"டிஜிட்டல் கைது" உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த இணைய நிதி மோசடிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை விவாதிக்கவும். அவற்றைத் தடுப்பதில் ஒன்றிய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, தமிழ்நாடு அரசு ஆகியவை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பிடவும்.
Discuss how technology-driven financial cyber frauds such as "digital arrest" operate. Evaluate the measures taken by the Union Government, the Reserve Bank of India and the Government of Tamil Nadu to counter them.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. செய்திப் பின்னணி – உச்ச நீதிமன்றம் (தானாக முன்வந்த வழக்கு SMW (Crl.) 3/2025)
- அக்டோபர் 2025 – டிஜிட்டல் கைது மோசடி குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு (முதிய தம்பதியர் போலி நீதிமன்ற ஆணைகளால் ₹1.05 கோடி இழந்தது தொடக்கம்).
- 01.12.2025 – நாடு தழுவிய டிஜிட்டல் கைது வழக்குகளை CBI விசாரிக்க உத்தரவு.
- 28.07.2026 – "டிஜிட்டல் கைது"-ஐக் குற்றவியல் சட்டத்தில் தனிக் குற்றமாக வரையறுத்து, கடும் தண்டனை வழங்குவது பற்றி ஒன்றிய அரசு பரிசீலிக்கலாம் என அமர்வு (தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா) கருத்து.
- 04.08.2026 – வங்கிகள் தற்காலிகப் பற்றுத் தடை விதிப்பதற்கான நிலையான நடைமுறையை (SOP) RBI நான்கு வாரத்தில் ஏற்க வேண்டும்; மாநிலங்கள் நான்கு வாரத்தில் மாநில இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- 29.10.2026 – அதே அமர்வு: RBI விதிகளில் பொறுப்பு விதி வேண்டும்; வங்கியின் கவனக்குறைவால் மோசடி நடந்தால், இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு; அசாதாரணப் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்துதல், அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தானியங்கித் தகவல், நேரடிச் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்புகள். இவ்வாண்டு டிஜிட்டல் கைது மோசடியால் சுமார் ₹800 கோடி இழப்பு (தலைமை நீதிபதி); WhatsApp 9,400 சந்தேகக் கணக்குகளைத் தடை செய்தது. KYC திருத்த நெறிகளை 30.11.2026-க்குள் அறிவித்து, 31.12.2026-க்குள் நடைமுறைப்படுத்த முடியும் என அட்டர்னி ஜெனரல் தெரிவிப்பு.
2. சட்டக் கட்டமைப்பு
- இந்தியச் சட்டத்தில் "டிஜிட்டல் கைது" என்ற நடைமுறை இல்லை – பிரதமர், மன் கீ பாத் 27.10.2024: "நிறுத்து – யோசி – செயல்படு".
- தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000: பிரிவு 66C (அடையாளத் திருட்டு), 66D (கணினி வளம் மூலம் ஆள்மாறாட்ட ஏமாற்று).
- பாரதிய நியாய சன்ஹிதா 2023: பிரிவு 318 (ஏமாற்று), 319 (ஆள்மாறாட்ட ஏமாற்று), 111 (ஒருங்கிணைந்த குற்றம் – இணையக் குற்றங்கள் உட்பட).
- RBI சுற்றறிக்கை 06.07.2017 – "அங்கீகாரமற்ற மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் பொறுப்பை வரம்புக்குட்படுத்துதல்" (வங்கியின் குறைபாடு அல்லது மூன்றாம் தரப்பு மீறல் – உரிய காலத்தில் புகார் அளித்தால் வாடிக்கையாளருக்குப் பொறுப்பு இல்லை).
3. ஒன்றிய அரசு அமைப்புகள் (உள்துறை அமைச்சகம் – 28.07.2026 நிலவரம், 30.06.2026 வரை)
- I4C – இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (உள்துறை அமைச்சகத்தின் இணைப்பு அலுவலகம்).
- 1930 – கட்டணமில்லா உதவி எண்; cybercrime.gov.in – தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளம் (NCRP).
