இந்தியப் பொருளாதாரம் PYQ – ஒன்றிய – மாநில நிதிப் பகிர்வு
இந்தியப் பொருளாதாரம் PYQ – ஒன்றிய – மாநில நிதிப் பகிர்வு – 9 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [2000]
விளக்கம்:
10-ஆவது நிதி ஆணையப் பரிந்துரைப்படி 2000-ஆம் ஆண்டின் 80-ஆவது அரசமைப்புத் திருத்தம், ஒன்றிய அரசின் அனைத்து வரி வருவாயையும் ஒன்றியம் – மாநிலங்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளத்தக்க பொதுத் தொகுப்பாக (divisible pool) ஆக்கியது. இது 1 ஏப்ரல் 1996 முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்தது.
Correct Answer: C [1, 3]
விளக்கம்:
சுங்க வரியும் உற்பத்தி வரியும் (Excise duty) ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகின்றன. வேளாண் நிலத்தின் வாரிசுரிமைத் தீர்வை, சொத்துத் தீர்வை ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ளதால் மாநிலங்களே விதிக்கின்றன.
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
விதி 267 – இந்திய / மாநில எதிர்பாராச் செலவு நிதியம் (Contingency Fund). பகிர்வுக்குரிய வரிகள் விதி 270-இல் கூறப்பட்டுள்ளன. எனவே 1, 2 மட்டும் சரி.
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
ராஜமன்னார் குழு (1969) – தமிழ்நாடு அரசு அமைத்தது; சர்க்காரியா ஆணையம் (1983, அறிக்கை 1988) – ஒன்றிய அரசு; பூஞ்சி ஆணையம் (2007, அறிக்கை 2010) – ஒன்றிய அரசு. "ராயல் ஆணையம்" என்பது பிரிட்டிஷ் கால ஆணையங்களின் பொதுப் பெயர் (எ.கா. வேளாண்மை பற்றிய ராயல் ஆணையம் 1926).
Correct Answer: D [நிறுவன வரி]
விளக்கம்:
நிறுவன வரி ஒன்றியப் பட்டியல் (பதிவு 85). நில வருவாய் (பதிவு 45), வாகன வரி (பதிவு 57), கேளிக்கை வரி (பதிவு 62 – உள்ளாட்சி அமைப்புகள் விதிப்பது தவிர பிற GST-இல் இணைந்தது) மாநிலப் பட்டியல்.
Correct Answer: C [(iii), (iv)]
விளக்கம்:
மாநிலப் பட்டியல் வரிகள்: நில வருவாய் (பதிவு 45), வேளாண் வருமான வரி (46), நிலம் – கட்டடங்கள் மீதான வரி (49), மின்சார நுகர்வு / விற்பனை மீதான வரி (53). எனவே (iii), (iv) தவறான இணைகள்.
Correct Answer: C [தலைவரி]
விளக்கம்:
தலைவரி (Capitation tax) மாநிலப் பட்டியலில் (பதிவு 61) உள்ளது. நிறுவன வரி (85), வேளாண் வருமானம் அல்லாத வருமான வரி (82), சுங்க வரி (83) ஒன்றியப் பட்டியல்.
Correct Answer: B [நீர்ப்பாசனம்]
விளக்கம்:
நீர்ப்பாசனம், கால்வாய்கள் உள்ளிட்ட "நீர்" மாநிலப் பட்டியல் பதிவு 17-இல் உள்ளது (ஒன்றியப் பட்டியல் பதிவு 56-க்கு உட்பட்டு). வங்கி (45), பாதுகாப்பு (1), வெளியுறவு (10) ஒன்றியப் பட்டியல்.
Correct Answer: D [ஒன்றிய – மாநில நிதி உறவுகள்]
விளக்கம்:
கூட்டாட்சி நாட்டில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே வரி விதிப்பு அதிகாரம், வருவாய்ப் பகிர்வு, மானியங்கள், கடன் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கும் முறையே கூட்டாட்சி நிதி (அரசியலமைப்புப் பகுதி XII, விதிகள் 264–293).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
