வினா விடை · பொதுத் தமிழ்
“பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்” – இக்குறளில் ‘விடல்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
சரியான விடை: (C) அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
விளக்கம்: ‘விடல்’ என்பது ‘விடுக’ என்ற பொருளில் வேண்டுதலைக் குறிப்பதால் அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று ஆகும். இக்குறள் கூடாநட்பு அதிகாரத்தில் உள்ள 830ஆம் குறள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நான் பார்த்தது அது அன்று
- பொருத்துக: (a) வாடுவான் – 1. நில்; (b) போக்கி – 2. இர; (c) இரந்து – 3. போக்கு; (d) நிற்றல் – 4. வாடுவிடை: 4 3 2 1
- ‘உடையான்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினையாலணையும் பெயர்
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எருது எக்காளமிடும்
- “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – இக்குறளில் அமைந்துள்ள ஒரூஉ எதுகையைச் சுட்டுகவிடை: பகல் வெல்லும் - இகல் வெல்லும்
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
- 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று யார் யாரைப் பாடினார்?விடை: பாரதிதாசன் பாரதியை
- ‘அழகு’ – இப்பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
