வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 81.4 மீ தொலைவைக் கடக்க சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்? (π = 22/7)
சரியான விடை: (B) 37
விளக்கம்: ஒரு சுற்றில் சக்கரம் கடக்கும் தொலைவு 2 × 22/7 × 35 = 220 செ.மீ = 2.2 மீ; எனவே 81.4 ÷ 2.2 = 37 சுற்றுகள். தொலைவையும் சுற்றளவையும் ஒரே அலகுக்கு மாற்றிய பின்பே வகுக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 14 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)விடை: 88 செ.மீ
- 4^(4x+1) = 1/64 எனில் x-ன் மதிப்புவிடை: −1
- 0.38 × 7.2 = 2.736 எனில் 38 × 0.0072 = ?விடை: 0.2736
- 21-க்கும் 51-க்கும் இடையில் உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல் யாது?விடை: 540
- இரு எண்களின் பெருக்கற்பலன் 2160, அவற்றின் மீ.பெ.வ. 6 எனில் மீ.பெ.வ.க்கும் மீ.சி.ம.க்கும் உள்ள விகிதம்விடை: 1 : 60
- 0.003-க்குச் சமமான சதவீதம்விடை: 0.3%
- a/3 = b/2 எனில் (2a + 3b)/(3a − 2b) ன் மதிப்பு யாது?விடை: 12/5
- 5² + 6² + 7² + … + 10² க்குச் சமமானதுவிடை: 355
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
