வினா விடை · பொதுத் தமிழ்
சீதை எதை அனுமனிடம் கொடுத்து இராமனிடம் சேர்க்கப் பணித்தாள்?
சரியான விடை: (B) சூடாமணி
விளக்கம்: அசோகவனத்தில் சீதை தன் சூடாமணியை அனுமனிடம் அடையாளமாகக் கொடுத்து இராமனிடம் சேர்க்கச் சொன்னாள். அனுமன் முன்பே இராமனின் கணையாழியைச் சீதையிடம் அடையாளமாக வழங்கியிருந்தான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கதம்பம்’ என்ற சொல்லே ‘கலம்பகம்’ எனத் திரிந்ததாகக் கருதியவர் யார்?விடை: உ.வே.சா.
- ‘இமயம் எங்கள் காலடியில்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- “வள்ளுவரும் தம்குறள் வெண்பா அடியால் வையத்தார் உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து” என்று பாடியவர் யார்?விடை: பரணர்
- “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள்; பிரிந்தால் பொருளில்லை” என்று மணமக்களை வாழ்த்தியவர் யார்?விடை: சுரதா
- “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்” என்று குறிப்பிடும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: தாராபாரதி
- கூற்று (A): மாதவி மீது ஐயமுற்ற கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியிடம் திரும்பினான்.<br />காரணம் (R): கோவலன்–மாதவி இருவருக்கும் மணிமேகலை என்ற பெண்மகவு பிறந்தது.விடை: A, R இரண்டும் சரி; ஆனால் R என்பது A-க்குச் சரியான விளக்கம் அல்ல
- ‘கண்ணுதல்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: இலக்கணப்போலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
