வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்”
சரியான விடை: (B) உடற்பயிற்சியின் பயன் என்ன?
விளக்கம்: ‘உடலை வலிமையாக்கும்’ என்பது உடற்பயிற்சியின் பயனைக் கூறுவதால் ‘உடற்பயிற்சியின் பயன் என்ன?’ என்பதே பொருத்தமான வினா. விடைக்கேற்ற வினாவில் விடையின் முக்கியக் கருத்தே வினாவின் இலக்காக அமைய வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் பாரதி”விடை: பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் யார்?
- ‘தேடு’ என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:விடை: தேடியவர்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: அரசியல், இசை, ஈன்றனள், எழுதினேன்
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’விடை: துரோகம்
- ‘செல்’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக:விடை: செல்வான்
- அடியெதுகையைக் கண்டறியவும்: “புயலே யனைய கொடையாளர் / புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார் / எனவே தத்தம் முன்னோரின்...”விடை: புயலே – இயலும்
- ‘நில்’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக:விடை: நின்றான்
- மோனையைத் தேர்ந்தெடுக்கவும்: “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் / புலம்மிக் கவர்க்கே புலனாம்”விடை: புலம் – புலமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