- CFCFRMS (2021) – நிதி மோசடியை உடனே புகாரளித்துப் பணத்தைத் தடுக்கும் அமைப்பு: 32.80 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களில் ₹11,158 கோடிக்கும் மேல் காப்பு.
- சந்தேக நபர் பதிவேடு (10.09.2024): 30.48 லட்சம் அடையாளங்கள்; 32.08 லட்சம் முதல்நிலைக் கூலிக் கணக்குகள் பகிர்வு; ₹25,698 கோடி பரிவர்த்தனைகள் நிராகரிப்பு.
- 15.75 லட்சம் SIM, 5.77 லட்சம் IMEI முடக்கம்; "சமன்வயா" தளம் – 29,837 கைதுகளுக்கு உதவி.
- தொலைத்தொடர்புத் துறை: சஞ்சார் சாத்தி இணையதளத்தில் "சக்ஷு" (சந்தேக அழைப்பு / செய்தி புகார்) + டிஜிட்டல் நுண்ணறிவுத் தளம் – 04.03.2024 தொடக்கம்.
4. RBI – வரைவு KYC திருத்த நெறிகள், 2026 (11.09.2026 கருத்துக்கேட்பு)
- ₹1,000 அல்லது அதற்கு மேலான, AI/ML உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள் சுட்டும் "சந்தேகக் கூலிக் கணக்குப் பரிவர்த்தனை"க்கு உடனடித் தற்காலிகப் பற்றுத் தடை; முழுக் கணக்குத் தடை கடைசி வழி.
- கணக்குதாரருக்கு அறிவிப்பு – 20 நாளில் விளக்கம்; தீர்வு இல்லையெனில் NCRP-CFCFRMS வழியாகக் காவல்துறைக்குப் பரிந்துரை; பரிந்துரைத்து 30 நாளில் உத்தரவு வராவிட்டால் 31-ஆம் நாள் தடை நீக்கம்; அதிகபட்சம் 60 நாள்.
- வரைவின்படி நடைமுறைக்கு வருவது 01.04.2027 (வங்கிகள் முன்னதாகவும் செயல்படுத்தலாம்); கருத்து இறுதி நாள் 02.10.2026. 29.10.2026 அன்று அட்டர்னி ஜெனரல்: 30.11.2026-க்குள் அறிவிப்பு, 31.12.2026-க்குள் நடைமுறை.
5. தமிழ்நாடு
- 2025 (ஜூலை வரை): ₹314 கோடி முடக்கம்; நீதிமன்ற அனுமதியுடன் ₹62.4 கோடி பாதிக்கப்பட்டோருக்குத் திருப்பி வழங்கல் (இணையக் குற்றப் பிரிவு ADGP தகவல்).
- TN-S4C – தமிழ்நாடு மாநில இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம்: அரசாணை (நிலை) எண் 242, உள் (காவல்-XII) துறை, 28.07.2026; அரசிதழ் 12.08.2026; சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகம் (இணையக் குற்றப் பிரிவுத் தலைமையகம்); I4C-க்கான மாநில முகமை; 24 மணிநேர மையம் – 1930 கட்டுப்பாட்டு அறை, SIM/IMEI முடக்கம், இணையக் கண்காணிப்பு, இருண்ட இணையக் கண்காணிப்பு; 172 காவல் பணியிடங்கள் (5 உயர் அலுவலர் + கட்டளை மையம் 76 + விசாரணை மையம் 91); 6 வெளி நிபுணர்கள்.
- முன்னதாக: 1930 அழைப்பு மைய விரிவாக்கம் – 15 இருக்கைகள், 3 ஆண்டுக்கு ₹8.88 கோடி (அரசாணை எண் 634, 19.11.2024).
- கூலிக் கணக்கு வேட்டை (06–07.08.2026): 837 பேர் கைது; 9,804 NCRP புகார்களுடன் தொடர்புடைய ₹545.27 கோடி மோசடிப் பரிவர்த்தனைகள்; 157 புதிய FIR; 204 கைபேசி, 185 SIM பறிமுதல்.
6. விடையை உயர்த்தும் சொற்கள்
- பொன்னான நேரம் (golden hour), கூலிக் கணக்கு (mule account), சமூகப் பொறியியல் (social engineering), ஆள்மாறாட்டம் (impersonation), வங்கிப் பொறுப்பு (bank liability), டிஜிட்டல் எழுத்தறிவு (digital literacy).
Reference note in English
Key facts
- Supreme Court (suo motu case SMW (Crl.) 3/2025): from October 2025 (elderly couple lost ₹1.05 crore through forged judicial orders); 01.12.2025 – pan-India CBI probe into digital-arrest cases; 28.07.2026 – the bench (CJI Surya Kant, Joymalya Bagchi and V. Mohana JJ) suggested the Centre define "digital arrest" as a standalone offence with harsher punishment; 04.08.2026 – RBI to adopt an SOP for temporary debit holds within four weeks; States to operationalise State Cyber Crime Coordination Centres within four weeks.
- SC 29.10.2026 (same bench): RBI rules must carry a liability clause – where a bank's due-diligence failure enabled the fraud, compensation not less than the amount lost; safeguards such as temporary suspension of unusual transactions, automatic alerts to the nearest police station and physical verification. About ₹800 crore lost to digital arrests this year (CJI); WhatsApp has banned 9,400 suspicious accounts; the AG said the KYC amendment could be notified by 30.11.2026 and operationalised by 31.12.2026.
- Law: no procedure called "digital arrest" exists (PM, Mann Ki Baat 27.10.2024 – "Stop, Think, Take action"). IT Act 2000 s.66C (identity theft), s.66D (cheating by personation using a computer resource); BNS 2023 s.318 (cheating), s.319 (cheating by personation), s.111 (organised crime, includes cyber-crimes). RBI circular of 06.07.2017 – limiting customer liability in unauthorised electronic banking transactions (zero liability for bank deficiency or third-party breach reported in time).
- Union (MHA, as of 30.06.2026): I4C – attached office of MHA; 1930 toll-free helpline; cybercrime.gov.in (NCRP); CFCFRMS (2021) – over ₹11,158 crore saved in over 32.80 lakh complaints; Suspect Registry (10.09.2024) – 30.48 lakh identifiers, 32.08 lakh Layer-1 mule accounts shared, ₹25,698 crore of transactions declined; 15.75 lakh SIMs and 5.77 lakh IMEIs blocked; Samanvaya – 29,837 arrests aided.
- DoT: Chakshu (report suspected fraud calls/messages) on Sanchar Saathi + Digital Intelligence Platform – launched 04.03.2024.
- RBI draft KYC Amendment Directions, 2026 (issued for comment 11.09.2026): temporary debit hold on flagged "suspected money mule transactions" of ₹1,000+ (AI/ML monitoring); account-level hold as last resort; holder gets 20 days to explain; unresolved cases referred to police via NCRP-CFCFRMS, hold lifted on day 31 after the referral if no direction comes; maximum 60 days; draft effective date 01.04.2027 (earlier optional); comments till 02.10.2026.
- Tamil Nadu: 2025 (to July) – ₹314 crore frozen, ₹62.4 crore returned with court approval (ADGP, Cyber Crime).
- TN-S4C (Tamil Nadu State Cyber Crime Coordination Centre): G.O. (Ms) No. 242, Home (Police-XII) Department, 28.07.2026, gazetted 12.08.2026; Cyber Crime Wing HQ, Police Training College campus, Ashok Nagar, Chennai; State nodal agency for I4C; 24x7 hub – 1930 control room, SIM/IMEI blocking, cyber patrolling, dark-web surveillance; 172 police posts (5 senior officers + Command Centre 76 + Investigation Centre 91); 6 external experts. Earlier: ₹8.88 crore for 15 more 1930 call-centre seats for 3 years (G.O. No. 634, 19.11.2024).
- Mule hunt (06–07.08.2026): 837 arrested; ₹545.27 crore of fraudulent transactions linked to 9,804 NCRP complaints; 157 new FIRs; 204 phones and 185 SIMs seized.
- Value-add terms: golden hour, mule account, social engineering, impersonation, bank liability, digital literacy.
Official Sources:
- தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளம் (NCRP) – புகார் அளிக்க / உதவி எண் 1930 (உள்துறை அமைச்சகம் – அதிகாரப்பூர்வ தளம்)
- இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) – அதிகாரப்பூர்வ தளம்
- இணையக் குற்றத் தடுப்பு – CFCFRMS, சந்தேக நபர் பதிவேடு, SIM முடக்கம் (PIB, உள்துறை அமைச்சகம், 28.07.2026)
- சஞ்சார் சாத்தி – "சக்ஷு" மோசடி அழைப்புப் புகார் (தொலைத்தொடர்புத் துறை – அதிகாரப்பூர்வ தளம்)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- இரு செயல்வினைகள் – "விவாதிக்கவும்" (மோசடி செயல்படும் விதம்), "மதிப்பிடவும்" (நடவடிக்கைகள்). முன்னுரை, செயல்முறை, நடவடிக்கைகள், பலம் + குறைகள், முன்னோக்கிய வழி – ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு.
- Unit IV கோணம்: எந்தத் தொழில்நுட்பங்கள் (உடனடிப் பணமாற்றம், SIM, போலி ஆவணம்) மோசடிக்குப் பயன்படுகின்றன, எந்தத் தொழில்நுட்பங்கள் தடுக்கப் பயன்படுகின்றன என்பதை இணைத்துக் காட்டுங்கள்.
- மோசடியின் படிநிலைகளை flowchart-ஆகவும், ஒன்றியம் – RBI – தமிழ்நாடு நடவடிக்கைகளை அட்டவணையாகவும் காட்டுங்கள்.
- தமிழ்நாட்டுக் கோணம்: மாநிலப் புகார் / இழப்புத் தரவு, புதிய மாநில ஒருங்கிணைப்பு மையம், கூலிக் கணக்குகள் மீதான நடவடிக்கை, முடக்கிய பணம் திரும்புவதில் உள்ள இடைவெளி; அண்மைய உச்ச நீதிமன்றக் கருத்தையும் சேர்க்கவும்.
In English: Two directive verbs – "discuss" (how the fraud works) and "evaluate" (the measures); headings for the introduction, modus operandi, measures, strengths + gaps and the way forward · Unit IV angle: link the technologies misused for fraud (instant payments, SIMs, forged documents) with the technologies used to stop it · show the stages of the fraud as a flowchart and the Union – RBI – Tamil Nadu measures as a table · Tamil Nadu angle: State complaint / loss data, the new State coordination centre, action against mule accounts, the gap in returning frozen money; add the latest Supreme Court view
Send Your Answer
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy
முன்னுரை
29.10.2026 அன்று உச்ச நீதிமன்றம் (தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு), "டிஜிட்டல் கைது" மோசடியில் வங்கியின் கவனக்குறைவு இருந்தால், இழந்த தொகைக்குக் குறையாமல் வங்கியே இழப்பீடு தரும் வகையில் RBI விதிகளில் பொறுப்பு விதி வேண்டும் என்றது; இவ்வாண்டு இம்மோசடியால் சுமார் ₹800 கோடி இழப்பு. தமிழ்நாட்டிலும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணைய மோசடிப் புகார்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
அ) மோசடிகள் செயல்படும் விதம்
| தொழில்நுட்பம் | தவறான பயன்பாடு |
|---|---|
| UPI / உடனடிப் பணமாற்றம் | நிமிடங்களில் பல கணக்குகளுக்குச் சிதறல்; "பொன்னான நேரம்" தவறினால் மீட்பு கடினம். |
| SIM, கூலிக் கணக்குகள் | பிறர் பெயரிலான SIM, வாடகைக் கணக்குகள் – உண்மைக் குற்றவாளி மறைவு. |
| போலி ஆவணம், டீப்ஃபேக் | CBI / நீதிமன்ற முத்திரை போலி; முதலீடு, KYC மோசடிகளிலும் இதே உத்தி. |
சட்டத்தில் "டிஜிட்டல் கைது" என்ற நடைமுறையே இல்லை; குற்றம் – தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66C, 66D; BNS பிரிவு 318, 319.
