TNPSC குரூப் 2, 2A வினாத்தாள் 2026 – விடையுடன் (TNPSC தற்காலிக விடைக்குறிப்பு)
01-11-2026 அன்று நடந்த TNPSC குரூப் 2 / 2A (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II) முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களும் – பொது அறிவு, திறனறிவு (வினா 1–100), பொதுத் தமிழ் (வினா 101–200) – தெளிவாகத் தட்டச்சு செய்யப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் TNPSC-யின் சொந்தத் தற்காலிக விடைக்குறிப்பின் விடையுடனும், எங்கள் ஆசிரியர்கள் சரிபார்த்த இடங்களில் சுருக்கமான விளக்கத்துடனும் இங்கே உள்ளன.
புதுப்பிக்கப்பட்டது: 17-11-2026 · Shanmugam IAS Academy · Read in English (GS in English + General English 101–200) →
TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி (10-11-2026) விடைகள்
- இப்பக்கத்தின் ஒவ்வொரு விடையும் TNPSC-யின் சொந்தத் தற்காலிக விடைக்குறிப்பு (tnpsc.gov.in – Tentative Answer Keys). ஆட்சேபனைகளுக்குப் பின் இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் மாறலாம்.
- நிபுணர் குழு: பொது அறிவு வினா 67 (மற்றும் General English 157, 161) – TNPSC விடை தரவில்லை.
- பொது அறிவு 5, 19, 60, பொதுத் தமிழ் 102, 118 – எங்கள் ஆசிரியர்களின் விடை TNPSC விடையிலிருந்து வேறுபடுகிறது; காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில்.
- ஒவ்வொரு வினாவிலும் (E) "விடை தெரியவில்லை" என்ற ஐந்தாவது தேர்வும் இருந்தது; கீழே அது மீண்டும் காட்டப்படவில்லை.
| Exam | TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (குரூப் 2, 2A) – முதல்நிலை |
| தேதி, நேரம் | 01-11-2026 (ஞாயிறு), காலை 9.30 – 12.30 |
| வினாக்கள், மதிப்பெண்கள் | 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள் (பகுதி அ, ஆ: வினா 1–100, 150 மதிப்பெண்கள்; பகுதி இ பொதுத் தமிழ் / General English: வினா 101–200, 150 மதிப்பெண்கள்) |
| வினா உரையின் மூலம் | TNPSC தற்காலிக விடைக்குறிப்புடன் வெளியிட்ட மாதிரி வினாத்தொகுப்புகள் CCSE2-2AT/2026, CCSE2-2AE/2026 – நாங்களே மீண்டும் தட்டச்சு செய்தது (ஸ்கேன் இல்லை) |
பகுதி அ, ஆ – பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (வினா 1–100)
வினாக்கள் 1–25
காரணம் [R] : சாதாரண நிலைகளில் இது அரை திடமாக இருக்கும். அழுத்தம் கொடுக்கும் போது உருகுகிறது. ஊசிமுனையிலிருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் கூழ்மமாக (gel) மாறுகிறது.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
- (C) [A] தவறு, [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல என்பது சரி
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: IIT குவஹாத்தி (போஸ் நிறுவனத்துடன், ஜனவரி 2025) உருவாக்கிய ஊசி மூலம் செலுத்தக்கூடிய அதிமூலக்கூறு ஹைட்ரோஜெல், மார்பகப் புற்றுநோய்க் கட்டியிலேயே மருந்தை இலக்காக வெளியிடுகிறது – [A] சரி. இது சாதாரணமாக அரைத் திடமாக இருந்து, ஊசி அழுத்தத்தில் இளகி, வெளியே வந்ததும் மீண்டும் ஜெல்லாகிறது – [R] சரி. இந்தப் பண்பே ஊசி மூலம் செலுத்தி கட்டியில் நிலைநிறுத்த உதவுவதால் [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கம்; எனவே D அல்ல, B.
(i) உயிரியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(ii) உயிர்வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iii) உயிரியல் மற்றும் உயிரிமூலக் கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
(iv) உயிர்வேதியியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
- (A) (i) மற்றும் (ii) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (ii) மற்றும் (iii) மட்டும்
- (D) (iii) மற்றும் (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (B) (ii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: IUBMB என்பது International Union of Biochemistry and Molecular Biology (உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான பன்னாட்டு ஒன்றியம்) ஆகும். இதன் பெயரிடல் குழுவே நொதிகளுக்கு EC எண்களை வழங்கி அவற்றை வகைப்படுத்துகிறது. மற்ற விரிவாக்கங்கள் தவறானவை; எனவே (ii) மட்டுமே சரி.
| பழங்குடியினர் | பகுதி |
| (a) அங்கமிஸ் | 1. மேகாலயா |
| (b) தோடர்கள் | 2. தமிழ்நாடு |
| (c) மேப்லாஸ் | 3. கேரளா |
| (d) பிர்ஹார்ஸ் | 4. நாகாலாந்து |
| (e) காசிஸ் | 5. மத்திய பிரதேசம் |
- (A) (a) 4 (b) 2 (c) 3 (d) 5 (e) 1
- (B) (a) 5 (b) 4 (c) 3 (d) 2 (e) 1
- (C) (a) 4 (b) 3 (c) 5 (d) 1 (e) 2
- (D) (a) 2 (b) 5 (c) 4 (d) 3 (e) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 2 (c) 3 (d) 5 (e) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அங்கமிகள் நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் (4); தோடர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மலைவாழ் மக்கள் (2); மாப்பிள்ளைமார் (மோப்லாக்கள்) கேரளத்தின் மலபார் கடற்கரை முஸ்லிம்கள் (3); பிர்ஹோர்கள் மத்திய இந்திய-சோட்டாநாக்பூர் காட்டுப் பழங்குடியினர், இங்கு மத்தியப் பிரதேசம் (5); காசிகள் மேகாலயாவின் காசி மலைகளில் வாழ்கின்றனர் (1). எனவே a-4, b-2, c-3, d-5, e-1.
| (a) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை | 1. 2014 |
| (b) காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் | 2. 2006 |
| (c) தூய்மை இந்தியா இயக்க வழிகாட்டுதல்கள் | 3. 2018 |
| (d) சமக்ர சிக்ஷா வழிகாட்டுதல்கள் | 4. 2008 |
- (A) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (B) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
- (C) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
- (D) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
விடையைக் காண்க
விடை: (B) (a) 2 (b) 4 (c) 1 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தேசிய சுற்றுச்சூழல் கொள்கை 2006-ல் ஏற்கப்பட்டது (a-2). காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் 30 ஜூன் 2008-ல் வெளியிடப்பட்டது (b-4). தூய்மை இந்தியா இயக்கம் 2 அக்டோபர் 2014-ல் தொடங்கப்பட்டது (c-1). SSA, RMSA, ஆசிரியர் கல்வியை இணைத்த சமக்ர சிக்ஷா 2018-ல் தொடங்கப்பட்டது (d-3). எனவே 2-4-1-3.
வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது
(i) வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை
(ii) கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை
(iii) விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை
- (A) (i), (ii) மட்டும்
- (B) (ii), (iii) மட்டும்
- (C) (i), (iii) மட்டும்
- (D) (i), (ii), (iii)
விடையைக் காண்க
விடை: (D) (i), (ii), (iii) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
இவ்வினாவுக்கு எங்கள் ஆசிரியர்களின் விடை வேறு; சான்றுடன் கூடிய காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில் உள்ளன. இறுதி முடிவு TNPSC இறுதி விடைக்குறிப்பில்.
(1) அசோகர் இறப்பு
(2) அலெக்ஸாண்டர் படையெடுப்பு
(3) மூன்றாவது புத்த மாநாடு
(4) மௌரிய பேரரசு நிறுவப்படல்
- (A) (2), (4), (3), (1)
- (B) (4), (1), (3), (2)
- (C) (2), (1), (4), (3)
- (D) (3), (2), (1), (4)
விடையைக் காண்க
விடை: (A) (2), (4), (3), (1) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அலெக்சாண்டர் படையெடுப்பு கி.மு. 326; சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவியது சுமார் கி.மு. 321; அசோகர் காலத்தில் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த மாநாடு சுமார் கி.மு. 250; அசோகர் இறப்பு சுமார் கி.மு. 232. எனவே வரிசை (2), (4), (3), (1).
(1) மேடம் காமா – தல்வார் பத்திரிகை
(2) ஆ.ஆ. ஹியூம் – காமன்வீல்
(3) அன்னி பெசன்ட் – இந்தியப் புரட்சியாளரின் தாய்
(4) தோ.கே. கர்வே – இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம்
- (A) (2) மற்றும் (3) சரி
- (B) (1) மற்றும் (3) சரி
- (C) (1) மற்றும் (4) சரி
- (D) (1) மற்றும் (2) சரி
விடையைக் காண்க
விடை: (C) (1) மற்றும் (4) சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: மேடம் பிகாஜி காமா ஐரோப்பாவிலிருந்து 'வந்தே மாதரம்', 'மதன்ஸ் தல்வார்' என்ற புரட்சி இதழ்களை வெளியிட்டார்; எனவே (1) சரி. 'காமன்வீல்' அன்னி பெசன்டின் வார இதழ், ஹியூமின் இதழ் அல்ல; 'இந்தியப் புரட்சியின் தாய்' என்பது மேடம் காமாவைக் குறிக்கும், பெசன்டை அல்ல. எனவே (2), (3) தவறு. டி.கே. கார்வே 1916-ல் இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகத்தை (இன்றைய SNDT) நிறுவினார்; (4) சரி.
வலியுறுத்தல் [A] : டாக்டர். B.R. அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் நாசிக் மாவட்டத்தில் யோல என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சபதமிட்டார்.
காரணம் [R] : “நான் இந்துவாகப் பிறந்தேன் என்னால் உதவ முடியவில்லை. ஆனால் நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” .
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
- (C) [A] தவறு, [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல என்பது சரி
விடையைக் காண்க
விடை: (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல என்பது சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: [R] என்பது யோலா கூட்டத்தில் அம்பேத்கர் எடுத்த சபதத்தின் சொற்களே; அது அந்த அறிவிப்புக்கான காரணம் (விளக்கம்) அல்ல. எனவே இரண்டும் சரி, ஆனால் [R], [A]-வின் விளக்கம் அல்ல – D.
- (A) ஸ்டார் ஆப் இந்தியா
- (B) எழுச்சி
- (C) காவ்ம்
- (D) இன்குலாப்
விடையைக் காண்க
விடை: (B) எழுச்சி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'டான்' (Dawn – தமிழ் வினாத்தாளில் 'எழுச்சி') இதழை முகமது அலி ஜின்னா 1941-ல் டெல்லியில் தொடங்கினார்; அது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ இதழாக இருந்தது. மற்ற இதழ்கள் லீக்கின் அதிகாரப்பூர்வ இதழ் அல்ல.
(1) ஓமந்தூர் பெ. இராமசாமி – ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1939
(2) ராஜாஜி – விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சட்டம்
(3) பெருந்தலைவர் காமராஜர் – சென்னை நிலச் சீர்திருத்தச் சட்டம்
(4) தி.சு. அவினாசிலிங்கம் – சுயமரியாதைத் திருமணங்கள் சட்டம்
- (A) (1) மற்றும் (3) சரியானவை
- (B) (1) மற்றும் (4) சரியானவை
- (C) (2) மற்றும் (3) சரியானவை
- (D) (3) மற்றும் (4) சரியானவை
விடையைக் காண்க
விடை: (C) (2) மற்றும் (3) சரியானவை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1939 ஆலய நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டமும், 1938 விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டமும் ராஜாஜி அமைச்சரவையில் (1937-39) இயற்றப்பட்டவை; எனவே (1) தவறு, (2) சரி. ஓமந்தூரார் அரசு இயற்றியது 1947 ஆலய நுழைவுச் சட்டம். 1961 சென்னை நிலச் சீர்திருத்த (உச்சவரம்பு) சட்டம் காமராஜர் காலத்தில் வந்தது; (3) சரி. சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967-68-ல் அண்ணா ஆட்சியில் வந்தது, தி.சு. அவினாசிலிங்கம் அல்ல; (4) தவறு.
- (A) சமூக நீதி
- (B) சமூக நலன்
- (C) சமூக சமத்துவம்
- (D) சமூக பாதுகாப்பு
விடையைக் காண்க
விடை: (C) சமூக சமத்துவம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் சமத்துவம் (சரத்து 14), அரசியல் சமத்துவம் மட்டுமின்றி, பாகுபாடு இன்மை (15), பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (16), தீண்டாமை ஒழிப்பு (17), பட்டங்கள் ஒழிப்பு (18) மூலம் சமூக சமத்துவத்தையும் உறுதி செய்கின்றன. சமூக நீதி, சமூக நலன், சமூகப் பாதுகாப்பு ஆகியவை முக்கியமாக வழிகாட்டு நெறிமுறைகளின் (பகுதி IV) நோக்கங்கள்; எனவே A அல்ல, C.
கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார்.
காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.
- (A) [A] தவறு ஆனால் [R] சரி
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
- (C) [A] சரி ஆனால் [R] தவறு
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சரத்து 164(1)-ன்படி அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பர்; ஆனால் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயல்படுவதால், நடைமுறையில் முதலமைச்சரின் நம்பிக்கை உள்ளவரையே அமைச்சர் தொடர்வார் – [A] சரி. கருத்து வேறுபாட்டில் முதலமைச்சர் அவரைப் பதவி விலகச் சொல்லலாம் அல்லது நீக்க ஆளுநருக்கு அறிவுறுத்தலாம் – [R] சரி; இதுவே [A]-க்குக் காரணம். இவ்வினாவில் B = 'இரண்டும் சரி, [R] சரியான விளக்கம்'.
| சரத்துகள் | குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் |
| (a) சரத்து 123 | 1. அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் |
| (b) சரத்து 72 | 2. மக்களவையை கலைத்தல் |
| (c) சரத்து 85 | 3. மன்னிப்பளிக்கும் அதிகாரம் |
| (d) சரத்து 352 | 4. அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் |
- (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (B) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சரத்து 123 = அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் (4); சரத்து 72 = மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் (3); சரத்து 85(2)(b) = மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் (2); சரத்து 352 = தேசிய அவசரநிலை பிரகடனம் (1). எனவே 4-3-2-1.
(i) பிரிவு 25
(ii) பிரிவு 16
(iii) பிரிவு 28
(iv) பிரிவு 17
- (A) (i) மற்றும் (ii)
- (B) (ii) மட்டும்
- (C) (iii) மற்றும் (iv)
- (D) (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (D) (iv) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சரத்து 25 (மத சுதந்திரம்), சரத்து 16 (அரசுப் பணியில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கூடாது), சரத்து 28 (அரசு நிதியில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மதக் கல்வி கூடாது) ஆகியவை மதச்சார்பின்மையை வெளிப்படுத்துகின்றன. சரத்து 17 தீண்டாமை ஒழிப்பு - இது சமூக சமத்துவம் பற்றியது, மதச்சார்பின்மை அல்ல. எனவே (iv) மட்டும் - (D).
(1) ஆந்திர பிரதேச சட்டமேலவை சட்டம் – 2005
(2) தமிழ்நாடு சட்டமேலவை சட்டம் – 2010
(3) ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் – 2021
(4) மத்திய பிரதேச சட்டமேலவை சட்டம் – 2024
- (A) (1) மற்றும் (2) சரி
- (B) (2) மற்றும் (3) சரி
- (C) (3) மற்றும் (4) சரி
- (D) (1) மற்றும் (3) சரி
விடையைக் காண்க
விடை: (A) (1) மற்றும் (2) சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஆந்திர பிரதேச சட்டமேலவைச் சட்டம் 2005-லும், தமிழ்நாடு சட்டமேலவைச் சட்டம் 2010-லும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ல் இயற்றப்பட்டது (2021-ல் திருத்தம் மட்டுமே); மத்திய பிரதேச சட்டமேலவைச் சட்டம் 2024 என்று எதுவும் இல்லை. எனவே (1), (2) சரி - (A).
- (A) ஆஸ்திரேலியா
- (B) இந்தியா
- (C) ஜப்பான்
- (D) ரஷ்யா
விடையைக் காண்க
விடை: (B) இந்தியா – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: FIDE சதுரங்க உலகக் கோப்பை 2025, 2025 அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை இந்தியாவின் கோவாவில் நடைபெற்றது. உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் வென்றார். எனவே (B) இந்தியா.
- (A) இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்களைத் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிரதம அமைச்சர் நியமனம் செய்வார்
- (B) இந்தச் சட்டத்தின் கீழ் தேர்வுக் குழுவானது பிரதமர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமனம் செய்யப்படும் கேபினட் மந்திரி ஆகியோரைக் கொண்டிருக்கும்.
- (C) இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது.
- (D) இந்தப் புதிய சட்டத்தின்படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்க வழிவகுக்கப்பட்டது.
விடையைக் காண்க
விடை: (C) இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது. – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 2023 சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் (பிரதமர் அல்ல) நியமிப்பார்; தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை (மாநிலங்களவை அல்ல) எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சர் இருப்பர்; உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லை. இச்சட்டத்தின் பிரிவு 21, 1991 தேர்தல் ஆணைய (பணி நிபந்தனைகள் மற்றும் அலுவல் நடத்தை) சட்டத்தை நீக்கியது. எனவே C மட்டுமே சரி.
தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு
(i) டாக்டர் சி. நடேசன் இதன் நிறுவனர் ஆவார்.
(ii) டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர். பிட்டி தியாகராயர் ஆகியோர் இதன் இணை நிறுவனர்கள் ஆவர்.
(iii) ஸ்ரீ ராஜரத்தினம் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆவார்.
(iv) ‘ஆந்திரா பிரகாசிகர் மற்றும் முக்ததாரர்’ ஆகியவை இச்சங்கத்தின் இதழ்களாக இருந்தன.
- (A) (i), (ii) மற்றும் (iv) சரியானவை
- (B) (i) மட்டும் சரியானது
- (C) (i) மற்றும் (iv) சரியானவை
- (D) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
விடையைக் காண்க
விடை: (D) (i), (ii) மற்றும் (iii) சரியானவை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1916 நவம்பர் 20 அன்று சென்னையில் டாக்டர் சி. நடேசனார் முன்னெடுப்பில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது; டாக்டர் டி.எம். நாயர், சர் பிட்டி தியாகராயர் இணை நிறுவனர்கள்; அக்கூட்டத்தில் பி. ராஜரத்தின முதலியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் இதழ்கள் ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), திராவிடன் (தமிழ்), ஆந்திர பிரகாசிகா (தெலுங்கு); 'முக்தாதாரா' இதன் இதழ் அல்ல – எனவே (iv) தவறு; (i), (ii), (iii) சரி.
காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
- (A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
- (C) [A] என்பது தவறு, [R] என்பது சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
இவ்வினாவுக்கு எங்கள் ஆசிரியர்களின் விடை வேறு; சான்றுடன் கூடிய காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில் உள்ளன. இறுதி முடிவு TNPSC இறுதி விடைக்குறிப்பில்.
- (A) குறைந்த வருமானம் கொண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு வழங்குதல்
- (B) குறைந்த வருவாய் பிரிவினர்களுக்குக் குறைந்த விலையில் வீடு வழங்குதல்
- (C) சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை ஊக்குவித்தல்
- (D) விவசாயிகளுக்கு வீட்டுக்கடன் வழங்குதல்
விடையைக் காண்க
விடை: (B) குறைந்த வருவாய் பிரிவினர்களுக்குக் குறைந்த விலையில் வீடு வழங்குதல் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஏழைகளுக்கான தமிழ்நாடு வீட்டுவசதித் திட்டங்களின் (தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம், ஊரக வீட்டுத் திட்டங்கள்) நோக்கம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குக் குறைந்த விலையில் வீடு வழங்குவதே. 'குறைந்த வருமானம் கொண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு' (A) என்பது மிகைப்படுத்தல் (ஆங்கில வினாத்தாளில் 'இலவச' வீடு); சுற்றுச்சூழல் வீடு, விவசாயிகளுக்குக் கடன் ஆகியவை நோக்கம் அல்ல.
| தமிழ் நாட்டின் வேளாண் காலநிலை பகுதி | மண்ணின் வகைகள் |
| (a) காஞ்சிபுரம் | 1. சிகப்பு மண் |
| (b) நாமக்கல் | 2. உவர்ப்பு மண் |
| (c) திருச்சிராப்பள்ளி | 3. சிகப்பு களிமண் |
| (d) கன்னியாகுமரி | 4. கருப்பு சுண்ணாம்பு மண் |
- (A) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (B) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (C) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 3 (b) 4 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: TNAU வேளாண் காலநிலை மண்டலங்களின்படி: காஞ்சிபுரம் (வடகிழக்கு மண்டலம்) – சிவப்பு மணல் கலந்த மண் / Red sandy loam (3); நாமக்கல் (வடமேற்கு மண்டலம்) – சுண்ணாம்பு கலந்த கருப்பு மண் (4); திருச்சிராப்பள்ளி (காவிரி டெல்டா மண்டலம்) – சிவப்பு மண் / Red loamy (1); கன்னியாகுமரி (அதிக மழைப்பொழிவு மண்டலம்) – கடற்கரை உவர் மண் (2). எனவே 3-4-1-2.
- (A) M.C. ராஜா
- (B) R. வீரயன்
- (C) இரட்டைமலை சீனிவாசன்
- (D) அயோத்திதாசப் பண்டிதர்
விடையைக் காண்க
விடை: (C) இரட்டைமலை சீனிவாசன் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
(i) ஆளில்லா வான்வழி கண்காணிப்பு அமைப்பு செயல்பாடுகள்
(ii) டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சி
(iii) அனைத்து ட்ரோன்களும் DGCA உடன் பதிவு செய்யப்பட வேண்டும்
- (A) (i) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (i) மற்றும் (iii) மட்டும்
- (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (C) (i) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Drone Rules 2021-படி, விலக்கு பெற்றவை தவிர, எந்த ட்ரோனையும் Digital Sky தளத்தில் பதிவு செய்து UIN பெறாமல் இயக்கக் கூடாது; Digital Sky ஆளில்லா வான்வழி அமைப்புச் செயல்பாடுகளுக்கான தளம். எனவே (i), (iii) சரி – C.
(i) தனிநபர் வருமானம் அதிகரிப்பு
(ii) வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
(iii) தொழில்துறையில் முன்னேற்றம்
(iv) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
- (A) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (B) (ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (C) (i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (D) (i), (ii) மற்றும் (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (C) (i), (iii) மற்றும் (iv) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஐந்தாண்டுத் திட்டங்களால் தேசிய, தனிநபர் வருமானம் உயர்ந்தது; இரும்பு-எஃகு, கனரகத் தொழில்கள் மூலம் தொழில்துறை முன்னேறியது; விண்வெளி, அணுசக்தி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் அறிவியல்-தொழில்நுட்பம் வளர்ந்தது – இவை சாதனைகள். ஆனால் வேலைவாய்ப்பு உழைப்பாளர் பெருக்கத்துக்கு ஏற்ப உயரவில்லை; அதிகரித்த வேலையின்மை திட்டமிடலின் தோல்வியாகவே பாடநூல்களில் குறிப்பிடப்படுகிறது – எனவே (ii) உள்ள A, B, D அல்ல; C.
காரணம் [R] : மேற்கத்தியக் கல்வி சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசியவாதம் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
- (C) [A] தவறு, [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]வின் சரியான விளக்கம் இல்லை
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் நவீன (மேற்கத்திய) கல்வி, பகுத்தறிவு மற்றும் சுதந்திரம், சமத்துவம், மக்களாட்சி, தேசியவாதம் போன்ற கருத்துகளை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இக்கருத்துகள் உடன்கட்டை, குழந்தைத் திருமணம், சாதி போன்ற சமூகத் தீமைகளைக் கேள்விக்குள்ளாக்கி பிரம்ம சமாஜம், பிரார்த்தனா சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிவகுத்தன. எனவே இரண்டும் சரி; [R] சரியான விளக்கம்.
வினாக்கள் 26–50
| (a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் | 1. 1983 |
| (b) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் | 2. 1980 |
| (c) ஏழைகளுக்கான உணவுத் திட்டம் | 3. 2014 |
| (d) தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் | 4. 2000 |
- (A) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
- (B) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
- (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (D) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
விடையைக் காண்க
விடை: (A) (a) 2 (b) 1 (c) 4 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 2 அக்டோபர் 1980 முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது (2); ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (RLEGP) 15 ஆகஸ்ட் 1983 இல் தொடங்கப்பட்டது (1); அந்தியோதயா அன்ன யோஜனா டிசம்பர் 2000 இல் தொடங்கியது (4); தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா 25 செப்டம்பர் 2014 இல் தொடங்கப்பட்டது (3). எனவே a-2, b-1, c-4, d-3 = விடை (A).
(i) சுய வேலைவாய்ப்புத் திட்டம்
(ii) ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
(iii) வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
- (A) (i) மற்றும் (ii) மட்டும்
- (B) (i) மற்றும் (iii) மட்டும்
- (C) (ii) மற்றும் (iii) மட்டும்
- (D) (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (A) (i) மற்றும் (ii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1998-99 பொருளாதார ஆய்வறிக்கையில் வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் இரண்டு பரந்த பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன: சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் (உ.ம். IRDP) மற்றும் ஊதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் (உ.ம். JRY, EAS). 'வேலைவாய்ப்பு உருவாக்கம்' என்பது பொதுத் தலைப்பு மட்டுமே; தனிப் பிரிவு அல்ல. எனவே (i), (ii) மட்டும்.
(i) புலால் மறுப்பான்
(ii) புலால் உண்பான்
(iii) கொலை செய்பவன்
(iv) அன்புடையவர்
- (A) (i) மற்றும் (iv)
- (B) (ii) மற்றும் (iii)
- (C) (iii) மற்றும் (iv)
- (D) (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (A) (i) மற்றும் (iv) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குறள் 260 (புலால் மறுத்தல்): 'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்' – கொல்லாமலும் புலால் உண்ணாமலும் வாழ்பவனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். அத்தகையவன் எல்லா உயிர்களிடத்தும் அருள் (அன்பு) உடையவன்; எனவே (i) புலால் மறுப்பான், (iv) அன்புடையவர் – விடை (A). புலால் உண்பானும் கொலை செய்பவனும் இக்குறள் போற்றுபவருக்கு நேர் எதிரானவர்கள்.
| (a) மெட்ராஸ் இந்து கைம்பெண்கள் மறுமணச் சங்கம் | 1. 1852 |
| (b) மெட்ராஸ் மஹாஜன சபா | 2. 1817 |
| (c) மெட்ராஸ் இலக்கியச் சங்கம் | 3. 1891 |
| (d) இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம் | 4. 1884 |
- (A) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
- (B) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (C) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (D) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
விடையைக் காண்க
விடை: (C) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சென்னை மகாஜன சபை 1884 இல் தொடங்கப்பட்டது (4) - b-4 உள்ள ஒரே விடை (C). மற்றவை: மெட்ராஸ் இந்து கைம்பெண் மறுமண சங்கம் 1891 (3), மெட்ராஸ் இலக்கியச் சங்கம் 1817 (பட்டியலில் உள்ளபடி) (2), ஸ்ரீநிவாச பிள்ளை தொடங்கிய இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம் 1852 (1). எனவே a-3, b-4, c-2, d-1.
(i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
(ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
(iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
(iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
- (A) (i) மட்டும் சரியானது
- (B) (i) மற்றும் (ii) மட்டும் சரியானது
- (C) (i), (ii) மற்றும் (iii) சரியானது
- (D) மேற்கூறிய அனைத்தும் சரியானது
விடையைக் காண்க
விடை: (C) (i), (ii) மற்றும் (iii) சரியானது – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1920களில் தோன்றிய கோவில் நுழைவு இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில் மற்றும் கோவில் தெருக்களில் நுழைவு மறுக்கப்பட்டதை எதிர்த்த சமூகச் சீர்திருத்த இயக்கம்; இதன் முதல் பெரும் போராட்டம் 1924 வைக்கம் சத்தியாகிரகம். (iv) தவறு: வைக்கம் போராட்டத்தை டி.கே. மாதவன், கே.பி. கேசவ மேனன், கேளப்பன், பின்னர் ஈ.வெ.ரா. பெரியார் (வைக்கம் வீரர்) ஆகியோர் நடத்தினர்; காந்தியடிகள் 1925 இல் வந்து பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தினார்.
(i) மன்னர்க்கு உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறுபொருள் என மூவகை வருவாய் உள்ளன என்று திருக்குறள் கூறுகிறது.
(ii) உறுபொருள் என்பது பகைவரிடமிருந்து பெற்ற திறைப்பொருள்.
(iii) உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருள்.
- (A) (i) மட்டும் சரி
- (B) (ii) மட்டும் சரி
- (C) (i) மற்றும் (iii) மட்டும் சரி
- (D) (i) மற்றும் (ii) மட்டும் சரி
விடையைக் காண்க
விடை: (C) (i) மற்றும் (iii) மட்டும் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குறள் 756: 'உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்' - உறுபொருள் (உரிமையாளர் இல்லாமல் அரசுக்கு வரும் பொருள்), உல்கு பொருள் (சுங்க வரியால் வரும் பொருள்), தெறுபொருள் (பகைவரை வென்று பெறும் திறைப்பொருள்) ஆகிய மூன்றும் அரசனுடையவை. எனவே (i), (iii) சரி; பகைவரிடமிருந்து பெறுவது தெறுபொருள், உறுபொருள் அல்ல - ஆகவே (ii) தவறு.
(a) இவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
(b) இவருடைய பொருளாதார கொள்கைக்கு “விஞ்ஞான சோஷியலிசம்” எனப் பெயரிட்டார்.
(c) இவர் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய “வீராணம் குடிநீர்” திட்டத்தைக் கொண்டுவந்தார்.
(d) இவருக்கு “பேரறிஞர்” என்ற பட்டத்தைப் தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்.
- (A) (a)
- (B) (b)
- (C) (c)
- (D) (d)
விடையைக் காண்க
விடை: (D) (d) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அண்ணா அரசு 1967இல் இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7-A சேர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் தந்தது (a சரி). (b) 'விஞ்ஞான சோஷலிசம்', (c) வீராணம் குடிநீர்த் திட்டம் – இவற்றை வினாத்தாள் சரியானவையாகக் கொள்கிறது. 'பேரறிஞர்' என்பது மக்கள் வழங்கிய சிறப்புப் பெயர்; தந்தை பெரியார் வழங்கிய பட்டம் அல்ல. எனவே தவறான கூற்று (d).
(i) இவர் சென்னை வாசிகள் சங்கத்தை நிறுவினார்.
(ii) இவர் ‘நேட்டிவ் இன்டர்பிரட்டர்’ என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கினார்.
(iii) இவர் இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
(iv) இவர் வித்யானுபவானயந்திர சாலை என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார்.
- (A) (i) மற்றும் (ii)
- (B) (ii) மற்றும் (iii)
- (C) (i) மற்றும் (iii)
- (D) (ii), (iii) மற்றும் (iv)
விடையைக் காண்க
விடை: (A) (i) மற்றும் (ii) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கஜுலு லட்சுமணராசு செட்டி 1852இல் சென்னை வாசிகள் சங்கத்தை (Madras Native Association) நிறுவினார் (i சரி); 1844இல் 'நேட்டிவ் இன்டர்பிரட்டர்' பத்திரிகையை விலைக்கு வாங்கி 'கிரசண்ட்' எனப் பெயர் மாற்றி நடத்தினார் (ii சரி). இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கத்தை (1852) உருவாக்கியவர் சீனிவாச பிள்ளை (iii தவறு); வித்தியானுபாலன யந்திரசாலை அச்சகத்தை நிறுவியவர் ஆறுமுக நாவலர் (iv தவறு). எனவே (A).
காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.
- (A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.
- (C) [A] தவறு ஆனால் [R] என்பது சரி
- (D) [A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1917 பிப்ரவரியில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் 'ஜஸ்டிஸ்' ஆங்கில நாளிதழைத் தொடங்கியபோது, 'இந்தியன் பேட்ரியட்' ஆசிரியர் சி. கருணாகர மேனனை ஆசிரியராக்க முயன்றது; அவர் ஏற்கவில்லை. எனவே டாக்டர் டி.எம். நாயரே கௌரவ ஆசிரியரானார் – [A] சரி. ஜஸ்டிஸ் இதழ் அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்க்கவே தொடங்கப்பட்டது; மேனன் தன்னாட்சி இயக்கத்தை ஆதரித்தவர். அதனால் அவர் மறுத்ததற்கு அன்னிபெசன்டும் தன்னாட்சி அரசியலும்தான் காரணம் என்பது வினா அமைப்பாளர் கருத்து; எனவே (B).
காரணம் [R] : “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்” என்ற நூலை இயற்றியுள்ளார்.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி
- (C) [A] தவறு ஆனால் [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
விடையைக் காண்க
விடை: (C) [A] தவறு ஆனால் [R] சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ராபர்ட் கால்டுவெல் (1814-1891) 19ஆம் நூற்றாண்டு சமயப் பரப்பாளர்; இடைக்காலத்தவர் அல்ல. 'திராவிட' என்ற சொல்லை அதற்கு முன்பே குமாரில பட்டர் (7-8ஆம் நூற்றாண்டு) பயன்படுத்தினார். கால்டுவெல் 1856இல் 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்' நூலை எழுதி 'திராவிட' என்பதை மொழிக் குடும்பப் பெயராக்கினார். எனவே A தவறு, R சரி.
காரணம் [R] : பிற உயிரைக் கொல்வது பொய்யாமையைக் காட்டிலும் கொடுமையானது.
- (A) [A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
- (B) [A] சரி, [R] தவறு
- (C) [A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
- (D) [A] தவறு, [R] சரி
விடையைக் காண்க
விடை: (A) [A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குறள் 323: 'ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று' – ஒப்பற்ற அறம் கொல்லாமை; அதற்கு அடுத்ததே பொய்யாமை. எனவே [A] சரி. பிற உயிரைக் கொல்வது பொய் சொல்வதைவிடக் கொடியது என்பதால்தான் கொல்லாமை முதலிடம் பெறுகிறது; [R] [A]-க்குச் சரியான விளக்கம் – விடை (A).
தொல்லியல் கோட்பாடுகள்
| (a) பரவல் கோட்பாடு | 1. லூயி & சேலி R. பின்போர்ட் |
| (b) சூழ்நிலை அணுகுமுறைக் கோட்பாடு | 2. லூயி பின்போர்ட் |
| (c) புதிய தொல்லியல் கோட்பாடு | 3. ராபர்ட் ஜான் பிரெய்ட்வுட் |
| (d) அமைப்பு அணுகுமுறைக் கோட்பாடு | 4. எலியட் ஸ்மித் |
- (A) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
- (B) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (D) (a) 1 (b) 3 (c) 2 (d) 4
விடையைக் காண்க
விடை: (B) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பரவல் கோட்பாடு (Hyper-diffusionism) – கிராஃப்டன் எலியட் ஸ்மித் (a-4). சூழல் அடிப்படையில் வேளாண்மைத் தோற்றத்தை ஆய்ந்த (ஜார்மோ) ராபர்ட் ஜான் பிரெய்ட்வுட் – சூழ்நிலை அணுகுமுறை (b-3). 1960களின் 'புதிய தொல்லியல்' – லூயி பின்போர்ட் (c-2). அமைப்பு அணுகுமுறை – லூயி & சேலி R. பின்போர்ட் ('New Perspectives in Archaeology', 1968) (d-1). விடை 4-3-2-1 = (B).
- (A) 6 நாட்கள்
- (B) 7 நாட்கள்
- (C) 8 நாட்கள்
- (D) 9 நாட்கள்
விடையைக் காண்க
விடை: (D) 9 நாட்கள் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: A எடுக்கும் நாட்கள் x எனில் B எடுப்பது 3x. 3x - x = 24 ஆகவே x = 12; A = 12 நாள், B = 36 நாள். ஒருநாள் வேலை = 1/12 + 1/36 = 4/36 = 1/9. எனவே இருவரும் சேர்ந்து 9 நாட்களில் முடிப்பர்.
- (A) 87 நாட்கள்
- (B) 76 நாட்கள்
- (C) 81 நாட்கள்
- (D) 64 நாட்கள்
விடையைக் காண்க
விடை: (C) 81 நாட்கள் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒரு குழந்தையின் 1 நாள் வேலை = 1/(9x360) = 1/3240; ஒரு ஆண் = 1/(18x72) = 1/1296; ஒரு பெண் = 1/(12x162) = 1/1944. 4 ஆண் + 12 பெண் + 10 குழந்தை = 4/1296 + 12/1944 + 10/3240 = 1/324 + 1/162 + 1/324 = 4/324 = 1/81. எனவே 81 நாட்கள்.
- (A) ரூ. 61
- (B) ரூ. 122
- (C) ரூ. 320
- (D) ரூ. 310
விடையைக் காண்க
விடை: (D) ரூ. 310 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 3 ஆண்டுகளுக்கு CI - SI = P x r^2 x (300 + r) / 100^3 = 10000 x 100 x 310 / 1000000 = ரூ. 310. சரிபார்ப்பு: கூட்டுவட்டி = 10000(1.1^3 - 1) = 3310; தனிவட்டி = 10000 x 10 x 3/100 = 3000; வித்தியாசம் = 310.
- (A) ரூ. 18,522
- (B) ரூ. 17,640
- (C) ரூ. 16,800
- (D) ரூ. 2,522
விடையைக் காண்க
விடை: (D) ரூ. 2,522 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: காலாண்டு வட்டி வீதம் = 20/4 = 5%; 9 மாதங்கள் = 3 காலாண்டுகள். தொகை = 16000 x (1.05)^3 = ரூ. 18,522. கூட்டுவட்டி = 18,522 - 16,000 = ரூ. 2,522. (ரூ. 18,522 என்பது மொத்தத் தொகை; வட்டி அல்ல.)
- (A) ரூ. 8,500
- (B) ரூ. 1,625
- (C) ரூ. 5,156.25
- (D) ரூ. 12,000
விடையைக் காண்க
விடை: (A) ரூ. 8,500 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தனிவட்டி = P x R x T / 100; R = 50/3 %, T = 9/12 = 3/4 ஆண்டு. தனிவட்டி = 68000 x (50/3) x (3/4) / 100 = 68000 x 12.5 / 100 = ரூ. 8,500.
17/18, 31/36, 43/45, 59/60
- (A) 31/36 < 17/18 < 43/45 < 59/60
- (B) 17/18 < 31/36 < 43/45 < 59/60
- (C) 31/36 < 17/18 < 59/60 < 43/45
- (D) 43/45 < 17/18 < 59/60 < 31/36
விடையைக் காண்க
விடை: (A) 31/36 < 17/18 < 43/45 < 59/60 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒவ்வொன்றும் 1-இலிருந்து எவ்வளவு குறைவு எனப் பார்க்கலாம்: 1/18, 5/36, 2/45, 1/60. குறைவு அதிகமானால் பின்னம் சிறியது: 5/36 > 1/18 > 2/45 > 1/60. எனவே 31/36 < 17/18 < 43/45 < 59/60. (தசமங்கள்: 0.861, 0.944, 0.956, 0.983.)
- (A) 600
- (B) 500
- (C) 400
- (D) 300
விடையைக் காண்க
விடை: (B) 500 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 60% குறைத்தால் மீதம் 40%. x-இன் 40% = 200 => x = 200 x 100/40 = 500. சரிபார்ப்பு: 500 - 300 = 200.
- (A) 103
- (B) 31
- (C) 27
- (D) 78
விடையைக் காண்க
விடை: (B) 31 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: BODMAS விதிப்படி முதலில் பெருக்கல்/வகுத்தல் (இடமிருந்து வலம்): 2 x 8 = 16, 16 / 2 = 8. பின்னர் 24 + 8 - 1 = 31.
- (A) F, G, L, M
- (B) G, H, M, N
- (C) F, G, M, N
- (D) G, H, L, M
விடையைக் காண்க
விடை: (C) F, G, M, N – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இத்தொடரில் ஒவ்வொரு எழுத்தும் அதற்கு 4 இடம் முன்னுள்ள எழுத்துடன் இணை: AE BF CG DH EI FJ GK HL IM JN. முழுமையாக: A E B F C G D H E I F J G K H L I M J N. J இருமுறை வருகிறது: F J G மற்றும் M J N. எனவே J-க்கு அருகிலுள்ள எழுத்துகள் F, G, M, N.
6 7 4 8 5 9 8 4 8 3 2 5 8 6 7 8 3 8
- (A) 542
- (B) 287
- (C) 426
- (D) 688
விடையைக் காண்க
விடை: (B) 287 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தொடர் 6 7 4 8 5 9 8 4 8 3 2 5 8 6 7 8 3 8-இல் இடையில் இரண்டு இலக்கங்களை விட்டு (ஒவ்வொரு 3ஆவது இலக்கம்) எடுத்தால்: 688 = 1, 4, 7ஆம் இடங்கள்; 542 = 5, 8, 11; 426 = 8, 11, 14. 287 இவ்வாறு அமையாது (ஒரு இலக்கம் விட்டு 11, 13, 15ஆம் இடங்களில் மட்டுமே வருகிறது). மேலும் மற்ற மூன்றும் இரட்டை எண்கள், 287 ஒற்றைப்படை. எனவே (B) 287.

(படம் சொற்களில் – கேள்வி (விரிப்பு): 1, 2, 3, 4 மேலிருந்து கீழாக ஒரே நெடுவரிசை; 2-இன் இடப்புறம் 6; 4-இன் வலப்புறம் 5. பதில்கள் (மேல் / இடம் / வலம் முகங்கள்): (i) 6 / 2 / 4; (ii) 6 / 5 / 2; (iii) 2 / 3 / 6; (iv) 6 / 5 / 1)
- (A) (i) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (i) மற்றும் (iv)
- (D) (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (D) (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: விரிப்பில் 1-2-3-4 நேர்வரிசையில் ஒன்று விட்டு உள்ளவை எதிர்ப்பக்கங்கள்: 1–3, 2–4; பக்கவாட்டு 6 (2-இன் இடப்புறம்), 5 (4-இன் வலப்புறம்) மடிக்கும்போது எதிரெதிராகும்: 5–6. எதிர்ப்பக்கங்கள் ஒரே நேரத்தில் தெரியாது. (i)-இல் 2, 4; (ii), (iv)-இல் 5, 6 ஒன்றாக உள்ளன – இயலாது. எதிர்ப்பக்க ஜோடி இல்லாத ஒரே படம் (iii) (2, 3, 6) – விடை (D) 'Only (iii)'.
- (A) 25 வருடம்
- (B) 20 வருடம்
- (C) 27 வருடம்
- (D) 22 வருடம்
விடையைக் காண்க
விடை: (D) 22 வருடம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வயது வரிசை: B > Z > A. A, Y-ஐ விட மூத்தவர்; Y மூன்றாவது இளையவர் - எனவே B, Z, A மூவரும் மூத்தவர்கள்; Z (மிக மூத்தவர் அல்ல) இரண்டாவது மூத்தவர் = 24 வயது. C = 20 இளையவராக இருக்க முடியாது (இளையவர் 20-க்குக் குறைவு). வரிசை (இளையவர் முதல்): X < C(20) < Y < A < Z(24) < B. எனவே A-இன் வயது 20-க்கும் 24-க்கும் இடையில், Y-ஐ விட அதிகம் - 22 வயது பொருந்தும். 25, 27 என்பது 24-ஐ விட அதிகம்; 20 என்பது C-இன் வயது.
- (A) 108
- (B) 135
- (C) 142
- (D) 159
விடையைக் காண்க
விடை: (D) 159 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: எழுத்தின் மதிப்பு = 2n - 1 (n = அகர வரிசை இடம்). F=11, I=17, L=23, M=25, H=15, I=17, N=27, D=7, I=17. கூட்டுத்தொகை = 159. சுருக்க வழி: இடங்களின் கூட்டு 84; 2 x 84 - 9 = 159.
வினாக்கள் 51–75
(1) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை
(2) அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமாதிரிக் கொள்கை
(3) அறிவியல் கொள்கை தீர்மானம்
(4) தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை
- (A) (2), (3), (1), (4)
- (B) (3), (4), (1), (2)
- (C) (1), (2), (3), (4)
- (D) (3), (1), (4), (2)
விடையைக் காண்க
விடை: (B) (3), (4), (1), (2) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அறிவியல் கொள்கை தீர்மானம் 1958, தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை 1983, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை 2003, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமாதிரிக் கொள்கை 2013. எனவே வரிசை (3), (4), (1), (2). விருப்பம் D 2003 கொள்கையை 1983-க்கு முன் வைப்பதால் தவறு.
| (a) கருப்பு கார்பன் | 1. பனி மற்றும் உறை நீரில் இருந்து உயிரிய துகள்களால் வெளியேற்றப்படும் கார்பன் |
| (b) சாம்பல் கார்பன் | 2. கரிம பொருட்களின் நிறைவுறா எரிதலினால் வெளியேற்றப்படும் கார்பன் |
| (c) பழுப்பு கார்பன் | 3. தொழிற்சாலை உமிழ்வின் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் |
| (d) சிவப்பு கார்பன் | 4. படிம எரிபொருள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (C) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (D) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சிவப்பு கார்பன் – பனி, உறைபனி மீதுள்ள உயிரியத் துகள்கள் (பனிப் பாசி) (d-1); பழுப்பு கார்பன் – கரிமப் பொருட்களின் முழுமையற்ற எரிதல் (c-2); சாம்பல் கார்பன் – தொழிற்சாலை உமிழ்வு (b-3); கருப்பு கார்பன் – படிம எரிபொருள் எரிப்பு (a-4). சிவப்பு கார்பன் = 1 என்பது விடை A-வில் மட்டுமே உள்ளதால் மற்ற விடைகள் பொருந்தாது.
| (a) காக்ஸ்சாக்கி வைரஸ் | 1. சின்னம்மை |
| (b) பார்வோவைரஸ் B19 | 2. ஜெர்மன் தட்டம்மை |
| (c) ருபெல்லா வைரஸ் | 3. எரித்மா இன்ஃபெக்டியோசம் |
| (d) வாரிசெல்லா–சோஸ்டர் வைரஸ் | 4. கை–கால் மற்றும் வாய் நோய் |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
- (C) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
- (D) (a) 1 (b) 4 (c) 3 (d) 2
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: காக்ஸ்சாக்கி வைரஸ் – கை-கால் மற்றும் வாய் நோய் (4); பார்வோவைரஸ் B19 – எரித்மா இன்ஃபெக்டியோசம் (ஐந்தாம் நோய்) (3); ருபெல்லா வைரஸ் – ஜெர்மன் தட்டம்மை (2); வாரிசெல்லா-சோஸ்டர் வைரஸ் – சின்னம்மை (1). எனவே விடை A.
(i) நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
(ii) மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
(iii) வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
(iv) வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
- (A) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (B) (ii) மற்றும் (iii) மட்டும்
- (C) (i) மற்றும் (iv) மட்டும்
- (D) (ii), (iii) மற்றும் (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (A) (i), (ii) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 2015 சென்னை வெள்ளத்திற்குப் பின் (செம்பரம்பாக்கம் ஏரி திடீர் நீர்திறப்பு) நீர் திறப்பு முடிவுகளுக்கு நிபுணர் குழு, சென்னையில் தானியங்கி வானிலை நிலைய (AWS) வலையமைப்பு, வெள்ள மேலாண்மை சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. 'செயற்கைக்கோள் தரவு மட்டும்' என்பது தவறு – முன்னறிவிப்புக்கு தரை நிலையங்கள், ரேடார், செயற்கைக்கோள் அனைத்தும் தேவை.
கூற்று [A] : இந்தியாவின் தாமதமான பருவமழைக்கான முதன்மைக் காரணமாக ஐரோப்பாவில் உள்ள ஒமேகா பிளாக் உறுதியாக நிறுவப்பட்டது.
காரணம் [R] : வளிமண்டல ஜெட் ஸ்ட்ரீம்களை ஒமேகா பிளாக் திரை திருப்புவது இந்திய பருவமழையை பாதித்ததா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
- (A) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]இன் சரியான விளக்கமாகும்
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]இன் சரியான விளக்கம் அல்ல.
- (C) [A] சரி, ஆனால் [R] என்பது தவறு
- (D) [A] தவறு, ஆனால் [R] என்பது சரி
விடையைக் காண்க
விடை: (D) [A] தவறு, ஆனால் [R] என்பது சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒமேகா பிளாக் என்பது கிரேக்க எழுத்து ஒமேகா வடிவிலான உயர் அழுத்தத் தடுப்பு அமைப்பு; இது ஜெட் ஸ்ட்ரீமை திசை திருப்பக்கூடும். இது இந்தியப் பருவமழையைப் பாதித்ததா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்கின்றனர்; தாமதத்துக்கு முதன்மைக் காரணம் என 'உறுதியாக' நிறுவப்படவில்லை. எனவே [A] தவறு, [R] சரி.
(i) டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் ஏடிபி மற்றும் பாஸ்போக்ரியேடின் ஆற்றல் மூலத்தைக் கண்டறிந்து, மெத்தோட்ரெக்ஸேட் மருந்தை உருவாக்கினார்.
(ii) அருணாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர்.
(iii) சென்னை மருத்துவ கல்லூரியில் வேட்டி அணிந்ததால் எம்பிபிஎஸ் பட்டம் மறுக்கப்பட்டது.
- (A) (ii) மட்டும்
- (B) (i) மற்றும் (ii) மட்டும்
- (C) (i) மற்றும் (iii) மட்டும்
- (D) (i) மட்டும்
விடையைக் காண்க
விடை: (D) (i) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
கூற்று [A] : தில்லியில் மராட்டிய ஆட்சியை நிறுவுவதே சிவாஜியின் நோக்கமாகும்.
காரணம் [R] : முகலாயர்களுக்கு எதிரான மராத்தியர்களுக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.
- (A) [A] தவறு ஆனால் [R] சரி
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
- (C) [A] சரி ஆனால் [R] தவறு
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கமல்ல.
விடையைக் காண்க
விடை: (A) [A] தவறு ஆனால் [R] சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சிவாஜியின் நோக்கம் தக்காணத்தில் சுயராஜ்யம் (சுதந்திர மராட்டிய அரசு); டெல்லியில் மராட்டிய ஆட்சி அல்ல – டெல்லி மீதான மராட்டிய ஆதிக்கம் பின்னர் பேஷ்வாக்கள் காலத்தில் வந்தது. எனவே [A] தவறு. முகலாயருக்கு எதிரான மராட்டிய எதிர்ப்புக்கு அவர் தலைமை தாங்கினார் – [R] சரி.
| (a) கிழக்கிந்திய சங்கம் | 1. சிசிர்குமார் கோஷ் |
| (b) இந்தியன் லீக் | 2. தாதாபாய் நௌரோஜி |
| (c) பம்பாய் சங்கம் | 3. P. ஆனந்த சார்லு |
| (d) மெட்ராஸ் (சென்னை) மகாஜனா சபா | 4. பத்ரூத்தீன் தயாப்ஜி |
- (A) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (B) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
- (C) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
- (D) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
விடையைக் காண்க
விடை: (B) (a) 2 (b) 1 (c) 4 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கிழக்கிந்திய சங்கம் (லண்டன், 1866) – தாதாபாய் நௌரோஜி (2); இந்தியன் லீக் (1875) – சிசிர்குமார் கோஷ் (1); பம்பாய் சங்கம் (1885) – பத்ருதீன் தயாப்ஜி, பெரோஸ்ஷா மேத்தா, கே.டி. தெலங் (4); சென்னை மகாஜன சபா (1884) – P. ஆனந்த சார்லு உள்ளிட்டோர் (3). எனவே விடை B.
(1) வைக்கம் சத்தியாக்கிரகம் – 1924
(2) சுயமரியாதை இயக்கம் – 1925
(3) முதல் சுயமரியாதை திருமணச் சட்டம் – 1935
(4) முதலாவது வகுப்புரிமை அரசு ஆணை – 1929
- (A) (1) மற்றும் (3)
- (B) (3) மற்றும் (4)
- (C) (4) மற்றும் (1)
- (D) (2) மற்றும் (3)
விடையைக் காண்க
விடை: (B) (3) மற்றும் (4) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வைக்கம் சத்தியாக்கிரகம் 1924, சுயமரியாதை இயக்கம் 1925 – இரண்டும் சரி. சுயமரியாதைத் திருமணங்கள் 1967-ல் அண்ணா ஆட்சியில் இந்து திருமண (சென்னை திருத்தச்) சட்டம், 1967 மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டன; 1935 அல்ல. முதல் வகுப்புரிமை அரசாணை நீதிக்கட்சி அரசால் 16 செப்டம்பர் 1921-ல் வெளியிடப்பட்டது; 1929 அல்ல. எனவே (3), (4) தவறான இணைகள் – விடை B.
காரணம் [R] : காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
- (C) [A] தவறு, [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல.
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
இவ்வினாவுக்கு எங்கள் ஆசிரியர்களின் விடை வேறு; சான்றுடன் கூடிய காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில் உள்ளன. இறுதி முடிவு TNPSC இறுதி விடைக்குறிப்பில்.
| பகுதி | பொருள் |
| (a) XI | 1. அரசு நெறிமுறைக் கொள்கைகள் |
| (b) IX | 2. தேர்தல்கள் |
| (c) XV | 3. பஞ்சாயத்துகள் |
| (d) IV | 4. ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுமுறை |
- (A) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
- (B) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பகுதி XI – ஒன்றிய-மாநில உறவுகள் (4); பகுதி IX – பஞ்சாயத்துகள் (3); பகுதி XV – தேர்தல்கள் (2); பகுதி IV – அரசு நெறிமுறைக் கொள்கைகள் (1). எனவே விடை D.
(1) டாக்டர். அசோம் கண ஃபரிஷத்
(2) பிஜு ஜனதா தளம்
(3) நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி
(4) ஆம் ஆத்மி பார்ட்டி
- (A) (2), (3), (1), (4)
- (B) (1), (2), (4), (3)
- (C) (4), (3), (2), (1)
- (D) (3), (1), (4), (2)
விடையைக் காண்க
விடை: (B) (1), (2), (4), (3) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அசோம் கண பரிஷத் அக்டோபர் 1985, பிஜு ஜனதா தளம் டிசம்பர் 1997, ஆம் ஆத்மி கட்சி 26 நவம்பர் 2012, நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி (பி.ஏ. சங்மா) 6 ஜனவரி 2013-ல் தோற்றுவிக்கப்பட்டன. எனவே வரிசை (1), (2), (4), (3) – விடை B.
- (A) இது ஒரு முழுமையான நீதித்துறை அமைப்பு
- (B) இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் கீழ் ஏற்படுத்தப்பட்டது
- (C) இதன் தலைவராக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் இருப்பார்
- (D) இதன் தலைமையகம் அலகாபாத் ஆகும்
விடையைக் காண்க
விடை: (B) இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் கீழ் ஏற்படுத்தப்பட்டது – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் 1988-ல் அமைக்கப்பட்ட அரை-நீதித்துறை அமைப்பு (இப்போது 2019 சட்டத்தின் கீழ் தொடர்கிறது). இதன் தலைவர் உச்சநீதிமன்ற (ஓய்வுபெற்ற) நீதிபதி; அமைச்சர் அல்ல. தலைமையகம் புது டெல்லி; அலகாபாத் அல்ல. எனவே விடை B.
(i) இந்தக் குழுவானது 1921ம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு சட்டம் 1919ன் கீழான வாசகங்களால் அமைக்கப்பெற்றது.
(ii) இந்தக் குழுவானது 22 உறுப்பினர்களை உடையது. இவற்றுள் 15 உறுப்பினர்கள் மக்களவையையும், 7 உறுப்பினர்கள் மாநிலங்களவையையும் சார்ந்தவர்கள்.
(iii) அமைச்சரானவர் இந்தக் குழுவின் உறுப்பினராக இயலாது .
- (A) (i) மட்டும்
- (B) (i) மற்றும் (iii) மட்டும்
- (C) (i) மற்றும் (ii) மட்டும்
- (D) (i), (ii) மற்றும் (iii)
விடையைக் காண்க
விடை: (D) (i), (ii) மற்றும் (iii) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பொதுக் கணக்குக் குழு 1921-ல் இந்திய அரசுச் சட்டம் 1919-ன் கீழ் முதன்முதலில் அமைக்கப்பட்டது. இதில் 22 உறுப்பினர்கள் – மக்களவை 15, மாநிலங்களவை 7. அமைச்சர் இக்குழுவின் உறுப்பினராக முடியாது; உறுப்பினர் அமைச்சரானால் பதவி இழப்பார். மூன்றும் சரி – விடை D.
(i) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்த பஞ்சாயத்து அதிகாரம் கொண்டுள்ளது.
(ii) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களைத் திட்டமிட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கிடையாது.
(iii) அரசு அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாயத்து வழக்கு தொடுக்க முடியும்.
- (A) (i) மட்டும்
- (B) (i) மற்றும் (ii) மட்டும்
- (C) (i) மற்றும் (iii) மட்டும்
- (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (C) (i) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உறுப்பு 243G-ன்படி பஞ்சாயத்துகள் பொருளாதார முன்னேற்றம், சமூக நீதிக்கான திட்டங்களைத் தயாரிக்கவும் செயல்படுத்தவும் அதிகாரம் பெறலாம் – (i) சரி, (ii) தவறு. பஞ்சாயத்து ஒரு கூட்டு நிறுவனம் (body corporate); மாநில அதிகாரியின் (பஞ்சாயத்து இயக்குநர்) உத்தரவை எதிர்த்து பஞ்சாயத்து ரிட் மனு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் (Village Panchayat Calangute, 2012) தீர்ப்பளித்தது – (iii) சரி. எனவே 'i மட்டும்' (A) தவறு.
| தலைவர் பெயர் | அரசியல் பார்வை |
| (a) ஜவஹர்லால் நேரு | 1. தாராளவாத மக்களாட்சிவாதி |
| (b) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் | 2. தீவிர சமத்துவவாதி |
| (c) மகாத்மா காந்தி | 3. பழமைவாதி |
| (d) கே.டி. ஷா | 4. சமூக மக்களாட்சிவாதி |
- (A) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (B) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
- (C) (a) 2 (b) 4 (c) 3 (d) 1
- (D) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
விடையைக் காண்க
விடை: (B) (a) 4 (b) 1 (c) 3 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அரசியல் நிர்ணய சபையில் வெளிப்பட்ட பார்வைகள்: நேரு – சமூக மக்களாட்சி (4), அம்பேத்கர் – தாராளவாத மக்களாட்சி (1), காந்தி – நவீனமற்றது (3), கே.டி. ஷா – தீவிர சமத்துவம் (2). எனவே 4-1-3-2 = விடை B. விடை A அம்பேத்கர், ஷா ஆகியோரின் பார்வைகளை மாற்றி வைக்கிறது.
(i) லோக்பால் அமைப்பு தன்னிச்சையாக ஓர் அரசுப் பணியாளர் மீது வழக்கினை விசாரிக்கலாம்.
(ii) புகாருக்கு ஆளான அரசுப் பணியாளருக்கு சட்ட உதவி அளித்தல்
(iii) புகார் அளிப்பதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் ஆகும்.
- (A) (i) மட்டும்
- (B) (i) மற்றும் (ii) மட்டும்
- (C) (i) மற்றும் (iii) மட்டும்
- (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காண்க
நிபுணர் குழுவின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது – TNPSC தற்காலிக விடைக்குறிப்பில் இவ்வினாவுக்கு விடை தரவில்லை; இறுதி விடைக்குறிப்பில் முடிவு தெரியும்.
(1) உறுப்பு 353 – அவசரகால பிரகடனத்தின் விளைவு
(2) உறுப்பு 355 – மாநிலங்களை வெளிநாட்டு ஆக்ரமிப்பிலிருந்தும் உள்நாட்டு குழப்பத்திலிருந்தும் மத்திய அரசு பாதுகாத்தல்
(3) உறுப்பு 357 – அவசரகால பிரகடனத்தின் போது உறுப்பு 21-ன் வகையங்களை நிறுத்தி வைத்தல்
(4) உறுப்பு 358 – அவசரகாலத்தில் பகுதி - 3ல் வழங்கப்பட்ட உரிமைகள் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தல்
- (A) (1) மற்றும் (3) சரி
- (B) (1) மற்றும் (2) சரி
- (C) (2) மற்றும் (3) சரி
- (D) (3) மற்றும் (4) சரி
விடையைக் காண்க
விடை: (B) (1) மற்றும் (2) சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உறுப்பு 353 – அவசரநிலைப் பிரகடனத்தின் விளைவு; உறுப்பு 355 – வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பத்திலிருந்து மாநிலங்களைக் காக்கும் ஒன்றியத்தின் கடமை – இரண்டும் சரி. உறுப்பு 357 – உறுப்பு 356 பிரகடனத்தின் கீழ் சட்டமியற்றும் அதிகாரம்; உறுப்பு 358 – உறுப்பு 19 நிறுத்திவைப்பு; பகுதி III உரிமைகள் அமலாக்க நிறுத்தம் உறுப்பு 359. எனவே விடை B.
| (a) பிரிவு 330 | 1. மாநிலங்களின் சட்டமன்றத்தில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு |
| (b) பிரிவு 331 | 2. மக்களவையில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு |
| (c) பிரிவு 332 | 3. மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் |
| (d) பிரிவு 333 | 4. மக்களவையில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் |
- (A) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
- (B) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (C) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (C) (a) 2 (b) 4 (c) 1 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உறுப்பு 330 – மக்களவையில் SC/ST இட ஒதுக்கீடு (2); உறுப்பு 331 – மக்களவையில் ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதித்துவம் (4); உறுப்பு 332 – மாநில சட்டமன்றங்களில் SC/ST இட ஒதுக்கீடு (1); உறுப்பு 333 – மாநில சட்டமன்றத்தில் ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதித்துவம் (3). எனவே விடை C.
- (A) மருத்துவக் கல்வி இயக்குநரகம்
- (B) மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்
- (C) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
- (D) குடும்பநல இயக்குநரகம்
விடையைக் காண்க
விடை: (B) மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனைகள் (கற்பித்தல் அல்லாதவை) மூலம் இரண்டாம் நிலை சிகிச்சை அளிக்கிறது; PCPNDT சட்டம், மருத்துவ நிறுவனங்கள் சட்டம் போன்றவற்றின் 'பொருத்தமான அதிகாரி' அதன் இயக்குநரே. மருத்துவக் கல்வி இயக்குநரகம் – மூன்றாம் நிலை; பொது சுகாதார இயக்குநரகம் – ஆரம்ப/தடுப்பு சிகிச்சை. எனவே விடை B.
காரணம் [R] : மொத்தக் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 3 சதவிகிதம் அடர்ந்த காடாக உள்ளது.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி
- (C) [R] சரி ஆனால் [A] தவறு
- (D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இந்திய வன நிலை அறிக்கை 2021-ன்படி தமிழ்நாட்டின் வனப்பரப்பு 26,419 ச.கி.மீ – புவியியல் பரப்பின் 20.31% (ஐந்தில் ஒரு பங்கு) – [A] சரி. மிக அடர்ந்த காடு 3,593 ச.கி.மீ – சுமார் 2.8% (≈3%) – [R] சரி.
காரணம் [R] : கால நிலை மாற்றங்களில் ஏற்பட்ட பரவலான ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயத்தில் வருமானம் குறைந்துள்ளது.
- (A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- (B) [A] என்பது தவறு ஆனால் [R] என்பது சரி
- (C) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
- (D) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல
விடையைக் காண்க
விடை: (D) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வேளாண் உற்பத்தி உயரும்போது கிராமப்புற வருமானம், வேலைவாய்ப்பு உயர்ந்து வறுமை குறைகிறது – [A] சரி. பருவநிலை மாறுபாடுகளால் (வறட்சி, வெள்ளம்) வேளாண் வருமானம் குறைந்துள்ளது – [R] சரி. ஆனால் [R] வருமானக் குறைவைப் பற்றியது; உற்பத்தி உயர்வால் வறுமை குறைவதை அது விளக்கவில்லை.
(i) இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நிதியியல் மற்றும் பணவியல் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(ii) இது தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை அடையப் பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்துகிறது
(iii) இது வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது
- (A) (i) மற்றும் (ii) மட்டும்
- (B) (ii) மற்றும் (iii) மட்டும்
- (C) (iii) மட்டும்
- (D) (i) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (B) (ii) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பொருளாதார அரசுத் தந்திரம் என்பது வரிகள், பொருளாதாரத் தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், முதலீட்டுச் சோதனை, உதவி போன்ற பொருளாதாரக் கருவிகளை வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது; இது அதிகரிக்கும் புவிசார் அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது. வளர்ச்சிக்காக நிதியியல், பணவியல் கருவிகளைப் பயன்படுத்துவது சாதாரண பேரியல் பொருளாதாரக் கொள்கை. எனவே விடை B.
| (a) பிரிவு 268 | 1. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரிகள் |
| (b) பிரிவு 269 | 2. உதவி மானியங்கள் |
| (c) பிரிவு 275 | 3. நிதி ஆணையம் |
| (d) பிரிவு 280 | 4. ஒன்றியத்தால் விதிக்கப்படும் ஆனால் மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் கடமைகள் |
- (A) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (B) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (C) (a) 1 (b) 4 (c) 2 (d) 3
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 1 (c) 2 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உறுப்பு 268 – ஒன்றியம் விதித்து மாநிலங்கள் வசூலித்துக் கையகப்படுத்தும் கடமைகள் (எ.கா. முத்திரைத் தீர்வை) (4); உறுப்பு 269 – ஒன்றியம் விதித்து வசூலித்து மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரிகள் (1); உறுப்பு 275 – உதவி மானியங்கள் (2); உறுப்பு 280 – நிதி ஆணையம் (3). எனவே விடை A.
காரணம் [R] : வளரும் நாடுகளில் மொத்த சொத்துக்களில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே வைத்திருக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளன.
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
- (C) [A] தவறு ஆனால் [R] சரி
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
விடையைக் காண்க
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வளரும் பொருளாதாரங்களின் மையப் பிரச்சினை 'மக்கள் திரள் வறுமை' – [A] சரி. ஏழைகளின் வள அடிப்படை மிகக் குறைவு; மொத்தச் சொத்துகளில் மிகச் சிறிய பங்கே அவர்களிடம் உள்ளதால் வருமானம் குறைவாகவே இருக்கிறது – இதுவே வறுமைக்குக் காரணம்; எனவே [R], [A]-வை விளக்குகிறது.
வினாக்கள் 76–100
(i) தனியார் வர்த்தகர்களின் சுரண்டல் நடவடிக்கைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கின்றன.
(ii) கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அனைவரும் சூரிய ஆற்றலால் இயங்கும் பசுமை வீடுகளுக்குத் தகுதியுடையவர்கள்.
(iii) இத்திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துதல் எதுவும் திட்டமிடப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ், தங்கள் மனைகளுக்குப் பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
- (A) (i) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (iii) மட்டும்
- (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காண்க
விடை: (D) (ii) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்தில் CMSPGHS அம்சங்களில் (2.1) 'கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவரும் தகுதியுடையவர்கள்' மற்றும் 'நிலம் கையகப்படுத்துதல் இல்லை; மனைக்குப் பட்டா உள்ளவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்' என்பவை சொல்லுக்குச் சொல் உள்ளன – (ii), (iii) சரி. (i) தனியார் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாத்தல் உழவர் சந்தை/ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நோக்கம், வீட்டுவசதித் திட்டத்தின் அல்ல. தகுதிப் பிரிவில் கூடுதல் நிபந்தனைகள் இருந்தாலும் (ii) அம்சமாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டுள்ளதால் C அல்ல.
(i) இந்த முறை 1973-இல் கார்ன்வாலிஸ் (Cornwallis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
(ii) இந்த முறை மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்தது
(iii) வாடகையில் 9/11 பங்கு கோரிக்கைகாக நிர்ணயிக்கப்பட்டது, மீதமுள்ள 2/11 பங்கு ஜமீன்தாரின் ஊதியமாகும்
(iv) ஜமீன்தார் தீர்வு அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக்கியது. அதன் மூலம் நிலத்தில் நிரந்தர உரிமையை உருவாக்கியது
- (A) (i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (B) (ii) மற்றும் (iii) மட்டும்
- (C) (i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (D) (i) மற்றும் (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (C) (i), (ii) மற்றும் (iv) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஜமீன்தாரி (நிரந்தர நிலவரி) முறையை காரன்வாலிஸ் 1793-ல் அறிமுகப்படுத்தினார் (வினாத்தாளில் 1973 – அச்சுப் பிழை). இது வங்காளம், பீகார், ஒரிசா, உ.பி., ஆந்திரா, ம.பி. பகுதிகளில் நடைமுறையில் இருந்தது; ஜமீன்தார்களை நில உரிமையாளர்களாக்கியது – (i), (ii), (iv) சரி. (iii) தவறு: அரசின் கோரிக்கை வாடகையில் 10/11 பங்கு, ஜமீன்தாருக்கு 1/11 மட்டுமே; 9/11, 2/11 அல்ல.
| (a) இந்தியப் பணச் சந்தை | 1. நியூயார்க் |
| (b) இங்கிலாந்து பணச் சந்தை | 2. மும்பை |
| (c) யு எஸ் ஏ பணச் சந்தை | 3. லண்டன் |
| (d) ஜப்பான் பணச் சந்தை | 4. டோக்கியோ |
- (A) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
- (B) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
- (C) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (D) (a) 1 (b) 2 (c) 4 (d) 3
விடையைக் காண்க
விடை: (A) (a) 2 (b) 3 (c) 1 (d) 4 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: முக்கிய பணச்சந்தை மையங்கள்: இந்தியா - மும்பை (2), இங்கிலாந்து - லண்டன் (3), அமெரிக்கா - நியூயார்க் (1), ஜப்பான் - டோக்கியோ (4). எனவே (a)-2, (b)-3, (c)-1, (d)-4 - விடை A.
(1) விரல்கவர் பேரியாழ் பாணர் – குறுந்தொகை
(2) மீன் சீவும் பாண்சேரி யோடு – மதுரைக் காஞ்சி
(3) முல்லை நல்யாழ்ப் பாணர் – ஐங்குறுநூறு
(4) பாணர் படுமலை பண்ணிய எழாலின் – பதிற்றுப்பத்து
- (A) (1) மற்றும் (4)
- (B) (1) மற்றும் (2)
- (C) (2) மற்றும் (3)
- (D) (3) மற்றும் (4)
விடையைக் காண்க
விடை: (A) (1) மற்றும் (4) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'விரல்கவர் பேரியாழ்' பதிற்றுப்பத்தில் வரும் தொடர், குறுந்தொகையில் அல்ல – (1) தவறு. 'பாணர் படுமலை பண்ணிய எழாலின்' குறுந்தொகை 323 (பதடி வைகலார்), பதிற்றுப்பத்து அல்ல – (4) தவறு; இவ்விரண்டும் இடம் மாறியுள்ளன. 'மீன் சீவும் பாண்சேரியொடு' மதுரைக்காஞ்சி, 'முல்லை நல்யாழ்ப் பாண' ஐங்குறுநூறு – இவை சரி.
(1) உலக வரலாற்றின் கண்ணோட்டம் – காந்திஜி
(2) இந்தியா சுதந்திரம் வென்றது – அபுல் கலாம் ஆசாத்
(3) இந்தியப் போராட்டம் – சுபாஷ் சந்திர போஸ்
(4) என் உண்மையான சத்திய சோதனையின் கதை – ஜவஹர்லால் நேரு
- (A) (1) மற்றும் (3) சரி
- (B) (1) மற்றும் (2) சரி
- (C) (2) மற்றும் (3) சரி
- (D) (3) மற்றும் (4) சரி
விடையைக் காண்க
விடை: (C) (2) மற்றும் (3) சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'India Wins Freedom' - மௌலானா அபுல் கலாம் ஆசாத்; 'The Indian Struggle' - சுபாஷ் சந்திர போஸ் - இவை இரண்டும் சரி. 'Glimpses of World History' நூலை எழுதியவர் ஜவஹர்லால் நேரு; 'சத்திய சோதனை' நூலை எழுதியவர் காந்திஜி. எனவே (1), (4) இடம் மாறியுள்ளதால் தவறு; விடை (2), (3).
- (A) பொருளில்லாதார்
- (B) அருளில்லாதார்
- (C) அன்பிலாதார்
- (D) அறிவில்லாதார்
விடையைக் காண்க
விடை: (A) பொருளில்லாதார் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இது திருக்குறள் 752 (பொருள் செயல்வகை அதிகாரம்): 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு'. அதிகாரம் பொருள் ஈட்டுதல் பற்றியது; 'இல்லார்' என்பது 'செல்வர்' என்பதற்கு எதிராக வருவதால், பொருள் இல்லாதவர்களையே குறிக்கிறது.
கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
குறியீடு :
- (A) [A] சரி ஆனால் [R] தவறு
- (B) [A] தவறு ஆனால் [R] சரி
- (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
- (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல
விடையைக் காண்க
விடை: (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் ஏற்கப்படாததால் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்; அதே ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் – இரண்டும் சரி. ஆனால் இயக்கத்தைத் தொடங்கியது வெளியேறியதன் விளைவே, காரணம் அல்ல; எனவே [R], [A]-வின் சரியான விளக்கம் அல்ல.
- (A) குறுந்தொகை
- (B) நற்றிணை
- (C) பட்டினப்பாலை
- (D) பதிற்றுப்பத்து
விடையைக் காண்க
விடை: (D) பதிற்றுப்பத்து – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கொடுமணல் (ஈரோடு மாவட்டம், நொய்யல் ஆற்றங்கரை) ஒரு பழமையான தொழில் மற்றும் வணிக மையம். சேர மன்னர்களைப் பற்றிய பதிற்றுப்பத்து இதைக் 'கொடுமணம்' என்று, அணிகலன்களுக்குப் புகழ்பெற்ற இடமாகக் குறிப்பிடுகிறது.
முதல் உலகப் போரின் போது ‘எஸ் எஸ் மெட்ராஸ்’ கப்பலில் மருத்துவச் சேவைக்காக “கெய்சர் ஐ ஹிந்த்” பதக்கத்தை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றவர்.
- (A) நடேசனார்
- (B) டி.ஏ. ராமலிங்கம்
- (C) சர். பிட்டி தியாகராயர்
- (D) டி.எம். நாயர்
விடையைக் காண்க
விடை: (D) டி.எம். நாயர் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர், முதல் உலகப் போரின்போது 'எஸ்.எஸ். மெட்ராஸ்' மருத்துவக் கப்பலில் அறுவை மருத்துவராகப் பணியாற்றினார்; போர் முடிவில் அவருக்குக் 'கெய்சர்-இ-ஹிந்த்' பதக்கம் வழங்கப்பட்டது. நடேசனாரும் மருத்துவர் தான், ஆனால் இந்தப் பணியும் பதக்கமும் டி.எம். நாயருக்கே உரியவை.
(I) பகுத்தறிவுச் சிந்தனை, சுயமரியாதை, தன்னம்பிக்கை இவற்றை வளர்த்தல்.
(II) பிராமணர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது.
(III) பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சமுதாயத் தீமைகளை அகற்றுதல்.
(IV) மூடநம்பிக்கைகளை அழித்தல்
- (A) (I), (II) மற்றும் (IV)
- (B) (I), (III) மற்றும் (IV)
- (C) (II), (III) மற்றும் (IV)
- (D) (I), (II), (III) மற்றும் (IV)
விடையைக் காண்க
விடை: (B) (I), (III) மற்றும் (IV) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சுயமரியாதை இயக்கத்தின் (1925) நோக்கங்கள்: பகுத்தறிவு, சுயமரியாதை, தன்னம்பிக்கையை வளர்த்தல்; பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற சமூகத் தீமைகளை அகற்றுதல்; மூடநம்பிக்கைகளை ஒழித்தல். இது பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது; எனவே (II) தவறு. விடை (I), (III), (IV).
| (a) சிறு கை அளாவிய கூழ் | 1. இனியவை கூறல் |
| (b) கனியிருப்பக் காய் கவர்ந்தற்று | 2. அடக்கமுடைமை |
| (c) நன்றி மறப்பது நன்றன்று | 3. செய் நன்றியறிதல் |
| (d) ஆறாதே நாவினால் சுட்டவடு | 4. மக்கட்பேறு |
- (A) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
- (B) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
- (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 1 (c) 3 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'சிறுகை அளாவிய கூழ்' - குறள் 64, மக்கட்பேறு (4). 'கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' - குறள் 100, இனியவை கூறல் (1). 'நன்றி மறப்பது நன்றன்று' - குறள் 108, செய்ந்நன்றி அறிதல் (3). 'ஆறாதே நாவினால் சுட்ட வடு' - குறள் 129, அடக்கமுடைமை (2). எனவே 4, 1, 3, 2 = விடை A.
- (A) நீரை நீக்கி பாலை மட்டும் உண்ணுதல்
- (B) நீரையும் பாலையும் போன்ற நூல்களைக் கற்றல்
- (C) தவறான நூல்களை விலக்கி நல்ல நூல்களைக் கற்றல்
- (D) நல்ல நூல்களைக் கற்று அதன்படி நிற்றல்
விடையைக் காண்க
விடை: (C) தவறான நூல்களை விலக்கி நல்ல நூல்களைக் கற்றல் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இது நாலடியார் பாடல் 135 (கல்வி அதிகாரம்): கல்விக்கு எல்லை இல்லை, வாழ்நாள் குறைவு, நோய்கள் பல; எனவே அன்னப்பறவை நீரை விலக்கிப் பாலை மட்டும் உண்பது போல, பயனற்ற நூல்களை விலக்கி நல்ல நூல்களை ஆராய்ந்து கற்க வேண்டும் என்பதே கருத்து. (A) வெறும் உவமை மட்டுமே; (D) இந்த அடியின் கருத்து அல்ல.
(1) தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் – 1950
(2) தொழிலாளர் சங்கம் – 1918
(3) இனவாரி ஒதுக்கீட்டுச் சட்டம் – 1921
(4) அறக்கட்டளைச் சட்டம் – 1930
- (A) (1) மற்றும் (4) சரி
- (B) (2) மற்றும் (4) சரி
- (C) (1) மற்றும் (3) சரி
- (D) (2) மற்றும் (3) சரி
விடையைக் காண்க
விடை: (D) (2) மற்றும் (3) சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் 1918-ல் (பி.பி. வாடியா) தொடங்கப்பட்டது - சரி. முதல் இனவாரி ஒதுக்கீட்டு அரசாணை நீதிக்கட்சி அரசால் 1921-ல் வெளியிடப்பட்டது - சரி. தென்னிந்திய நல உரிமைக் கழகம் 1916-ல் தொடங்கப்பட்டது (1950 அல்ல); இந்து சமய அறநிலையச் சட்டம் 1926-ல் வந்தது (1930 அல்ல).
- (A) 1548.8 செ.மீ²
- (B) 1558.8 செ.மீ²
- (C) 1538.8 செ.மீ²
- (D) 1528.8 செ.மீ²
விடையைக் காண்க
விடை: (B) 1558.8 செ.மீ² – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பக்கம் = 180 / 3 = 60 செ.மீ. பரப்பு = (√3 / 4) × பக்கம்² = (1.732 / 4) × 3600 = 1.732 × 900 = 1558.8 செ.மீ².
- (A) 1612 சதுர அடிகள்
- (B) 1522 சதுர அடிகள்
- (C) 1512 சதுர அடிகள்
- (D) 1622 சதுர அடிகள்
விடையைக் காண்க
விடை: (C) 1512 சதுர அடிகள் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒவ்வொரு கயிறும் = 84 / 2 = 42 அடி. நான்கு கால்வட்டங்கள் = ஒரு முழு வட்டம் = (22/7) × 42 × 42 = 5544 ச.அடி. சதுரப் பரப்பு = 84 × 84 = 7056 ச.அடி. மேயாத பரப்பு = 7056 - 5544 = 1512 ச.அடி.
- (A) ரூ. 14,000
- (B) ரூ. 11,400
- (C) ரூ. 12,000
- (D) ரூ. 12,200
விடையைக் காண்க
விடை: (C) ரூ. 12,000 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தனிவட்டி: மொத்த வட்டி வீதம் = 6 × 2 + 9 × 3 + 14 × 4 = 12 + 27 + 56 = 95%. எனவே P-இன் 95% = 11,400; P = 11,400 × 100 / 95 = ரூ. 12,000.
- (A) 81
- (B) 84
- (C) 83
- (D) 48
விடையைக் காண்க
விடை: (D) 48 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பால் = 72 × 5/8 = 45 லி, நீர் = 27 லி. விகிதம் 3 : 5 ஆக நீர் = 45 × 5/3 = 75 லி வேண்டும். சேர்க்க வேண்டிய நீர் = 75 − 27 = 48 லி.
(A-ன் பங்கு)/(B-ன் பங்கு) = (B-ன் பங்கு)/(C-ன் பங்கு) = (C-ன் பங்கு)/(D-ன் பங்கு) = 2/3 எனில் A-ன் பங்கு என்ன?
- (A) ரூ. 1,300
- (B) ரூ. 1,000
- (C) ரூ. 640
- (D) ரூ. 780
விடையைக் காண்க
விடை: (C) ரூ. 640 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: A : B = 2 : 3, B : C = 2 : 3, C : D = 2 : 3; எனவே A : B : C : D = 8 : 12 : 18 : 27 (மொத்தம் 65 பங்கு). ஒரு பங்கு = 5200 / 65 = 80; A = 8 × 80 = ரூ. 640.
- (A) 21
- (B) 48
- (C) 14
- (D) 22
விடையைக் காண்க
விடை: (C) 14 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குறைந்தபட்ச சம அடுக்குகளுக்கு மீ.பொ.வ எடுக்க வேண்டும்: மீ.பொ.வ(336, 240, 96) = 48 புத்தகங்கள் ஒரு அடுக்கில். அடுக்குகள் = 7 + 5 + 2 = 14.
- (A) 768
- (B) 652
- (C) 1024
- (D) 512
விடையைக் காண்க
விடை: (A) 768 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 90% - 72% = அந்த எண்ணின் 18% = 256. 54% என்பது 18%-இன் 3 மடங்கு; எனவே 54% = 3 × 256 = 768.
1, 3, 11, 31, 69, .
- (A) 125
- (B) 130
- (C) 131
- (D) 132
விடையைக் காண்க
விடை: (C) 131 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வேறுபாடுகள்: 2, 8, 20, 38; இரண்டாம் வேறுபாடுகள்: 6, 12, 18 (6 கூடுகிறது). அடுத்தது 24; அடுத்த வேறுபாடு 38 + 24 = 62; அடுத்த எண் 69 + 62 = 131.
- (A) 32761
- (B) 81225
- (C) 42438
- (D) 20164
விடையைக் காண்க
விடை: (C) 42438 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒரு வர்க்க எண் 2, 3, 7, 8 என்ற இலக்கங்களில் முடியாது. 42438 என்பது 8-ல் முடிவதால் வர்க்கமாக இருக்க முடியாது. சரிபார்ப்பு: 32761 = 181², 81225 = 285², 20164 = 142².

(படம் சொற்களில் – ஒரே கனசதுரத்தின் மூன்று தோற்றங்கள் (மேல் / இடம் / வலம் முகங்கள்): (i) F / A / D; (ii) E / C / F; (iii) D / A / B)
- (A) A
- (B) D
- (C) E
- (D) F
விடையைக் காண்க
விடை: (D) F – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: F ஆனது A, D (முதல் கனசதுரம்), E, C (இரண்டாம் கனசதுரம்) ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது. எனவே F-க்கு எதிரில் இருக்கக்கூடியது B மட்டுமே. B மேலே இருந்தால் F கீழே (எதிர்ப்பக்கம்) இருக்கும்.
- (A) ஞாயிறு
- (B) சனி
- (C) திங்கள்
- (D) புதன்
விடையைக் காண்க
விடை: (D) புதன் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 75 நாட்கள் = 10 வாரங்கள் + 5 நாட்கள். திங்களிலிருந்து 5 நாட்கள் பின்னோக்கி: ஞாயிறு, சனி, வெள்ளி, வியாழன், புதன். எனவே புதன்கிழமை.
P O L I C M A N T
1 2 3 4 5 6 7 8 9
- (A) 2, 5, 6, 7, 1, 4, 8, 3, 9
- (B) 5, 2, 7, 1, 6, 4, 3, 8, 9
- (C) 5, 2, 6, 1, 3, 4, 7, 8, 9
- (D) 2, 5, 1, 6, 7, 3, 8, 4, 9
விடையைக் காண்க
விடை: (C) 5, 2, 6, 1, 3, 4, 7, 8, 9 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: விடை C-ஐ மாற்றினால்: 5-C, 2-O, 6-M, 1-P, 3-L, 4-I, 7-A, 8-N, 9-T = COMPLIANT என்ற பொருளுள்ள சொல் கிடைக்கிறது. மற்றவை OCMAPINLT, COAPMILNT, OCPMALNIT - பொருளற்றவை.
பகுதி இ – பொதுத் தமிழ் (வினா 101–200)
வினாக்கள் 101–125
- (A) இனி செய்யலாம்
- (B) மற்றை செல்வம்
- (C) இன்றிகொடேன்
- (D) தேச பக்தி
விடையைக் காண்க
விடை: (D) தேச பக்தி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இரண்டு வடசொற்கள் சேர்ந்த தொடரில் வல்லினம் மிகாது; எனவே 'தேச பக்தி' பிழையற்றது. 'இனி' பின் வலி மிகும் (இனிச் செய்யலாம்); 'மற்றை' பின் வலி மிகும் (மற்றைச் செல்வம்); 'இன்றி' என்னும் இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலி மிகும் (இன்றிக் கொடேன்).
- (A) கடைகால்
- (B) கத்தரிக்கோல்
- (C) ஐந்நூறு
- (D) ஆவாரம்பூ
விடையைக் காண்க
விடை: (D) ஆவாரம்பூ – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
இவ்வினாவுக்கு எங்கள் ஆசிரியர்களின் விடை வேறு; சான்றுடன் கூடிய காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில் உள்ளன. இறுதி முடிவு TNPSC இறுதி விடைக்குறிப்பில்.
- (A) உரிச்சொல்
- (B) இடைச்சொல்
- (C) பெயர்ச்சொல்
- (D) வினைச்சொல்
விடையைக் காண்க
விடை: (D) வினைச்சொல் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: செயலையும் காலத்தையும் காட்டுவது வினைச்சொல்; அது வேற்றுமை உருபை ஏற்காது (தொல்காப்பியம்: 'வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்'). பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்கும்; இடைச்சொல், உரிச்சொல் காலம் காட்டா.
- (A) இயல்பு
- (B) குற்றம்
- (C) பெய்யாது
- (D) பெய்யும்
விடையைக் காண்க
விடை: (D) பெய்யும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'வறக்குமேல்' = மழை பெய்யாமல் வறண்டு போனால் (திருக்குறள் 18: 'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு'). அதன் எதிர்ச்சொல் 'பெய்யும்'. 'பெய்யாது' என்பது அதே பொருள் (ஒத்த சொல்); எதிர்ச்சொல் அல்ல.
- (A) இறந்தகால பெயரெச்சம்
- (B) நிகழ்கால பெயரெச்சம்
- (C) எதிர்கால பெயரெச்சம்
- (D) ஈறுகெடாத பெயரெச்சம்
விடையைக் காண்க
விடை: (B) நிகழ்கால பெயரெச்சம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'படிக்கின்ற' என்பதில் 'கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை உள்ளது; அது 'பையன்' என்னும் பெயரைக் கொண்டு முடிகிறது. எனவே இது நிகழ்காலப் பெயரெச்சம். (படித்த – இறந்தகாலம், படிக்கும் – எதிர்காலம்.)
- (A) செல்க
- (B) செல்கிறான்
- (C) செல்வான்
- (D) சென்றவன்
விடையைக் காண்க
விடை: (D) சென்றவன் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வினையாலணையும் பெயர் = வினையைச் செய்தவரைக் குறிக்கும் பெயர்; அது வேற்றுமை உருபை ஏற்கும் (சென்றவனை, சென்றவனுக்கு). 'சென்றவன்' (சென்ற + அவன்) இதற்கு எடுத்துக்காட்டு. 'செல்க' வியங்கோள் வினைமுற்று; 'செல்கிறான்', 'செல்வான்' தெரிநிலை வினைமுற்றுகள்.
- (A) ஓடி விழுந்தது
- (B) ஓடா
- (C) ஓடிய
- (D) ஓடாது
விடையைக் காண்க
விடை: (A) ஓடி விழுந்தது – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'ஓடி' என்பது வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம் (ஓடி விழுந்தது). 'ஓடிய' பெயரைக் கொண்டு முடியும் பெயரெச்சம்; 'ஓடா' எதிர்மறைப் பெயரெச்சம்; 'ஓடாது' இங்கு எதிர்மறை வினைமுற்றாகத் தனித்து நிற்கிறது.
- (A) நடவாமல்
- (B) நடக்கா
- (C) நடந்தான்
- (D) நடந்து
விடையைக் காண்க
விடை: (C) நடந்தான் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'நடந்தான்' = நட + த்(ந்) + த் + ஆன் – திணை, பால், காலம் காட்டி முழுமை பெற்ற வினைமுற்று. 'நடந்து', 'நடவாமல்' வினையெச்சங்கள்; 'நடக்கா' எதிர்மறைப் பெயரெச்சம் / எச்சம்.
முரி, முறி
- (A) வளைவு, தளிர்
- (B) முற்றம், உடல்
- (C) முள், மரம்
- (D) கடல், மரம்
விடையைக் காண்க
விடை: (A) வளைவு, தளிர் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: முரி (இடையின ர) = வளைவு/ஒடிவு; முறி (வல்லின ற) = தளிர் (இளந்தளிர்). மற்ற இணைகள் இவ்விரு சொற்களுக்கும் பொருந்தாதவை.
- (A) மூளை
- (B) மூலை
- (C) அகப்பை
- (D) மூங்கில்
விடையைக் காண்க
விடை: (C) அகப்பை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'மூழை' (ழகரம்) = அகப்பை (கரண்டி). 'மூளை' (ளகரம்) = தலைக்குள் உள்ள உறுப்பு; 'மூலை' (லகரம்) = கோணம். ஒலி ஒத்திருந்தாலும் பொருள் வேறு.
த, தா
- (A) அரண், வலிமை
- (B) குபேரன், வலி
- (C) தந்தை, தாகம்
- (D) தளிர், கடவுள்
விடையைக் காண்க
விடை: (B) குபேரன், வலி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நிகண்டு வழக்கில் 'த' = குபேரன் (நான்முகன் எனவும்); 'தா' = வலி, வருத்தம் (கொடு என்னும் ஏவலும் உண்டு). எனவே 'குபேரன், வலி'. 'தந்தை, தாகம்' போன்றவை ஒலி ஒற்றுமையால் வைத்த கவனச்சிதறல்கள்.
பிழையான தொடரைத் தேர்ந்தெடு
- (A) தமிழ்ச்சொல்
- (B) நேர்க்கோடு
- (C) மாற்றுப்பெயர்
- (D) வெந்நீர்க் காய்ச்சு
விடையைக் காண்க
விடை: (D) வெந்நீர்க் காய்ச்சு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'வெந்நீர் காய்ச்சு' = வெந்நீரைக் காய்ச்சு – இரண்டாம் வேற்றுமைத் தொகை; இதில் வல்லினம் மிகாது. ஆகவே 'வெந்நீர்க் காய்ச்சு' பிழை. தமிழ்ச்சொல், நேர்க்கோடு, மாற்றுப்பெயர் – வலி மிகுந்து சரியாக உள்ளன.
- (A) நிலம்
- (B) காற்று
- (C) கடல்
- (D) வெள்ளம்
விடையைக் காண்க
விடை: (C) கடல் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: புணரி, ஆர்கலி, பௌவம், முந்நீர், அளக்கர், பரவை – இவை அனைத்தும் கடலைக் குறிக்கும் சொற்கள். ஆர்கலி = ஆரவாரத்துடன் ஒலிப்பது (கடல்).
| (a) மா | 1. கட்டுதல் |
| (b) ப | 2. கால்பங்கு |
| (c) யா | 3. சா |
| (d) வ | 4. மரணம் |
- (A) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (B) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (C) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
- (D) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
விடையைக் காண்க
விடை: (D) (a) 4 (b) 3 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
| (a) கழிசடை | 1. சுமையடை |
| (b) அப்பாவி | 2. வெண்கலம் |
| (c) வெங்கலம் | 3. கழியாடை |
| (d) சும்மாடு | 4. அற்ப ஆவி |
- (A) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (B) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
- (C) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (D) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (D) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கழிசடை ← கழியாடை (கழித்த ஆடை) – 3; அப்பாவி ← அற்ப ஆவி – 4; வெங்கலம் ← வெண்கலம் – 2; சும்மாடு ← சுமையடை (சுமை தாங்கும் அடை) – 1. எனவே 3, 4, 2, 1.
உபசரிப்பு
- (A) இன்முகம்
- (B) விருந்தோம்பல்
- (C) நகையாடல்
- (D) வரவேற்றல்
விடையைக் காண்க
விடை: (B) விருந்தோம்பல் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'உபசரிப்பு' (உபசாரம்) = வந்தவரை அன்போடு பேணி உணவளித்து மகிழ்வித்தல்; இதற்கு இணையான தமிழ்ச்சொல் 'விருந்தோம்பல்'. 'வரவேற்றல்' உபசரிப்பின் தொடக்கம் மட்டுமே; 'இன்முகம்' அதன் ஒரு பண்பு; 'நகையாடல்' = கேலி.
- (A) தாமரை, மாமரம்
- (B) பறவை, நெல்லி
- (C) குரங்கு, பூந்தாது
- (D) கூகை, அரசு
விடையைக் காண்க
விடை: (B) பறவை, நெல்லி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
- (A) ஆழி – மோதிரம், கடல்
- (B) ஆறு – வழி, எண்
- (C) தாமரை – மலர், மான்
- (D) வேங்கை – புலி, அளி
விடையைக் காண்க
விடை: (D) வேங்கை – புலி, அளி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
இவ்வினாவுக்கு எங்கள் ஆசிரியர்களின் விடை வேறு; சான்றுடன் கூடிய காரணங்கள் விடைக்குறிப்புப் பக்கத்தில் உள்ளன. இறுதி முடிவு TNPSC இறுதி விடைக்குறிப்பில்.
- (A) எற்றி
- (B) கொற்றி
- (C) கோட்டி
- (D) ஏற்றி
விடையைக் காண்க
விடை: (B) கொற்றி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'கொற்றி' = கொற்றவை (துர்க்கை); அதே சொல் இளம்பசு / பசுவின் இளங்கன்றையும் குறிக்கும். கோட்டி = அவை/கூட்டம்; எற்றி, ஏற்றி – வினையெச்சங்கள்; இவை இவ்விரு பொருள்களையும் தருவதில்லை.
| (a) வனப்பு | 1. இனிமை |
| (b) பிடி | 2. அழகு |
| (c) மருங்கு | 3. பெண் யானை |
| (d) வீறு | 4. பக்கம் |
| (e) மதுரம் | 5. வலிமை |
- (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 5 (e) 1
- (B) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (e) 5
- (C) (a) 3 (b) 1 (c) 2 (d) 4 (e) 5
- (D) (a) 1 (b) 3 (c) 2 (d) 5 (e) 4
விடையைக் காண்க
விடை: (A) (a) 2 (b) 3 (c) 4 (d) 5 (e) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வனப்பு = அழகு (2); பிடி = பெண் யானை (3); மருங்கு = பக்கம் (4); வீறு = வலிமை/பெருமை (5); மதுரம் = இனிமை (1). எனவே 2, 3, 4, 5, 1 – விடை A.
| (a) “ம” – வருக்கத்தில் | 1. ஐந்து |
| (b) “ந” – வருக்கங்களில் | 2. ஒன்று |
| (c) “ச” – வருக்கங்களில் | 3. ஆறு |
| (d) “ய” – வருக்கத்தில் | 4. நான்கு |
- (A) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (B) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
விடையைக் காண்க
விடை: (D) (a) 3 (b) 1 (c) 4 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நன்னூல் (நூ.129): 'உயிர்மவில் ஆறும் தபநவில் ஐந்தும் கவசவில் நாலும் யவ்வில் ஒன்றும்...'. ம வருக்கம் – ஆறு (3); ந வருக்கம் – ஐந்து (1); ச வருக்கம் – நான்கு (4); ய வருக்கம் – ஒன்று (2). விடை D (3, 1, 4, 2).
| (a) வளை | 1. அறைதல் |
| (b) உள்ளம் | 2. முதிர் |
| (c) நரை | 3. நெகிழ்தல் |
| (d) தண்ணுமை | 4. மெலிதல் |
- (A) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (C) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
- (D) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
விடையைக் காண்க
விடை: (A) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வளை நெகிழ்தல் (பிரிவுத் துயரால் கைவளை கழலுதல்) – 3; உள்ளம் மெலிதல் – 4; நரை முதிர் (முதுமை) – 2; தண்ணுமை (முழவு/பறை) அறைதல் – 1. எனவே 3 4 2 1.
- (A) அகவும்
- (B) முரலும்
- (C) கத்தும்
- (D) கனைக்கும்
விடையைக் காண்க
விடை: (A) அகவும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஒலி மரபு: மயில் அகவும்; வண்டு முரலும்; குதிரை கனைக்கும்; ஆடு/ தவளை கத்தும். எனவே மயிலுக்கு 'அகவும்'.
| (a) இறப்பாவது | 1. தொழில் பிறவாமை |
| (b) நிகழ்வாவது | 2. இறப்பி னிகழ்வின் எதிர்வின் |
| (c) எதிர்வாவது | 3. தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை |
| (d) முக்காலம் | 4. தொழிலது கழிவு |
- (A) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (B) (a) 1 (b) 2 (c) 4 (d) 3
- (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (D) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இறந்தகாலம் = தொழில் முடிந்து கழிந்தது (தொழிலது கழிவு) – 4; நிகழ்காலம் = தொழில் தொடங்கி முற்றுப்பெறாத நிலை – 3; எதிர்காலம் = தொழில் இன்னும் பிறவாமை – 1; முக்காலம் = இறப்பு, நிகழ்வு, எதிர்வு – 2. எனவே 4, 3, 1, 2.
காரணம் : அரசர் என்று எழுதும்போது மரியாதைப் பன்மைக்காக ‘கள்’ விகுதி வரும்.
- (A) உறுதிக் கூற்று சரி, காரணம் தவறு
- (B) உறுதிக் கூற்று தவறு, காரணம் சரி
- (C) உறுதிக் கூற்று, காரணம் இரண்டும் சரி
- (D) உறுதிக் கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடையைக் காண்க
விடை: (C) உறுதிக் கூற்று, காரணம் இரண்டும் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அர், ஆர், மார் விகுதிகள் பலர்பால் காட்டினாலும் அரசர்கள், தாய்மார்கள் எனக் 'கள்' சேர்த்து எழுதும் வழக்கம் உண்டு – கூற்று சரி. 'அரசர்' இன்று ஒருவரையே மதித்துக் குறிக்கும் மரியாதைப் பன்மையாக வழங்குவதால் பலரைக் குறிக்கக் 'கள்' சேர்க்கப்படுகிறது; மேலும் 'அமைச்சர் அவர்கள்' போல மரியாதைக்கும் 'கள்' வருகிறது – தேர்வாளர் நோக்கில் காரணமும் சரி.
வினாக்கள் 126–150
- (A) உயர்திணை ஆண்பால்
- (B) அஃறிணை ஆண்பால்
- (C) விரவு திணை
- (D) உயர்திணை பெண்பால்
விடையைக் காண்க
விடை: (A) உயர்திணை ஆண்பால் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'கொற்றன்' விரவுப்பெயராக இருந்தாலும், 'வந்தான்' என்னும் 'ஆன்' விகுதி வினைமுற்று உயர்திணை ஆண்பாலை உறுதிப்படுத்துகிறது. 'வந்தது' என்றால்தான் அஃறிணை. எனவே உயர்திணை ஆண்பால்.
| (a) கண்மை | 1. 6-ம் வேற்றுமை உருபு |
| (b) நகைப்பெட்டி | 2. உவம உருபு |
| (c) அரசன் வாள் | 3. 4-ம் வேற்றுமை உருபு |
| (d) கனியிதழ் | 4. 2-ம் வேற்றுமை உருபு |
- (A) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (B) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
விடையைக் காண்க
விடை: (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கண்மை = கண்ணுக்கு இடும் மை ('கு' – 4ஆம் வேற்றுமை) – 3; நகைப்பெட்டி = நகையை வைக்கும் பெட்டி ('ஐ' – 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கது) – 4; அரசன் வாள் = அரசனது வாள் ('அது' – 6ஆம் வேற்றுமை) – 1; கனியிதழ் = கனி போன்ற இதழ் (உவமத்தொகை) – 2. விடை 3, 4, 1, 2.
தன்கிளை செறாஅமை அன்பு எனப்படுவது
- (A) அன்பு தன்கிளை எனப்படுவது செறாஅமை
- (B) அன்பு செறாஅமை எனப்படுவது தன்கிளை
- (C) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
- (D) தன்கிளை செறாமை எனப்படுவது அன்பு
விடையைக் காண்க
விடை: (C) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கலித்தொகை (நெய்தல் கலி 133) வரி: 'அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை' – அன்பு என்பது தன் சுற்றத்தாரை வெறுக்காமை. எனவே 'அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை'. D-இல் 'செறாமை' என அளபெடை மாறியுள்ளதால், கொடுத்த சொற்களைக் கொண்டு அமைந்தது அல்ல.
Astronomical triangle
- (A) வெடிப்பு முக்கோணம்
- (B) மண்ணியல் முக்கோணம்
- (C) விண் முக்கோணம்
- (D) வளிமண்டல முக்கோணம்
விடையைக் காண்க
விடை: (C) விண் முக்கோணம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Astronomical = வானியல்/விண் சார்ந்த; ஆகவே Astronomical triangle = விண் முக்கோணம். மண்ணியல் = geological; வளிமண்டலம் = atmosphere; வெடிப்பு = explosion/fracture – பொருந்தா.
- (A) விளக்கெண்ணெய்
- (B) சூரியகாந்தி எண்ணெய்
- (C) ஆமணக்கு எண்ணெய்
- (D) பனை எண்ணெய்
விடையைக் காண்க
விடை: (B) சூரியகாந்தி எண்ணெய் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Madia oil என்பது சூரியகாந்திக் குடும்பத்தைச் (Asteraceae) சேர்ந்த Madia sativa விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்; பொருந்துவது 'சூரியகாந்தி எண்ணெய்'. விளக்கெண்ணெயும் ஆமணக்கு எண்ணெயும் ஒன்றே (castor oil) – இரண்டும் விலகும்; பனை எண்ணெய் = palm oil.
Tyloses
- (A) குமிழ்கள்
- (B) பள்ளங்கள்
- (C) குழிகள்
- (D) வெடிப்புகள்
விடையைக் காண்க
விடை: (A) குமிழ்கள் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Tyloses = சைலக் குழாய்களுக்குள் பலூன் போல் உப்பி வளரும் புறவளர்ச்சிகள்; தமிழில் 'குமிழ்கள்'. குழிகள் (pits), பள்ளங்கள், வெடிப்புகள் (cracks) பொருந்தா.
- (A) நோய்ப்பரப்பிகள்
- (B) உச்சிக் குழிவு
- (C) பெருந்துளை
- (D) தவளைச் சொறி
விடையைக் காண்க
விடை: (A) நோய்ப்பரப்பிகள் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Fomites = நோய்க்கிருமிகளைச் சுமந்து பரப்பும் உயிரற்ற பொருள்கள் (துணி, பாத்திரம் போன்றவை) – நோய்ப்பரப்பிகள். உச்சிக் குழிவு = Fontanelle; பெருந்துளை = Foramen magnum – பொருந்தா.
| (a) Cadaver | 1. அழுகல் புண் |
| (b) Cacosmia | 2. வாய்நாற்றம் |
| (c) Canites | 3. உயிரற்ற உடல் |
| (d) Cancrum | 4. நரைமுடி |
- (A) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (B) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
- (C) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (D) (a) 2 (b) 4 (c) 3 (d) 1
விடையைக் காண்க
விடை: (B) (a) 3 (b) 2 (c) 4 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Cadaver = உயிரற்ற உடல் (3); Cacosmia = கெட்ட நாற்றம் – வாய்நாற்றம் (2); Canities = நரைமுடி (4); Cancrum = அழுகல் புண் (1, எ.கா. cancrum oris). விடை B (3, 2, 4, 1).
- (A) உணர்ச்சி வெளிப்படும்
- (B) உணர்ச்சி மறைந்திருக்கும்
- (C) உணர்ச்சி இல்லை
- (D) உணர்ச்சி மாறுபடும்
விடையைக் காண்க
விடை: (B) உணர்ச்சி மறைந்திருக்கும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: சாம்பல் (நீறு) மூடிய நெருப்பு வெளியே தெரியாவிட்டாலும் உள்ளே கனன்றுகொண்டிருக்கும்; அதுபோல உள்ளே உணர்ச்சி வெளிப்படாமல் மறைந்திருக்கும் நிலையை இவ்வுவமை குறிக்கிறது.
| பழமொழிகள் | பொருள் |
| (a) இட்டுக் கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை | 1. இறைவனின் திருவடி மகிமை |
| (b) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது | 2. எதிலும் நன்மை |
| (c) இருகினால் களி; இளகினால் கூழ் | 3. கல்வியின் சிறப்பு |
| (d) அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டான் | 4. ஈகையின் சிறப்பு |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: (a) இட்டுக் கெட்டார் இல்லை – ஈகையின் சிறப்பு (4); (c) இருகினால் களி, இளகினால் கூழ் – எப்படியானாலும் பயன் – எதிலும் நன்மை (2); (d) 'அடி' = இறைவன் திருவடி – திருவடி மகிமை (1); மீதமுள்ள (b) – 3. எனவே 4 3 2 1. D-யில் (c)=3 பொருந்தாது.
- (A) உறவு நீடிக்க உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்
- (B) யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது
- (C) உறவினர்கள் அனைவரும் கெட்டவர்கள்
- (D) எவ்வளவு கொடுத்தாலும் உறவினர்கள் கடன் கேட்பார்கள்
விடையைக் காண்க
விடை: (A) உறவு நீடிக்க உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உறவினர் வீட்டுக்குப் போய் வராவிட்டால் உறவு கெடும்; கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்காவிட்டால் கடன் கெடும் (திரும்பாது). எனவே உறவு நீடிக்கத் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பொருள். மற்ற விடைகள் பழமொழியின் கருத்துக்கு மாறானவை.
- (A) தடையின்றி மிகுதியாய்
- (B) தெள்ளத்தெளிவாக
- (C) வெளிப்படை தன்மை
- (D) எளிதில் புரியும்
விடையைக் காண்க
விடை: (A) தடையின்றி மிகுதியாய் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: மடை திறந்தவுடன் வெள்ளம் தடையின்றிப் பெருகிப் பாய்வதுபோல அண்ணாவின் பேச்சு தடையின்றி மிகுதியாக வெளிப்படும் என்பது பொருள்.
| மரபுத் தொடர்கள் | பொருள் |
| (a) கக்கல் கரிசல் | 1. தளர்தல் |
| (b) கடைத்தேறுதல் | 2. கலங்கல் நீர் |
| (c) கட்டுடைதல் | 3. தூங்குதல் |
| (d) கண் வளர்தல் | 4. ஈடேறுதல் |
- (A) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
- (B) (a) 1 (b) 2 (c) 4 (d) 3
- (C) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (D) (a) 2 (b) 1 (c) 3 (d) 4
விடையைக் காண்க
விடை: (A) (a) 2 (b) 4 (c) 1 (d) 3 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கடைத்தேறுதல் = ஈடேறுதல் (4); கட்டுடைதல் = தளர்தல் (1); கண் வளர்தல் = தூங்குதல் (3); கக்கல் கரிசல் = கலங்கிய கசடு நீர் (2). b=4, c=1, d=3 பொருந்தும் ஒரே விருப்பம் A.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. [139 – 143]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் என்று இன்றும் நினைவுகூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபால கிருஷ்ண பாரதியார், ‘நீயே புருஷ மேரு...’ என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். இவர் மொழிபெயர்ப்பாளராகவும், நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய இவர், ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கரகம்’ என்ற நூலாக வெளியிட்டார். அவர்தான் நீதிபதி மாயூரம் வேதநாயகம்.
வினாக்கள் :
- (A) சென்னை
- (B) காஞ்சிபுரம்
- (C) மாயவரம்
- (D) சிதம்பரம்
விடையைக் காண்க
விடை: (C) மாயவரம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பத்தியில் 'மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய இவர்' என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது. மாயவரம் = இன்றைய மயிலாடுதுறை; அதனால்தான் 'மாயூரம்' வேதநாயகம்.
- (A) கோபால கிருஷ்ண பாரதியார்
- (B) பிரதாப முதலியார்
- (C) மாயூரம் வேதநாயகம்
- (D) சுத்தானந்த பாரதியார்
விடையைக் காண்க
விடை: (A) கோபால கிருஷ்ண பாரதியார் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பத்தியின்படி வேதநாயகரைப் போற்றி 'நீயே புருஷ மேரு...' என்ற பாடலை இயற்றியவர் கோபாலகிருஷ்ண பாரதியார் (நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆசிரியர்). பிரதாப முதலியார் நாவலின் கதைமாந்தர்; வேதநாயகம் புகழப்பட்டவர்.
- (A) தமிழ்
- (B) தெலுங்கு
- (C) மலையாளம்
- (D) ஆங்கிலம்
விடையைக் காண்க
விடை: (A) தமிழ் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பத்தியில் 'மனம் பொறுக்காத தமிழர் ஒருவர்... அவர்தான் நீதிபதி மாயூரம் வேதநாயகம்' எனக் கூறப்பட்டுள்ளது. தமிழின் முதல் நாவலை எழுதிய அவரது தாய்மொழி தமிழ்.
- (A) பிரதாப முதலியார் சரித்திரம்
- (B) சித்தாந்த சங்கிரகம்
- (C) நீயே புருஷ மேரு
- (D) நீதிமன்ற தீர்ப்புகள்
விடையைக் காண்க
விடை: (B) சித்தாந்த சங்கிரகம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வேதநாயகம் வெளியிட்ட நூல் 'சித்தாந்த சங்கிரகம்'. 'பிரதாப முதலியார் சரித்திரம்' அவரது நாவல்; 'நீயே புருஷ மேரு' கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்.
- (A) 21 ஆம் நூற்றாண்டு
- (B) 19 ஆம் நூற்றாண்டு
- (C) 20 ஆம் நூற்றாண்டு
- (D) 18 ஆம் நூற்றாண்டு
விடையைக் காண்க
விடை: (B) 19 ஆம் நூற்றாண்டு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பத்தி 19-ஆம் நூற்றாண்டின் தாது வருடப் பஞ்சத்தோடு (1876–78) அவரைத் தொடர்புபடுத்துகிறது. வேதநாயகம் பிள்ளை (1826–1889) வாழ்ந்தது 19-ஆம் நூற்றாண்டு; பிரதாப முதலியார் சரித்திரம் 1879-ல் வெளியானது.
- (A) தயிர்ச்சோறு (பழத் துண்டுகள் உடையது)
- (B) எலுமிச்சம் சோறு (வேர்க்கடலை உடையது)
- (C) குருமா (காய்கறிகள் உடையது)
- (D) பிரியாணி (முந்திரிப் பருப்பு உடையது)
விடையைக் காண்க
விடை: (A) தயிர்ச்சோறு (பழத் துண்டுகள் உடையது) – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'பகளாபாத்' (பகாளாபாத்) = தயிர்ச்சோறு; திராட்சை, மாதுளை போன்ற பழத் துண்டுகள் சேர்த்துச் செய்யப்படுவது. எலுமிச்சம் சோறு, குருமா, பிரியாணி – வேறு உணவுகள்.
- (A) மறை
- (B) மல்யுத்தம்
- (C) மற்போர்
- (D) பிணை
விடையைக் காண்க
விடை: (B) மல்யுத்தம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'மல்யுத்தம்' என்பதில் 'யுத்தம்' வடமொழிச் சொல் (தமிழில் 'போர்'). இதற்கு இணையான தூய தமிழ்ச் சொல் 'மற்போர்'. மறை, பிணை ஆகியவை தமிழ்ச் சொற்கள்.
- (A) ஈரோடு தமிழன்பன்
- (B) அப்துல் ரகுமான்
- (C) தமிழ் ஒளி
- (D) மீரா
விடையைக் காண்க
விடை: (C) தமிழ் ஒளி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'வீராயி' காவியம், 'மே தினமே வருக' ஆகியவை பாரதிதாசனின் மாணவரும் பொதுவுடைமைக் கவிஞருமான கவிஞர் தமிழ் ஒளி எழுதியவை.
கூற்று 1. ஜார்ஜ் யுக்லோ போப் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர்
கூற்று 2. 19 ஆவது வயதில் சமயப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கூற்று 3. சாந்தோம் பகுதியில் சமயப் பணியாற்றினார்
கூற்று 4. குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வினா-விடை முறையில் இரு இலக்கண நூல்களை இயற்றினார்
- (A) கூற்று 1, 2, 3, 4 சரி
- (B) கூற்று 1, 2, 3 சரி 4 தவறு
- (C) கூற்று 1, 2, 4 சரி 3 தவறு
- (D) கூற்று 1, 4, 3 சரி 2 தவறு
விடையைக் காண்க
விடை: (A) கூற்று 1, 2, 3, 4 சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பாடநூலின்படி ஜி.யு. போப் 19ஆம் வயதில் சமயப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழகம் வந்தார்; சென்னை சாந்தோமில் சமயப்பணி ஆற்றினார்; பள்ளிக் குழந்தைகளுக்காக வினா–விடை முறையில் இரு இலக்கண நூல்கள் எழுதினார் – 2, 3, 4 சரி. கூற்று 1 உண்மையில் தவறு (போப் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தவர்; பிரான்சு நாட்டவர் அல்ல); ஆனால் நான்கு விடைகளிலும் கூற்று 1 'சரி' என்றே உள்ளதால் TNPSC விடை A.
- (A) கவி ஞாயிறு
- (B) தமிழ் ஞாயிறு
- (C) கலை ஞாயிறு
- (D) மொழி ஞாயிறு
விடையைக் காண்க
விடை: (D) மொழி ஞாயிறு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தேவநேயப் பாவாணர் 'மொழிஞாயிறு' என்று போற்றப்படுகிறார் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர்; 'தமிழ் உலக முதன்மொழி' என நிறுவியவர்).
- (A) இத்தாலி – உரோம்
- (B) போர்ச்சுகீசு – லிசுபன்
- (C) இங்கிலாந்து – வின்செஸ்டர்
- (D) ஜெர்மன் – பெர்லின்
விடையைக் காண்க
விடை: (B) போர்ச்சுகீசு – லிசுபன் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'கார்டிலா' (Cartilha) என்னும் போர்த்துகீசிய சமய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1554-இல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரோமன் எழுத்தில் அச்சிடப்பட்டது – அச்சேறிய முதல் தமிழ் நூல். ஆகவே போர்ச்சுகீசு – லிசுபன்.
உரையாமை செல்லும் உணர்வு”.
– இச்செய்யுளடிகள் இடம்பெறும் நூலைக் கண்டறிக.
- (A) நாலடியார்
- (B) நான்மணிக்கடிகை
- (C) திருக்குறள்
- (D) சிறுபஞ்சமூலம்
விடையைக் காண்க
விடை: (D) சிறுபஞ்சமூலம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு' – இவ்வடிகள் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் நூலில் உள்ளன (பதினெண் கீழ்க்கணக்கு நூல்). நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் அல்ல.
வினாக்கள் 151–175
1. ஆசாரக் கோவை – கபிலர்
2. பழமொழி – முன்றுறை அரையனார்
3. நான்மணிக்கடிகை – பெருவாயின் முள்ளியார்
4. இன்னா நாற்பது – விளம்பிநாகனார்
- (A) 1 - சரி
- (B) 2 - சரி
- (C) 3 - சரி
- (D) 4 - சரி
விடையைக் காண்க
விடை: (B) 2 - சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பழமொழி நானூறு நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார் – எனவே இணை 2 சரி. மற்றவை தவறு: ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்; நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்; இன்னா நாற்பது – கபிலர். கேள்வியில் ஆசிரியர் பெயர்கள் இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.
நெட்டிலை
- (A) நெடுமை + இலை
- (B) நெட்டி + இலை
- (C) நெடு + இலை
- (D) நெ + இலை
விடையைக் காண்க
விடை: (A) நெடுமை + இலை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நெட்டிலை = நெடுமை + இலை. பண்புப்பெயர்ப் புணர்ச்சி: ஈறுபோதல் (நெடுமை → நெடு), தன்னொற்று இரட்டல் (நெடு → நெட்டு), 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' (நெட்ட் + இலை), 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' (நெட்டிலை). மூலச்சொல் 'நெடுமை'.
“மீன் + கண்” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
- (A) மீட்கண்
- (B) மீன்கண்
- (C) மீங்கண்
- (D) மீற்கண்
விடையைக் காண்க
விடை: (D) மீற்கண் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: மீன் + கண் = 'மீனின் கண்' (ஆறாம் வேற்றுமைப் புணர்ச்சி). நன்னூல் விதி 'ணனவல்லினம் வரட் டறவும்' – னகர ஈற்றின் முன் வல்லினம் வந்தால் ன் → ற் ஆகும் (பொன் + குடம் = பொற்குடம்); எனவே மீற்கண். மீட்கண் (ண் → ட்) ணகர ஈற்றுக்கு உரியது; மீங்கண் எவ்விதிக்கும் பொருந்தாது. வழக்கில் உள்ள 'மீன்கண்' அல்வழி/உறழ்ச்சி வடிவம்; விதியைச் சோதிக்கும் வினா என்பதால் D.
அருந்து, அறுந்து
- (A) குடி, துண்டுபட்டு
- (B) மருந்து, விருந்து
- (C) பக்கம், விழுந்து
- (D) மாற்று, குடித்தல்
விடையைக் காண்க
விடை: (A) குடி, துண்டுபட்டு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அருந்து (இடையின ர) = குடி / உண்; அறுந்து (வல்லின ற) = துண்டுபட்டு (கயிறு அறுந்தது). ர/ற ஒலி வேறுபாட்டுச் சொற்கள். பிற விடைகள் இரண்டு சொற்களின் பொருளையும் தரவில்லை.
‘குணக்கு’
- (A) வடக்கு
- (B) தெற்கு
- (C) குடக்கு
- (D) கொடுக்கு
விடையைக் காண்க
விடை: (C) குடக்கு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குணக்கு = கிழக்கு; குடக்கு = மேற்கு. எனவே குணக்கு என்பதன் எதிர்ச்சொல் குடக்கு. (குணகடல் – கிழக்குக் கடல், குடகடல் – மேற்குக் கடல்.) வடக்கு, தெற்கு நேர் எதிர் அல்ல.
| (a) படமாடக் கோயில் | 1. மதம் |
| (b) நடமாடக் கோயில் | 2. நீங்கிய |
| (c) கரடம் | 3. இறைவன் |
| (d) தீர்ந்த | 4. மக்கள் |
- (A) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
- (B) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: திருமூலர் 'படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா' – படமாடக் கோயில் = இறைவன் உருவம் உள்ள கோயில் (3); நடமாடக் கோயில் = நடமாடும் மக்கள் (4). கரடம் = (யானையின்) மதம் (1); தீர்ந்த = நீங்கிய (2). எனவே a-3, b-4, c-1, d-2.
| (a) தெம்மாண்டி | 1. ஆக |
| (b) கோசரம் | 2. விற்பனை |
| (c) ரீதி | 3. அறிவற்றவன் |
| (d) விக்கிரயம் | 4. ஒழுங்கு |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 4 (b) 1 (c) 3 (d) 2
- (C) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (D) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
விடையைக் காண்க
விடை: (D) (a) 3 (b) 1 (c) 4 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தெம்மாண்டி = அறிவற்றவன் (3); கோசரம் = ஆக / பொருட்டு (எ.கா. 'அவனுக்கோசரம்' = அவனுக்காக) (1); ரீதி = ஒழுங்கு / முறை (4); விக்கிரயம் = விற்பனை (2). எனவே a-3, b-1, c-4, d-2.
- (A) நாடு
- (B) நடி
- (C) நட
- (D) நா
விடையைக் காண்க
விடை: (C) நட – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நாடகம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் 'நட' என்று பாவாணர் கூறுகிறார்; நட என்னும் வேர்ச்சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் தோன்றின.
காரணம் : இரு திணைக்கும் பொதுவாய் நின்றது.
- (A) உறுதிக் கூற்று சரி காரணம் தவறு
- (B) உறுதிக் கூற்று தவறு காரணம் சரி
- (C) இரண்டும் சரி
- (D) இரண்டும் தவறு
விடையைக் காண்க
விடை: (C) இரண்டும் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'நீ' முன்னிலை ஒருமைப் பெயர் (பன்மை: நீர், நீங்கள்) – கூற்று சரி. 'நீ' உயர்திணைக்கும் ('நீ வா' – மனிதனிடம்) அஃறிணைக்கும் ('நிலவே நீ வா') பொதுவாக வரும் இருதிணைப் பொதுப்பெயர் – காரணமும் சரி. எனவே இரண்டும் சரி.
- (A) கிளை நுதற்பெயர்
- (B) முறைப்பெயர்
- (C) தொழிற்பெயர்
- (D) சுட்டுப்பெயர்
விடையைக் காண்க
விடை: (D) சுட்டுப்பெயர் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அவன், அவள், அது ஆகியவை 'அ' என்ற சேய்மைச் சுட்டெழுத்தை முதலாகக் கொண்டு ஒருவரை / ஒன்றைச் சுட்டுவதால் சுட்டுப்பெயர்கள். முறைப்பெயர் = அப்பா, அம்மா; தொழிற்பெயர் = படித்தல்; கிளைப்பெயர் = உறவு/குடி சார்ந்தது.
காரணம் : சொற்களில் வல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய மெல்லின எழுத்து வரும்.
- (A) கூற்று சரி, காரணம் தவறு
- (B) கூற்று தவறு, காரணம் சரி
- (C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- (D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
குறிப்பு: TNPSC வினாத்தாளில் விடை (C)-இன் கடைசிச் சொல் அச்சில் ‘சா’ எனத் தெளிவில்லாமல் உள்ளது; பொருள் ‘சரி’ என்பதால் அவ்வாறே தட்டச்சு செய்துள்ளோம்.
விடையைக் காண்க
விடை: (A) கூற்று சரி, காரணம் தவறு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வல்லினம் ஆறும் மெல்லினம் ஆறும் இன எழுத்துகள் – கூற்று சரி. ஆனால் சொற்களில் 'மெல்லின' மெய்யை அடுத்தே அதன் இனமான 'வல்லினம்' வரும் (பங்கு, மஞ்சள், பண்டம், பந்து, பாம்பு, கன்று). காரணத்தில் இது தலைகீழாகக் கூறப்பட்டுள்ளது (க்ங, ச்ஞ என வருவதில்லை) – காரணம் தவறு.
- (A) அடுக்குத் தொடரில் உள்ள சொற்களை தனி தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு.
- (B) அடுக்கு தொடரில் உள்ள சொற்களைத் தனித் தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கும் பொருள் உண்டு.
- (C) அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.
- (D) அடுக்கு தொடரில் உள்ள சொற்களை தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.
விடையைக் காண்க
விடை: (C) அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு. – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: அடுக்குத் தொடர் (த் மிகும்), சொற்களைத் தனித்தனியே (இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' பின் வலி மிகும்), அவற்றுக்குப் பொருள் (நான்காம் வேற்றுமை உருபு 'கு' பின் வலி மிகும்) – இவை அனைத்தும் சரியாக உள்ளது C மட்டுமே. A, D-ல் 'சொற்களை தனி' மிகாமை; B-ல் 'அடுக்கு தொடரில்' பிழை.
- (A) நான்கு + திசை + ஒளிறும் + தமிழ்
- (B) நாற் + றிசை + யொளிறுந் + தமிழ்
- (C) நாற்று + திசை + ஒளிறும் + தமிழ்
- (D) நாற்றிசை + யொளிறுந்தமிழ்
விடையைக் காண்க
விடை: (A) நான்கு + திசை + ஒளிறும் + தமிழ் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நாற்றிசை = நான்கு + திசை (நான்கு → நால் → நாற்; ல் + த → ற்ற). திசை + ஒளிறும் = திசையொளிறும் ('இ ஈ ஐ வழி யவ்வும்' – யகர உடம்படுமெய்). ஒளிறும் + தமிழ் = ஒளிறுந்தமிழ் (மகரம் இனமான நகரமாகத் திரிதல்). 'நாற்று' என்பது நடவு நாற்று – பொருள் தவறு; B, D உடம்படுமெய்யையும் சேர்த்துப் பிரிப்பதால் தவறு.
- (A) பெரி + தின்பம் + உற்றே
- (B) பெரி + தின்பம் + முற்றே
- (C) பெரிதின்பம் + உற்றே
- (D) பெரிது + இன்பம் + உற்றே
விடையைக் காண்க
விடை: (D) பெரிது + இன்பம் + உற்றே – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பெரிது + இன்பம் = பெரிதின்பம் ('உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' – து-வின் உ கெட்டு த் + இ = தி); இன்பம் + உற்றே = இன்பமுற்றே ('உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'). பிற விடைகள் சொல்லைத் தவறாகப் பிரிக்கின்றன (தின்பம், முற்றே என்ற சொற்கள் இல்லை).
- (A) ஓர் கொட்டு கொட்டினான்.
- (B) ஒரு குட்டு கொட்டினான்.
- (C) ஓர் குட்டு கொட்டினான்.
- (D) ஒரு குட்டு குட்டினான்.
விடையைக் காண்க
விடை: (D) ஒரு குட்டு குட்டினான். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஓர்', உயிர்மெய்யில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஒரு' – 'குட்டு' உயிர்மெய்யில் தொடங்குவதால் 'ஒரு குட்டு'. தலையில் விரல் மடக்கி அடிப்பதற்குக் 'குட்டு – குட்டினான்' என்பதே மரபு (கொட்டு = தேள் கொட்டுதல், மேளம் கொட்டுதல்).
- (A) அருமருந்து பிள்ளை
- (B) அரு அன்ன பிள்ளை
- (C) மருந்து பிள்ளை
- (D) அருமந்த பிள்ளை
விடையைக் காண்க
விடை: (D) அருமந்த பிள்ளை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'அருமருந்து அன்ன பிள்ளை' (கிடைத்தற்கரிய மருந்து போன்ற பிள்ளை) என்பது மக்கள் வழக்கில் மருவி 'அருமந்த பிள்ளை' என வழங்குகிறது – இது மரூஉ. மற்ற வடிவங்கள் வழக்கில் இல்லை.
- (A) நினைக்கவும்
- (B) எண்ணவும்
- (C) செப்பவும்
- (D) பகிரவும்
விடையைக் காண்க
விடை: (B) எண்ணவும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ' – எண்ணிக்கைக்குள் அடங்காத ஒன்றை எண்ணவும் இயலுமோ என்பது பொருள். முதற்சீரிலுள்ள 'எண்' என்பதே மீண்டும் வருவது (சொற்பொருள் பின்வருநிலை) இவ்வடியின் நயம்; மோனையும் (எ – எ) பொருந்துகிறது. நினைக்கவும், செப்பவும், பகிரவும் இந்நயத்தைத் தராது.
- (A) குரங்கு
- (B) மூசு
- (C) ஊகம்
- (D) கடுவன்
விடையைக் காண்க
விடை: (D) கடுவன் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குரங்கு, முசு (வினாவில் "மூசு" என அச்சிடப்பட்டுள்ளது), ஊகம் ஆகியவை குரங்கைக் குறிக்கும் பெயர்கள். கடுவன் என்பது ஆண் குரங்கைக் குறிக்கும் பால் பெயர். எனவே பொருந்தாதது கடுவன் – D.
- (A) மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம், தெய்வம், புள், காடுறை உலகம்
- (B) காடுறை உலகம், தீம்புனல் உலகம், தெய்வம், புள், பெருமணல் உலகம், மைவரை உலகம்
- (C) காடுறை உலகம், தெய்வம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம், புள், மைவரை உலகம்
- (D) புள், பெருமணல் உலகம், காடுறை உலகம், தெய்வம், தீம்புனல் உலகம், மைவரை உலகம்
விடையைக் காண்க
விடை: (B) காடுறை உலகம், தீம்புனல் உலகம், தெய்வம், புள், பெருமணல் உலகம், மைவரை உலகம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: முதலெழுத்தின் மெய் வரிசை: க < த < ப < ம. த வரிசையில் தீ (ஈ) முன், தெ (எ) பின் – தீம்புனல், தெய்வம். ப வரிசையில் பு (உ) முன், பெ (எ) பின் – புள், பெருமணல். எனவே காடுறை, தீம்புனல், தெய்வம், புள், பெருமணல், மைவரை.
- (A) வெற்பன்
- (B) தினை
- (C) காயா
- (D) அகில்
விடையைக் காண்க
விடை: (C) காயா – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: வெற்பன் (குறிஞ்சித் தலைவன்), தினை (குறிஞ்சி உணவு), அகில் (குறிஞ்சி மரம்) – மூன்றும் குறிஞ்சித் திணைக் கருப்பொருள்கள். காயா முல்லை நிலப் பூ – எனவே பொருந்தாதது காயா.
காரணம் : வாக்கியத்தில் ஒரே எழுவாயானது பல பயனிலைகளைக் கொள்ளுமாயின் இடையிலுள்ள பயனிலைகளுக்கு அரைப்புள்ளி இட வேண்டும்.
- (A) கூற்று சரி; காரணம் தவறு
- (B) கூற்று தவறு; காரணம் சரி
- (C) கூற்று சரி, காரணம் சரி
- (D) கூற்று தவறு, காரணம் தவறு
விடையைக் காண்க
விடை: (C) கூற்று சரி, காரணம் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இங்கு விடைத் தெரிவுகள் கூற்று சரியா, காரணம் சரியா என்பதை மட்டுமே கேட்கின்றன; "காரணம் கூற்றை விளக்குகிறதா" என்று கேட்கவில்லை. ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொள்ளும்போது இடையில் அரைப்புள்ளி இடுவது பாடநூல் விதி; கூற்றும் சரியாக அமைந்துள்ளது – C.
கூற்று : பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்; அணைகள் பல கட்டினார்; தொழிற்சாலைகள் பல திறந்தார்; தமிழ்நாட்டின் தரத்தை உயர்த்தினார்.
காரணம் : ஒன்றுக்கு ஒன்று மாறான கருத்துக் கொண்ட சிறிய சிறிய வாக்கியங்கள் சேர்ந்து முழுக் கருத்தை விளக்குமானால் ஒவ்வொரு சிறு வாக்கியத்தின் பின்னரும் அரைப்புள்ளியிட வேண்டும்.
- (A) கூற்று சரி; காரணம் சரியன்று
- (B) கூற்று சரியன்று; காரணம் சரி
- (C) கூற்று காரணம் இரண்டும் சரி
- (D) கூற்று காரணம் இரண்டும் சரியன்று
விடையைக் காண்க
விடை: (C) கூற்று காரணம் இரண்டும் சரி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
காரணம் : தொகுப்பாகச் செல்லும் யானைகளை ‘நிரை’ என்று கூறுவதே மரபுப் பெயராகும்.
- (A) கூற்று சரி; காரணம் தவறு
- (B) கூற்று தவறு; காரணம் சரி
- (C) கூற்று சரி; காரணம் சரி
- (D) கூற்று தவறு; காரணம் தவறு
விடையைக் காண்க
விடை: (D) கூற்று தவறு; காரணம் தவறு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தொகுதி மரபுப் பெயர்ப்படி யானைகளின் தொகுதி 'யானைக் கூட்டம்'; 'நிரை' பசுக்களின் தொகுதிக்கு (ஆநிரை) உரியது. எனவே 'யானை நிரை' என்ற கூற்றும், யானைக்கு 'நிரை' மரபு என்ற காரணமும் தவறு.
| இலை வகை | தாவரங்கள் |
| (a) இலை | 1. சோளம் |
| (b) தாள் | 2. தென்னை |
| (c) தோகை | 3. வேம்பு |
| (d) ஓலை | 4. புல் |
- (A) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (C) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (D) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
விடையைக் காண்க
விடை: (B) (a) 3 (b) 4 (c) 1 (d) 2 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இலை – வேம்பு, மா, பலா (3); தாள் – நெல், புல் (4); தோகை – சோளம், கரும்பு (1); ஓலை – தென்னை, பனை (2). எனவே a-3, b-4, c-1, d-2.
| பூவின் நிலைகள் | சொற்கள் |
| (a) பூ விரியத் தொடங்கும் நிலை | 1. செம்மல் |
| (b) பூவின் மலர்ந்த நிலை | 2. வீ |
| (c) மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை | 3. போது |
| (d) பூ வாடின நிலை | 4. மலர் |
- (A) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
- (C) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (D) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
விடையைக் காண்க
விடை: (A) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: பூவின் நிலைகள்: அரும்பு → போது (விரியத் தொடங்கும் நிலை) → மலர் (மலர்ந்த நிலை) → வீ (கீழே விழுந்த நிலை) → செம்மல் (வாடிய நிலை). எனவே a-3, b-4, c-2, d-1.
வினாக்கள் 176–200
- (A) அனுமன் சீதையைத் தேடி வந்தனர்.
- (B) அனுமன் சீதையைத் தேடி வந்தான்.
- (C) அனுமன் சீதையைத் தேடி வந்தார்கள்.
- (D) அனுமன் சீதையைத் தேடி வந்தாள்.
விடையைக் காண்க
விடை: (B) அனுமன் சீதையைத் தேடி வந்தான். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: எழுவாய் 'அனுமன்' – ஆண்பால் ஒருமை; எனவே பயனிலையும் ஆண்பால் ஒருமை 'வந்தான்' ஆக வேண்டும் (திணை, பால், எண் இயைபு). வந்தனர்/வந்தார்கள் – பலர்பால்; வந்தாள் – பெண்பால்.
பாய் – என்ற சொல்லைப் பிறவினையாக்குக.
- (A) பயிற்று
- (B) பாய்ந்து
- (C) பாய்க
- (D) பாய்ச்சு
விடையைக் காண்க
விடை: (D) பாய்ச்சு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தன்வினை 'பாய்' (நீர் பாய்ந்தது) → பிறவினை 'பாய்ச்சு' (நீர் பாய்ச்சினான்) – 'சு' விகுதி சேர்ந்து பிறவினை ஆகிறது. பாய்ந்து – வினையெச்சம்; பாய்க – வியங்கோள்; பயிற்று – 'பயில்' என்பதன் பிறவினை.
- (A) வீடு தச்சனால் கட்டப்பட்டது.
- (B) இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்.
- (C) கண்ணன் தானே படித்தான்.
- (D) கண்ணன் அருச்சுனனுக்குப் பயிற்றுவிக்கச் செய்தான்.
விடையைக் காண்க
விடை: (C) கண்ணன் தானே படித்தான். – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: எழுவாய் தானே செயலைச் செய்வது தன்வினை – 'கண்ணன் தானே படித்தான்'. A, B – 'ஆல்', 'படு' வருவதால் செயப்பாட்டுவினை; D – பிறரைச் செய்வித்தல் என்பதால் பிறவினை.
Barbell Strategy
- (A) வங்கியின் பற்றுரிமை
- (B) வன்பிடி செயல்நெறி
- (C) மென்பிடி செயல்நெறி
- (D) வங்கிகளின் வங்கி
விடையைக் காண்க
விடை: (B) வன்பிடி செயல்நெறி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
| (a) Torsion | 1. தொலைக்காட்சி வலவிளிம்பு |
| (b) Torridity | 2. தோளணி |
| (c) Tippet | 3. முறுக்கம் |
| (d) Snivet | 4. வெப்ப மண்டல நிலை |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (C) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (D) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
விடையைக் காண்க
விடை: (C) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Torsion = முறுக்கம் (3); Torridity = வெப்ப மண்டல நிலை / கடும் வெப்பம் (4); Tippet = தோளணி (தோளில் அணியும் துணி) (2); Snivet = தொலைக்காட்சித் திரையின் வலப்பக்க விளிம்பில் தோன்றும் கோட்டுக் குறைபாடு – தொலைக்காட்சி வலவிளிம்பு (1). எனவே a-3, b-4, c-2, d-1.
- (A) வரம்புநிலை விருப்பம்
- (B) வரம்புநிலை ஆளுமைக் கோளாறு
- (C) வரம்புநிலை ஆளுமைச் சீராய்வு
- (D) வரம்புநிலை ஒழுங்கீனம்
விடையைக் காண்க
விடை: (B) வரம்புநிலை ஆளுமைக் கோளாறு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Borderline = வரம்புநிலை, Personality = ஆளுமை, Disorder = கோளாறு. எனவே 'வரம்புநிலை ஆளுமைக் கோளாறு'. விருப்பம், சீராய்வு, ஒழுங்கீனம் ஆகியவை Disorder என்பதன் பொருள் அல்ல.
Warrant
- (A) எச்சரிக்கை
- (B) நிறுவனக் கைப்பற்றுதல்சார் பண ஒதுக்கீடு
- (C) பற்றாணை
- (D) ஒருங்கேற்பு
விடையைக் காண்க
விடை: (C) பற்றாணை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Warrant (கைது / பிடி ஆணை) = பற்றாணை. எச்சரிக்கை = Warning/Caution; ஒருங்கேற்பு = Consensus/Acceptance; B என்பது நிதித் துறைச் சொற்றொடர் – Warrant என்பதன் நேர்ப்பொருள் அல்ல.
- (A) செவ்வறைக்கனி
- (B) தாய்ப்பால் மறத்தல்
- (C) சீழ்க்கட்டி
- (D) உதிர்தல்
விடையைக் காண்க
விடை: (A) செவ்வறைக்கனி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Achene – ஒரே விதை கொண்ட, வெடிக்காத உலர் கனி வகை; கனியைக் குறிக்கும் ஒரே விடை 'செவ்வறைக்கனி'. தாய்ப்பால் மறத்தல் = Weaning, சீழ்க்கட்டி = Abscess, உதிர்தல் = Abscission – இவை வேறு கலைச்சொற்கள் (Abscess/Abscission என்ற ஒலியொப்புமையால் வைக்கப்பட்ட கவனச்சிதறல்கள்).
- (A) மாடு
- (B) யானை
- (C) பறவை
- (D) பாம்பு
விடையைக் காண்க
விடை: (C) பறவை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை' – தொல்காப்பியம். பறவைகளின் இளமைப் பெயர் பார்ப்பு (எ.கா. கிளிப்பார்ப்பு). மாட்டின் இளமை – கன்று; யானையின் இளமை – கன்று/குட்டி; பாம்பு – குட்டி.
செல்வர்க்கே செல்வம் தகைத்து”. – இக்குறட்பாவிற்குப் பொருந்தும் பழமொழியைக் கண்டறிக.
- (A) பதறாத காரியம் சிதறாது
- (B) புத்திமானே பலவான்
- (C) அடக்கம் ஆயிரம் பொன் தரும்
- (D) அதிக ஆசை அதிக நஷ்டம்
விடையைக் காண்க
விடை: (C) அடக்கம் ஆயிரம் பொன் தரும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: இக்குறள் (125) 'அடக்கமுடைமை' அதிகாரத்தைச் சேர்ந்தது: பணிவு எல்லார்க்கும் நன்மை தரும்; செல்வர்க்கு அது மேலும் ஒரு செல்வம். இதற்குப் பொருந்தும் பழமொழி 'அடக்கம் ஆயிரம் பொன் தரும்'. மற்றவை பொறுமை, அறிவு, பேராசை பற்றியவை.
- (A) இடறின காலே இடறும்
- (B) உலகம் பலவிதம்
- (C) கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
- (D) கெடுவான் கேடு நினைப்பான்
விடையைக் காண்க
விடை: (C) கூடிவாழ்ந்தால் கோடி நன்மை – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஆத்திசூடி 'ஙப்போல் வளை' – 'ங' என்ற எழுத்து தனக்குப் பயன்படாத தன் வரிசை எழுத்துகளையும் (ஙா, ஙி...) தழுவி நிற்பதுபோல, சுற்றத்தாரைத் தழுவி அரவணைத்து வாழ வேண்டும். இது 'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழியோடு பொருந்தும்; மற்றவை தொடர்பில்லாதவை.
| மரபுத் தொடர்கள் | பொருள் |
| (a) கைச்சரக்கு | 1. நெட்டி வாங்குதல் |
| (b) கை முடக்கம் | 2. ஏமாற்றுதல் |
| (c) கொடுக்குப் பிடித்தல் | 3. பணமுட்டுப்பாடு |
| (d) சொடக்கெடுத்தல் | 4. கற்பனையாகக் கூறும் சொல் |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (C) (a) 4 (b) 2 (c) 1 (d) 3
- (D) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: கைச்சரக்கு – தானே கற்பனையாகச் சேர்த்துக் கூறுவது (4); கை முடக்கம் – கையில் பணமின்மை, பணமுட்டுப்பாடு (3); கொடுக்குப் பிடித்தல் – ஏமாற்றுதல் (2); சொடக்கெடுத்தல் – விரல்களில் நெட்டி வாங்குதல் (1). எனவே 4, 3, 2, 1.
- (A) மகிழ்ச்சி
- (B) வியப்பு
- (C) கொடுந்துன்பம்
- (D) அச்சம்
விடையைக் காண்க
விடை: (C) கொடுந்துன்பம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: உகிர்ச்சுற்று = நகச்சுற்று (நகத்தைச் சுற்றி வரும் வலிமிகு புண்). அதன் மேல் உலக்கை விழுந்தால் வலி பன்மடங்கு ஆகும் – ஏற்கெனவே துன்பத்தில் இருப்பவருக்கு மேலும் துன்பம்; கொடுந்துன்பம்.
- (A) Unofficial letter, Official letter
- (B) Official note, Unofficial note
- (C) Official letter, Unofficial letter
- (D) Official note, Unofficial letter
விடையைக் காண்க
விடை: (B) Official note, Unofficial note – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'குறிப்பு' = Note. அலுவலகக் குறிப்பு – Official note; அலுவல் சாராக் குறிப்பு – Unofficial note (U.O. Note). Letter என்பது 'கடிதம்'; எனவே A, C, D பொருந்தா. வரிசையும் B-ல் மட்டுமே சரி.
ARCHIVES AND RESEARCH
- (A) கோப்பும் ஆராய்ச்சியும்
- (B) ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி
- (C) ஆவணமும் ஆய்வும்
- (D) ஆவணத் தேடல்
விடையைக் காண்க
விடை: (B) ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Archives = ஆவணக் காப்பகம் (பழைய ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கும் இடம்); Research = ஆராய்ச்சி. தமிழ்நாடு அரசின் 'ஆவணக் காப்பகம்' (Tamil Nadu Archives) இதையே காட்டுகிறது. கோப்பு = File, ஆவணம் = Document/Record, தேடல் = Search – இவை Archives என்பதன் முழுப்பொருள் தராது.
CAVEAT PETITION
- (A) அவசரத் தன்மை மனு
- (B) மனித உரிமை மனு
- (C) முன்னெச்சரிக்கை மனு
- (D) தடை உத்தரவு
விடையைக் காண்க
விடை: (C) முன்னெச்சரிக்கை மனு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: Caveat Petition = முன்னெச்சரிக்கை மனு – தன்னைக் கேட்காமல் நீதிமன்றம் எதிர்த்தரப்புக்கு ஆணை வழங்கக் கூடாது என முன்கூட்டியே தாக்கல் செய்யும் மனு. தடை உத்தரவு = Injunction/Stay; அவசர மனு = Urgent petition.
(i) தாராபாரதியின் இயற்பெயர் – இராதா கிருஷ்ணன்
(ii) தாராபாரதியின் நூல் – இது எங்கள் கிழக்கு
(iii) தாராபாரதியின் அடைமொழி – நாடக ஞாயிறு
(iv) தாராபாரதியின் கவிதைகளில் ஒன்று – பாரதம் அன்றைய நாற்றங்கால்
- (A) (iv) மட்டும்
- (B) (iii) மட்டும்
- (C) (i) மற்றும் (ii) மட்டும்
- (D) (ii) மற்றும் (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (B) (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்; 'இது எங்கள் கிழக்கு' அவரது நூல்; 'பாரதம் அன்றைய நாற்றங்கால்' அவரது கவிதை (பாடநூலில் உள்ளது). அவருக்குரிய சிறப்புப் பெயர் 'கவிஞாயிறு'; 'நாடக ஞாயிறு' அல்ல. எனவே (iii) மட்டும் தவறு.
(i) குன்றக்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
(ii) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்
(iii) அருளோசை என்னும் இதழை நடத்தியவர்
- (A) (i) மற்றும் (ii) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (ii) மற்றும் (iii) மட்டும்
- (D) (i), (ii) மற்றும் (iii)
விடையைக் காண்க
விடை: (C) (ii) மற்றும் (iii) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குன்றக்குடி அடிகளார் குன்றக்குடியில் பிறந்தவர் அல்லர்; குன்றக்குடி அவர் தலைமை ஏற்ற திருவண்ணாமலை ஆதீனத் திருமடம் உள்ள ஊர் – எனவே (i) தவறு. திருக்குறள் நெறி பரப்புதல் (ii), 'அருளோசை' இதழ் நடத்தியது (iii) இரண்டும் சரி.
பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று
சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு
இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டது
அறக்கருத்துகளைக் கூறுவது. இதனைத் தொகுத்தவர் பதுமனார்.
- (A) பழமொழி நானூறு
- (B) புறநானூறு
- (C) நாலடியார்
- (D) ஏலாதி
விடையைக் காண்க
விடை: (C) நாலடியார் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நாலடியார் – பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்; சமண முனிவர்கள் பாடிய 400 வெண்பாக்கள்; தொகுத்தவர் பதுமனார்; 'நாலடி நானூறு', 'வேளாண் வேதம்' எனவும் வழங்கும். பழமொழி நானூறு – முன்றுறை அரையனார் ஒருவரே பாடியது; புறநானூறு – எட்டுத்தொகை; ஏலாதி – கணிமேதாவியார்.
- (A) கல்லாதவர்க்கு
- (B) ஆராயாமல் நட்பு கொண்டவர்க்கு
- (C) பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர்க்கு
- (D) கூடா ஒழுக்கம் கொண்டவர்க்கு
விடையைக் காண்க
விடை: (C) பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர்க்கு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்' (குறள் 999, பண்புடைமை) – பிறரோடு கலந்து பழகி மகிழத் தெரியாதவர்க்கு இப்பெரிய உலகம் பகலிலும் இருளாகவே தோன்றும்.
- (A) மக்களின் பண்புகளை அவரவர் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்
- (B) நடுவுநிலைமை இல்லாதவர், நடுவுநிலைமை உடையவர் தன்மையை அறிதல்
- (C) கல்லாதவர், கற்றவர் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்
- (D) நல்ல நட்பு, தீய நட்பினால் உண்டாகும் விளைவுகளை உணர்தல்
விடையைக் காண்க
விடை: (A) மக்களின் பண்புகளை அவரவர் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல்' (குறள் 279, கூடாவொழுக்கம்) – நேரான அம்பு கொல்லும்; வளைந்த யாழ்க்கோடு இனிமை தரும். அதுபோல் தோற்றத்தைக் கொண்டு அல்ல, செயலைக் கொண்டே மக்களின் பண்பை அறிய வேண்டும்.
காரணம் [R] : இவர் சங்கச் செய்யுளைப் பதிப்பிக்கும் ஆர்வம் கொண்டவர். உ.வே.சா.வின் மாணவர்
- (A) கூற்று [A] - சரி : காரணம் [R] - தவறு, [R] என்பது [A] ஐச் சரியாக விளக்கவில்லை
- (B) கூற்று [A] - தவறு : காரணம் [R] - சரி
- (C) கூற்று [A] - தவறு : காரணம் [R] - தவறு
- (D) கூற்று [A] - சரி : காரணம் [R] - சரி, [R] என்பது [A] ஐச் சரியாக விளக்குகிறது
விடையைக் காண்க
விடை: (C) கூற்று [A] - தவறு : காரணம் [R] - தவறு – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: குறிஞ்சிப்பாட்டை (பத்துப்பாட்டு, 1889) ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலில் அச்சில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அல்லர்; கூற்று தவறு. மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சா.வின் ஆசிரியர்; மாணவர் அல்லர் – காரணமும் தவறு.
(i) கன்னு – தெலுங்கு
(ii) கெண் – பர்ஜி
(iii) கொண் – தோடா
(iv) கண்ணு – தமிழ்
- (A) (i) மட்டும்
- (B) (ii) மட்டும்
- (C) (iii) மட்டும்
- (D) (iv) மட்டும்
விடையைக் காண்க
விடை: (D) (iv) மட்டும் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: 'கண்' என்ற சொல் திராவிட மொழிகளில்: தமிழ் – கண்; தெலுங்கு – கன்னு; பர்ஜி – கெண்; தோடா – கொண்; மலையாளம், கன்னடம் – கண்ணு. தமிழில் 'கண்' என்பதால் '(iv) கண்ணு – தமிழ்' தவறான இணை; மற்ற மூன்றும் பாடநூல் அட்டவணைப்படி சரி.
- (A) எதிர்பாராத நன்மை
- (B) எதிர்பாராத துன்பம்
- (C) எதிர்பாராத விபத்து
- (D) எதிர்பாராத மகிழ்ச்சி
விடையைக் காண்க
விடை: (B) எதிர்பாராத துன்பம் – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: நீருக்காகக் கிணறு வெட்டியபோது பூதம் கிளம்பியதுபோல – நல்லதை எதிர்பார்த்துச் செய்த செயலில் எதிர்பாராத தொல்லை/துன்பம் வந்து சேர்வது. நன்மை, மகிழ்ச்சி எதிர்ப்பொருள்; 'விபத்து' என்பது திடீர் நேர்ச்சி – பூதம் கிளம்புதல் என்பது தொல்லை/இடையூறு என்பதால் 'எதிர்பாராத துன்பம்' மிகப் பொருத்தம்.
| உவமைத் தொடர் | பொருள் |
| (a) ஆற்றில் கரைத்த புளி போல | 1. உருவாகாத திட்டம் |
| (b) நாய்பெற்ற தெங்கம்பழம் போல | 2. மிக அரிது |
| (c) கரடி பிறை கண்டது போல | 3. பயனில்லாமை |
| (d) ஆண்டிகள் மடம் கட்டியது போல | 4. பயனற்ற செயல் |
- (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (B) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
- (C) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
- (D) (a) 2 (b) 3 (c) 4 (d) 1
விடையைக் காண்க
விடை: (A) (a) 4 (b) 3 (c) 2 (d) 1 – TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி
விளக்கம்: ஆற்றில் கரைத்த புளி – செய்ததெல்லாம் வீண், பயனற்ற செயல் (4); நாய் பெற்ற தெங்கம்பழம் – நாயால் தேங்காயை உண்ண முடியாது, பயனில்லாமை (3); கரடி பிறை கண்டது போல – அரிதாக நிகழ்வது, மிக அரிது (2); ஆண்டிகள் மடம் கட்டியது போல – பேச்சோடு நின்று உருவாகாத திட்டம் (1). எனவே a-4, b-3, c-2, d-1.
எல்லா விடைகளும் ஒரே பார்வையில் (TNPSC தற்காலிக விடைக்குறிப்பு)
— = நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது (தற்காலிக விடைக்குறிப்பில் விடை இல்லை).
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குரூப் 2 / 2A 2026 முதல்நிலைத் தேர்வு எப்போது நடந்தது?
01-11-2026 (ஞாயிறு) காலை 9.30 முதல் 12.30 வரை நடந்தது. 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள்: பகுதி அ, ஆ (பொது அறிவு, திறனறிவு) வினா 1–100; பகுதி இ (பொதுத் தமிழ் அல்லது General English) வினா 101–200.
இந்தப் பக்கத்தில் உள்ள விடைகள் யாருடையவை?
TNPSC 10-11-2026 அன்று வெளியிட்ட தற்காலிக விடைக்குறிப்பின் விடைகள் (மாதிரி வினாத்தொகுப்பு CCSE2-2AT/2026). ஆட்சேபனைகள், நிபுணர் குழு ஆய்வுக்குப் பின் இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் மாறலாம்; அப்போது இப்பக்கம் புதுப்பிக்கப்படும்.
எந்த வினாக்கள் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன?
பொது அறிவு வினா 67, General English வினா 157, 161. இவற்றுக்கு TNPSC தற்காலிக விடைக்குறிப்பில் விடை தரவில்லை.
பொது அறிவு வினாக்கள் ஆங்கிலத்திலும் உள்ளனவா?
ஆம். இந்தத் தமிழ்ப் பக்கத்தில் பொது அறிவு (1–100), பொதுத் தமிழ் (101–200) வினாக்கள் உள்ளன. பொது அறிவு வினாக்களின் ஆங்கில வடிவமும் General English பகுதியும் இவ்வினாத்தாளின் ஆங்கிலப் பக்கத்தில் உள்ளன.
குரூப் 2 வினாத்தாள் 2026-ஐ PDF ஆகப் பதிவிறக்க முடியுமா?
ஆம். TNPSC தற்காலிக விடைக்குறிப்புடன் கூடிய இந்த வினாத்தாளின் இலவச PDF இப்பக்கத்திலேயே உள்ளது; பதிவு எதுவும் தேவையில்லை.
முதல்நிலைத் தேர்வை முடித்தீர்களா? குரூப் 2 / 2A முதன்மைத் தேர்வுக்கு இப்போதே தயாராகுங்கள்.
குரூப் 2 / 2A Mains பயிற்சி இலவச தினசரி Mains பயிற்சி Cut-off 2026
