வினா விடை · பொதுத் தமிழ்
இந்தியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது?
சரியான விடை: (C) பிராகுயி
விளக்கம்: பிராகுயி மொழி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலும் அதையொட்டிய ஆப்கானிஸ்தான், ஈரான் பகுதிகளிலும் பேசப்படும் வடதிராவிட மொழி. தோடா நீலகிரியிலும், துளு கர்நாடகக் கடற்கரைப் பகுதியிலும், கோண்டி மத்திய இந்தியாவிலும் பேசப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: நம்பியாண்டார் நம்பி
- பொருத்துக (சீறாப்புராணக் காண்டங்கள்):<br />a) விலாதத்துக் காண்டம் – 1. செலவியற் காண்டம்<br />b) நுபுவ்வத்துக் காண்டம் – 2. செம்பொருட் காண்டம்<br />c) ஹிஜிரத்துக் காண்டம் – 3. பிறப்...விடை: 3 2 1
- ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?விடை: 42
- 'நான் கண்ட பாரதம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
- 'வேதம் அனைத்துக்கும் வித்து' எனப் புகழப்படுவது எது?விடை: திருப்பாவை
- மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றிய நூல் எது?விடை: புறநானூறு
- 'பரணிக்கோர் செயங்கொண்டான்' எனப் பாடியவர் யார்?விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- ஜான் பனியனின் 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' (Pilgrim's Progress) நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் எது?விடை: இரட்சணிய யாத்திரிகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
