வினாடி வினா – 6 அக்டோபர் 2026 (பகுதி 2: வினா 41–80)
வினாடி வினா – 6 அக்டோபர் 2026 (பகுதி 2: வினா 41–80) – 36 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [இருசக்கர வாகனம் (42.6%)]
விளக்கம்:
இருசக்கர வாகனம் 42.6% (நகரம் 52.3%, கிராமம் 37.1%). மாதப் பயணச் செலவு சராசரி ₹785 (நகரம் ₹1,044, கிராமம் ₹612); சராசரிப் பயண நேரம் 25 நிமிடம்.
Correct Answer: A [பேருந்து (55.8%)]
விளக்கம்:
பேருந்து 55.8% + ரயில் 17.7% = 73.5%; மகிழுந்து 15.1%. பயண நோக்கத்தில் சமூக, சமயப் பயணங்கள் 70.2%; சுற்றுலா 7.4% மட்டுமே.
Correct Answer: C [CSO, NSSO]
விளக்கம்:
மத்தியப் புள்ளியியல் அலுவலகம் (CSO, 1951) + தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO, 1950) = NSO (2019). இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) தனி அமைப்பு.
Correct Answer: B [பி.சி. மகலனோபிஸ்]
விளக்கம்:
பி.சி. மகலனோபிஸின் பிறந்தநாளான ஜூன் 29, 2007 முதல் தேசியப் புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் 1931-ல் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தைத் தொடங்கினார்; இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் 'மகலனோபிஸ் மாதிரி' அவருடையது.
Correct Answer: B [₹500 கோடி]
விளக்கம்:
6 அக். 2026 அன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ₹500 கோடிக்கு மேற்பட்ட திட்டங்களைக் கண்காணித்து, சிக்கல்களைத் தீர்க்க ஒருங்கிணைந்த தளமாக இருக்கும்.
Correct Answer: B [2021]
விளக்கம்:
13 அக். 2021-ல் தொடங்கப்பட்டது; 7 இயந்திரங்கள் – சாலை, ரயில், விமானம், துறைமுகம், பொதுப் போக்குவரத்து, நீர்வழி, தளவாட உள்கட்டமைப்பு. தேசியத் தளவாடக் கொள்கை 17 செப். 2022-ல் வந்தது.
Correct Answer: A [வர்த்தக அமைச்சகம் (DPIIT)]
விளக்கம்:
LEADS (Logistics Ease Across Different States) அறிக்கையை வர்த்தக, தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை (DPIIT) 2018 முதல் வெளியிடுகிறது. இது மாநிலங்களைத் தளவாடக் கட்டமைப்பு, சேவைகள், ஒழுங்குமுறைச் சூழல் அடிப்படையில் மதிப்பிடுகிறது.
Correct Answer: C [காமராஜர் துறைமுகம், எண்ணூர்]
விளக்கம்:
சென்னை அருகே எண்ணூர் துறைமுகம் 2001-ல் நிறுமமாக இயங்கத் தொடங்கியது; பின்னர் காமராஜர் துறைமுகம் எனப் பெயர் மாற்றம். தமிழ்நாட்டில் மூன்று பெருந்துறைமுகங்கள்: சென்னை, காமராஜர், வ.உ.சி.
Correct Answer: C [ஐந்தாவது கடற்படை ஆதரவுக் கப்பல் (FSS-5)]
விளக்கம்:
ஒரே நிகழ்வில் மூன்று: சூர்யா (FSS-1) நீரில் இறக்கம், FSS-5 அடிக்கட்டை, மேம்படுத்திய சரிவுத்தளம்-4 மற்றும் 300 டன் கோலியாத் கிரேன் திறப்பு. அடிக்கட்டை இடுதல் கப்பல் கட்டுமானத்தின் முறையான தொடக்கம்.
Correct Answer: D [45,000 DWT]
விளக்கம்:
நீட்டித்து வலுப்படுத்திய சரிவுத்தளம்-4, புதிய கிரேனுடன் 45,000 DWT வரை கப்பல்களைக் கட்டி இறக்க HSL-க்கு உதவும். DWT – கப்பல் சுமக்கக்கூடிய மொத்த எடை.
Correct Answer: B [2010]
விளக்கம்:
விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் (HSL) 1961-ல் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்டு, 2010-ல் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. இது 1941-ல் சிந்தியா நீராவிக் கப்பல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
Correct Answer: B [விசாகப்பட்டினம்]
விளக்கம்:
கடற்படைக் கட்டளையகங்கள்: மேற்கு – மும்பை, கிழக்கு – விசாகப்பட்டினம், தெற்கு – கொச்சி. சென்னையில் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகம் உள்ளது.
Correct Answer: A [நிலம், வான், கடல்]
விளக்கம்:
அணு மும்முனைத் திறன் (Nuclear Triad) என்பது நிலம், வான், கடல் ஆகிய மூன்றிலிருந்தும் அணு ஆயுதங்களை ஏவும் திறன். இந்தியாவில் நிலத்தில் அக்னி ஏவுகணைகள், வானில் போர் விமானங்கள், கடலில் அரிஹந்த் வகை அணு நீர்மூழ்கிகளின் K-வரிசை ஏவுகணைகள் இதைச் சாத்தியமாக்குகின்றன.
Correct Answer: B [INS அரிதமன்]
விளக்கம்:
INS அரிதமன் (3 ஏப். 2026, விசாகப்பட்டினம்) – சுமார் 7,000 டன்; 8 ஏவு குழாய்கள் (8 K-4 அல்லது 24 K-15). மூன்று SSBN இருப்பதால் எப்போதும் ஒன்று கடலில் ரோந்தில் இருக்க முடியும் – 'தொடர் கடல் தடுப்பு' (CASD). அரிஹந்த் 2016, அரிகாத் 2024; சக்ரா ரஷ்யக் குத்தகை SSN.
Correct Answer: B [3,500 கி.மீ]
விளக்கம்:
K-4 – சுமார் 3,500 கி.மீ; K-15 (சாகரிகா) – 750 கி.மீ. 'K' வரிசை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை (ராமேஸ்வரம்) நினைவுகூர்கிறது.
Correct Answer: C [முதலில் பயன்படுத்தாமை (No First Use)]
விளக்கம்:
'நம்பகமான குறைந்தபட்சத் தடுப்பு', 'முதலில் பயன்படுத்தாமை', பதிலடி 'பேரளவில்'; அணுசக்தி அணையகம் (NCA) – அரசியல் குழுவுக்குப் பிரதமர் தலைவர். சோதனைகள்: பொக்ரான் 1974, 1998.
Correct Answer: D [திருநெல்வேலி]
விளக்கம்:
நீர்மூழ்கிகளுடன் தொடர்புகொள்ளும் கடற்படையின் மிகக் குறைந்த அதிர்வெண் (VLF) நிலையம் INS கட்டபொம்மன் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் 1990 முதல் இயங்குகிறது. இரண்டாவது VLF நிலையம் தெலங்கானாவின் தாமகுண்டத்தில் அமைக்கப்படுகிறது.
Correct Answer: B [C-DAC, மொஹாலி]
விளக்கம்:
சுகாதார அமைச்சகத்துக்காக C-DAC மொஹாலி உருவாக்கியது (நவம்பர் 2019). 15 செப். 2026-ல் 50,00,92,730 ஆலோசனைகளைக் கடந்தது; உலகின் மிகப் பெரிய ஆரம்ப சுகாதாரத் தொலை மருத்துவச் சேவை.
Correct Answer: B [57%]
விளக்கம்:
பெண்கள் 57.14%; 46 வயதுக்கு மேற்பட்டோர் 40%-க்கு மேல். தினமும் 2.5-3 லட்சம் ஆலோசனைகள்; AI மருத்துவ முடிவு உதவி அமைப்புக்கு 2026 தேசிய மின்-ஆளுமைத் தங்க விருது.
Correct Answer: D [தேசிய சுகாதார ஆணையம் (NHA)]
விளக்கம்:
ABDM 27 செப். 2021-ல் தொடங்கியது; ஒவ்வொருவருக்கும் 14 இலக்க ABHA சுகாதார அடையாள எண். NHA பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனாவையும் செயல்படுத்துகிறது.
Correct Answer: D [மக்களைத் தேடி மருத்துவம்]
விளக்கம்:
5 ஆக. 2021-ல் சாமனப்பள்ளியில் (கிருஷ்ணகிரி) தொடங்கியது; தொற்றா நோய்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை. இது ஐ.நா. பன்முகமைக் குழு விருது (UNIATF, 2024) பெற்றது.
Correct Answer: A [ஐஸ்கியூப் ஆய்வகம், விண்வெளி உயர் ஆற்றல் நியூட்ரினோ கண்டுபிடிப்பு]
விளக்கம்:
'ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கான தீர்க்கமான பங்களிப்பு, வானியல் மூலம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்கள் கண்டுபிடிப்பு'. 82 வயது ஹால்சன் தனித்துப் பெற்றார் (12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்); விஸ்கான்சின் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
Correct Answer: C [தென் துருவம், அண்டார்டிகா]
விளக்கம்:
அமுன்ட்சென்-ஸ்காட் தென் துருவ நிலையத்தில் 2011-ல் நிறைவு; ஹால்சன் 1988-ல் இக்கருத்தை முன்வைத்தார். UPSC 2015 முதல்நிலைத் தேர்வில் 'ஐஸ்கியூப்' பற்றி வினா கேட்கப்பட்டது. பைக்கால் ஏரியில் ரஷ்யாவின் Baikal-GVD நியூட்ரினோ தொலைநோக்கி உள்ளது.
1. இது மின்னூட்டம் அற்றது.
2. இதன் நிறை மிக மிகக் குறைவு.
3. இது பொருளுடன் வலுவாக வினைபுரிகிறது.
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
1, 2 சரி. நியூட்ரினோக்கள் பொருளுடன் மிக அரிதாகவே வினைபுரிவதால் 'பேய்த் துகள்கள்' எனப்படுகின்றன; பூமியையே ஊடுருவிச் செல்லும். 1930-ல் வுல்ஃப்காங் பவுலி முன்மொழிந்தார்.
Correct Answer: D [தேனி]
விளக்கம்:
INO தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மலைக்கடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டது; சுற்றுச்சூழல் எதிர்ப்பால் தாமதம். 1965-ல் கர்நாடகாவின் கோலார் தங்கவயலில் வளிமண்டல நியூட்ரினோ முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
Correct Answer: A [பிரான்சுவா ஆங்லெர்]
விளக்கம்:
ஆங்லெர் – ஹிக்ஸ் இயங்குமுறை (2013). லெமேத்ர் – பெருவெடிப்புக் கோட்பாட்டு முன்னோடி (நோபல் இல்லை); பிரிகோஜின் – வேதியியல் நோபல் 1977; டி டூவ் – மருத்துவ நோபல் 1974.
Correct Answer: A [மகாராஷ்டிரா FDA ஆணையர்]
விளக்கம்:
உணவகங்கள், கிடங்குகள், விரைவு-வணிக 'டார்க் ஸ்டோர்'களில் திடீர் ஆய்வுகள் நடத்தி உரிமம் ரத்து செய்தார். 'நல்லாட்சி என்பது தலைப்புச் செய்தி ஆவதல்ல, மாற்றம் கொண்டுவருவது' என்றார்.
