TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – 20 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?

Correct Answer: B [அயர்லாந்து]

விளக்கம்:

நெறிமுறைக் கோட்பாடுகள் (பகுதி IV) அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை; அயர்லாந்து அதனை ஸ்பெயின் அரசியலமைப்பிலிருந்து பெற்றது. அடிப்படை உரிமைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.

2.  
நெறிமுறைக் கோட்பாடுகள் நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாதவை எனக் கூறும் பிரிவு:

Correct Answer: B [பிரிவு 37]

விளக்கம்:

பிரிவு 37-இன்படி, நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நீதிமன்றத்தின் மூலமும் செயல்படுத்த முடியாதவை; எனினும் அவை நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை, சட்டமியற்றும்போது அவற்றைப் பின்பற்றுவது அரசின் கடமை. பிரிவு 36 "அரசு" என்பதன் வரையறை.

3.  
நெறிமுறைகளை "வங்கியின் வசதிப்படி செலுத்தப்படும் காசோலை" என்றவர்:

Correct Answer: B [கே.டி. ஷா]

விளக்கம்:

விடை: கே.டி. ஷா – டி.டி.கே – "உணர்வுகளின் குப்பைத் தொட்டி".

4.  
ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் பற்றிக் கூறும் பிரிவு:

Correct Answer: C [39(d)]

விளக்கம்:

பிரிவு 39(d), ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க அரசு முயல வேண்டும் என்கிறது. இந்த நெறிமுறையைச் செயல்படுத்தச் சம ஊதியச் சட்டம் 1976 இயற்றப்பட்டது; பிரிவு 39(a) போதுமான வாழ்வாதாரம் பற்றியது.

5.  
கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்கக் கூறும் பிரிவு:

Correct Answer: A [பிரிவு 40]

விளக்கம்:

பிரிவு 40, கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்துத் தன்னாட்சி அலகுகளாகச் செயல்படத் தேவையான அதிகாரங்களை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது; இது காந்தியக் கோட்பாடு. 1992-இன் 73-வது திருத்தம் இந்த நெறிமுறைக்கு அரசியலமைப்புச் செயல்வடிவம் தந்தது.

6.  
பொதுச் சிவில் சட்டம் பற்றிக் கூறும் பிரிவு:

Correct Answer: B [பிரிவு 44]

விளக்கம்:

பிரிவு 44, நாடு முழுவதும் குடிமக்களுக்குப் பொதுச் சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டுவர அரசு முயல வேண்டும் என்கிறது. இது தாராளவாத – அறிவுசார் வகை நெறிமுறைக் கோட்பாடாகும்.

7.  
பின்வருவனவற்றில் காந்தியக் கோட்பாடு அல்லாதது:

Correct Answer: C [நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரித்தல்]

விளக்கம்:

நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரித்தல் (பிரிவு 50) தாராளவாத – அறிவுசார் வகை நெறிமுறை; காந்தியக் கோட்பாடு அல்ல. குடிசைத் தொழில்கள் (பிரிவு 43), மதுவிலக்கு (பிரிவு 47), பசுவதைத் தடை (பிரிவு 48) ஆகியவை காந்தியக் கோட்பாடுகள்.

8.  
42-வது திருத்தத்தால் சேர்க்கப்படாத நெறிமுறை:

Correct Answer: C [43B]

விளக்கம்:

பிரிவு 43B (கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவித்தல்) 2011-இன் 97-வது திருத்தத்தால் சேர்க்கப்பட்டது; 42-வது திருத்தத்தால் அல்ல. 42-வது திருத்தம் (1976) பிரிவு 39A, 43A, 48A ஆகிய நெறிமுறைகளைச் சேர்த்தது; பிரிவு 39(f) குழந்தைகள் நலனும் அதில் சேர்ந்தது.

9.  
பிரிவு 38(2) – வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் – எந்தத் திருத்தத்தால் சேர்க்கப்பட்டது?

Correct Answer: B [44-வது]

விளக்கம்:

1978-இன் 44-வது திருத்தம் பிரிவு 38(2)-ஐச் சேர்த்து, வருமானம், தகுதி, வசதி, வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க அரசு முயல வேண்டும் எனக் கூறியது. இதே திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கியது.

10.  
86-வது திருத்தத்துக்குப் பின் பிரிவு 45 கூறுவது:

Correct Answer: B [6 வயது வரை முன்பருவக் கவனிப்பும் கல்வியும்]

விளக்கம்:

2002-இன் 86-வது திருத்தத்துக்குப் பின் பிரிவு 45, ஆறு வயது நிறைவடையும் வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கவனிப்பும் கல்வியும் (Early Childhood Care and Education) வழங்க அரசு முயல வேண்டும் என்கிறது. 6–14 வயதுக் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாகப் பிரிவு 21A-இல் சேர்க்கப்பட்டது.

11.  
"தொடக்கக் கல்வியைத் தாய்மொழியில் வழங்குதல்" என்ற நெறிமுறை உள்ள பிரிவு:

Correct Answer: C [பிரிவு 350A]

விளக்கம்:

பிரிவு 350A, மொழிச் சிறுபான்மையினக் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியைத் தாய்மொழியில் வழங்கப் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது. இது பகுதி IV-க்கு வெளியே (பகுதி XVII) உள்ள நெறிமுறை; பிரிவு 351 இந்தி மொழி வளர்ச்சி பற்றியது.

12.  
அடிப்படை உரிமைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் இடையிலான சமநிலை அடிப்படைக் கட்டமைப்பின் பகுதி எனக் கூறிய வழக்கு:

Correct Answer: C [மினர்வா மில்ஸ்]

விளக்கம்:

மினர்வா மில்ஸ் வழக்கில் (1980) அடிப்படை உரிமைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் இடையிலான சமநிலை அடிப்படைக் கட்டமைப்பின் பகுதி என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கு 42ஆவது திருத்தத்தின் சில பகுதிகளைச் செல்லாதது என அறிவித்தது.

13.  
பிரிவு 31C-ஐச் சேர்த்த திருத்தம்:

Correct Answer: B [25-வது]

விளக்கம்:

1971-இன் 25-வது திருத்தம் சேர்த்த பிரிவு 31C, பிரிவு 39(b), 39(c) நெறிமுறைகளைச் செயல்படுத்தும் சட்டங்கள் பிரிவு 14, 19 ஆகியவற்றை மீறுவதாகக் கூறிச் செல்லாததாக்கப்படாது எனப் பாதுகாப்பு அளித்தது. 42-வது திருத்தம் இதை அனைத்து நெறிமுறைகளுக்கும் நீட்டித்தது; மினர்வா மில்ஸ் (1980) வழக்கில் அந்த நீட்டிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

14.  
நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரிக்கும் நெறிமுறையைச் செயல்படுத்திய சட்டம்:

Correct Answer: B [குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973]

விளக்கம்:

நெறிமுறைக் கோட்பாடு பிரிவு 50, பொது நியமனப் பணிகளில் நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்கிறது; குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (CrPC) நீதித்துறை நடுவர்களை நிர்வாக நடுவர்களிடமிருந்து பிரித்து இதனைச் செயல்படுத்தியது. சட்டப் பணிகள் ஆணையச் சட்டம் 1987 இலவச சட்ட உதவி (பிரிவு 39A) தொடர்பானது.

15.  
விடுதலைக்குப் பின் பொதுச் சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம்:

Correct Answer: C [உத்தரகாண்ட்]

விளக்கம்:

விடுதலைக்குப் பின் பொதுச் சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் உத்தரகாண்ட்; அங்கு அது 2025 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வந்தது. கோவாவில் இருப்பது போர்த்துகீசியர் காலத்திலிருந்து (1867) தொடரும் சிவில் சட்டம்; அது விடுதலைக்குப் பின் இயற்றப்பட்டதல்ல.

16.  
சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குப் பாதுகாப்பை அரசின் கடமையாகக் கூறும் பிரிவு:

Correct Answer: C [48A]

விளக்கம்:

42-வது திருத்தம் (1976) சேர்த்த பிரிவு 48A, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதும் காடுகள், வனவிலங்குகளைப் பாதுகாப்பதும் அரசின் கடமை என்கிறது. இதே பொருள் குடிமகனின் அடிப்படைக் கடமையாக பிரிவு 51A(g)-இல் உள்ளது.

17.  
நெறிமுறைக் கோட்பாடுகள் தொடர்பான தவறான கூற்று:

Correct Answer: C [இவற்றுக்கு முரணான சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்கலாம்]

விளக்கம்:

நெறிமுறைக் கோட்பாடுகள் நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாதவை (பிரிவு 37); எனவே அவற்றுக்கு முரண்படுகிறது என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்க முடியாது – (c) தவறான கூற்று. அவை அரசு செய்ய வேண்டியவற்றைக் கூறும் நேர்மறை இயல்புடையவை; அவற்றைச் செயல்படுத்தச் சட்டம் தேவை.

18.  
பின்வருவனவற்றில் தாராளவாத – அறிவுசார் கோட்பாடு:

Correct Answer: D [பிரிவு 51 – உலக அமைதி]

விளக்கம்:

பிரிவு 51 (பன்னாட்டு அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துதல்) தாராளவாத – அறிவுசார் (Liberal-Intellectual) வகை நெறிமுறைக் கோட்பாடாகும். பிரிவு 40 (கிராமப் பஞ்சாயத்துகள்), 43B (கூட்டுறவுச் சங்கங்கள்), 46 (நலிந்த பிரிவினர் நலன்) ஆகியவை காந்தியக் கோட்பாடுகள்.

19.  
"உணர்வுகளின் குப்பைத் தொட்டி" (Veritable dustbin of sentiments) என நெறிமுறைகளை விமர்சித்தவர்:

Correct Answer: D [டி.டி. கிருஷ்ணமாச்சாரி]

விளக்கம்:

விடை: டி.டி. கிருஷ்ணமாச்சாரி – ஜென்னிங்ஸ் – "புனித ஆசைகள்"; நசிருதீன் – "புத்தாண்டுத் தீர்மானங்கள்".

20.  
2026 ஜூலை 1 முதல் MGNREGA-வுக்குப் பதிலாக நடைமுறைக்கு வந்த சட்டம் ஊரகக் குடும்பத்துக்கு ஆண்டுக்கு உறுதி செய்யும் வேலை நாள்கள்:

Correct Answer: B [125]

விளக்கம்:

விடை: 125 – VB-G RAM G சட்டம், 2025 – பிரிவு 41 (வேலை செய்யும் உரிமை) நெறிமுறையின் செயலாக்கம்.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0