வினா விடை · TET – கணிதம்
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருக்க முடியாது?
சரியான விடை: (D) 2, 4, 7
விளக்கம்: முக்கோணத்தில் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்; 2 + 4 = 6 < 7 என்பதால் 2, 4, 7 முக்கோணம் அமையாது. இது முக்கோணச் சமனின்மை விதி எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தரகர் 2½% தரகுத் தொகையாக ₹300 பெறுகிறார் எனில், அவர் விற்ற பேருந்தின் விலை என்ன?விடை: ₹12,000
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/3 : 1/4 : 1/5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 94 செ.மீ. எனில், அம்முக்கோணத்தின் சிறிய பக்கத்தின் நீளம் என்ன?விடை: 24 செ.மீ.
- ஓர் எண்ணின் 5 மடங்கிலிருந்து 7-ஐக் கழித்தால் 33 கிடைக்கும் எனில், அந்த எண்ணைக் காண்க.விடை: 8
- ஒரு வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களில் ஒருவரின் மதிப்பெண் 63-க்குப் பதிலாக 83 என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்டது. இதனால் சராசரி ½ கூடுகிறது எனில், மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?விடை: 40
- ஒரு செவ்வகத்தின் நீளம் 7 செ.மீ, அகலம் 5 செ.மீ எனில், அதன் சுற்றளவு காண்க.விடை: 24 செ.மீ
- 2x − y ≥ 1 என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யாத புள்ளி எது?விடை: (0,1)
- 20% தள்ளுபடிக்குப் பின் ஒரு பொருள் ரூ.800-க்கு விற்கப்பட்டது எனில், அதன் குறித்த விலை என்ன?விடை: ரூ.1000
- கூட்டு வட்டி முறையில் ஓர் அசல் முதல் ஆண்டு முடிவில் ₹650 ஆகவும், இரண்டாம் ஆண்டு முடிவில் ₹676 ஆகவும் ஆகிறது எனில், அசல் எவ்வளவு?விடை: ₹625
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
