வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?
சரியான விடை: (C) இராமாயணமும் குறளும்
விளக்கம்: கம்பராமாயணமும் திருக்குறளும் 'தமிழுக்குக் கதி' எனப் போற்றப்படுகின்றன; 'க' என்பது கம்பரையும் 'தி' என்பது திருவள்ளுவரையும் குறிக்கும். இக்கூற்று பொதுவாகப் பரிதிமாற் கலைஞருக்கு உரியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்விடை: ஆழி, ஆர்கலி, பௌவம்
- பொருத்துக: பட்டியல் I – a) கண் வனப்பு b) எண் வனப்பு c) பண் வனப்பு d) கால் வனப்பு; பட்டியல் II – 1. செல்லாமை 2. இத்துணையாம் 3. கண்ணோட்டம் 4. கேட்டார் நன்றென்றல்விடை: 3 2 4 1
- “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?விடை: இளங்கோவடிகள்
- பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களில் ஒன்றாக எது இல்லாமையைப் பெரியார் குறிப்பிடுகிறார்?விடை: சொத்துரிமை
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'நன்மை'விடை: பண்புப்பெயர்
- திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ........................ என்று அழைக்கப்படுகிறது.விடை: தண்டலம்
- காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?விடை: கல்வி வளர்ச்சி நாள்
- கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: இராணி மங்கம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
