IndiaAI இயக்கத்தின் கீழ் உள்நாட்டு அடித்தள AI மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ள பின்னணியில், தமிழ்நாட்டில் ஆளுகைக்கும் வளர்ச்சிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) வழங்கும் வாய்ப்புகளையும் அதனால் ஏற்படும் இடர்களையும் விவாதிக்கவும். பாதுகாப்பான, அறநெறி சார்ந்த AI பயன்பாட்டுக்காகத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள கொள்கை நடவடிக்கைகளை மதிப்பிடவும்.
In the context of the release of indigenous AI foundation models under the IndiaAI Mission, discuss the opportunities and risks of artificial intelligence for governance and development in Tamil Nadu. Evaluate the policy measures taken by the Tamil Nadu Government for the safe and ethical use of AI.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. செய்தி: IndiaAI அடித்தள மாதிரிகள் (03.11.2026)
| மாதிரி | உருவாக்கியது | சிறப்பு |
|---|---|---|
| EKA-1 | Soket AI Labs | 2,630 கோடி (26.3 பில்லியன்) அளவுருக்கள்; சுமார் 7.5 டிரில்லியன் டோக்கன்களில் பயிற்சி; 22 அட்டவணை மொழிகள் + ஆங்கிலம்; திறந்த, "sparse hybrid" மாதிரி; கணிதம், நிரலாக்கம், தர்க்கம், agentic பயன்பாடு; வங்கி, நிதி, இணையப் பாதுகாப்பு. |
| Dhīr 2B, Dhīr 5B | ZenteiQ AiTech Innovations | ஆங்கிலம் + 10 இந்திய மொழிகள்; அலுவலக வளாகத்துக்குள் (on-premise), இணைய இணைப்பின்றி இயங்கும்; இலகுவானது – கைப்பேசியிலும் இயங்கும்; அரசு, பாதுகாப்பு, தொழில், கல்வி; ஆவண அடிப்படையிலான தானியக்கம், குடிமக்கள் சேவை. |
- IndiaAI புத்தாக்க மையத்தின் "அடித்தள மாதிரிகள்" தூணின் கீழ் தேர்வு; மானிய விலையில் தேசியக் கணினித் திறன் (compute) வழங்கப்பட்டது; AIKosh (IndiaAI தரவுத்தொகுப்புத் தளம்) மூலம் ஆய்வாளர், மாணவர், பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
- வெளியீட்டு நிகழ்வு – புது தில்லி; MeitY செயலர் எஸ். கிருஷ்ணன்: வெளி வலையமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட (air-gapped) சூழலிலும் பயன்படுத்தலாம்.
2. IndiaAI இயக்கம்
- மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 07.03.2024; ஒதுக்கீடு ₹10,371.92 கோடி; செயலாக்கம் – டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் IndiaAI தனி வணிகப் பிரிவு (IBD).
- 7 தூண்கள்: கணினித் திறன் (Compute), புத்தாக்க மையம் (அடித்தள மாதிரிகள்), தரவுத்தொகுப்புத் தளம் (AIKosh), பயன்பாட்டு மேம்பாடு, FutureSkills, தொடக்க நிறுவன நிதி, பாதுகாப்பான – நம்பகமான AI.
3. தமிழ்நாடு – கொள்கைகள், அமைப்புகள்
| ஆண்டு | நடவடிக்கை |
|---|---|
| செப். 2020 | தமிழ்நாடு பாதுகாப்பான, அறநெறி சார்ந்த AI கொள்கை 2020 (தகவல் தொழில்நுட்பத் துறை) – முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "Connect 2020" நிகழ்வில், பிளாக்செயின், இணையப் பாதுகாப்புக் கொள்கைகளுடன் வெளியீடு. TAM-DEF ஆறு பரிமாணம்: வெளிப்படைத்தன்மை – தணிக்கை (T), பொறுப்புடைமை – சட்டச் சிக்கல்கள் (A), தவறான பயன்பாட்டுத் தடுப்பு (M), டிஜிட்டல் இடைவெளி – தரவுப் பற்றாக்குறை (D), அறநெறி (E), நேர்மை – சமத்துவம் (F). DEEP-MAX மதிப்பெண் அட்டை (7 அளவுருக்கள்; பன்முகத்தன்மை, சமத்துவம், அறநெறி, தனியுரிமை – தரவுப் பாதுகாப்பு, தவறான பயன்பாட்டுத் தடுப்பு, தணிக்கை – வெளிப்படைத்தன்மை உட்பட). AI கொள்முதலுக்கு முன் TNeGA-இன் வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சிறப்பு மையத்தை (CEET) ஆலோசிக்க வேண்டும்; தலைமைச் செயலர் தலைமையில் "பாதுகாப்பான, அறநெறி AI கண்காணிப்புக் குழு". மாநில அரசுக்குச் சொந்தமான / கட்டுப்பாட்டிலுள்ள அமைப்புகள், கூட்டு நிறுவனங்களுக்குப் பொருந்தும். |
| 15.05.2023 | iTNT மையம் (i-Tamil Nadu Technology Hub) – அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு; ₹54.61 கோடி; "இந்தியாவின் முதல் வளர்ந்துவரும் – ஆழ்தொழில்நுட்பப் (deep-tech) புத்தாக்க வலையமைப்பு"; நிதி: MeitY சுமார் 50%, மாநிலம் 37%, தொழில் துறை 13%; 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுடன் இணைப்பு; AI, இயந்திரக் கற்றல், பிளாக்செயின் கவனம். |
| 09.10.2024 | தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (TNAIM) – அரசாணை (நிலை) எண் 25, தகவல் தொழில்நுட்பம் – டிஜிட்டல் சேவைகள் துறை; செயலாக்கம் TNeGA; துணை: iTNT, ICT Academy, ELCOT; முதல் 2 ஆண்டுகளுக்கு ₹13.93 கோடி. நோக்கம்: AI ஆய்வு, திறன் பயிற்சி, ஆளுகைப் பயன்பாடுகள் (சேவை வழங்கல், தரவு அடிப்படை முடிவு, சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு), கணினி / சேமிப்புக் கட்டமைப்பு, தரவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்க அரசுத் தரவுப் பகிர்வு, அறநெறி வழிகாட்டுதல்கள். |
| 05.08.2026 | திருத்திய வரவுசெலவுத் திட்டம் 2026-27 (நிதியமைச்சர் என். மரிய வில்சன்): தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தமிழ்ப் பெருமொழி மாதிரி (Tamil LLM) – தமிழ்க் கணினியியல், மொழிபெயர்ப்பு, AI மொழிக் கருவிகள்; அரசு ஊழியர்களுக்கு agentic AI, பேச்சு–உரைக் கருவிகள், தர உறுதித் தணிக்கை வாரியம்; TNAIM – AI, குவாண்டம் தொழில்நுட்பம், AVGC-XR என விரிவாக்கம் (சுகாதாரம், வேளாண்மை, கல்வி, குடிமக்கள் சேவை முன்னுரிமை); "அறிவகம்" – AI, புத்தாக்க நகரம்: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ₹5 கோடி; 2031-க்குள் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ITI மாணவர்கள் 5 லட்சம் பேருக்கு AI திறன் (IIT சென்னை கூட்டு); ELCOT மூலம் AI சிறப்பு மையம். |
- TN தகவல் தொழில்நுட்பத் துறை: ஆண்டு ஏற்றுமதி ₹2.5 லட்சம் கோடிக்கு மேல்; நேரடி, மறைமுகமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் (கொள்கைக் குறிப்பு 2026-27).
4. தனியுரிமை – DPDP சட்டம், 2023
- எண்ணிம தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 – 11.08.2023; DPDP விதிகள் 2025 – 14.11.2025 அறிவிப்பு; 18 மாதக் கட்டநிலை அமலாக்கம்.
- தரவுக்குரியவரின் உரிமைகள்: ஒப்புதல் தருதல் / திரும்பப் பெறுதல், எந்தத் தரவு – எதற்கு என்று அறிதல், நகல் பெறுதல், திருத்தம் / அழிப்பு கோருதல், நியமனதாரரைக் குறிப்பிடுதல்.
- தரவுப் பாதுகாப்பு வாரியம் – முழுமையாக டிஜிட்டல்; மேல்முறையீடு – TDSAT. நியாயமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறினால் ₹250 கோடி வரை அபராதம்; தரவுக் கசிவு நேர்ந்தால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடித் தகவல்.
5. விடையை உயர்த்தும் சொற்கள்
- அடித்தள மாதிரி (foundation model), பெருமொழி மாதிரி (LLM), அளவுருக்கள் (parameters), சாதனத்திலேயே இயங்கும் AI (on-device / offline AI), இறையாண்மை AI (sovereign AI), அல்காரிதச் சார்புநிலை (algorithmic bias), விளக்கக்கூடிய AI (explainable AI), மனிதக் கண்காணிப்பு (human-in-the-loop), AI பொதுப் பதிவேடு (algorithm register), மறுதிறன் (reskilling).
Reference note in English
Key facts
- News (03.11.2026, New Delhi): IndiaAI Mission released three indigenous foundation models – EKA-1 (Soket AI Labs; 26.3 billion parameters; ~7.5 trillion training tokens; all 22 scheduled languages + English; open, sparse hybrid model; maths, coding, reasoning, agentic use; banking, finance, cybersecurity) and Dhīr 2B / Dhīr 5B (ZenteiQ AiTech Innovations; English + 10 Indian languages; on-premise and offline, lightweight enough for mobile phones; government, defence, industry, education). Built under the IndiaAI Innovation Centre (Foundation Models pillar) with subsidised national compute; available through AIKosh; MeitY Secretary S. Krishnan noted air-gapped deployment.
- IndiaAI Mission: Cabinet approval 07.03.2024; outlay ₹10,371.92 crore; implemented by the IndiaAI Independent Business Division of Digital India Corporation; 7 pillars – Compute, Innovation Centre, Datasets Platform (AIKosh), Application Development, FutureSkills, Startup Financing, Safe & Trusted AI.
- Tamil Nadu Safe & Ethical AI Policy 2020 (IT Department; unveiled September 2020 by CM Edappadi K. Palaniswami at Connect 2020, with the blockchain and cybersecurity policies): six-dimensional TAM-DEF framework – Transparency & Audit, Accountability & Legal issues, Misuse protection, Digital divide & Data deficit, Ethics, Fairness & Equity; DEEP-MAX scorecard (7 parameters incl. diversity, equity, ethics, privacy & data protection, misuse protection, audit & transparency); departments to consult TNeGA's Centre of Excellence in Emerging Technologies (CEET) before AI procurement; Safe & Ethical AI Monitoring Committee headed by the Chief Secretary; applies to State-owned / controlled bodies and joint ventures.
- iTNT Hub: inaugurated 15.05.2023 by CM M.K. Stalin on the Anna University campus, Chennai; ₹54.61 crore; "India's first emerging and deep-tech innovation network"; funding MeitY ~50%, State ~37%, industry ~13%; network of 570+ engineering colleges; focus on AI, ML, blockchain.
- Tamil Nadu Artificial Intelligence Mission (TNAIM): G.O. (Ms) No. 25, IT & Digital Services Department, 09.10.2024; implemented by TNeGA with iTNT, ICT Academy and ELCOT; ₹13.93 crore for the first two years; aims – AI research, skilling, governance use cases (service delivery, data-driven decisions, health, public safety), compute and storage, data sharing in line with data-protection law, ethical guidelines.
- Revised Budget 2026-27 (05.08.2026, Finance Minister N. Marie Wilson): Tamil Large Language Model by the Tamil Virtual Academy; agentic AI, speech-to-text tools and a Quality Assurance Audit Board for government employees; TNAIM expanded to AI, quantum technology and AVGC-XR (health, agriculture, education, citizen services); "Arivagam" AI and Innovation City – ₹5 crore feasibility study; AI skills for 5 lakh students of engineering colleges, polytechnics and ITIs by 2031 (with IIT Madras); an AI Centre of Excellence through ELCOT.
- TN IT sector (Policy Note 2026-27): exports over ₹2.5 lakh crore a year; over 20 lakh people employed directly and indirectly.
- DPDP Act, 2023 (11.08.2023); DPDP Rules notified 14.11.2025 with 18-month phased compliance; rights to give / withdraw consent, know, access, correct, erase and nominate; a fully digital Data Protection Board (appeals to TDSAT); penalty up to ₹250 crore for failure of reasonable security safeguards; affected persons to be told of a breach without delay.
