வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஜைனகாஞ்சி என்று அழைக்கப்படும் கிராமம் எது?
சரியான விடை: (C) திருப்பருத்திக்குன்றம்
விளக்கம்: காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திக்குன்றம் ‘ஜைன காஞ்சி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு திரைலோக்கியநாதர் கோயில் உள்ளிட்ட இரண்டு பழமையான சமணக் கோயில்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளமாக எந்த நூற்றாண்டு விளங்கியது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
- அங்கங்கள் எந்த மத நூல்கள்?விடை: சமண மதம்
- செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு போன்ற சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: கீழடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சமண மதம் 23 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. 2. முதல் தீர்த்தங்கரர் ரிஷபர்.விடை: 2 மட்டும் சரி
- கிராமத்தை கொடிய விலங்குகளிடம் இருந்தும் எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றும் முயற்சியில் மரணித்த வீரர்களின் நினைவாக நடப்படுவது?விடை: நடுகற்கள்
- அறவோர் பள்ளி என்பது சமண துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூல் கூறுகிறது?விடை: மணிமேகலை
- புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவு கல் எப்பகுதியில் காணப்பட்டது?விடை: கொடுமணல்
- சமணர் மலை என்ற பெயரில் குன்று எங்கு காணப்படுகிறது?விடை: கீழக்குயில்குடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
