Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“சோவியத்து அறிஞர் டால்ஸ்டாய் வழிகாட்டுதலால் திருக்குறளை மூலத்தில் நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” என்றவர்

சரியான விடை: (B) காந்தியடிகள்
விளக்கம்: டால்ஸ்டாயின் வழிகாட்டுதலால் திருக்குறளை மூலமொழியில் படிக்கவே தமிழ் கற்கத் தொடங்கியதாகக் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். டால்ஸ்டாய் 'இந்துவுக்கு ஒரு கடிதம்' (1908) என்ற மடலில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண்’ – இக்குறளின் முதலடியில் அமைந்துள்ள மோனைவிடை: பொழிப்பு மோனை
  2. “தாளை வணங்கினான்” - இதில் ‘தாள்’ என்பதுவிடை: சினைப்பெயர்
  3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: களை – முகவழகு; கழை – மூங்கில்; கலை – ஓவியம்
  4. ‘Production’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் தமிழ்ச் சொற்களில் எது தவறானது?விடை: பண்டம்
  5. பொருத்துக (சொல் – பொருள்): பட்டியல் I – (a) கழறல் (b) களமர் (c) கழனி (d) களரி; பட்டியல் II – (1) உழவர் (2) இடித்துரைத்தல் (3) களர் நிலம் (4) வயல்விடை: 2 1 4 3
  6. வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்வு செய்யவும்: I. அருவாமனையின் அருகில் அண்ணாக்கயிறு இருந்தது II. அவரைக்காய் மற்றும் சிகைக்காய் வாங்கினேன் III. தாழ்வாரத்தில் துடைப்பம் இருந்...விடை: II மற்றும் III
  7. “வள்ளைக்கு உறங்கும் வளநாட” – இத்தொடரில் 'வள்ளை' என்பதன் பொருள் யாது?விடை: நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
  8. பின்வருவன எவ்வகை வாக்கியங்கள்? 1. “நான் நாளை மதுரை செல்வேன்” என்று முத்து கூறினான். 2. பிரதமர் திருநெல்வேலிக்கு வருகை தந்தார். 3. அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.விடை: நேர்கூற்று வாக்கியம், செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions