Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

A, B ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விகிதம் 6 : 5 எனில் B-க்கு 7 வயதாக இருந்தபோது A-இன் வயது யாது?

சரியான விடை: (D) 11
விளக்கம்: வயதுகள் 4k, 3k எனில் (4k + 8) : (3k + 8) = 6 : 5 என்பதிலிருந்து k = 4; A = 16, B = 12. B-க்கு 7 வயது என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு; அப்போது A-இன் வயது 16 − 5 = 11.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்டத்தின் பரப்பு 144.5 ச.செ.மீ. ஒரு சதுரத்தின் பரப்பு அவ்வட்டத்தின் பரப்பின் இரு மடங்கு எனில் சதுரத்தின் இரு பக்கங்களின் கூடுதல் யாது?விடை: 34 செ.மீ
  2. A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அதை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 6
  3. ₹3,400-க்கு 6% ஆண்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டுவட்டி காண்க (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது).விடை: ₹420.24
  4. 1682 ÷ 58 × ? = 377 எனில் ?-இன் மதிப்பு யாது?விடை: 13
  5. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 84 செ.மீ. அதன் நீளம், அகலம் ஆகியவற்றின் விகிதம் 3 : 4 எனில் அதன் பரப்பு யாது?விடை: 432 ச.செ.மீ
  6. தொடரைப் பூர்த்தி செய்க: ?, 7800, 1560, 390, 130, 65விடை: 46800
  7. ஒரு புகைவண்டி 5 மணி நேரத்தில் 315 கி.மீ கடக்கிறது. ஒரு மிதிவண்டியின் வேகம் புகைவண்டியின் வேகத்தில் 1/3 பங்கு. 2 மணி நேரத்தில் மிதிவண்டி கடக்கும் தொலைவு எவ்வளவு?விடை: 42 கி.மீ
  8. x − 1/x = 5 எனில் x² + 1/x²-இன் மதிப்பு யாது?விடை: 27
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions