வினா விடை · பொதுத் தமிழ்
கூற்று I: இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். கூற்று II: பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப் பாடல் என நூறு பாடல்களால் பாட்டுடைத் தலைவனின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். இவற்றுள் சரியானது எது?
சரியான விடை: (D) I, II இரண்டும் சரி
விளக்கம்: இறைவனையோ பெரியோரையோ குழந்தையாகக் கருதிப் பத்துப் பருவங்களில், பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களால் பாடுவது பிள்ளைத்தமிழ். இது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: வீரமாமுனிவர்
- வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?விடை: இலத்தீன்
- ‘திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் இடம் எது?விடை: வேதாரண்யம்
- ‘அமர்’ என்பதன் பொருள் யாது?விடை: போர்
- பேராசிரியர் சுந்தரனார் ‘மனோன்மணீயம்’ என்னும் கவிதை நாடக நூலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1891
- ‘சாலப் பசித்தது’ என்பது எவ்வகைத் தொடர்?விடை: உரிச்சொல் தொடர்
- ‘பலவாண்டு’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: பல+ஆண்டு
- ‘நளவெண்பா’ எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
