வினா விடை · பொதுத் தமிழ்
“உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று” – 'உறுவேனில்' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
சரியான விடை: (D) உரிச்சொல்தொடர்
விளக்கம்: 'உறு' என்ற உரிச்சொல் 'மிகுதி' என்ற பொருளில் 'வேனில்' என்ற பெயருடன் சேர்ந்து வருவதால் 'உறுவேனில்' உரிச்சொல்தொடர் ஆகும். உறு, தவ, நனி ஆகியவை மிகுதிப் பொருள் தரும் உரிச்சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மனக்குகை’ - இலக்கணக்குறிப்பு தருக.விடை: உருவகம்
- தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: இலக்கியா புத்தாடை அணிந்தாள்
- “கொக்கொக்க கூம்பும் பருவத்து” – இவ்வுவமை உணர்த்தும் பொருள் எது?விடை: காத்திருத்தல்
- தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தைக் கொணர்ந்தவர் யார்?விடை: வீரமாமுனிவர்
- ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ – பாடியவர் யார்?விடை: பாரதிதாசன்
- 'ஞால்' என்பதற்கு ................... என்பது பொருள்விடை: தொங்குதல்
- அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
- “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: பெரியபுராணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
