வினா விடை · TET – கணிதம்
₹3,400-க்கு 6% ஆண்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டுவட்டி காண்க (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது).
சரியான விடை: (D) ₹420.24
விளக்கம்: தொகை = 3400 × (1.06)² = 3400 × 1.1236 = ₹3820.24. கூட்டுவட்டி = 3820.24 − 3400 = ₹420.24.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 84 செ.மீ. அதன் நீளம், அகலம் ஆகியவற்றின் விகிதம் 3 : 4 எனில் அதன் பரப்பு யாது?விடை: 432 ச.செ.மீ
- ஒரு வட்டத்தின் பரப்பு 144.5 ச.செ.மீ. ஒரு சதுரத்தின் பரப்பு அவ்வட்டத்தின் பரப்பின் இரு மடங்கு எனில் சதுரத்தின் இரு பக்கங்களின் கூடுதல் யாது?விடை: 34 செ.மீ
- ஒரு புகைவண்டி 5 மணி நேரத்தில் 315 கி.மீ கடக்கிறது. ஒரு மிதிவண்டியின் வேகம் புகைவண்டியின் வேகத்தில் 1/3 பங்கு. 2 மணி நேரத்தில் மிதிவண்டி கடக்கும் தொலைவு எவ்வளவு?விடை: 42 கி.மீ
- A, B ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விகிதம் 6 : 5 எனில் B-க்கு 7 வயதாக இருந்தபோது A-இன் வயது யாது?விடை: 11
- ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்படுகிறது. அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் ₹80 குறைவாகக் கிடைத்திருக்கும் எனில் அக்கடிகாரத்தின் அடக்க விலை யாது?விடை: ₹200
- A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அதை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 6
- 4a3 என்ற மூன்றிலக்க எண்ணுடன் 984-ஐக் கூட்டும்போது 13b7 என்ற நான்கிலக்க எண் கிடைக்கிறது. அது 11-ஆல் வகுபடும் எனில் a + b-இன் மதிப்பு யாது?விடை: 10
- 1682 ÷ 58 × ? = 377 எனில் ?-இன் மதிப்பு யாது?விடை: 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
