Daily Mains Question · தினம் ஒரு வினா

15 நவம்பர் 2026குரூப் 2 Mainsஅலகு II – தமிழ்ச் சமூகம்: பண்பாடு, பாரம்பரியம்பகுதி C15 மதிப்பெண் · 250 சொற்கள்

கி.பி. 6 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை நாயன்மார்களும் ஆழ்வார்களும் முன்னெடுத்த பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை விவாதித்து, தமிழ்ச் சமூகத்தின் சமயம், மொழி, இசை, சமூக வாழ்வு ஆகியவற்றில் அதன் தாக்கத்தை மதிப்பிடுக.

Discuss the features of the Bhakti movement led by the Nayanmars and Alvars between the 6th and 9th centuries CE, and assess its impact on the religion, language, music and social life of Tamil society.

Timed Test:12:00

➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு

முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.

1. பின்னணி

  • காலம்: கி.பி. 6–9-ஆம் நூற்றாண்டு; பல்லவர் (காஞ்சி), பாண்டியர் (மதுரை) ஆட்சி; களப்பிரர் காலத்துக்குப் பின் சமண, பௌத்தச் செல்வாக்குக்கு எதிர்வினை.
  • மார்கழி மாதத்தில் இன்றும் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுவது இவ்வியக்கத்தின் தொடர்ச்சி.

2. முக்கியத் தரவு

குறியீடுவிவரம்
நாயன்மார் / ஆழ்வார்63 / 12
சைவத் திருமுறைகள்12 (தேவாரம் = 1–7; திருவாசகம், திருக்கோவையார் = 8; பெரியபுராணம் = 12)
வைணவத் தொகுப்புநாலாயிர திவ்யப் பிரபந்தம் – சுமார் 4,000 பாசுரங்கள்; தொகுத்தவர் நாதமுனிகள்
தலங்கள்276 பாடல் பெற்ற தலங்கள்; 108 திவ்ய தேசங்கள்
பெண் அடியார்கள்நாயன்மாரில் 3 (காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார்); ஆழ்வாரில் 1 (ஆண்டாள்)
பின்தொடர்ச்சிஇராமாநுசர் – விசிஷ்டாத்வைதம்; மெய்கண்டார் – சிவஞான போதம் (13-ஆம் நூ.)

3. பாடத்திட்டத் தொடர்பு

  • அலகு II – தமிழ்ச் சமூகம், பண்பாடு; பல்லவர் கலை (மாமல்லபுரம்), சோழர் கோயில்கள் (தஞ்சைப் பெரிய கோயில்), தமிழிசை மரபு ஆகியவற்றுடன் இணைத்து எழுதலாம்.

4. விடையை உயர்த்தும் சொற்கள்

  • பக்தி (பேரன்பு), சரணாகதி, பதிகம், பாசுரம், பண், ஓதுவார், அரையர் சேவை, கோயில் மையச் சமூகம் (temple-centred society), மரபுவழிச் செய்தி (hagiographic tradition).
Reference note in English

Key facts

  • Period: 6th–9th centuries CE, under the Pallavas (Kanchi) and Pandyas (Madurai); a response to Jain and Buddhist influence after the Kalabhra period.
  • 63 Nayanmars and 12 Alvars. Saiva canon – 12 Tirumurai (Tevaram = 1–7; Tiruvasagam and Tirukkovaiyar = 8; Periyapuranam = 12). Vaishnava canon – Nalayira Divya Prabandham (about 4,000 pasurams), compiled by Nathamuni.
  • 276 Padal Petra Sthalams; 108 Divya Desams. Women saints: three among the Nayanmars (Karaikkal Ammaiyar, Mangaiyarkkarasiyar, Isaignaniyar) and one Alvar (Andal).
  • Legacy: Ramanuja's Visishtadvaita; Meykandar's Sivagnana Bodham (13th c.); Tiruppavai and Tiruvempavai are still sung in the month of Margazhi.
  • Syllabus link: Unit II – Tamil society and culture; connect with Pallava art (Mamallapuram), Chola temples and the Tamil music tradition.
  • Answer-boosting terms: bhakti, surrender (saranagati), padigam, pasuram, pann, Oduvar, Araiyar sevai, temple-centred society, hagiographic tradition.
Download Notes PDF

Official Sources:

இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:

எப்படி அணுகுவது? (குறிப்புகள்)

  • செயல்வினை "விவாதித்து, மதிப்பிடுக" – சிறப்பியல்புகள், தாக்கம், வரம்புகள் என மூன்று தலைப்புகள்; முன்னுரையில் காலம், அரச வம்சங்கள்.
  • "சமண, பௌத்தச் செல்வாக்கு → நாயன்மார், ஆழ்வார் → அரசர் ஆதரவு → திருமுறைத் தொகுப்பு → கோயில் மையச் சமூகம்" flowchart-உம், சைவம் – வைணவம் ஒப்பீட்டு அட்டவணையும் வரையுங்கள்.
  • 63 நாயன்மார், 12 ஆழ்வார், 12 திருமுறை, சுமார் 4,000 பாசுரங்கள், 276 / 108 தலங்கள், பெண் அடியார்கள் – எண்களைச் சரியாகக் குறிப்பிடுங்கள்.
  • சாதிப் படிநிலை முழுமையாக மாறாதது போன்ற வரம்புகளைச் சொல்லி, "இந்திய ஆன்மிகத்துக்குத் தமிழகத்தின் கொடை" என்று முடியுங்கள்.

In English: Directive verbs "discuss" and "assess" – three headings for features, impact and limits; give the period and dynasties in the introduction · draw the flowchart Jain-Buddhist influence → Nayanmars and Alvars → royal patronage → compilation of the canon → temple-centred society, and a Saiva vs Vaishnava comparison table · cite 63 Nayanmars, 12 Alvars, 12 Tirumurai, about 4,000 pasurams, 276 / 108 shrines and the women saints correctly · state limits such as the caste hierarchy that did not fully change, and end with "Tamil Nadu's gift to Indian spirituality"

Send Your Answer

காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.

Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்

மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy

முன்னுரை

கி.பி. 6 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர், பாண்டியர் காலத்தில் தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கம், இறைவனிடம் தனிப்பட்ட அன்பையும் சரணாகதியையும் முன்வைத்தது. சைவ நாயன்மார்கள் (63), வைணவ ஆழ்வார்கள் (12) ஊர் ஊராகச் சென்று தமிழில் பாடிய பாடல்கள் சமயம், மொழி, இசை, சமூக வாழ்வு அனைத்தையும் மாற்றியமைத்தன.

சமண, பௌத்தச் செல்வாக்கு; வேள்வி மையச் சமயம்
➜
நாயன்மார், ஆழ்வார் – தமிழில் இறைப் பாடல்கள் (கி.பி. 6–9 நூ.)
➜
அரசர் ஆதரவு – மகேந்திரவர்மன் I, நின்றசீர் நெடுமாறன் (மரபுவழிச் செய்தி)
➜
திருமுறைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் தொகுப்பு (கி.பி. 10–12 நூ.)
➜
கோயில் மையச் சமூகம்; இராமாநுசர், சைவ சித்தாந்தம்; வட இந்தியப் பக்தி

அ) இயக்கத்தின் சிறப்பியல்புகள்

அம்சம்சைவம் – நாயன்மார்கள்வைணவம் – ஆழ்வார்கள்
முன்னோடிகள்அப்பர் (திருநாவுக்கரசர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்; காரைக்கால் அம்மையார்பொய்கை, பூதத்தார், பேயாழ்வார் (முதலாழ்வார்கள்), நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள்
நூல்கள்தேவாரம் (திருமுறை 1–7), திருவாசகம், திருக்கோவையார் (8); முதல் 11 திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்தார் (மரபு); சேக்கிழாரின் பெரியபுராணம் (12-ஆம் திருமுறை, இரண்டாம் குலோத்துங்கன் காலம்)நாலாயிர திவ்யப் பிரபந்தம் – நாதமுனிகள் தொகுத்தார்; திருவாய்மொழி "தமிழ் வேதம்"; ஆண்டாளின் திருப்பாவை (30 பாசுரங்கள்)
தலங்கள்பாடல் பெற்ற தலங்கள் 276108 திவ்ய தேசங்கள்
பெண்கள்காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார் – மூவர்ஆண்டாள் – ஒரே பெண் ஆழ்வார்

ஆ) தமிழ்ச் சமூகத்தில் தாக்கம்

துறைதாக்கம்
சமயம்சமண, பௌத்தச் செல்வாக்குக் குறைந்தது; சடங்கைவிட அன்பு (பக்தி) மையம்; பின்னர் இராமாநுசரின் விசிஷ்டாத்வைதம், மெய்கண்டாரின் சிவஞான போதம் (சைவ சித்தாந்தம்) இதன் மீது எழுந்தன.
மொழி, இலக்கியம்சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழ் இறைமொழியானது; எளிய, உணர்ச்சிமிக்க பாடல் நடை; பதிகம், பாசுரம், அந்தாதி வடிவங்கள் வளர்ந்தன.
இசை, கலைபண் அடிப்படையிலான பாடல்கள் – தமிழிசை மரபு; ஓதுவார், அரையர் சேவை.
சமூகம்சாதி, பாலின எல்லைகளைத் தாண்டிய அடியார்கள் – திருநாளைப்போவார் (நந்தனார்), திருப்பாணாழ்வார், கண்ணப்ப நாயனார்; பெண் அடியார்களுக்கு மதிப்பு.
அரசியல், பொருளாதாரம்கோயில் சமூக, பொருளாதார மையமானது – நிலக்கொடை, திருவிழா, கல்வி; சோழர் காலக் கோயில் கட்டடக்கலைக்கு அடித்தளம்.

இ) வரம்புகள்

  • சமண, பௌத்தருடன் கடும் சமயப் பூசல் (மதுரைக் கழுவேற்றக் கதை – மரபுவழிச் செய்தி; வரலாற்று உறுதி இல்லை).
  • அடியார் நிலையில் சமத்துவம் பேசினாலும் சமூகத்தில் சாதிப் படிநிலை முழுமையாக மாறவில்லை.

முடிவுரை

பக்தி இயக்கம் தமிழைச் சமய மொழியாகவும், கோயிலைச் சமூக மையமாகவும் மாற்றி, தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சிக்கு உயிர் தந்தது. "பக்தி திராவிட நாட்டில் பிறந்தது" என்ற பிற்கால வடமொழிக் கூற்று, இது இந்திய ஆன்மிகத்துக்குத் தமிழகம் அளித்த கொடை என்பதைக் காட்டுகிறது.

மதிப்பெண் பெறும் நுட்பம் (ஆசிரியர் குறிப்பு):
  • "விவாதி, மதிப்பிடு" – சிறப்பியல்புகளுக்கு ஒரு தலைப்பு, தாக்கத்துக்குத் துறைவாரியாக (சமயம், மொழி, இசை, சமூகம், கோயில்) தனித் தலைப்பு; வரம்புகளையும் ஒரு வரியில் சொல்லுங்கள்.
  • எண்கள் மதிப்பெண் தரும்: 63 நாயன்மார், 12 ஆழ்வார், 12 திருமுறை, சுமார் 4,000 பாசுரங்கள், 276 பாடல் பெற்ற தலங்கள், 108 திவ்ய தேசங்கள்.
  • ஒப்பீட்டு அட்டவணையே விடையின் முதுகெலும்பு; ஒரு தேவார / திருப்பாவை அடியை மேற்கோள் காட்டினால் கூடுதல் மதிப்பு.
  • அரசர் மதமாற்றம், கழுவேற்றம் போன்றவற்றை "மரபுவழிச் செய்தி" என்றே எழுதுங்கள் – உறுதியான வரலாறாக அல்ல.

சுமார் 300 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 2 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.

இன்றைய 3 வினாக்களின் மாதிரி விடைகள் – PDF பதிவிறக்கம்

Model answer framework in English

Introduction

The Bhakti movement that rose in Tamilakam between the 6th and 9th centuries CE, under the Pallavas and Pandyas, placed personal love and surrender to God at the centre of religion. The hymns sung in Tamil by the Saiva Nayanmars (63) and the Vaishnava Alvars (12), who travelled from shrine to shrine, reshaped religion, language, music and social life.

Jain and Buddhist influence; ritual-centred religion
➜
Nayanmars and Alvars – devotional hymns in Tamil (6th–9th c. CE)
➜
Royal patronage – Mahendravarman I, Ninrasir Nedumaran (tradition)
➜
Compilation of the Tirumurai and Nalayira Divya Prabandham (10th–12th c. CE)
➜
Temple-centred society; Ramanuja, Saiva Siddhanta; Bhakti in North India

A) Features of the movement

FeatureSaivism – NayanmarsVaishnavism – Alvars
Leading saintsAppar (Tirunavukkarasar), Tirugnanasambandar, Sundarar, Manikkavasagar; Karaikkal AmmaiyarPoigai, Bhutam, Pey (the first Alvars), Nammalvar, Tirumangai Alvar, Andal
TextsTevaram (Tirumurai 1–7), Tiruvasagam and Tirukkovaiyar (8); first 11 Tirumurai compiled by Nambiyandar Nambi (tradition); Sekkizhar's Periyapuranam (12th Tirumurai, age of Kulottunga II)Nalayira Divya Prabandham – compiled by Nathamuni; Tiruvaymoli called the "Tamil Veda"; Andal's Tiruppavai (30 verses)
Shrines276 Padal Petra Sthalams108 Divya Desams
WomenKaraikkal Ammaiyar, Mangaiyarkkarasiyar, Isaignaniyar – threeAndal – the only woman Alvar

B) Impact on Tamil society

FieldImpact
ReligionJain and Buddhist influence declined; love (bhakti) over ritual; later Ramanuja's Visishtadvaita and Meykandar's Sivagnana Bodham (Saiva Siddhanta) were built on it.
Language and literatureTamil became a language of worship on a par with Sanskrit; a simple, emotional style; forms such as the padigam, pasuram and andadi grew.
Music and artHymns set to pann (melodic modes) – the Tamil music tradition; the Oduvar and Araiyar traditions.
SocietyDevotees from beyond caste and gender lines – Tirunalaippovar (Nandanar), Tiruppan Alvar, Kannappa Nayanar; respect for women devotees.
Polity and economyThe temple became a social and economic centre – land grants, festivals, learning; the base for Chola temple architecture.

C) Limits

  • Bitter conflict with Jains and Buddhists (the Madurai impalement story is a tradition, not established history).
  • Equality was preached among devotees, but the caste hierarchy in society did not change fully.

Conclusion

The Bhakti movement made Tamil a language of religion and the temple the centre of society, giving life to the continuity of Tamil culture. A later Sanskrit claim that "Bhakti was born in the Dravida land" shows that this was Tamil Nadu's gift to Indian spirituality.

Scoring tips (faculty note): "Discuss and assess" – one heading for the features and field-wise headings for the impact (religion, language, music, society, temple); state the limits in a line. Numbers earn marks: 63 Nayanmars, 12 Alvars, 12 Tirumurai, about 4,000 pasurams, 276 Padal Petra Sthalams, 108 Divya Desams. The comparison table is the backbone; quoting one Tevaram or Tiruppavai line adds value. Write royal conversions and the impalement story as "tradition", not as established history.

About 400 words (including tables, excluding the tip box) · 2 tables + 1 flowchart · time: 12 minutes.

Model answers for all 3 questions of the day – download PDF

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)

குரூப் 2 Mains பயிற்சி

புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.

Details 99941 46662