வினா விடை · அறிவியல்
ஜால்ரா இசைக்கருவியை இசைக்கும்போது அதில் எது அதிர்வடைகிறது?
சரியான விடை: (D) உலோகத் தகடு
விளக்கம்: ஜால்ரா (தாளம்) இசைக்கும்போது அதன் உலோகத் தகடுகள் அதிர்வடைந்து ஒலி உண்டாகிறது. வீணையில் நீட்டிய கம்பி, மிருதங்கத்தில் நீட்டிய சவ்வு, புல்லாங்குழலில் காற்றுத் தம்பம் அதிர்வடைகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஒலியானது நீரை விட 5 மடங்கு வேகமாகக் காற்றில் பயணிக்கும். 2. ஒலி கடல்நீரை விட நன்னீரில் வேகமாகப் பரவும்.விடை: இரண்டும் தவறு
- ஓர் இசைக்கருவி தொடர்ந்து எழுப்பும் இசைக்குறிப்புகளைச் சாதாரண செவித்திறன் கொண்டவரால் கேட்க முடியவில்லை எனில், அக்குறிப்புகள் கீழ்க்கண்ட எதன் வழியாகப் பரவ முயல்கின்றன?விடை: வெற்றிடம்
- கீழ்க்கண்ட திடப்பொருட்களில் எதில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்?விடை: அலுமினியம்
- கீழ்க்கண்டவற்றில் சரியானவை எவை? 1. ஒரு வினாடியில் ஏற்படும் முழுமையான அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். 2. ஒலி என்பது இயக்கவியல் நெட்டலை ஆகும்.விடை: இரண்டும் சரி
- ஒலியின் வேகம் கீழ்க்கண்ட எதில் மிக அதிகமாக இருக்கும்?விடை: திடப்பொருள்
- செவியுணர் ஒலியை உண்டாக்கும் அதிர்வுகள் கீழ்க்கண்ட எதன் வழியே பயணிக்கும்போது அவற்றின் வேகம் பெருமமாக இருக்கும்?விடை: கண்ணாடி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஒரே ஒரு அதிர்வெண் கொண்ட ஒலியானது இசைக்குறிப்பு எனப்படுகிறது பல்வேறு இசை குறிப்புகளின் தொகுப்பு தொனி எனப்படுகிறதுவிடை: இரண்டும் தவறு
- வெவ்வேறு சூழ்நிலைகளில் கீழ்க்கண்ட எதனைக் கொண்டு நெட்டலைகளையும் குறுக்கலைகளையும் உருவாக்க இயலும்?விடை: சுருள்வில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