- Value-add terms: foundation model, LLM, parameters, on-device / offline AI, sovereign AI, algorithmic bias, explainable AI, human-in-the-loop, algorithm register, reskilling.
Official Sources:
- IndiaAI இயக்கம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல், ₹10,371.92 கோடி, 7 தூண்கள் (PIB, 07.03.2024)
- தமிழ்நாடு பாதுகாப்பான, அறநெறி சார்ந்த AI கொள்கை 2020 (தமிழ்நாடு அரசு – அதிகாரப்பூர்வ பக்கம்)
- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (TNAIM) – அரசாணை (நிலை) எண் 25, 09.10.2024 (தமிழ்நாடு அரசு – அதிகாரப்பூர்வ PDF)
- எண்ணிம தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025 – விளக்கக் குறிப்பு (PIB – அதிகாரப்பூர்வ PDF)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- மூன்று பகுதிகள் – வாய்ப்புகள், இடர்கள் ("விவாதிக்கவும்"), கொள்கை நடவடிக்கைகள் ("மதிப்பிடவும்"). முன்னுரை, வாய்ப்புகள், இடர்கள், பலம் + குறைகள், முன்னோக்கிய வழி – ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு.
- Unit IV கோணம்: அடித்தள மாதிரி என்றால் என்ன, offline / on-device AI ஏன் அரசுக்கு முக்கியம் என்பதை இரண்டு வரிகளில் சொல்லுங்கள்.
- வாய்ப்புகளைத் துறைவாரி அட்டவணையாகவும் (தமிழ் மொழி, மின்-ஆளுகை, வேளாண்மை – சுகாதாரம், பொருளாதாரம்), TN கொள்கைகளின் காலவரிசையை flowchart-ஆகவும் காட்டுங்கள்.
- தமிழ்நாட்டுக் கோணம்: மாநில AI அறநெறிக் கொள்கையின் சட்டகங்கள், அதைச் செயல்படுத்தும் முகமை, மாநில AI இயக்கம், சமீபத்திய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள்; தனியுரிமைக்கு ஒன்றியச் சட்டம். ஆதாரமில்லாத எண்கள் வேண்டாம்.
In English: Three parts – opportunities and risks ("discuss") and policy measures ("evaluate"); headings for the introduction, opportunities, risks, strengths + gaps and the way forward · Unit IV angle: say in two lines what a foundation model is and why offline / on-device AI matters to government · show opportunities as a sector-wise table (Tamil language, e-governance, agriculture and health, economy) and the timeline of TN's policies as a flowchart · Tamil Nadu angle: the frameworks in the State's ethical-AI policy, the agency that implements it, the State AI Mission and recent Budget announcements; the Union law for privacy – no unsourced numbers
Send Your Answer
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy
முன்னுரை
03.11.2026 அன்று IndiaAI இயக்கத்தின் கீழ் மூன்று உள்நாட்டு அடித்தள மாதிரிகள் வெளியிடப்பட்டன: EKA-1 (2,630 கோடி அளவுருக்கள்; தமிழ் உட்பட 22 அட்டவணை மொழிகள் + ஆங்கிலம்), Dhīr 2B, 5B (இணைய இணைப்பின்றி, கைப்பேசியிலும் இயங்கும்). மக்கள் மொழியில், மக்கள் கையில் AI வருவது மாநில ஆளுகைக்குப் புதிய வாய்ப்பு – புதிய பொறுப்பும் கூட.
அ) வாய்ப்புகள்
| துறை | வாய்ப்பு |
|---|---|
| தமிழ் மொழி AI | தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கும் தமிழ்ப் பெருமொழி மாதிரி (Tamil LLM) – திருத்திய வரவுசெலவுத் திட்டம் 05.08.2026; மொழிபெயர்ப்பு, பேச்சு–உரை, தமிழில் அரசு சேவை. |
| மின்-ஆளுகை | அரசு ஊழியர்களுக்கு agentic AI, பேச்சு–உரைக் கருவிகள், தர உறுதித் தணிக்கை வாரியம்; offline மாதிரிகள் – தரவு அலுவலகத்துக்குள்ளேயே. |
| வேளாண்மை, சுகாதாரம் | TNAIM முன்னுரிமைத் துறைகள் – உதா. பயிர் நோய் கண்டறிதல், தமிழில் வானிலை / சந்தை ஆலோசனை; ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நோயறிதல் உதவி. |
| பொருளாதாரம் | IT ஏற்றுமதி ஆண்டுக்கு ₹2.5 லட்சம் கோடிக்கு மேல், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை; 2031-க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் (IIT சென்னை). |
ஆ) இடர்கள்
- தனியுரிமை: நலத்திட்டத் தரவுத்தளங்கள் கசிந்தால் பேரிழப்பு; DPDP சட்டம் 2023 – ஒப்புதல், அணுகல் / திருத்த உரிமை, ₹250 கோடி வரை அபராதம்; விதிகள் 14.11.2025, 18 மாதக் கட்டநிலை அமலாக்கம்.
- சார்புநிலை: ஆங்கில / நகரத் தரவில் பயின்ற மாதிரி வட்டார வழக்கு, சாதி, பாலினம் சார்ந்து தவறிழைத்தால் தகுதியானவர் பயனாளிப் பட்டியலில் விடுபடலாம்.
- வேலைவாய்ப்பு: IT, BPO, தரவு உள்ளீடு போன்ற வழக்கமான பணிகள் தானியக்கமாகும் அச்சம்.
- பொறுப்புடைமை: தவறான AI முடிவுக்கு யார் பொறுப்பு? டீப்ஃபேக், கற்பனைப் பதில்கள் (hallucination); டிஜிட்டல் இடைவெளி.
இ) தமிழ்நாட்டின் கொள்கை நடவடிக்கைகள் – மதிப்பீடு
| பலம் | குறைகள் |
|---|---|
| முன்னோடிக் கொள்கை: AI-ஐப் பயன்படுத்தும் முன் ஆறு பரிமாண TAM-DEF சட்டகம், DEEP-MAX மதிப்பெண் அட்டை; கொள்முதலுக்கு முன் TNeGA-இன் CEET ஆலோசனை; தலைமைச் செயலர் தலைமையில் கண்காணிப்புக் குழு; iTNT (₹54.61 கோடி) – ஆய்வு, தொடக்க நிறுவனங்கள்; TNAIM – TNeGA செயலாக்கம். | 2020 கொள்கை சட்ட வலிமையற்ற வழிகாட்டி, DPDP-க்கு முந்தையது; AI முடிவால் பாதிக்கப்பட்ட குடிமகன் விளக்கம் கோரவோ மேல்முறையீடு செய்யவோ சட்டப்பூர்வ நடைமுறை இல்லை; TNAIM-க்கு முதல் 2 ஆண்டு ₹13.93 கோடி மட்டுமே; வேலை இழப்போருக்கான மறுதிறன் திட்டம் தெளிவில்லை. |
ஈ) முன்னோக்கிய வழி
- DPDP-க்கு இணங்கக் கொள்கை புதுப்பிப்பு; அரசு பயன்படுத்தும் AI அமைப்புகளின் பொதுப் பதிவேடு, DEEP-MAX முடிவுகள் வெளியீடு.
- ஒவ்வொரு AI முடிவுக்கும் மனிதக் கண்காணிப்பு + தமிழில் விளக்கம் + மேல்முறையீடு.
- தமிழ்த் திறந்த தரவுத்தொகுப்புகள் (AIKosh); ஊராட்சி அளவில் offline மாதிரிகள்; பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு மறுதிறன்.
முடிவுரை
AI ஆளுகையை "தமிழில், எல்லோருக்கும்" கொண்டுசெல்லும் கருவி; நம்பிக்கை, தனியுரிமை, பொறுப்புடைமை உறுதியானால் மட்டுமே அது வளர்ச்சியாக மாறும்.
- மூன்று பகுதிகள் – வாய்ப்புகள், இடர்கள் ("விவாதிக்கவும்"), கொள்கை ("மதிப்பிடவும்"): ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு; மூன்றாவதற்குப் பலம் + குறைகள் அட்டவணை கட்டாயம் – கொள்கைகளைப் பட்டியலிட்டால் மட்டும் போதாது.
- Unit IV கோணம்: "அடித்தள மாதிரி", "அளவுருக்கள்", "offline / on-device" போன்ற சொற்களை ஒரு வரியில் சரியாகப் பயன்படுத்துங்கள் – தொழில்நுட்பப் புரிதலைக் காட்டும்.
- TN தரவுகள் – 2020 கொள்கை (TAM-DEF, DEEP-MAX), iTNT 2023, TNAIM அரசாணை 25 (2024), தமிழ் LLM (05.08.2026) – இவையே விடையை வேறுபடுத்தும்; DPDP சட்டம் 2023 + ₹250 கோடி அபராதம் "தனியுரிமை" பகுதிக்குச் சட்ட ஆதாரம்.
- "AI வேலைகளை அழிக்கும்" போன்ற ஒருபக்கக் கூற்று வேண்டாம்; வாய்ப்பு – இடர் – தீர்வு என்ற சமநிலையே மதிப்பெண் பெறும். ஆதாரமில்லாத எண்ணிக்கைகளை எழுதாதீர்கள்.
சுமார் 350 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 2 அட்டவணை + 2 flowchart · நேரம்: 12 நிமிடம்.
Model answer framework in English
Introduction
On 03.11.2026 three indigenous foundation models were released under the IndiaAI Mission: EKA-1 (26.3 billion parameters; all 22 scheduled languages including Tamil, plus English) and Dhīr 2B and 5B (run offline, even on mobile phones). AI in the people's language and in the people's hands is a new opportunity for State governance – and a new responsibility.
A) Opportunities
| Sector | Opportunity |
|---|---|
| Tamil-language AI | A Tamil Large Language Model to be built by the Tamil Virtual Academy (Revised Budget, 05.08.2026) – translation, speech-to-text, government services in Tamil. |
| e-Governance | Agentic AI, speech-to-text tools and a Quality Assurance Audit Board for government employees; offline models keep data inside the office. |
| Agriculture, health | Priority sectors of the TNAIM – e.g. crop-disease detection, weather / market advice in Tamil; diagnostic support in primary health centres. |
| Economy | IT exports of over ₹2.5 lakh crore a year and 20 lakh+ jobs; AI skills for 5 lakh youth by 2031 (with IIT Madras). |
B) Risks
- Privacy: leaks from welfare databases would be costly; the DPDP Act, 2023 – consent, rights of access and correction, penalties up to ₹250 crore; Rules notified 14.11.2025 with 18-month phased compliance.
- Bias: a model trained on English / urban data may misread dialect, caste or gender and drop eligible people from beneficiary lists.
- Jobs: routine work in IT, BPO and data entry could be automated.
- Accountability: who answers for a wrong AI decision? Deepfakes, hallucinations and the digital divide.
C) Tamil Nadu's policy steps – evaluation
| Strengths | Gaps |
|---|---|
| A pioneering policy: the six-dimensional TAM-DEF framework and the DEEP-MAX scorecard before any AI rollout; consultation with TNeGA's CEET before procurement; a monitoring committee under the Chief Secretary; iTNT (₹54.61 crore) for research and startups; TNAIM implemented by TNeGA. | The 2020 policy is a guideline without statutory force and predates the DPDP Act; there is no statutory procedure for a citizen affected by an AI decision to seek an explanation or appeal; the TNAIM got only ₹13.93 crore for its first two years; reskilling for displaced workers is unclear. |
D) Way forward
- Update the policy in line with the DPDP Act; a public register of AI systems used by the government, with DEEP-MAX results published.
- Human oversight + an explanation in Tamil + an appeal for every AI-assisted decision.
- Open Tamil datasets (AIKosh); offline models at the panchayat level; reskilling for affected workers.
Conclusion
AI can take governance to everyone, in Tamil; it becomes development only when trust, privacy and accountability are secured.
About 430 words (including tables, excluding the tip box) · 2 tables + 2 flowcharts · time: 12 minutes.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
Details 99941 46662Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 2 / 2A Mains – மாதிரி விடைகளுடன் நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
₹249
M10-த · குரூப் 2/2A Mains முந்தைய வினா & மாதிரி விடை (தமிழ்)
₹249TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

