வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.
சரியான விடை: (C) தைத் திங்களில் தோட்டத்திற்குப் பூப் பறிக்கச் சென்றேன்
விளக்கம்: நான்காம் வேற்றுமை உருபு 'கு' பின்னும், 'செய' என்னும் வினையெச்சம் பின்னும் வரும் வல்லினம் மிகும்; ஓரெழுத்து ஒருமொழியான 'பூ' பின்னும் வல்லினம் மிகும். எனவே 'தைத் திங்களில் தோட்டத்திற்குப் பூப் பறிக்கச் சென்றேன்' என்பதே சந்திப்பிழையற்ற தொடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சமூகத்தினரின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் விரித்துரைப்பது / The description of a society’s culture and its way of living is calledவிடை: இனவரைவியல் / Ethnography
- பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க.விடை: அருண் மீது வஞ்சினம் கொண்டான் அசோக்.
- ‘விஷ்ணுபுரம்’ என்ற புதினத்தை எழுதியவர் / Who wrote the Tamil novel ‘Vishnupuram’?விடை: ஜெயமோகன் / Jeyamohan
- 'இராமனும் சீதையும் இலக்குவனும் வனம் சென்றனர்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிந்து தேர்க.விடை: தனி வாக்கியம்
- கீழ்க்கண்ட நகரங்களுள் உலகத் தமிழ் மாநாடு நடைபெறாத நகரம் எது?விடை: டொராண்டோ
- 'அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர்த் தோன்றி அடுத்த நொடி வான்நிறையும் விண்மீன் கூட்டம்' – இதில் அமைந்துள்ள எதுகையைக் கண்டறிக.விடை: அங்கொன்றும் – இங்கொன்றும்
- மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: எங்கள் ஊரில் வாழைத் தோட்டம் உள்ளது
- 'உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்' – இக்குறளில் அமைந்த மோனையைத் தேர்க.விடை: உள்ளிய - உள்ளான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
