TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றியம், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றியம், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [பிரிவு 1]
விளக்கம்:
அரசமைப்பின் பிரிவு 1 "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக (Union of States) இருக்கும்" என்று கூறுகிறது. பிரிவு 2 புதிய மாநிலங்களைச் சேர்ப்பதையும், பிரிவு 3 மாநில எல்லைகளை மாற்றுவதையும் கூறுகின்றன.
Correct Answer: B [குடியரசுத் தலைவரின் முன் பரிந்துரை தேவை]
விளக்கம்:
பிரிவு 3-இன்படி, புதிய மாநிலம் அமைக்கும் மசோதாவைக் குடியரசுத் தலைவரின் முன் பரிந்துரையுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியும். தொடர்புடைய மாநிலச் சட்டமன்றத்தின் கருத்து கேட்கப்படும், ஆனால் அது நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது; சாதாரணப் பெரும்பான்மை போதும்.
Correct Answer: B [பிரிவு 4]
விளக்கம்:
பிரிவு 4-இன்படி, பிரிவு 2, 3-இன் கீழ் மாநிலங்களை உருவாக்க, மாற்ற இயற்றப்படும் சட்டங்கள் பிரிவு 368-இன் கீழான அரசியலமைப்புத் திருத்தங்களாகக் கருதப்படாது. எனவே அவற்றை நாடாளுமன்றம் சாதாரணப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.
Correct Answer: B [பெருபாரி]
விளக்கம்:
பெருபாரி வழக்கில் (1960) உச்ச நீதிமன்றம், இந்தியப் பகுதியை வெளிநாட்டுக்கு வழங்கப் பிரிவு 3 போதாது, பிரிவு 368-இன் கீழான அரசியலமைப்புத் திருத்தம் தேவை எனக் கருத்துரைத்தது. அதன்படி பெருபாரியைப் பாகிஸ்தானுக்கு வழங்க 1960-இல் 9-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
Correct Answer: C [100-வது]
விளக்கம்:
2015-இன் 100-வது திருத்தம், 1974 இந்தியா – வங்காளதேச நில எல்லை ஒப்பந்தத்தையும் 2011 நெறிமுறையையும் செயல்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே நிலப்பகுதிகளை (Enclaves) பரிமாற்றம் செய்ய வழி செய்தது. இது அரசியலமைப்பின் முதல் அட்டவணையைத் திருத்தியது.
Correct Answer: B [ஆந்திரா]
விளக்கம்:
பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்துக்குப் பின், 1953 அக்டோபர் 1 அன்று சென்னை மாநிலத்தின் தெலுங்குப் பகுதிகளைப் பிரித்து ஆந்திரா இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953-இல் பசல் அலி தலைமையில் மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
Correct Answer: D [பட்டாபி சீதாராமையா]
விளக்கம்:
1953-இல் அமைக்கப்பட்ட மாநிலச் சீரமைப்பு ஆணையத்தில் பசல் அலி (தலைவர்), கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். பட்டாபி சீதாராமையா 1948-இன் JVP குழுவின் உறுப்பினர்; இந்த ஆணையத்தின் உறுப்பினர் அல்லர்.
Correct Answer: B [பட்டாபி சீதாராமையா]
விளக்கம்:
1948-இல் அமைக்கப்பட்ட JVP குழுவில் ஜவஹர்லால் நேரு (J), வல்லபாய் படேல் (V), பட்டாபி சீதாராமையா (P) ஆகியோர் இருந்தனர்; எனவே "P" பட்டாபி சீதாராமையாவைக் குறிக்கிறது. இக்குழு மொழிவாரி மாநிலக் கோரிக்கையை அப்போதைக்கு நிராகரித்தது.
Correct Answer: B [36-வது]
விளக்கம்:
1975-இன் 36-வது திருத்தம் சிக்கிமை இந்தியாவின் 22-வது முழு மாநிலமாக்கியது. அதற்கு முன் 1974-இன் 35-வது திருத்தம் சிக்கிமுக்கு "இணை மாநில" (Associate State) அந்தஸ்து வழங்கியிருந்தது.
Correct Answer: C [தெலங்கானா]
விளக்கம்:
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன்படி, 2014 ஜூன் 2 அன்று தெலங்கானா இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவானது. 2019-இல் ஜம்மு–காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டதால் தற்போது இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன.
Correct Answer: C [14 ஜனவரி 1969]
விளக்கம்:
1967 ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறியது; சென்னை மாநிலம் (பெயர் மாற்றம்) சட்டம் 1968-இன்படி 1969 ஜனவரி 14 முதல் "தமிழ்நாடு" என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை.
Correct Answer: B [சங்கரலிங்கனார்]
விளக்கம்:
சென்னை மாநிலத்துக்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டக் கோரி 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் 1956 அக்டோபர் 13 அன்று உயிர்நீத்தார். பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திர மாநிலம் கோரி 1952-இல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்.
Correct Answer: B [8]
விளக்கம்:
தாத்ரா–நகர் ஹவேலி மற்றும் டாமன்–டையூ ஒன்றியப் பிரதேசங்கள் 2020 ஜனவரி 26 அன்று ஒன்றாக இணைக்கப்பட்டதால், தற்போது இந்தியாவில் 8 ஒன்றியப் பிரதேசங்கள் உள்ளன. அதற்கு முன் 2019 அக்டோபர் 31 அன்று ஜம்மு–காஷ்மீர், லடாக் உருவானதால் எண்ணிக்கை 9 ஆக இருந்தது.
Correct Answer: D [லடாக்]
விளக்கம்:
ஜம்மு–காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன்படி லடாக் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. தில்லி, புதுச்சேரி, ஜம்மு–காஷ்மீர் ஆகிய மூன்று ஒன்றியப் பிரதேசங்களுக்கு மட்டுமே சட்டமன்றம் உள்ளது.
Correct Answer: B [சென்னை உயர் நீதிமன்றம்]
விளக்கம்:
புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் உள்ளது. லட்சத்தீவு கேரள உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலும், அந்தமான்–நிக்கோபார் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலும் உள்ளன.
Correct Answer: A [69-வது]
விளக்கம்:
1991-இன் 69-வது திருத்தம் பிரிவு 239AA, 239AB-ஐச் சேர்த்து தில்லிக்குத் தேசியத் தலைநகரப் பகுதி (National Capital Territory) என்ற சிறப்பு அந்தஸ்தையும் சட்டமன்றம், அமைச்சரவையையும் வழங்கியது. பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகியவை தில்லி சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ளன.
Correct Answer: A [பிரிவு 239]
விளக்கம்:
பகுதி VIII-இல் உள்ள பிரிவு 239-இன்படி, ஒவ்வொரு ஒன்றியப் பிரதேசமும் குடியரசுத் தலைவரால் அவர் நியமிக்கும் நிர்வாகி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அண்டை மாநில ஆளுநரையும் ஒன்றியப் பிரதேச நிர்வாகியாக நியமிக்கலாம்.
Correct Answer: D [பிரிவு 371J]
விளக்கம்:
2012-இன் 98-வது திருத்தம் சேர்த்த பிரிவு 371J, கர்நாடகாவின் ஹைதராபாத்–கர்நாடகப் பகுதியின் வளர்ச்சிக்குத் தனி வாரியம், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. பிரிவு 371D ஆந்திரா / தெலங்கானா, 371F சிக்கிம், 371I கோவா தொடர்பானவை.
Correct Answer: B [சத்தீஸ்கர், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட்]
விளக்கம்:
2000-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் (நவம்பர் 1), உத்தராஞ்சல் (நவம்பர் 9), ஜார்க்கண்ட் (நவம்பர் 15) என்ற வரிசையில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாயின. உத்தராஞ்சல் 2007-இல் "உத்தரகாண்ட்" எனப் பெயர் மாற்றப்பட்டது.
Correct Answer: B [31 அக்டோபர் 2019]
விளக்கம்:
ஜம்மு–காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன்படி, 2019 அக்டோபர் 31 அன்று ஜம்மு–காஷ்மீர், லடாக் என்ற இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் உருவாயின. 2019 ஆகஸ்ட் 5 அன்று பிரிவு 370 செயலிழக்கச் செய்யப்பட்டது; 2023 டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது.
Correct Answer: A [பிரிவு 3-இன் கீழ் நாடாளுமன்றம் சாதாரணப் பெரும்பான்மையால் இயற்றிய சட்டம்]
விளக்கம்:
விடை: பிரிவு 3-இன் கீழ் நாடாளுமன்றம் சாதாரணப் பெரும்பான்மையால் இயற்றிய சட்டம் – கேரளா (பெயர் மாற்றம்) சட்டம், 2026 – பிரிவு 3(e); பிரிவு 4-இன்படி இது 368 திருத்தம் அல்ல; 25.08.2026 முதல் நடைமுறை. மாநிலத் தீர்மானம் (2024) கோரிக்கை மட்டுமே.
Correct Answer: A [1960]
விளக்கம்:
விடை: 1960 – ஆந்திரப் பிரதேசம் – சென்னை (எல்லை மாற்றம்) சட்டம் 1959-இன்படி 1960 ஏப்ரல் 1 முதல்.
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
