வினா விடை · பொதுத் தமிழ்
‘பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண்’ – இக்குறளின் முதலடியில் அமைந்துள்ள மோனை
சரியான விடை: (B) பொழிப்பு மோனை
விளக்கம்: முதலடியின் சீர்கள் பகைபாவம் / அச்சம் / பழிஎன / நான்கும்; முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் 'ப' என்னும் எழுத்து ஒன்றி வருவதால் இது பொழிப்பு மோனை. ஒன்று, இரண்டாம் சீர்களில் வருவது இணை மோனை; ஒன்று, நான்காம் சீர்களில் வருவது ஒரூஉ மோனை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: களை – முகவழகு; கழை – மூங்கில்; கலை – ஓவியம்
- “சோவியத்து அறிஞர் டால்ஸ்டாய் வழிகாட்டுதலால் திருக்குறளை மூலத்தில் நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” என்றவர்விடை: காந்தியடிகள்
- பொருத்துக (சொல் – பொருள்): பட்டியல் I – (a) கழறல் (b) களமர் (c) கழனி (d) களரி; பட்டியல் II – (1) உழவர் (2) இடித்துரைத்தல் (3) களர் நிலம் (4) வயல்விடை: 2 1 4 3
- “தாளை வணங்கினான்” - இதில் ‘தாள்’ என்பதுவிடை: சினைப்பெயர்
- “வள்ளைக்கு உறங்கும் வளநாட” – இத்தொடரில் 'வள்ளை' என்பதன் பொருள் யாது?விடை: நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
- ‘Production’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் தமிழ்ச் சொற்களில் எது தவறானது?விடை: பண்டம்
- பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: சலவர் - நல்லவர்
- வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்வு செய்யவும்: I. அருவாமனையின் அருகில் அண்ணாக்கயிறு இருந்தது II. அவரைக்காய் மற்றும் சிகைக்காய் வாங்கினேன் III. தாழ்வாரத்தில் துடைப்பம் இருந்...விடை: II மற்றும் III
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
