Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

முற்றெதுகை அமைந்த தொடரைச் சுட்டுக.

சரியான விடை: (A) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
விளக்கம்: அடியின் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது முற்றெதுகை; ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு’ என்பதில் நான்கிலும் ‘ப்’ ஒன்றி வருகிறது. இது திருக்குறள் வான்சிறப்பு அதிகாரத்தின் 12ஆவது குறள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: கூழை மோனை
  2. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. வெட்சி 2. கரந்தை 3. நொச்சி 4. வாகை // அ. எயில் காத்தல் ஆ. நிரை கவர்தல் இ. போரில் வெற்றி பெறல் ஈ. நிரை மீட்டல் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ ஈ அ இ
  3. “நாய் பெற்ற தெங்கம்பழம்” என்னும் பழமொழி உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காதவன்
  4. பொருத்துக: 1. மாரி 2. பராவி 3. கழனி 4. தொன்மை // அ. வயல் ஆ. பழமை இ. மழை ஈ. வணங்கி (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
  5. அகர வரிசைப்படி அமைந்த வரிசையைக் கண்டறிக: 1. வரதராசன் 2. சேதுப்பிள்ளை 3. மறைமலையடிகள் 4. விசுவநாதம்விடை: 2, 3, 1, 4
  6. மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?விடை: எங்கள் தோட்டத்தில் வாழை மரமும் புடலைக் கொடியும் உள்ளன.
  7. ‘Financial Year’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: நிதியாண்டு
  8. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. சுரம் 2. உகிர் 3. மறுகு 4. வைகல் // அ. தெரு ஆ. நாள் இ. பாலை ஈ. நகம் (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions