வினா விடை · TET – கணிதம்
ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ.50,000-க்கு வாங்கினார். அதன் மதிப்பு ஆண்டுதோறும் 8% குறைகிறது எனில், ஓராண்டுக்குப் பின் அதன் மதிப்பு என்ன?
சரியான விடை: (C) ரூ.46,000
விளக்கம்: 8% குறைவு என்பதால் ஓராண்டுக்குப் பின் மதிப்பு 50,000 × 92/100 = ரூ.46,000. இவ்வாறு காலப்போக்கில் மதிப்புக் குறைவதைத் தேய்மானம் (Depreciation) என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 100 மீ பக்க அளவுள்ள சதுர வடிவப் பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் 14 மீ ஆரமுள்ள கால்வட்ட வடிவ மலர்ப்படுகைகள் அமைந்துள்ளன எனில், எஞ்சியுள்ள பூங்காப் பகுதியின் பரப்பளவு என்ன? (π = 22/7)விடை: 9384 மீ²
- அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது எனில், அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?விடை: 24, 48
- 12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாள்களில் செய்வர் எனில், 8 ஆண்களும் 16 பெண்களும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?விடை: 9 நாள்கள்
- a + b = 12, ab = 32 எனில் a² + b² இன் மதிப்பு என்ன?விடை: 80
- ரூ.800 ஆனது ஆண்டுக்கு 5% கூட்டுவட்டி வீதத்தில் ரூ.882 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 2 ஆண்டுகள்
- கூட்டுக: (3x − y), (2y − 2x) மற்றும் (x + y)விடை: 2(x + y)
- ஒரு தொகை தனிவட்டியில் 10 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில், அதே வட்டி வீதத்தில் அது மும்மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 20 ஆண்டுகள்
- முகடு காண்க: 90, 40, 68, 94, 50, 60விடை: முகடு இல்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