Correct Answer: D [சுகாதார, குடும்ப நல அமைச்சகம்]
விளக்கம்:
FSSAI 2008-ல் அமைந்தது; தலைமையகம் புது டெல்லி. மாநிலங்களில் உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் சட்டத்தைச் செயல்படுத்துகின்றனர் – மகாராஷ்டிராவில் FDA ஆணையர் அப்பொறுப்பை வகிக்கிறார்.
Correct Answer: D [2006]
விளக்கம்:
FSS சட்டம் 2006 எட்டுச் சட்டங்களை ஒன்றிணைத்தது; 5 ஆகஸ்ட் 2011 முதல் நடைமுறைக்கு வந்தது. 1986 – நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்; 2019 – புதிய நுகர்வோர் சட்டம்.
Correct Answer: B [ஹைதராபாத் (நிஜாம்)]
விளக்கம்:
1948 செப்டம்பர் 'போலோ நடவடிக்கை' மூலம் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது; 17 செப்டம்பர் 'மராத்வாடா விடுதலை நாள்'. முண்டே 2005 IAS (மகாராஷ்டிரா); 21 ஆண்டுகளில் 25 முறை இடமாற்றம் பெற்றவர்.
Correct Answer: B [பிரிவு 47]
விளக்கம்:
பிரிவு 47 – ஊட்டச்சத்து, வாழ்க்கைத் தரம், பொது சுகாதாரம், மதுவிலக்கு. தமிழ்நாடு இதற்கு முன்மாதிரி: சத்துணவுத் திட்டம் (1982), காலை உணவுத் திட்டம் (2022). பிரிவு 48 – வேளாண்மை, கால்நடை.
Correct Answer: A [ஆப்பிரிக்கா]
விளக்கம்:
பெனின், புர்கினா ஃபாசோ, சாட், மாலி – 2019-ல் உலக வர்த்தக அமைப்பில் (WTO) முதல் கொண்டாட்டம்; ஆகஸ்ட் 2021-ல் ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்தது.
Correct Answer: D [தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்]
விளக்கம்:
உஸ்பெகிஸ்தான் அரசு, சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழு (ICAC) இணைந்து நடத்துகின்றன; கருப்பொருள்: 'Cotton for Good: வர்த்தகம், மாற்றம், கூட்டாண்மை மூலம் வளம்'. FAO முக்கிய அமைப்பாளர்.
Correct Answer: C [தக்காணப் பீடபூமி எரிமலைப் பாறை (பசால்ட்)]
விளக்கம்:
பசால்ட் சிதைவால் உருவான கரிசல் மண் ஈரத்தைத் தக்கவைக்கும்; காய்ந்தால் வெடிப்பு விடும். தமிழ்நாட்டில் கோவில்பட்டி, விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளின் கரிசல் நிலம் மானாவாரிப் பருத்திக்குப் பெயர் பெற்றது.
Correct Answer: A [பன்னாட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (ITUC)]
விளக்கம்:
ITUC (2006, தலைமையகம் பிரஸ்ஸல்ஸ்) இதைத் தொடங்கியது. 'கண்ணியமான வேலை' கருத்தை 1999-ல் ILO முன்வைத்தது; இது ஐ.நா. நீடித்த வளர்ச்சி இலக்கு 8. ILO – 1919, ஜெனீவா; 1969 அமைதி நோபல்.
a. கோயம்புத்தூர்
b. திருப்பூர்
c. கரூர் – 1. பின்னலாடைத் தலைநகர் 2. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் 3. வீட்டு உபயோக ஜவுளி நகரம்
Correct Answer: C [a-2, b-1, c-3]
விளக்கம்:
கோவை – நூற்பாலைகளால் 'தென்னிந்திய மான்செஸ்டர்'; திருப்பூர் – பின்னலாடை ஏற்றுமதி ('டாலர் நகரம்'); கரூர் – படுக்கை விரிப்பு, திரைச்சீலை போன்ற வீட்டு ஜவுளி. இந்தியா உலகின் மிகப் பெரிய பருத்திப் பயிர்ப் பரப்பு கொண்ட நாடு.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
