Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

இரு நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது, அதிகபட்சமாக ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

சரியான விடை: (C) 3/4
விளக்கம்: அதிகபட்சம் ஒரு தலை என்பது {HT, TH, TT} என மூன்று விளைவுகள்; நிகழ்தகவு 3/4. இரு தலைகள் (HH) மட்டும் விலக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு சீரான பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. முக எண்களின் கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.விடை: 1/9
  2. மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது, மூன்று பகடைகளிலும் ஒரே எண் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 1/36
  3. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் A ஒரு நிகழ்ச்சி என்க; A′ அதன் நிரப்பு நிகழ்ச்சி என்க. P(A) : P(A′) = 7 : 12 எனில், P(A) ஐக் காண்க.விடை: 7/19
  4. மூன்று நாணயங்கள் ஒரே நேரத்தில் சுண்டப்படுகின்றன. சரியாக இரு பூக்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு தலையாவது கிடைக்கும் நிகழ்ச்சியின் நிகழ்தகவினைக் காண்க.விடை: 7/8
  5. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நெட்டாண்டில் 52 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இருக்க நிகழ்தகவு யாது?விடை: 5/7
  6. ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது. குறைந்தது ஒரு உருட்டலிலாவது எண் 5 கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 11/36
  7. 35 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றில் 7 பொருட்கள் குறைபாடுடையன. அத்தொகுப்பிலிருந்து ஒரு பொருள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது அது குறைபாடற்ற பொருளாக இருப்பதற்கான நிகழ...விடை: 4/5
  8. ஒரு மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.16; பொறியியல் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.24; இரு கல்லூரிகளிலும் சேர்க்கை கிடைப்பதற்கான ந...விடை: 0.29
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions