வினா விடை · அறிவியல்
பரிசோதனை கூடங்களில் ரத்தத்திலிருந்து ரத்த செல்களை பிரித்தெடுக்க பின்வரும் எம்முறை பயன்படுகிறது?
சரியான விடை: (B) மைய விலக்கு முறை (Centrifugal method)
விளக்கம்: இரத்தத்தை அதிவேகத்தில் சுழற்றும்போது கனமான இரத்த செல்கள் அடியில் படிந்து, திரவப் பகுதியான பிளாஸ்மா மேலே பிரிகிறது. நோய்க் கண்டறியும் ஆய்வகங்களில் இம்முறை பரவலாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பால் பொருள்களில் பாலாடையையும் கொழுப்பினையும் நீக்கி பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்க பின்வரும் எந்த தத்துவம் பயன்படுகிறது?விடை: மைய விலக்கு முறை (Centrifugal method)
- கடல் நீரிலிருந்து குடிநீர் பிரித்தெடுக்கும் முறை எது?விடை: எளிய காய்ச்சி வடித்தல் முறை (Simple distillation)
- ஒருபடித்தான கலவையை (Homogeneous mixtures) பிரித்தெடுக்கும் முறைகளில் தவறான ஒன்றை தேர்க:விடை: மையவிலகல் (centrifugal)
- ----- கெல்வினுக்கு மேல் கொதிநிலை வேறுபாடுள்ள திரவங்களைப் பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் (Simple distillation) முறை பின்பற்றப்படுகிறது.விடை: 25K
- ஆவியை குளிரூட்டும் போது திண்மத்தை (solid) தரும் நிகழ்விற்கு என்ன பெயர்?விடை: பதங்கமாதல் (Sublimation)
- பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation) முறையால் பின்வரும் எதை பிரித்தெடுக்க முடியாது?விடை: கடல் நீரிலிருந்து குடிநீரை பிரித்தல்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருள்களை கொண்ட கரைசலை பின்வரும் எந்த முறையின் மூலம் பிரித்தெடுக்கலாம்?விடை: வண்ணப்பிரிகை முறை (chromatography)
- உண்மை கரைசலின் (true solution) துகள்களின் உருவ அளவு எப்படி இருக்கும்?விடை: 1 nm-க்குக் கீழ் (10⁻⁷ செ.மீ.-க்குக் கீழ்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
