் 1978-இல் வங்கிப் பணி ஆணைய (நீக்க) மசோதாவுக்காக நடந்தது.
Correct Answer: D [(3), (4) சரி]
விளக்கம்:
எட்டாவது மக்களவை 31.12.1984 அன்றும், பத்தாவது மக்களவை 20.06.1991 அன்றும் அமைக்கப்பட்டன – எனவே (3), (4) சரி. நான்காவது மக்களவை 04.03.1967 அன்று, ஐந்தாவது 15.03.1971 அன்று, ஆறாவது 23.03.1977 அன்று அமைக்கப்பட்டன; வினாவில் (1), (2) தேதிகள் இடம் மாறியுள்ளன.
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
104-வது திருத்தம் (2019) பிரிவு 334-ஐத் திருத்தி மக்களவை, சட்டப்பேரவைகளில் SC, ST இட ஒதுக்கீட்டை 2030 வரை நீட்டித்தது; ஆங்கிலோ-இந்திய நியமன முறைப் பிரதிநிதித்துவத்தை நீட்டிக்காமல் நிறுத்தியது – எனவே (i), (ii) சரி. இத்திருத்தம் 2020 ஜனவரி 25 முதல் நடைமுறைக்கு வந்தது.
Correct Answer: D [(2), (3) மட்டும்]
விளக்கம்:
பிரிவு 110(3)-இன்படி ஒரு மசோதா பண மசோதாவா என்பதில் மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது என்பதால் (1) உண்மை. மக்களவைத் தலைவர் விலகல் கடிதத்தைத் துணைத் தலைவரிடம் அளிப்பார் (பிரிவு 94), அவர் மக்களவை உறுப்பினர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார் (பிரிவு 93) – எனவே (2), (3) உண்மையல்ல.
Correct Answer: C [(4) மட்டும்]
விளக்கம்:
உருப்படி பிரிவு 110 பண மசோதாவா?
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
