Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு பொருளின் விலை 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுப் பின் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளின் விலையில் ஏற்பட்ட நிகர அதிகரிப்புச் சதவீதம் யாது?

சரியான விடை: (B) 12 சதவீதம்
விளக்கம்: விலை 100 எனில் 40% உயர்வுக்குப் பின் 140; பின் 20% குறைவு என்றால் 140 × 0.8 = 112. எனவே நிகர உயர்வு 12% ஆகும் (சூத்திரம்: x + y + xy/100 = 40 − 20 − 8 = 12).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1 முதல் 30 வரையுள்ள இயல் எண்களில் ஒன்றை ஒரு பையன் தேர்ந்தெடுக்கிறான். அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?விடை: 1/3
  2. ஒரு தொகை 5 சதவீதத் தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ₹800 ஆகிறது எனில் அந்த அசல் தொகை யாது?விடை: ₹640
  3. 110 மீட்டர் நீளமுடைய ஒரு ரயில் ஒரு தந்திக் கம்பத்தை 3 வினாடிகளில் கடந்து செல்கிறது. 165 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தைக் கடந்து செல்ல அது எடுத்துக்கொள்ளும் நேரம் யாது?விடை: 7.5 வினாடிகள்
  4. இரு எண்களின் பெருக்குத்தொகை 10; அவற்றின் கூட்டுத்தொகை 7 எனில் அவ்விரண்டு எண்களில் பெரிய எண் எது?விடை: 5
  5. 60 முடிவுகளின் சராசரி 40 மற்றும் 40 முடிவுகளின் <br />சராசரி 60. எல்லா முடிவுகளின் சராசரி யாது?விடை: 48
  6. ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? /...விடை: 62%
  7. ஒரு திண்ம அரைக்கோளத்தின் ஆரம் 14 செ.மீ. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?விடை: 1848 ச.செ.மீ
  8. A மற்றும் B-இன் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4 : 3 எனில், A-இன் வயது என்ன? / The sum of the ages of A and B is now 110 years and 20 year...விடை: 60
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions