இந்தியப் பொருளாதாரம் PYQ – மக்கள்தொகை
இந்தியப் பொருளாதாரம் PYQ – மக்கள்தொகை – 26 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஒரு சதுர கி.மீ.-க்கு வாழும் நபர்களின் எண்ணிக்கை]
விளக்கம்:
மக்கள் அடர்த்தி = மொத்த மக்கள்தொகை ÷ நிலப்பரப்பு (சதுர கி.மீ.). 2011-இல் இந்தியாவின் அடர்த்தி 382. Group 1 2021 தேர்வில் இதே வினா ("மக்கட் தொகை செறிவு") 1 / 10 / 100 / 200 சதுர கி.மீ. என்ற விருப்பங்களுடன் கேட்கப்பட்டது; அங்கும் விடை "ஒரு சதுர கி.மீ.".
Correct Answer: B [I, II மட்டும்]
விளக்கம்:
மருத்துவ வசதி பெருகியதால் இறப்பு விகிதம் குறைந்தது; கல்வியறிவின்மை குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஆனால் காலந்தாழ்ந்த திருமணம் பிறப்பைக் குறைக்கும் ; இளவயதுத் திருமணமே வளர்ச்சிக்குக் காரணம். எனவே III தவறு.
Correct Answer: C [(1), (2)]
விளக்கம்:
பின்தங்கிய நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நுகர்வை உயர்த்திச் சேமிப்பு, முதலீட்டைக் குறைக்கிறது; வளங்கள் மீது அழுத்தம் கூடுகிறது. உற்பத்தித் திறனையும் சேமிப்பையும் அது ஊக்குவிப்பதில்லை; எனவே (3) தவறு.
Correct Answer: C [உத்தரப் பிரதேசம்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி சுமார் 19.98 கோடி மக்களுடன் உத்தரப் பிரதேசம் அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய மாநிலம். இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரமும் மூன்றாம் இடத்தில் பீகாரும் உள்ளன.
Correct Answer: D [சிக்கிம்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி சிக்கிம் சுமார் 6.1 இலட்சம் மக்களுடன் இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம். பரப்பளவில் மிகச் சிறிய மாநிலம் கோவா.
Correct Answer: D [(iv) மட்டும்]
விளக்கம்:
பிறப்பு விகிதம் (Crude Birth Rate) = ஓர் ஆண்டில் 1000 மக்களுக்கு நிகழும் உயிருள்ள பிறப்புகள். இறப்பு விகிதமும் அதேபோல 1000 மக்களுக்குக் கணக்கிடப்படுகிறது.
Correct Answer: C [அதிகப்படியான பெண் இறப்பை அளவிடுதல்]
விளக்கம்:
'காணாமல் போன பெண்கள்' (Missing Women) என்ற கருத்தை அமர்த்தியா சென் முன்வைத்தார்; இது பாலினப் பாகுபாட்டால் ஏற்படும் அதிகப்படியான பெண் இறப்பை அளவிடுகிறது. பெண் சிசுக்கொலை, பாலினத் தேர்வுக் கருக்கலைப்பு, பெண்களுக்கான உணவு, மருத்துவ அலட்சியம் இதன் காரணங்கள்.
Correct Answer: A [கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி]
விளக்கம்:
நகர்ப்புற ஒருங்கிணைப்பு (Urban Agglomeration) – ஒரு நகரமும் அதைச் சுற்றி வளர்ந்த தொடர் நகர்ப்பகுதிகளும் சேர்ந்த பெருநகர்ப் பரப்பு. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டின் பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி.
Correct Answer: A [மகன் / ஆண் குழந்தைக்கான விருப்பம்]
விளக்கம்:
ஆண் குழந்தை விருப்பம் → பாலினத் தேர்வுக் கருக்கலைப்பு, பெண் குழந்தைகள் மீதான உணவு, மருத்துவப் புறக்கணிப்பு → அதிகப்படியான பெண் இறப்பு. இதுவே "காணாமல் போன பெண்கள்" நிலைக்கு அடிப்படைக் காரணம்.
Correct Answer: C [940]
விளக்கம்:
2011 தற்காலிகக் கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள்; இறுதி எண் 943 (PIB, 30.04.2013); 2001-இல் 933. 943 விருப்பங்களில் இல்லாததால் விடை 940. அதிக பாலின விகிதம்: கேரளம் (1084); தமிழ்நாடு 996.
Correct Answer: B [50,000 – 99,999]
விளக்கம்:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வகைப்பாட்டில் இரண்டாம் வகை (Class II) நகரங்களின் மக்கள்தொகை 50,000 முதல் 99,999 வரை. 1,00,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்டவை முதல் வகை (Class I) நகரங்கள்.
Correct Answer: A [எட்வின் கேனன்]
விளக்கம்:
எட்வின் கேனன் உகந்த மக்கள்தொகைக் கோட்பாட்டை முன்வைத்தார்: கிடைக்கும் வளங்களுடன் தலா வருமானம் அதிகபட்சமாக இருக்கும் மக்கள்தொகையே உகந்த அளவு. மால்தஸ் – மக்கள்தொகை பெருக்கல் விகிதத்திலும் உணவு கூட்டல் விகிதத்திலும் பெருகும் என்ற கோட்பாடு.
Correct Answer: D [III சரி; I, II தவறு]
விளக்கம்:
I – உகந்த மக்கள்தொகை (Optimum); II – மிகை மக்கள்தொகை (Over-population); III – குறைந்த மக்கள்தொகை (Under-population). CBT 2023 தேர்விலும் இதே கருத்து கேட்கப்பட்டது.
Correct Answer: D [மத்தியப் பிரதேசம்]
விளக்கம்:
பரப்பளவில் இராஜஸ்தானுக்கு அடுத்து மத்தியப் பிரதேசம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் (சுமார் 3.08 இலட்சம் சதுர கி.மீ.). மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது.
Correct Answer: A [அருணாச்சலப் பிரதேசம்]
விளக்கம்:
2001 கணக்கெடுப்பின்படி அருணாச்சலப் பிரதேசம் சதுர கி.மீ.-க்கு 13 நபர்கள் என இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம். 2011 கணக்கெடுப்பிலும் 17 நபர்களுடன் இதுவே மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட மாநிலம்.
Correct Answer: D [(1), (2), (3), (4)]
விளக்கம்:
2011 அடர்த்தி: பீகார் 1106 > மேற்கு வங்கம் 1028 > கேரளம் 860 > உத்தரப் பிரதேசம் 829. Library Service 2023 தேர்வில் "அதிக அடர்த்தி கொண்ட மாநிலம்" என்று கேட்கப்பட்டது; விடை பீகார்.
Correct Answer: D [(3), (4) சரி]
விளக்கம்:
2011: குறைந்த அடர்த்தி – அருணாச்சலப் பிரதேசம்; அதிக மக்கள்தொகை – உத்தரப் பிரதேசம்; குறைந்த எழுத்தறிவு – பீகார் (61.8%); அதிக நகரமயம் – கோவா (62.2%). எனவே (3), (4) மட்டும் சரி. (Veterinary Asst.
Correct Answer: A [(3), (4)]
விளக்கம்:
1951 மக்கள்தொகை 36.1 கோடி; 2001 மக்கள்தொகை 102.87 கோடி. எனவே (3), (4) தவறு. (1), (2) சரி (மேலுள்ள அட்டவணை காண்க).
Correct Answer: D [4 3 2 1]
விளக்கம்:
1921 – பெரும் பிரிவினை; 1951 – சிறு பிளவு; 1961 – மக்கள்தொகை வெடிப்பு. இந்த மூன்று இணைகளுடன் பொருந்தும் ஒரே விருப்பம் D. CTS (ITI Posts) 2024 தேர்வில் "1951 = ?" என்று கேட்கப்பட்டது; விடை சிறு பிளவு ஆண்டு.
Correct Answer: C [(2), (3), (1)]
விளக்கம்:
முதல் கட்டம்: உயர் பிறப்பு–உயர் இறப்பு (மெதுவான வளர்ச்சி). இரண்டாம் கட்டம்: இறப்பு குறைகிறது, பிறப்பு உயர்வாகவே உள்ளது (மக்கள்தொகை வெடிப்பு). இறுதிக் கட்டம்: இரண்டும் குறைவு (நிலைத்த மக்கள்தொகை).
Correct Answer: D [சார்ந்திருப்போர் சுமை அதிகரிப்பு]
விளக்கம்:
அதிக பிறப்பு → 0–14 வயதுக் குழந்தைகள் அதிகரிப்பு; குறையும் இறப்பு → முதியோர் அதிகரிப்பு. உழைக்கும் வயதினரைச் சார்ந்திருப்போர் விகிதம் (Dependency Ratio) உயர்கிறது.
Correct Answer: B [1, 3 மட்டும் சரி]
விளக்கம்:
இந்தியா 1952-இல் தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு. அதன் அணுகுமுறை புதிய மால்தூசியக் (Neo-Malthusian) கொள்கை; மார்க்சியம் அல்ல.
Correct Answer: C [1, 2 உண்மை]
விளக்கம்:
NPP 2000: உடனடி நோக்கம் – கருத்தடை, சுகாதார உள்கட்டமைப்பு, பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்தல்; நடுத்தரகாலம் – 2010-க்குள் மொத்தக் கருவுறுதல் விகிதத்தை (TFR) மாற்றீட்டு நிலைக்கு (2.1) கொண்டுவருதல்; நீண்டகாலம் – 2045 -க்குள் நிலையான மக்கள்தொகை. எனவே 3 தவறு.
Correct Answer: C [P₀ + n·X]
விளக்கம்:
எண்கணித முறை: ஒவ்வொரு பத்தாண்டிலும் சராசரி அதிகரிப்பு X மாறாது; Pₙ = P₀ + n·X. விருப்பம் B – அதிகரிப்பு அதிகரிப்பு முறை (Incremental Increase); D – வடிவியல் (Geometric) முறை.
Correct Answer: C [[A], [R] இரண்டும் சரி]
விளக்கம்:
இடப்பெயர்வு உள்நாட்டு (Internal) அல்லது வெளிநாட்டு / சர்வதேச (External / International) வகையாக இருக்கலாம். இரண்டு கூற்றுகளும் சரி.
Correct Answer: C [எவரெட் லீ]
விளக்கம்:
எவரெட் எஸ். லீ (A Theory of Migration, 1966) – "தள்ளு–இழு" (Push–Pull) காரணிகள், குறுக்கிடும் தடைகள், தனிநபர் காரணிகள் என்ற நான்கு அடிப்படைகள்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
