Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
பட்டியல் I
(அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம்
(ஆ) முக்கனிகளுள் சுவையானது பலா
(இ) பறவைகள் பலவிதம்
(ஈ) பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது
பட்டியல் II
1) இடுகுறிப் பொதுப்பெயர்
2) இடுகுறிச் சிறப்புப்பெயர்
3) காரணப் பொதுப்பெயர்
4) காரணச் சிறப்புப்பெயர்
(அ ஆ இ ஈ)

சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: காடு இடுகுறிப் பொதுப்பெயர், பலா இடுகுறிச் சிறப்புப்பெயர், பறப்பதால் பெயர் பெற்ற பறவை காரணப் பொதுப்பெயர், வளைந்திருப்பதால் பெயர் பெற்ற வளையல் காரணச் சிறப்புப்பெயர் ஆகும். காரணம் கருதாது வழங்கப்படும் பெயர் இடுகுறிப்பெயர் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ (தொடக்கப் பெயர்: சங்கீத நாடக சங்கம்) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1955
2. தொல்காப்பியர் தொல்காப்பியத்தை யாருடைய அவையில் அரங்கேற்றினார்?விடை: நிலந்தரு திருவிற் பாண்டியன்
3. ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ – இதில் எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எங்கள் – எங்கள்
4. வழூஉச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க:
1) சிலவுக்குப் பாவக்காய் விற்றான்
2) செலவுக்குப் பாகற்காய் விற்றான்
3) நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார்
...விடை: 2 & 4
5. ‘சந்திரகாந்தா’ என்னும் புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்விடை: ஜே.ஆர். ரங்கராஜு
6. பெயர்ச்சொல்லின் வகையை அறிக: ‘இவன்’விடை: சுட்டுப்பெயர்
7. ‘காலக்கண்ணாடி’ எனப் போற்றப்படுவதுவிடை: இலக்கியம்
8. ஒருமை-பன்மை பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1) என் எழுதுகோல் இதுவல்ல
2) என் எழுதுகோல் இதுவன்று
3) உடைகள் கிழிந்துவிட்டது
4) உடைகள் கிழிந்துவிட்டனவிடை: 2 & 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions