வினா விடை · TET – கணிதம்
இரு எண்களின் விகிதம் 4 : 7. ஒவ்வொன்றுடனும் 4 ஐக் கூட்டினால் விகிதம் 3 : 5 ஆகிறது எனில் பெரிய எண் யாது?
சரியான விடை: (C) 56
விளக்கம்: எண்கள் 4x, 7x எனில் (4x + 4) : (7x + 4) = 3 : 5 என்பதால் 20x + 20 = 21x + 12, x = 8. எனவே எண்கள் 32, 56; பெரிய எண் 56.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புத்தகம் 300 பக்கங்களை உடையது. ஒவ்வொரு பக்கத்திலும் 20 வரிகள், ஒவ்வொரு வரியிலும் 10 வார்த்தைகள் உள்ளன எனில் அப்புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் எவ்வளவு?விடை: 60000
- ஒரு பொருளை ₹1800 க்கு விற்பதால் 20% இலாபம் கிடைக்கிறது எனில் அப்பொருளின் அடக்க விலை யாது?விடை: ₹1500
- ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 510 பேரும் மற்ற நாட்களில் 240 பேரும் வருகை புரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும் 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குச்...விடை: 285
- 12 செ.மீ பக்கமுள்ள ஒரு சதுரத்தினுள் வரையக்கூடிய மிகப்பெரிய வட்டத்தின் ஆரம் யாது?விடை: 6 செ.மீ
- ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் முதல் 3 பகா எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம் எனில் அந்த எண் யாது?விடை: 5
- 3 எண்களின் சராசரி 30. 4 ஆவதாக ஓர் எண்ணைச் சேர்த்தால் சராசரி 40 எனில் 4 ஆவது எண் யாது?விடை: 70
- ஒரு வியாபாரி அடக்க விலையின் மீது 10% அதிகப்படுத்திக் குறித்த விலையை நிர்ணயம் செய்து, பின்பு 10% தள்ளுபடி செய்து விற்கிறார் எனில் அவர் அடையும் இலாப அல்லது நட்ட சதவீதம் யாது?விடை: 1% நட்டம்
- 6 மணி 10 நிமிடத்தில் 370 கி.மீ செல்லும் ஒரு காரின் சராசரி வேகம் யாது?விடை: 60 கி.மீ/மணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
