தினசரி பொருளாதாரம் quiz – 19 நவம்பர் 2026
ஒரு விடையைத் தொடுங்கள் – சரியான விடையும் சிறு விளக்கமும் உடனே தெரியும். மதிப்பெண் கீழே. (TNPSC / UPSC Prelims)
ஏ.டபிள்யூ. பிலிப்ஸ் (1958) பிரிட்டனில் வேலையின்மைக்கும் பணக்கூலி மாற்ற விகிதத்துக்கும் இடையே எதிர்மறைத் தொடர்பைக் கண்டறிந்தார்; பின்னர் அது பணவீக்கம் – வேலையின்மை இடையிலான பரிமாற்றமாக (trade-off) விளக்கப்பட்டது.
கூற்றுகள் 1, 3 சரி. கூற்று 2 தவறு: கருவூல உண்டியல்கள் வட்டி (கூப்பன்) இல்லாத குறுகியகாலப் பணச்சந்தைக் கருவிகள் – தள்ளுபடி விலையில் வெளியிடப்பட்டு முக மதிப்பில் திரும்பப் பெறப்படுகின்றன; அந்த வேறுபாடே முதலீட்டாளரின் வருவாய். மாநில அரசுகள் கருவூல உண்டியல்களை வெளியிடுவதில்லை.
WPI – பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (வணிகம் – தொழில் அமைச்சகம்); CPI-IW – தொழிலாளர் பணியகம் (தொழிலாளர் – வேலைவாய்ப்பு அமைச்சகம்); PLFS – தேசியப் புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம்; நிதி நிலைத்தன்மை அறிக்கை – RBI, ஆண்டுக்கு இருமுறை.
இரண்டும் சரி; R என்பது A-க்கு விளக்கம். மாநிலங்களுக்கு இடையிலான விநியோகத்தில் IGST விதிக்கப்பட்டு, மாநிலப் பங்கு நுகரும் மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது. இதனால்தான் தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்கள் தொடக்க ஆண்டுகளில் வருவாய் இழப்புக்கு இழப்பீடு கோரின (GST இழப்பீடு, 2017–22).
IFAD உதவியுடன் 1989-இல் தருமபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் சுய உதவிக் குழு அணுகுமுறை தொடங்கப்பட்டது; பின்னர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தும் 'மகளிர் திட்டம்' ஆக மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.
கூற்றுகள் 2, 3 சரி. கூற்று 1 தவறு: CACP வேளாண் – விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைப்பு அலுவலகம் (attached office); 1965-இல் வேளாண் விலைகள் ஆணையமாக அமைக்கப்பட்டு 1985-இல் பெயர் மாற்றப்பட்டது; இது சட்டப்பூர்வ அமைப்பு அல்ல. கரும்புக்கான FRP, கரும்பு (கட்டுப்பாட்டு) ஆணை, 1966-இன் கீழ் நிர்ணயிக்கப்படுகிறது.
RBI சட்டம், 1934 (RBI 1935 ஏப்ரல் 1 முதல் செயல்படத் தொடங்கியது); வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (வங்கி நிறுவனங்கள் சட்டமாக இயற்றப்பட்டு 1966-இல் பெயர் மாற்றம்); SARFAESI சட்டம், 2002 – நீதிமன்றம் செல்லாமலே வங்கிகள் பிணையச் சொத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது; திவால் – நொடிப்பு நிலைச் சட்டம், 2016 – தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) மூலம் காலவரம்புக்குட்பட்ட தீர்வு.
A சரி; R தவறு. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 24-இன்படி, வங்கிகள் SLR சொத்துகளைத் தம்மிடமே வைத்திருக்கின்றன – ரொக்கம், தங்கம், அரசுப் பத்திரங்கள் போன்ற அடமானமற்ற அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள். RBI-யிடம் வைக்கப்படும் இருப்பு ரொக்கக் கையிருப்பு விகிதம் (CRR).
பொருளியலாளர் ஆர்தர் லாஃபருடன் தொடர்புடைய லாஃபர் வளைகோடு, ஓர் உகந்த அளவு வரை வரி விகிதத்துடன் வருவாய் உயர்ந்து, பின்னர் குறைவதைக் காட்டுகிறது – மிக உயர்ந்த வரி உழைப்பைக் குறைத்து வரி ஏய்ப்பைத் தூண்டுகிறது. லாரன்ஸ் வளைகோடு வருமானப் பகிர்வைக் காட்டுகிறது; ஏங்கல் வளைகோடு வருமானத்துக்கும் ஒரு பொருளுக்கான செலவுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.
கூற்றுகள் 1, 2 சரி. முழுச் சமத்துவக் கோட்டுக்கும் லாரன்ஸ் வளைகோட்டுக்கும் இடையிலான பரப்பை, அக்கோட்டுக்குக் கீழுள்ள மொத்தப் பரப்பால் வகுத்தால் கினி குணகம் கிடைக்கும்; இதன் மதிப்பு 0 (முழுச் சமத்துவம்) முதல் 1 (முழு ஏற்றத்தாழ்வு) வரை. கூற்று 3 தவறு – கினி உயர்ந்தால் ஏற்றத்தாழ்வு அதிகம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தினசரிப் பாட வாரியான quiz என்றால் என்ன?
தினமும் ஒரு பாடத்திலிருந்து 10 வினாக்கள் – திங்கள் வரலாறு, செவ்வாய் அரசியலமைப்பு, புதன் புவியியல், வியாழன் பொருளாதாரம், வெள்ளி அறிவியல், சனி சுற்றுச்சூழல், ஞாயிறு தமிழ்நாடு – உடனடி விடை, விளக்கத்துடன்.
பதிவு செய்ய வேண்டுமா?
தேவையில்லை. ஒரு விடையைத் தொட்டால் சரியான விடையும் விளக்கமும் தெரியும்; இறுதியில் மதிப்பெண். அன்றைய வினாக்களின் இலவச PDF-உம் உண்டு.
எந்தத் தேர்வுகளுக்கு?
TNPSC குரூப் 1, 2, 2A, 4 முதல்நிலை, UPSC முதல்நிலைத் தேர்வுகளுக்கு; SSC, வங்கி பொது அறிவுக்கும் பயன்படும்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
தினசரி இலவசப் பயிற்சி
- UPSC Mains answer practice
- வார நடப்பு நிகழ்வுகள் – Top 20
- தினசரிப் பாட வாரியான quiz
- இன்றைய அறிவுத் துளி
- TNPSC Mains Practice
- அனைத்து இலவச PDF
TNPSC, UPSC வகுப்புகள் – கோவை, மதுரை, ஆன்லைன்.
வகுப்புகள், கட்டணம் 99941 46662நடப்பு நிகழ்வுகள் 25 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026
₹249
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