ஆ) நடவடிக்கைகள்
| அமைப்பு | நடவடிக்கை |
|---|---|
| ஒன்றிய அரசு (I4C) | 1930 / cybercrime.gov.in; CFCFRMS (2021) – 30.06.2026 வரை ₹11,158 கோடி காப்பு; சந்தேக நபர் பதிவேடு (2024) – ₹25,698 கோடி பரிவர்த்தனை நிராகரிப்பு; 15.75 லட்சம் SIM முடக்கம்; "சக்ஷு" (சஞ்சார் சாத்தி). |
| RBI | வரைவு KYC திருத்த நெறிகள் 2026: ₹1,000-க்கு மேலான சந்தேகப் பரிவர்த்தனைக்குத் தற்காலிகப் பற்றுத் தடை (அதிகபட்சம் 60 நாள்). |
| தமிழ்நாடு | TN-S4C (அரசாணை 28.07.2026) – 24 மணிநேர மாநில மையம், I4C-க்கான மாநில முகமை; "கூலிக் கணக்கு வேட்டை" (ஆகஸ்ட் 2026): 837 கைது, ₹545.27 கோடி மோசடிப் பரிவர்த்தனைகள்; ஜூலை 2025 வரை ₹314 கோடி முடக்கம். |
இ) மதிப்பீடு
| பலம் | குறைகள் |
|---|---|
| ஒற்றை உதவி எண் + இணையதளம்; வங்கி – காவல் – தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு; AI/ML கண்காணிப்பு, சந்தேகப் பதிவேடு போன்ற தொழில்நுட்பத் தீர்வுகள்; தனி மாநில மையம் – தடுப்பை நோக்கிய மாற்றம். | முடக்கியதில் சிறு பங்கே திரும்புகிறது (₹314 கோடியில் ₹62.4 கோடி); RBI-இன் 2017 "வரம்புக்குட்பட்ட பொறுப்பு" விதி அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகளுக்கானது – மிரட்டலில் தானே அனுப்பும் பணத்துக்குத் தெளிவான பாதுகாப்பு இல்லை; "டிஜிட்டல் கைது" தனிக் குற்றமாக இல்லை; RBI நெறி இன்னும் வரைவு நிலையில்; முதியோரின் டிஜிட்டல் எழுத்தறிவுக் குறைவு. |
ஈ) முன்னோக்கிய வழி
- வங்கிகளுக்குக் கட்டாய இழப்பீட்டுப் பொறுப்பு; அசாதாரணப் பரிவர்த்தனைக்குத் தானியங்கித் தடை + நேரடிச் சரிபார்ப்பு.
- "டிஜிட்டல் கைது" – தனிக் குற்றம், கடும் தண்டனை; மாநிலங்களுக்கிடையே விரைவு ஒருங்கிணைப்பு.
- முடக்கிய பணத்தைக் கால வரம்புக்குள் திருப்பித் தர நடைமுறை; முதியோர், மாணவர்களை மையப்படுத்தித் தமிழில் "நிறுத்து – யோசி – செயல்படு" விழிப்புணர்வு.
முடிவுரை
தொழில்நுட்பம் தந்த வேகத்தையே மோசடியாளர்கள் ஆயுதமாக்குகின்றனர்; வேகமான புகார், வங்கிப் பொறுப்பு, விழிப்புணர்வு – இம்மூன்றும் இணைந்தால்தான் டிஜிட்டல் இந்தியா பாதுகாப்பானதாகும்.
- இரு செயல்வினைகள் – "விவாதிக்கவும்" (மோசடி எப்படி) + "மதிப்பிடவும்" (நடவடிக்கைகள்): இரண்டாவதற்குப் பலம் + குறைகள் அட்டவணை கட்டாயம்.
- Unit IV "அறிவியல், தொழில்நுட்பம்" கோணம்: UPI வேகம், SIM, டீப்ஃபேக் (பிரச்சினை) – AI கண்காணிப்பு, சந்தேகப் பதிவேடு (தீர்வு); வெறும் குற்றச் செய்தியாக எழுத வேண்டாம்.
- ஒன்றியம் – RBI – தமிழ்நாடு அட்டவணை + TN-S4C, 837 கைது, ₹1,673 கோடி போன்ற தமிழ்நாட்டுத் தரவு விடையை வேறுபடுத்தும்.
- "1930" எண், "சட்டத்தில் டிஜிட்டல் கைது இல்லை" – ஒரு வரியில் சொல்வது குடிமக்கள் நோக்கைக் காட்டும்.
சுமார் 350 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 3 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.
Model answer framework in English
Introduction
On 29.10.2026 the Supreme Court (bench of CJI Surya Kant) said the RBI's rules must carry a liability clause so that, where a bank's lapse in due diligence enabled a "digital arrest" fraud, the bank compensates the victim at least the amount lost; about ₹800 crore has been lost to this scam this year. In Tamil Nadu too, cyber-fraud complaints, including digital-arrest cases, are rising fast.
A) How the frauds operate
| Technology | Misuse |
|---|---|
| UPI / instant payments | Money scattered across many accounts in minutes; miss the "golden hour" and recovery is hard. |
| SIMs, mule accounts | SIMs and rented accounts in others' names – the real offender stays hidden. |
| Forged documents, deepfakes | Fake CBI / court seals; the same playbook in investment and KYC frauds. |
There is no procedure called "digital arrest" in law; offences – IT Act 2000, Sections 66C, 66D; BNS Sections 318, 319.
B) Measures
| Actor | Measure |
|---|---|
| Union (I4C) | 1930 / cybercrime.gov.in; CFCFRMS (2021) – ₹11,158 crore saved up to 30.06.2026; Suspect Registry (2024) – transactions worth ₹25,698 crore declined; 15.75 lakh SIMs blocked; "Chakshu" (Sanchar Saathi). |
| RBI | Draft KYC Amendment Directions 2026: temporary debit hold on suspicious transactions of ₹1,000+ (maximum 60 days). |
| Tamil Nadu | TN-S4C (G.O. 28.07.2026) – 24x7 State centre, State nodal agency for I4C; "mule hunt" (August 2026): 837 arrests, ₹545.27 crore of fraudulent transactions; ₹314 crore frozen up to July 2025. |
C) Evaluation
| Strengths | Gaps |
|---|---|
| A single helpline and portal; bank–police–telecom coordination; technology fixes such as AI/ML monitoring and the suspect registry; a dedicated State centre – a shift towards prevention. | Only a fraction of frozen money returns (₹62.4 crore of ₹314 crore); the RBI's 2017 "limited liability" rule covers unauthorised transactions – money the victim sends under threat has no clear protection; "digital arrest" is not a separate offence; the RBI rules are still a draft; low digital literacy among the elderly. |
D) Way forward
- Mandatory compensation liability for banks; automatic holds and physical verification of unusual transactions.
- "Digital arrest" as a standalone offence with stiffer punishment; faster inter-State coordination.
- A time-bound procedure to return frozen money; "Stop – Think – Act" awareness in Tamil aimed at the elderly and students.
Conclusion
Fraudsters weaponise the very speed technology provides; only fast reporting, bank accountability and awareness together can make Digital India safe.
About 420 words (including tables, excluding the tip box) · 3 tables + 1 flowchart · time: 12 minutes.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
Details 99941 46662Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 2 / 2A Mains – மாதிரி விடைகளுடன் நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
₹249
M10-த · குரூப் 2/2A Mains முந்தைய வினா & மாதிரி விடை (தமிழ்)
₹249TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

