வினா விடை · சுற்றுச்சூழல்
சவுக்கு, பனை, ஈச்சம், கற்றாழை, தென்னை, புங்கம், பூவரசு ஆகியவை காணப்படும் காடுகளின் வகை எது?
சரியான விடை: (C) கடற்கரைக் காடுகள்
விளக்கம்: சவுக்கு, பனை, ஈச்சம், தென்னை, புங்கம், பூவரசு போன்றவை கடற்கரை மணல் பகுதிகளில் வளரும் கடற்கரைக் காடுகளுக்கு உரியவை. சதுப்புநிலக் காடுகளில் அவிசீனியா, ரைசோஃபோரா போன்ற அலையாத்தி மரங்கள் வளர்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிர் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: குஜராத்
- ‘துந்த்ரா’ எந்த வகை உயிர்மத்திற்கு (biome) எடுத்துக்காட்டு?விடை: துருவ உயிர்மம்
- மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய, IUCN சிவப்புப் பட்டியலில் ‘அருகிவரும் இனம் (Endangered)’ எனக் குறிக்கப்பட்ட குரங்கு எது?விடை: சிங்கவால் குரங்கு
- உணவுச் சங்கிலியில் உயிரியல் பெருக்கத்திற்கு (Biomagnification) சிறந்த எடுத்துக்காட்டான பூச்சிக்கொல்லி எது?விடை: DDT
- தேங்கிய நீரின் மேல் எண்ணெயைத் தெளித்தால் மலேரியா கட்டுப்படுகிறது. இதன் காரணம் என்ன?விடை: கொசுவின் லார்வாக்களால் சுவாசிக்க இயலாது
- காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் ஆகியவை எந்த வகைச் சூழல் மண்டலத்திற்கு எடுத்துக்காட்டுகள்?விடை: நிலம் சார்ந்த சூழல் மண்டலம்
- 1992-இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த உலகத் தலைவர்களின் புவி உச்சி மாநாடு எதனுடன் தொடர்புடையது?விடை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி ________ ஆகக் கொண்டாடப்படுகிறது. / Every year, May 22 is celebrated asவிடை: பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் / International Day for Biological Diversity
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
