Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்' – இதில் பயின்று வரும் எதுகை எவ்வகை?

சரியான விடை: (A) ஒரூஉ எதுகை
விளக்கம்: 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்' என்ற அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் இரண்டாம் எழுத்து 'னை' ஒன்றி வருவதால் இது ஒரூஉ எதுகை. 1, 2 சீர்களில் வருவது இணை; 1, 3 சீர்களில் வருவது பொழிப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'ஏனென்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் / எப்போதும் பேசுகின்ற ஏதென்சு சாக்ரடீசாய்' – இதில் பயின்று வரும் இயைபுச் சொற்களைக் காணவும்விடை: வால்டேராய் – சாக்ரடீசாய்
  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: அரம், அறம்விடை: ஒரு கருவி – தர்மம்
  3. 'எப்படியோ பிரிவானோம் / இடிவிழுந்த ஓடானோம்' – இவ்வரிகளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத் தேர்கவிடை: எப்படியோ – இடிவிழுந்த
  4. பிறமொழிச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: சபதம் – சினம்
  5. ஒருமை – பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடவும்விடை: நீயும் நானும் வந்தோம்
  6. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
  7. பிழையற்ற தொடரைத் தேர்வு செய்யவும்விடை: ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம்
  8. பிறவினை வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கவிதா பாடம் கற்பித்தாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions