வினா விடை · TET – கணிதம்
ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?
சரியான விடை: (B) 6.5 கி.மீ/மணி
விளக்கம்: நிலையான நீரில் படகின் வேகம் = (நீரோட்ட திசை வேகம் + எதிர்த்திசை வேகம்)/2 = (8 + 5)/2 = 6.5 கி.மீ/மணி. நீரோட்டத்தின் வேகம் (8 − 5)/2 = 1.5 கி.மீ/மணி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 50 புள்ளி விவரங்களின் சராசரி 25, அவற்றின் திட்ட விலக்கம் 5 எனில், அவற்றின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 32500
- தீர்க்க: 10x − 12 = 6x + 4விடை: 4
- 10 எண்களின் கூடுதல் 550, அவற்றின் திட்ட விலக்கம் 9 எனில், அவற்றின் விலக்க வர்க்கச் சராசரி (பரவற்படி) என்ன?விடை: 81
- ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே எத்தனை வட்டங்கள் வரைய முடியும்?விடை: ஒரு வட்டம்
- 28, 29, 35, 37, 40, 60 என்ற புள்ளி விவரங்களுக்கு வீச்சுக்கெழு காண்க.விடை: 0.36
- ரூ.7500 அசலுக்கு 2½ ஆண்டுகளில் கிடைத்த தனிவட்டி ரூ.750 எனில், வட்டி விகிதம் என்ன?விடை: 4%
- மணிக்கு 20 கி.மீ வேகத்தில் செல்லும் 100 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி ஒரு தந்திக் கம்பத்தைக் கடக்க ஆகும் நேரம் யாது?விடை: 18 வினாடி
- ஒரு செவ்வகத்தின் நீளத்தையும் அகலத்தையும் இரு மடங்காக்கினால், அதன் சுற்றளவு எத்தனை மடங்காகும்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
