நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – சுற்றுச்சூழல், சூழலியல்,… (14 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – சுற்றுச்சூழல், சூழலியல்,… (14 வினா) – 14 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

இந்தியாவின் 100-வது ராம்சார் தளம்?

Correct Answer: A [ஜெயப்பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் (சுர்ஹா தால்)]

விளக்கம்:

இந்தியாவின் 100-வது ராம்சார் தளம் உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் (சுர்ஹா தால்); ஜூன் 2026-இல் அறிவிக்கப்பட்டது. சிலிகா ஏரி, கேவலாதேவ் தேசியப் பூங்கா ஆகியவை 1981-இல் இந்தியாவின் முதல் ராம்சார் தளங்களாயின.

2.  

சுர்ஹா தால் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: A [உத்தரப் பிரதேசம்]

விளக்கம்:

சுர்ஹா தால் (ஜெயப்பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம்) உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரி. ஜூன் 2026-இல் இது இந்தியாவின் 100-வது ராம்சார் தளமானது.

3.  

ராம்சார் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?

Correct Answer: B [1971]

விளக்கம்:

ராம்சார் உடன்படிக்கை 2 பிப்ரவரி 1971 அன்று ஈரானின் ராம்சார் நகரில் கையெழுத்தானது; அந்நாள் உலக ஈரநில தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது 1975-இல் நடைமுறைக்கு வந்தது; இந்தியா 1982-இல் இணைந்தது.

4.  

அச்சுறுத்தலுக்கு உள்ளான ராம்சார் தளங்களின் பட்டியல்?

Correct Answer: D [மான்ட்ரோ பதிவேடு]

விளக்கம்:

அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது சூழலியல் மாற்றம் ஏற்படும் ராம்சார் தளங்களின் பட்டியல் மான்ட்ரோ பதிவேடு (Montreux Record). இந்தியாவின் கேவலாதேவ் தேசியப் பூங்கா (ராஜஸ்தான்), லோக்டாக் ஏரி (மணிப்பூர்) இப்பதிவேட்டில் உள்ளன; சிவப்புப் பட்டியல் IUCN வெளியிடுவது.

5.  

2026-இல் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தொடங்கிய நாள்?

Correct Answer: A [4 ஜூன்]

விளக்கம்:

2026-இல் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் 04.06.2026 அன்று தொடங்கியது; இது இயல்பான நாளான ஜூன் 1-ஐ விட 3 நாள் தாமதம். இயல்பான தொடக்க நாள் ஜூன் 1 ± 7 நாள் என்பதால் இது இயல்பு வரம்புக்குள்ளேயே அடங்கும்.

6.  

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழைத் தொடக்கத்தின் இயல்பான நாள்?

Correct Answer: D [ஜூன் 1]

விளக்கம்:

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் இயல்பான நாள் ஜூன் 1 (± 7 நாள்) என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வரையறுக்கிறது. கேரளத் தொடக்கமே இந்தியாவில் பருவமழையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

7.  

தமிழ்நாட்டுக்கு அதிக மழை தரும் பருவக்காற்று?

Correct Answer: B [வடகிழக்குப் பருவமழை]

விளக்கம்:

தமிழ்நாட்டுக்கு அதிக மழை தருவது அக்டோபர்–டிசம்பர் வடகிழக்குப் பருவமழை. தென்மேற்குப் பருவக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைமறைவுப் பகுதியில் இருப்பதால் தமிழ்நாட்டின் பெரும்பகுதிக்குக் குறைந்த மழையே கிடைக்கிறது.

8.  

உலகச் சுற்றுச்சூழல் தினம் 2026-ஐ நடத்திய நாடு?

Correct Answer: B [அஜர்பைஜான்]

விளக்கம்:

உலகச் சுற்றுச்சூழல் தினம் 2026-ஐ (ஜூன் 5) அஜர்பைஜான் நடத்தியது. 2025-இல் கொரியக் குடியரசும், 2024-இல் சவுதி அரேபியாவும் இந்நாளை நடத்தின.

9.  

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை ஒருங்கிணைக்கும் ஐநா அமைப்பின் தலைமையகம்?

Correct Answer: D [நைரோபி]

விளக்கம்:

UNEP – நைரோபி, கென்யா (1972). UNFCCC – பான்.

10.  

ராமநாதபுரம் 3D பவளப்பாறைகளை உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம்?

Correct Answer: A [ட்வஸ்டா (Tvasta)]

விளக்கம்:

ஐஐடி மெட்ராஸில் உருவான ட்வஸ்டா – ICAR-CMFRI உடன். அக்னிகுல், ஸ்கைரூட் – விண்வெளி நிறுவனங்கள்.

11.  

3D பவளப்பாறைத் திட்டம் எந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறது?

Correct Answer: C [பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) – இரண்டாம் கட்டம்]

விளக்கம்:

இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட செயற்கைப் பவளப்பாறைத் திட்டம் பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) இரண்டாம் கட்டத்தின் கீழ், ஒன்றியம் 60 : மாநிலம் 40 பங்கில் நிதி பெறுகிறது. முன்னோட்டமாக இது தமிழ்நாட்டின் ராமநாதபுரம் கடற்கரையோரம் அமைக்கப்படுகிறது.

12.  

இந்தியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம்?

Correct Answer: A [மன்னார் வளைகுடா]

விளக்கம்:

இந்தியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடா (1989); இது ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடற்பகுதியில் 21 தீவுகளை உள்ளடக்கியது. இது யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பிலும் இடம்பெற்றுள்ளது.

13.  

2026 ஜூன் 5 அன்று வெளியான கணக்கெடுப்பு அறிக்கைப்படி தமிழ்நாட்டில் உள்ள வரையாடுகள் எண்ணிக்கை:

Correct Answer: C [1,364]

விளக்கம்:

05.06.2026 அன்று வெளியான கணக்கெடுப்பு அறிக்கைப்படி தமிழ்நாட்டில் 1,364 வரையாடுகள் (Nilgiri tahr) உள்ளன; இது 2025-இன் 1,303-ஐ விட 4.68% அதிகம். வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு; அதைப் பாதுகாக்க “நீலகிரி வரையாடு திட்டம்” செயல்படுகிறது.

14.  

2026 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு வரையாடுகளில் அதிகப் பங்கு (சுமார் 45%) உள்ள நிலப்பரப்பு:

Correct Answer: A [ஆனைமலை]

விளக்கம்:

ஆனைமலை ≈ 45%; நீலகிரி ≈ 29%.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

📘 TNUSRB P06 · புவியியல் – இந்தியாவும் தமிழ்நாடும் – காவலர் / SI 2026
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNUSRB காவலர் / சார்பு ஆய்வாளர் 2026 – புவியியல் – இந்தியாவும் தமிழ்நாடும்: 19 அத்தியாயங்கள், 456 விளக்கத்துடன் வினாக்கள், 439 பக்கங்கள். தமிழ் PDF.
புத்தகத்தைப் பெற – ₹199 ₹399 →
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› தேசிய இயற்கை மருத்துவ தினம் (நவ. 18): கர்நாடகாவில் கடைப்பிடிப்பு › உலகக் கருணை தினம் 2026 (நவம்பர் 13) › 2-வது தேசியப் பழங்குடியினர் இலக்கிய விழா தொடக்கம் › ஆறு ஆராய்ச்சியாளர்களுக்கு இன்ஃபோசிஸ் பரிசு 2026 › பஞ்சகுட்டா: இந்தியாவின் முதல் AI காவல் நிலையம் › இந்தியா–மியான்மர் IMNEX-26 கடற்படைப் பயிற்சி தொடக்கம் › கேந்திரிய வித்யாலயா அமைப்பின் டிஜிட்டல் திட்டங்கள் தொடக்கம் › மேம்படுத்தப்பட்ட வீரதீர விருதுகள் இணையதளம் தொடக்கம் › இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு நீரிழிவு கண்டறியப்படவில்லை: IDF அட்லஸ் › வெளிநாட்டு விவாகரத்தால் திருமணம் தானாக முடியாது: உச்ச நீதிமன்றம்
மேலும் வினாடி வினாக்கள்
› ஒகேனக்கல்: கண்ணாடிப் பாலம், செயற்கை நீர்வீழ்ச்சி – சாத்தியக்கூறு ஆய்வு – வினாடி வினா (21.11.2026) › காவிரி: தமிழக அரசின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி (நவ. 20) – வினாடி வினா (21.11.2026) › அரிசி, நெல், துவரை, உளுந்து இருப்புக்கு உச்சவரம்பு: தமிழக அரசிதழ் – வினாடி வினா (21.11.2026) › கோதுமைப் பரப்பு 26 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்திக்கலாம்: மதிப்பீடு – வினாடி வினா (21.11.2026) › ஐ.நா. TFM-ன் 10 உறுப்பினர் குழுவில் சேகர் சி. மாண்டே நியமனம் – வினாடி வினா (21.11.2026) › காளிதாஸ் சம்மான் 2026: வாணி திரிபாதி டிகூ; உஜ்ஜயினியில் 68-ஆவது சமாரோ – வினாடி வினா (21.11.2026)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0