இந்தியப் பொருளாதாரம் PYQ – வேளாண்மை

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் PYQ – வேளாண்மை – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
Combined Research Assistant 2023
ஃபோர்டு அறக்கட்டளையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய அரசு 1960-இல் தீவிர வேளாண் மாவட்டத் திட்டத்தை (IADP) அறிமுகப்படுத்தி 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. பின்வரும் மாநிலங்களுள் அரிசி உற்பத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலம் எது?

Correct Answer: B [உத்தரப் பிரதேசம்]

விளக்கம்:

IADP-இல் அரிசிக்காகத் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், ஆந்திரத்தின் மேற்குக் கோதாவரி, மத்தியப் பிரதேசத்தின் ராய்ப்பூர், பீகாரின் ஷாஹாபாத் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் கோதுமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; பஞ்சாபின் லூதியானா (கோதுமை), இராஜஸ்தானின் பாலி (சிறுதானியம்) ஏனையவை.

2.  
Group 1 2022
சரியானவை எவை?
(i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
(ii) MSP – அதிகபட்ச ஆதரவு விலை
(iii) PDS – பொது விநியோக முறை
(iv) IPM – ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை

Correct Answer: B [(i), (iii) மட்டும்]

விளக்கம்:

MSP = Minimum Support Price (குறைந்தபட்ச ஆதரவு விலை); IPM = Integrated Pest Management (ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை – பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைக்கும் முறை). எனவே (i), (iii) மட்டும் சரி.

3.  
Reporter 2022
பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டவை எவை?
1. CACP – வேளாண் செலவு, விலை ஆணையம்
2. ICDS – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிச் சேவைகள்
3. NFSA – தேசிய உணவுப் பாதுகாப்புச் சங்கம்
4. MDM – மதிய நாள் இயக்கம்

Correct Answer: D [3, 4 மட்டும்]

விளக்கம்:

NFSA = National Food Security Act , 2013 (தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்); MDM = Mid Day Meal (மதிய உணவுத் திட்டம் – தற்போது PM POSHAN). CACP (1965), ICDS (1975) சரியான விரிவாக்கங்கள்.

4.  
ACF 2023
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
(i) NPF – தேசிய வருங்கால வைப்பு நிதி
(ii) DARE – வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறை
(iii) NCIP – நிகர நுகர்வோர் குறியீட்டு விலை
(iv) WBCIS – உலக வங்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

Correct Answer: B [(i), (iii), (iv)]

விளக்கம்:

NPF என்பது தேசிய விவசாயிகள் கொள்கை (National Policy for Farmers), NCIP என்பது தேசியப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (National Crop Insurance Programme), WBCIS என்பது வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பதால் (i), (iii), (iv) தவறு. DARE என்பது வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறை என்பது சரி; ICAR இதன் கீழ் இயங்குகிறது.

5.  
ACF 2023
பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனாவின் (PMKSY) முக்கிய நோக்கம்

Correct Answer: A ["ஒரு துளிக்கு அதிகப் பயிர்"]

விளக்கம்:

PMKSY (2015–16): "ஹர் கேத் கோ பானி" (ஒவ்வொரு வயலுக்கும் நீர்), "Per Drop More Crop" (நுண்ணீர்ப் பாசனம் – சொட்டு, தெளிப்பு நீர்ப்பாசனம்) ஆகியவை முதன்மை நோக்கங்கள். பயிர்க் காப்பீடு – PMFBY; கடன் – KCC.

6.  
Asst. Public Prosecutor Gr. II 2026
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) நோக்கங்கள் எவை?
(i) விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடும் நிதி உதவியும் வழங்குதல்
(ii) விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட அவர்களின் வருமானத்தை நிலைப்படுத்துதல்
(iii) வேளாண் துறைக்குக் கடன் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்தல்

Correct Answer: B [(ii), (iii) மட்டும்]

விளக்கம்:

PMFBY (2016) நோக்கங்கள்: இயற்கைப் பேரிடர், பூச்சி, நோயால் பயிர் இழப்புக்கு நிதி ஆதரவு; வருமான நிலைப்படுத்தல்; நவீன வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல்; வேளாண் கடன் ஓட்டத்தை உறுதிசெய்தல். இது பயிர்க் காப்பீடு; ஆயுள் காப்பீடு அல்ல.

7.  
CTS (Interview Posts-II) 2024
விவசாய நிலத்தின் அளவு மற்றும் தமிழ்நாடு விவசாயத்தில் அதன் பங்கு ஆகியவற்றுடன் பொருத்துக :
(a) குறு விவசாயம் – 1. 77.18%
(b) சிறு விவசாயம் – 2. 14.55%
(c) நடுத்தர விவசாயம் – 3. 1.85%
(d) பெரு விவசாயம் – 4. 0.21%

Correct Answer: D [1 2 3 4]

விளக்கம்:

தமிழ்நாட்டில் நில உடைமைகளில் குறு விவசாயிகள் 77.18 சதவீதம், சிறு விவசாயிகள் 14.55 சதவீதம், நடுத்தர விவசாயிகள் 1.85 சதவீதம், பெரு விவசாயிகள் 0.21 சதவீதம் என்பதால் விடை 1 2 3 4. நில உடைமையின் அளவு பெருகப் பெருக அவர்களின் பங்கு குறைகிறது.

8.  
GSCE 2021
"உழவர் கடன் அட்டை" (Kisan Credit Card – KCC) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Correct Answer: B [1998–99]

விளக்கம்:

1998–99 ஒன்றிய வரவு–செலவுத் திட்ட அறிவிப்பின்படி, ஆர்.வி. குப்தா குழுப் பரிந்துரையின் அடிப்படையில் NABARD வகுத்த KCC திட்டம் ஆகஸ்ட் 1998-இல் தொடங்கப்பட்டது. பயிர்க் கடனை எளிதாகவும் சரியான நேரத்திலும் பெற உதவுகிறது.

9.  
Group 1 2021
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த நிதி ஆயோக் மதிப்பீட்டு அறிக்கையின்படி கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை?
(a) MSP விதைப்புப் பருவத்துக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது.
(b) விவசாயிகளுக்கு உத்தரவாத விலை அளித்து விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து காப்பதே MSP-யின் நோக்கம்.
(c) உலகமயமாக்கலால் வேளாண் பொருள்களில் கட்டற்ற வணிகம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளைத் தேவையற்ற விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து காப்பது முக்கியமல்ல.

Correct Answer: B [(a), (b) மட்டும்]

விளக்கம்:

MSP-ஐ ஒன்றிய அரசு (CCEA) CACP பரிந்துரையின்படி விதைப்புப் பருவத்துக்கு முன் அறிவிக்கிறது. நிதி ஆயோக் மதிப்பீட்டு அறிக்கை (2016): உலகமயமாக்கல், கட்டற்ற வணிகம் காரணமாக விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைக் காப்பது மேலும் முக்கியமாகியுள்ளது . எனவே (c) தவறு.

10.  
CTS (Non-Interview Posts) 2025
குறைந்தபட்ச ஆதரவு விலை எந்த அமைப்பின் பரிந்துரையின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது?

Correct Answer: B [வேளாண் செலவு, விலை ஆணையம் (CACP)]

விளக்கம்:

குறைந்தபட்ச ஆதரவு விலை வேளாண் செலவு, விலை ஆணையத்தின் (CACP) பரிந்துரையின் அடிப்படையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது. CACP 1965-இல் 'வேளாண் விலை ஆணையம்' என அமைக்கப்பட்டு 1985-இல் தற்போதைய பெயர் பெற்றது.

11.  
CTS (ITI Posts) 2025
2024-ஆம் ஆண்டு இந்திய விவசாயிகளின் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கை எது?

Correct Answer: B [குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம்]

விளக்கம்:

2024 விவசாயிகள் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த 'C2 + 50 சதவீதம்' சூத்திரப்படி MSP நிர்ணயிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.

12.  
AHGS 2021
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?

Correct Answer: D [பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் – சுற்றுச்சூழல்]

விளக்கம்:

PMFBY (2016) – பயிர்க் காப்பீடு (வேளாண்மை). தூய்மை இந்தியா (2014) – நகர்ப்புறம், கிராமப்புறம் இரண்டும்; AMRUT (2015) – நகர்ப்புற உள்கட்டமைப்பு; NEEDS – தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் – தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (MSME).

13.  
Group 1 2021 · Library Service 2023
பின்வரும் வேளாண் முறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது எது?

Correct Answer: A [இயற்கை (அங்கக) வேளாண்மை]

விளக்கம்:

இயற்கை வேளாண்மை வேதி உரம், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, தொழு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இடப்பெயர்வு வேளாண்மை காடழிப்புக்கு வழிவகுக்கும்; HYV சாகுபடி அதிக உரம், நீரைச் சார்ந்தது.

14.  
Group 2A Mains (Re-exam) 2026
மரபுவழி (வழக்கமான – Conventional) வேளாண்மை பற்றிய உண்மைக் கூற்றுகள் எவை?
(1) பெரும்பாலும் போட்டி, லாபத்தை மையமாகக் கொண்டது
(2) இயற்கையுடன் இணைந்து உணவு உற்பத்தி செய்வதை மையமாகக் கொண்டது
(3) செயற்கை (வேதி) இடுபொருள்களையும் வெளிச் சார்பையும் நம்பியுள்ளது
(4) பயிர்ப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது

Correct Answer: A [(1), (3) மட்டும்]

விளக்கம்:

வழக்கமான (வேதி) வேளாண்மை ஒற்றைப் பயிர்ச் சாகுபடி, செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மூலம் அதிக லாபம் ஈட்டுவதை நோக்குகிறது. இயற்கையுடன் இணைந்த உற்பத்தி, பயிர்ப் பன்முகத்தன்மை ஆகியவை இயற்கை வேளாண்மையின் பண்புகள்.

15.  
EO Gr. IV (HR&CE) 2022
பின்வருவனவற்றுள் இந்தியாவில் அதிகமானோர் ஈடுபடும் தொழில் எது?

Correct Answer: C [வேளாண்மை]

விளக்கம்:

இந்தியாவில் அதிகமானோர் ஈடுபடும் தொழில் வேளாண்மை; 2011 கணக்கெடுப்பின்படி பணியாளர்களில் சுமார் 54.6 சதவீதம் பேர் (சாகுபடியாளர்கள் 24.6, வேளாண் தொழிலாளர்கள் 30 சதவீதம்) வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு இதைவிட மிகக் குறைவு.

16.  
CEGS 2024
"வேளாண்மையின் வணிகமயமாக்கல்" என ஏன் அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [சந்தையில் விற்பனைக்காக]

விளக்கம்:

பயிர்களைக் குடும்ப நுகர்வுக்காக அன்றிச் சந்தையில் விற்பனைக்காக உற்பத்தி செய்வது வேளாண்மையின் வணிகமயமாக்கல் எனப்படும். பருத்தி, கரும்பு, சணல் போன்ற பணப் பயிர்களின் பரவல் இதற்கு எடுத்துக்காட்டு.

17.  
CTS (ITI Posts) 2025
பின்வருவனவற்றுள் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பவை எவை?
(i) அதிக விளைச்சல் தரும் விதைகளைப் பயன்படுத்துதல்
(ii) உறுதியான பாசன வசதியுடன் தீவிர சாகுபடி
(iii) இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்தல்

Correct Answer: C [(i), (ii) மட்டும்]

விளக்கம்:

உற்பத்தித் திறன் = ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல். HYV விதைகள், உறுதியான பாசனத்துடன் தீவிர சாகுபடி ஆகியவை விளைச்சலை உயர்த்துகின்றன. இடைத்தரகர் சுரண்டலைத் தடுப்பது (ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்) விவசாயியின் வருமானத்தை உயர்த்தும்; உற்பத்தித் திறனை நேரடியாக அல்ல.

18.  
CTS (Interview Posts-II) 2024
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (Regulated markets) பற்றிய சரியான கூற்றுகள் எவை?
(i) வேளாண் பொருள்களை விற்கும்போது இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுத்தல்
(ii) எளிதில் அழுகும் பழம், காய்கறிகளை விற்பனை செய்தல்
(iii) விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தருதல்

Correct Answer: B [(i), (iii) மட்டும்]

விளக்கம்:

வேளாண் விளைபொருள் சந்தைச் சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முறையான எடை, வெளிப்படையான ஏலம், உடனடிப் பணம், இடைத்தரகர் சுரண்டல் தடுப்பு, நியாயமான விலை ஆகியவற்றை உறுதிசெய்கின்றன. அழுகும் பொருள் விற்பனை அவற்றின் தனி நோக்கம் அல்ல.

19.  
JR 2023
10,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட பயிரிடத்தக்கக் கட்டளைப் பரப்புக்கு (CCA) பாசன வசதி வழங்கும் திட்டம்

Correct Answer: A [பெரிய நீர்ப்பாசனத் திட்டம்]

விளக்கம்:

10,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட பயிரிடத்தக்கக் கட்டளைப் பரப்புக்கு (CCA) பாசனம் தருபவை பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள். 2,000 முதல் 10,000 ஹெக்டேர் வரை நடுத்தரத் திட்டங்கள், 2,000 ஹெக்டேருக்குக் குறைவானவை சிறிய திட்டங்கள்.

20.  
CEGS 2024
ICRISAT எதனுடன் தொடர்புடையது?

Correct Answer: B [வறண்ட நில வேளாண்மை]

விளக்கம்:

ICRISAT – International Crops Research Institute for the Semi-Arid Tropics (1972), பதான்செரு, ஹைதராபாத். கம்பு, சோளம், கொண்டைக்கடலை, துவரை, நிலக்கடலை முதலிய வறண்ட நிலப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்கிறது.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq

📘 M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 15 அத்தியாயங்கள் · 382 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 30 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 22 அகாடமி மாதிரி விடைகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0