Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

செவியுணர் ஒலியை உண்டாக்கும் அதிர்வுகள் கீழ்க்கண்ட எதன் வழியே பயணிக்கும்போது அவற்றின் வேகம் பெருமமாக இருக்கும்?

சரியான விடை: (C) கண்ணாடி
விளக்கம்: ஒலியின் வேகம் திடப்பொருளில் அதிகம்; கொடுக்கப்பட்டவற்றில் கண்ணாடி மட்டுமே திடப்பொருள். கடல்நீர், இரத்தம் போன்ற திரவங்களிலும் உலர்ந்த காற்றிலும் வேகம் குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் சரியானவை எவை? 1. ஒரு வினாடியில் ஏற்படும் முழுமையான அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். 2. ஒலி என்பது இயக்கவியல் நெட்டலை ஆகும்.விடை: இரண்டும் சரி
  2. வெவ்வேறு சூழ்நிலைகளில் கீழ்க்கண்ட எதனைக் கொண்டு நெட்டலைகளையும் குறுக்கலைகளையும் உருவாக்க இயலும்?விடை: சுருள்வில்
  3. ஓர் இசைக்கருவி தொடர்ந்து எழுப்பும் இசைக்குறிப்புகளைச் சாதாரண செவித்திறன் கொண்டவரால் கேட்க முடியவில்லை எனில், அக்குறிப்புகள் கீழ்க்கண்ட எதன் வழியாகப் பரவ முயல்கின்றன?விடை: வெற்றிடம்
  4. ஒலிச்செறிவு கீழ்க்கண்ட எதன் இருமடிக்கு (வர்க்கத்துக்கு) நேர்த்தகவில் அமையும்?விடை: வீச்சு
  5. ஜால்ரா இசைக்கருவியை இசைக்கும்போது அதில் எது அதிர்வடைகிறது?விடை: உலோகத் தகடு
  6. மீயொலி வேகம் என்பது என்ன?விடை: காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமானது
  7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஒலியானது நீரை விட 5 மடங்கு வேகமாகக் காற்றில் பயணிக்கும். 2. ஒலி கடல்நீரை விட நன்னீரில் வேகமாகப் பரவும்.விடை: இரண்டும் தவறு
  8. இதயத்துடிப்பு அளவியில் பயன்படும் தத்துவம் எது?விடை: பலமுறை எதிரொலித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions