வினா விடை · TET – கணிதம்
ஒரு சமவாய்ப்புச் சோதனையில் A ஒரு நிகழ்ச்சி என்க; A′ அதன் நிரப்பு நிகழ்ச்சி என்க. P(A) : P(A′) = 7 : 12 எனில், P(A) ஐக் காண்க.
சரியான விடை: (B) 7/19
விளக்கம்: P(A) : P(A′) = 7 : 12 மற்றும் P(A) + P(A′) = 1 என்பதால் P(A) = 7/19. P(A′) = 12/19 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நெட்டாண்டில் 52 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இருக்க நிகழ்தகவு யாது?விடை: 5/7
- ஒரு சீரான பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. முக எண்களின் கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.விடை: 1/9
- 35 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றில் 7 பொருட்கள் குறைபாடுடையன. அத்தொகுப்பிலிருந்து ஒரு பொருள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது அது குறைபாடற்ற பொருளாக இருப்பதற்கான நிகழ...விடை: 4/5
- இரு நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது, அதிகபட்சமாக ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 3/4
- முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஒரு முழு எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப் படுகிறது. அந்த எண் ஒரு பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 2/5
- மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது, மூன்று பகடைகளிலும் ஒரே எண் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.விடை: 1/36
- ஒரு சீரான நாணயம் இரண்டு முறை சுண்டப்படுகிறது. குறைந்தது ஒரு தலை கிடைக்க நிகழ்தகவுவிடை: 3/4
- மூன்று நாணயங்கள் ஒரே நேரத்தில் சுண்டப்படுகின்றன. சரியாக இரு பூக்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு தலையாவது கிடைக்கும் நிகழ்ச்சியின் நிகழ்தகவினைக் காண்க.விடை: 7/8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
