Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரே நீளமுள்ள இரு இரயில்கள் ஒரே திசையில் முறையே 46 கி.மீ/மணி, 36 கி.மீ/மணி வேகத்தில் செல்கின்றன. வேகமாகச் செல்லும் இரயில் மெதுவாகச் செல்லும் இரயிலை 36 வினாடிகளில் கடக்கிறது எனில் ஒவ்வொரு இரயிலின் நீளம் என்ன?

சரியான விடை: (A) 50 மீ
விளக்கம்: சார்பு வேகம் 46 − 36 = 10 கி.மீ/மணி = 25/9 மீ/வினாடி; 36 வினாடியில் கடக்கும் தூரம் 100 மீ = இரு இரயில்களின் நீளங்களின் கூடுதல். நீளங்கள் சமம் என்பதால் ஒவ்வொன்றும் 50 மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 350 மீ நீளமுள்ள ஒரு இரயில் 800 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 1 நிமிடம் 10 வினாடிகளில் கடக்கிறது எனில், இரயிலின் வேகம் ஏறத்தாழ என்ன?விடை: 59 கி.மீ/மணி
  2. ஒரு இரயில் 45 கி.மீ/மணி வேகத்தில் 100 மீ நீளமுள்ள பிளாட்பாரத்தை 60 வினாடிகளில் கடக்கிறது எனில், ஒரு சிக்னல் கம்பத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?விடை: 52 வினாடி
  3. 270 மீ நீளமுள்ள ஒரு இரயில் 25 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது. 2 கி.மீ/மணி வேகத்தில் எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் ஒருவனை இரயில் எவ்வளவு நேரத்தில் கடந்து செல்லும்?விடை: 36 வினாடி
  4. 120 மீ நீளமுள்ள ஒரு இரயில் ஒரு மின்கம்பத்தை 5 வினாடிகளில் கடக்கிறது. 180 மீ நீளமுள்ள இரயில்வே பிளாட்பாரத்தைக் கடக்க ஆகும் காலம் என்ன?விடை: 12 ½ வினாடி
  5. ஒரு இரயில் 45 கி.மீ/மணி வேகத்தில் 12 வினாடிகளில் ஒரு இடத்தைக் கடந்தால் இரயிலின் நீளம் என்ன?விடை: 150 மீ
  6. 36 கி.மீ/மணி வேகத்தில் செல்லும் ஒரு இரயில் ஒரு சிக்னல் கம்பத்தை 8 வினாடிகளில் கடந்தால் அதன் நீளம் என்ன?விடை: 80 மீ
  7. 250 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி 50 கி.மீ/மணி வேகத்தில் ஒரு சிக்னலை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?விடை: 18 வினாடி
  8. 16 பென்சில்களின் விலை ரூ.48 எனில், 4 பென்சில்களின் விலையைக் காண்க.விடை: ரூ.12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions