இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை
இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை – 16 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [(i), (ii), (iii) மட்டும்]
விளக்கம்:
MPI 2010 மனித வளர்ச்சி அறிக்கையில் (UNDP) ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி முன்முயற்சியுடன் (OPHI) இணைந்து அறிமுகம். மூன்று பரிமாணங்கள்: சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ; வருமானம் இதில் இல்லை.
Correct Answer: B [மனித வறுமைக் குறியீடு (HPI)]
விளக்கம்:
HPI 1997 மனித வளர்ச்சி அறிக்கையில் அறிமுகம்; HDI-யின் அதே மூன்று பரிமாணங்களில் உள்ள இழப்பை (deprivation) அளக்கிறது. 2010-இல் HPI-க்குப் பதிலாக MPI வந்தது.
Correct Answer: C [நாள் ஒன்றுக்கு கிராமம் ₹32, நகரம் ₹47]
விளக்கம்:
ரங்கராஜன் குழு (அறிக்கை 2014): 2011–12-இல் மாதம் தனிநபர் நுகர்வு கிராமம் ₹972 (நாள் ₹32), நகரம் ₹1407 (நாள் ₹47). டெண்டுல்கர் குழு: ₹27 / ₹33. (மூலத்தில் விருப்பம் B தமிழில் "₹30 / ₹50" என அச்சுப் பிழை; ஆங்கில வடிவம் பின்பற்றப்பட்டது.)
Correct Answer: C [(2), (3), (1), (4)]
விளக்கம்:
தண்டேகர் – ராத் (1971) → லக்டவாலா (1989) → டெண்டுல்கர் (2005) → ரங்கராஜன் (2012). மேலுள்ள அட்டவணை காண்க.
Correct Answer: A [₹56.7]
விளக்கம்:
ஒய்.கே. அலக் தலைமையிலான 1979 பணிக்குழு 1973-74 விலையில் மாதத் தனிநபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் வறுமைக் கோட்டை ஊரகத்துக்கு ₹49.09, நகர்ப்புறத்துக்கு ₹56.64 என நிர்ணயித்தது (நிதி ஆயோக் ஆய்வுக் கட்டுரை, 2016). ₹56.64 ≈ ₹56.7.
Correct Answer: A [கிராமம் 40%, நகரம் 50%]
விளக்கம்:
தண்டேகர் – ராத் ஆய்வு (1971) 1960–61 விலைகளில் ஊரகத்தில் சுமார் 40 சதவீதமும் நகரத்தில் சுமார் 50 சதவீதமும் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்ததாகக் குறிப்பிட்டது. இவர்கள் நாளொன்றுக்கு 2,250 கலோரி உணவு கிடைக்கச் செய்யத் தேவையான செலவை வறுமைக் கோட்டாகக் கொண்டனர்.
Correct Answer: B [தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO)]
விளக்கம்:
NSSO நுகர்வுச் செலவு மாதிரி ஆய்வுகள் மூலம் தரவு திரட்டுகிறது; அதைக் கொண்டு திட்டக்குழு (இப்போது நிதி ஆயோக்) வறுமையை மதிப்பிட்டது. 2019 முதல் NSSO, CSO இணைந்து தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆனது.
Correct Answer: C [I, III, IV]
விளக்கம்:
வேலையின்மை, மூலதனப் பற்றாக்குறை, போதிய வளர்ச்சியின்மை ஆகியவை வறுமைக்கான பொருளாதாரக் காரணங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி வறுமையைக் குறைக்க உதவும்; பிரச்சினை அல்ல.
Correct Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
விளக்கம்:
கூலி வேலைவாய்ப்புத் திட்டங்களின் குறைபாடுகள், உத்தியின் உள்ளார்ந்த வரம்புகள், வளர்ச்சி நிர்வாகத்தின் திருப்தியற்ற செயல்பாடு ஆகிய அனைத்தும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் குறைந்த வெற்றிக்குக் காரணம். மேலும் நிலம் போன்ற சொத்துகளின் சமமற்ற பகிர்வும் பயனாளிகள் தேர்வில் உள்ள கசிவுகளும் விளைவுகளைக் குறைத்தன.
Correct Answer: D [(i), (ii), (iii), (iv) சரி]
விளக்கம்:
நேரு ரோஜ்கர் யோஜனா (1989), தேசிய சமூக உதவித் திட்டம் (1995), ஜவஹர் கிராம் சம்ரிதி யோஜனா (1999), ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர் யோஜனா (1997) ஆகிய நான்கும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள். இவற்றில் நேரு ரோஜ்கர், SJSRY நகர்ப்புற ஏழைகளுக்கும், JGSY ஊரகப் பகுதிகளுக்கும் உரியவை.
Correct Answer: B [(4), (3), (2), (1)]
விளக்கம்:
வேலைக்கு உணவுத் திட்டம் 1977, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் 1978–80, ஸ்வர்ணஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா 1999, சம்பூர்ண கிராமீன் ரோஜ்கர் யோஜனா 2001 என்பதால் வரிசை (4), (3), (2), (1). SGSY பின்னர் 2011-இல் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமாக (NRLM) மாற்றப்பட்டது.
Correct Answer: C [2 1 4 3]
விளக்கம்:
ICDS ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், தாய்மார்களுக்குச் சத்துணவு, NULM நகர்ப்புற வறுமைக் குறைப்பு, HRIDAY பாரம்பரிய நகரங்களைப் பாதுகாத்தல், NSAP முதியோர், விதவையர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் என்பதால் விடை 2 1 4 3. HRIDAY திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது; இதில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி இடம்பெற்றன.
Correct Answer: B [2 1 4 3]
விளக்கம்:
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீடு, உஜ்வாலா BPL பெண்களுக்கு LPG இணைப்பு, ஸ்டாண்ட்-அப் இந்தியா பெண்கள், SC, ST தொழில்முனைவு, ஜன் தன் மலிவான நிதிச் சேவை என்பதால் விடை 2 1 4 3. ஸ்டாண்ட்-அப் இந்தியா (2016) ₹10 இலட்சம் முதல் ₹1 கோடி வரை வங்கிக் கடன் வழங்குகிறது.
Correct Answer: B [உத்தரப் பிரதேசம்]
விளக்கம்:
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா 1 மே 2016 அன்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் தொடங்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பப் பெண்களுக்கு இலவச LPG இணைப்பு வழங்குவது இதன் நோக்கம்.
Correct Answer: D [05 ஜூலை 2013]
விளக்கம்:
சட்டப் பிரிவு 1(3): "5 ஜூலை 2013 முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்" (அன்றைய அவசரச் சட்டத் தேதி); அரசிதழ் அறிவிப்பு 10 செப்டம்பர் 2013. கிராம மக்களில் 75%, நகர மக்களில் 50% வரை உள்ளடக்கம்; முன்னுரிமைக் குடும்பத்துக்கு நபருக்கு மாதம் 5 கிலோ தானியம்.
Correct Answer: D [நாள் ஒன்றுக்கு $1.90]
விளக்கம்:
2015 முதல் (2011 PPP) அதீத வறுமைக் கோடு நாள் $1.90. பின்னர் 2022-இல் $2.15 (2017 PPP), 2025-இல் $3.00 (2021 PPP) எனப் புதுப்பிக்கப்பட்டது. வினா 2017 நிலையைக் கேட்பதால் விடை $1.90.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
