வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர் யார்?
சரியான விடை: (D) ஹெச் ஜி வெல்ஸ்
விளக்கம்: அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர் ஆங்கில எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ். இது அவரது உலக வரலாற்றுச் சுருக்கம் (The Outline of History) நூலில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அசோகர்
- பொருத்துக: A. மகதம் B. அவந்தி C. கோசலம் D. வத்சம் — 1. அலகாபாத் 2. கிழக்கு உத்தரப்பிரதேசம் 3. பீகார் 4. உஜ்ஜயினிவிடை: A-3, B-4, C-2, D-1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
- இந்திய தேசிய சின்னத்தில் இடம்பெறும் சிங்க உருவங்கள் எங்கு காணப்படுகிறது?விடை: சாரநாத்
- அசோகரின் தந்தை யார்?விடை: பிந்துசாரர்
- மஹிந்தா மற்றும் சங்கமித்ரா என்பவர்கள் யார்?விடை: அசோகரின் குழந்தைகள்
- பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?விடை: கிரேக்கர்கள்
- பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?விடை: உதயன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
